அவன் தலையில்லாமல் நடந்து போனான்
அப்படின்னா முண்டமாவா?
அது அப்படி இல்லை..மூளையில்லாமல்..அப்படித்தான் பின் நவீனத்துவம் சொல்லுது
பின் பக்கமா நடந்து போனானா?
போடா முண்டம்.உனக்கு புரிய வைக்க முடியாது.ஒவ்வொரு இசமா சொல்றேன்.புரியிதா பாரு.நிறைய கேள்வி கேளு என்ன?
சரிங்க
இருத்தலிசம் தெரியுமா உனக்கு?
யார் வீட்டுலங்க தெவசம்
கிழிஞ்சது ..நீட்ஷே பற்றி வாசித்திருக்கிறாயா?
எனக்கு கோட்சேதான் தெரியும்
கிளிஷே?
கிளிஞ்சா தச்சு போட்டுக்க வேண்டியதுதான்
மெட்டிரியலிசம் பற்றி சொல்லவா?
மெட்டிஒலி திரும்ப போடறாங்க இப்ப.பாவம் அந்தாளு.அஞ்சு பொண்ணை பெத்துட்டு..
போதும் .நிறுத்து.இந்த ரோசா..
தெரியுமே..செல்வமணி பொண்டாட்டி.எலெக்ஷனல தோத்து போச்சு
இழவு போதும் நிறுத்து..இந்த மேஜிக்கல் ரியலிசம்?
ஜேம்ஸ் மேஜிக் ஷோ தெரியும்.சுவர் புல்லா விளம்பரம் பண்ணியிருப்பாங்க
பூகோவாவது?
வைகோ தெரியும்.பொசுக்,பொசுக்குன்னு அளுதுடுவாரு.தமாஷா இருக்கும்.
பூர்ஷ்வா பற்றி கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்
ஆமாம்..பழைய சோறும்,பச்சமொளகாயும் சூப்பர்தான்
அதிகாரத்தின் உரையாடல்?
இருங்க.மீன் குழம்பு காரமா இருந்தாதான் நல்லாயிருக்கும்..நீங்க எழுத்தாளரா?
இல்லை.இலக்கியவாதி.கட்டுடைப்பவன்..நீ?
நான் கல்லுடைக்கிறவன்.
அப்ப என்னை விட நீ கண்டிப்பா நல்லாத்தான் உடைப்ப.இப்ப கதை எழுது..
ஒருவன் தெருவில் தலையுடன் சென்றுகொண்டிருந்தான்.
என்னை கிண்டல் பண்ணினே..தலையில்லாம போனா முண்டமான்னு?
இருங்க..அவன் கையில தலையுடன் போய்கிட்டிருந்தான்..அந்த தலை
யாருதுன்னு கேட்டேன்..
யாருதாம்?
கிட்ட வாங்க சொல்றேன்...யாருகிட்டயும் சொல்லாதீங்க