Saturday, February 28, 2009

தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய ஐந்தாவது குறும்பட வட்டம்





கடந்த வெள்ளிக்கிழமை (20-02-2009) அன்று சென்னை எக்மோரிலுள்ள ஜீவன ஜோதி அரங்கில் தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய ஐந்தாவது குறும்பட வட்டம் இனிதே நடைபெற்றது. தவிர்க்க முடியாத காரணத்தால் குறும்பட வட்டம் சனிக்கிழமையிலிருந்து வெள்ளிக் கிழமைக்கு மாற்றப்பட்டது.எனினும் எதிர்பார்த்ததைவிட அதிகமான ஆர்வலர்கள் கலந்துக் கொண்டனர். இம்முறை மக்கள் தொலைக்காட்சியின் "ஜன்னலுக்கு வெளியே" நிகழ்ச்சிக் குழுவினர் வந்துப் படம் பிடித்து சென்றனர்.
இந்நிகழ்ச்சியை மக்கள் தொலைக்காட்ச்சியில் பார்க்க விரும்பும் ஆர்வலர்கள் எங்களை தொடர்பு கொண்டு ஒளிபரப்படும் நாள், நேரம் போன்றவற்றை தெரிந்துக் கொள்ளலாம். மேலும் இம்முறையும் சோதனை ஓட்ட வடிவிலேயே குறும்பட வட்டம் நடைபெற்றது. தொடர்ந்து பன்னிரண்டு மாதங்கள் குறும்பட வட்டம் சோதனை ஓட்ட வடிவிலேயே நடைபெறும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். வெள்ளிக்கிழமை என்பதனால் இம்முறை குறும்பட வட்டம் சற்று தாமதமாக தொடங்கியது. ஆனால் அனைத்து பகுதிகளும் இனிதே நடைபெற்றது. ஆனால் முதல் பிரிவில் குறும்பட வழிகாட்டல் நிகழ்ச்சியும், இரண்டாவது பிரிவில் இலக்கியப் பகுதியும், மூன்றாம் பிரிவில் குறும்பட திரையிடலும் நடைபெற்றது.முதல் பிரிவு:குறும்பட வழிகாட்டலான இப்பிரிவில் புகழ் பெற்ற திரைப்பட படத்தொகுப்பாளர் திரு. பழனிவேல் அவர்கள் பங்குபெற்று ஆர்வலர்களுக்கு படத்தொகுப்பு சார்ந்த உத்திகளை பயிற்றுவித்தார். தான் பங்குபெற்ற திரைப்படங்களின் படத்தொகுப்பு சார்ந்தும், அதில் பயன்படுத்தப்பட்ட உத்திகள் சார்ந்தும் தனது உரையை தொடங்கியவர், பாரதிராஜா போன்ற இயக்குனர்களிடம் பணிபுரியும்போது படத்தொகுப்பு என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் விளக்கினார்.
பொதுவாக குறும்படம் எடுக்கும்போது எப்படி பட்ட ஷாட்கள் வேண்டுமென்று முன்னரே தீர்மானித்துக் கொள்ள வேண்டும் என்றும், அனிமேஷன், சிறப்பு சப்தங்கள் போன்றவற்றை முன்கூடியே தீர்மானிக்க வேண்டும் என்றும் ஆர்வலர்களுக்கு எடுத்து கூறினார். மேலும், குறும்பட படத்தொகுப்பு, திரைப்படப் படத்தொகுப்பு போன்றவற்றை ஒப்பிட்டு, குறும்பட படத்தொகுப்புக்கான பல ஆலோசனைகளையும் வழங்கினார்.
அடுத்தாக கலந்துரையாடல் பகுதியில் ஆர்வலர்களின் வினாக்களுக்கு விடையளித்து பேசிய பழனிவேல் அவர்கள் படத்தொகுப்பு குறித்த அனைத்து ஐயங்களுக்கும் தன்னை தொடர்பு கொள்ளலாம் என்றும் சொல்லி சென்றார்.
ஆர்வலர் ஒருவர் "திரைத்துறையில் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் இயக்குனர்களாகும்போது ஏன் இதுவரை எந்த ஒரு படத்தொகுப்பாளரும் இயக்குனர் ஆகவில்லை என்று வினாவை எழுப்பினார். (இலெனின் தவிர) அதற்கு பதிலளித்த பழனிவேல் அவர்கள் இயக்க வேண்டாம் என்கிற எண்ணம் காரணமா அல்ல என்றும், படத்தொகுப்பாளருக்கு கிடைக்கும் இயக்குனர் மிக சிறந்தவராக அமைத்துவிட்டால் அது போன்ற எண்ணங்கள் ஏற்படுவது இல்லை என்றும் பதிலளித்தார்.
முதல் பகுதி நிறைவு பெற்றதும், ஆர்வலர்கள் அனைவருக்கும் தேநீர் மற்றும் சிற்றுணவுகள் வழங்கப்பட்டன. இந்த முறை புதிதாக படத்தொகுப்பு மற்றும் டப்பிங் ஸ்டுடியோ தொடங்கியிருக்கும் நண்பர்கள் பக்தீஸ்வரன் மற்றும் குழுவினர் தேநீர் வழங்குவதற்கான முழுத் தொகையையும் செலுத்தினர். இரண்டாம் பகுதி.
இலக்கியப் பிரிவுப் பகுதியில் இந்த முறை கீரனூர். திரு. ஜாகிர் ராஜா அவர்கள் வழிகாட்டியாக வந்திருந்தார். இரண்டு சிறுகதை தொகுதிகள், மூன்று நாவல்கள் எழுதியுள்ள இவர், தொடர்ந்து இரண்டு முறை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் வழங்கிய சிறந்த நாவலாசிரியர் விருதை பெற்றுள்ளார். தொடர்ந்து சிறுகதைகளைக் கூறி அதனை எப்படி படமாக்குவது என்பதை தனது பார்வையில் சொல்லி சென்றார்.
மேலும், அரசியல் பற்றியும், நான் கடவுள் படம் பற்றியும் விவாதங்கள் நடைபெற்றன.
இம்முறை குறும்படங்கள் திரையிடல் பகுதி மூன்றாம் பகுதியாக நடைபெற்றது. முதல் படமாக புதுச்சேரி திரு. ஆதிமூலம் அவர்கள் இயக்கிய "தேடல்" குறும்படம் திரையிடப்பட்டது. இந்த மாதம் முதல் திரையிடப்படும் படங்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. படத்தொகுப்பாளர் திரு. பழனிவேல் அவர்கள் இவ்விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.
பின்னர் தேடல் குறும்படம் குறித்து திரு. ஆதிமூலம் தனது அனுபவங்களைப் பகிர்ந்துக் கொண்டார். பின்னர் ஆர்வலர்கள் வினா எழுப்ப இயக்குனர் ஆதிமூலம் விடையளித்து விடை பெற்றார்.
இரண்டாம் படமாக புதுச்சேரி திரு. கரிகாலன் அவர்கள் இயக்கிய "எங்கே செல்லும் இந்த பாதை" எனும் குறும்படம் திரையிடப்பட்டது. இப்படத்திற்கும் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. பின்னர் இயக்குனர் கரிகாலன் அவர்கள் தனது அனுபவங்களைப் பகிர்ந்துக் கொண்டார். தான் இந்த நிலைக்கு வர தனது நண்பர் திரு. ஆதிமூலம்தான் காரணம் என்று சொல்லி தங்களது நட்பின் ஆழத்தை சபையரிய செய்தார்.
பின்னர் ஆர்வலர்கள் வினா எழுப்ப விடை அளித்து விடை பெற்றார் திரு. கரிகாலன்.
மூன்றாவது படமாக சென்னையை சேர்ந்த திரு. மணி அவர்கள் இயக்கிய "சீயர்ஸ்" குறும்படம் திரையிடப்பட்டது. இப்படத்திற்கும் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. பின்னர் இயக்குனர் திரு. மணி அவர்கள் தனது அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டார். அடுத்தாக ஆர்வலர்கள் வினா எழுப்ப திரு. மணி அவர்கள் விடை அளித்தார்.
பின்னர் தமிழ் ஸ்டுடியோ காம் தளம் குறித்த தங்கள் கருத்துகளை ஆர்வலர்கள் பகிர்ந்து கொண்டனர். அடுத்த மாதம் முதல் குறும்பட வட்டம் நாள் முழுவதும் நடைபெறும். முதல் பாதியில் உலகப் படங்கள் திரையிடலும், அடுத்தப் பாதியில் குறும்பட வட்டமும் நடைபெறும்.http://www.thamizhstudio.com/

Saturday, February 21, 2009

இருக்கிறயா?



எங்க இருக்கீங்க? எப்படி இருக்கீங்க? ..
போட்டோ வில் பார்கிறதுதான்..நேரிலே எப்போ?
இங்க நடக்கிறதை பாத்துகிட்டு இருக்கிங்கல்லே
சொந்த வாழ்க்கையும் சொல்லிக்கிற போல இல்லே ..
சோகத்த பங்கு போட ..யாரும் நாதி இல்லே ..
இங்கதான் இப்படி .. அங்க அம்மா வீட்லேயும் ஆறுதல் இல்லே..
பாவம் அங்க அவங்களுக்கே தலைவலியாம் ..
எங்க அய்யா க்கு முதுவலி..பெரியக்கா பஜ்ஜி கடை போட்டு இருக்காம் ..(பச்சை கலர் கேட் வாசல்லே ..)..பிசாவும் விக்கும் போலே ..
எதோ ரெண்டு மாமாங்கரங்க கொஞ்சம் அனுசொரனையா
இருக்காப்லே தெர்யுது?(அதுவும் காரணமாத்தான் )
ரெண்டு பெரிய அய்யாவும் ,ஒரு கைலெ சுத்திஉம் அறிவாளும்
எடுத்துகிட்டு தோட்டத்துக்கு மாம்பழம் பறிக்க போயிஇருக்கங்கலாம் ..
சூப்பர் ,ஞானி ,தளபதி, தலே எல்லாம் ஒரு ஒப்பாரி வைச்சுட்டு
கலைஞ்சுட்டங்க ..
பெரிய டில்லி தாத்தா ஆஸ்பத்திரிலேந்து வந்துட்டாங்க ...
அவங்க எப்பவுமே எதையுமே கண்டிகிட மாட்டாங்க ..மருமக வச்சதுதான் சட்டம் ...(இங்க எங்க தெருவுலே பட்டாசு கடை க்கு சரக்கு சப்ளை பண்ணுறாங்க ..)
சரி ..அத வுடுங்க.. இப்ப உங்க நிலைமையே சரி இல்லையாமே ?
நீங்கதான் நான் னு ஒரு படம் வந்திருக்காமே ??
அதுல வர மாதிரி ..எங்களுக்கு ஏதாவது செய்யுங்க ..
சாமி ஒன்னு கவனிசின்களா?
நீங்க இல்லே ..இல்லேன்னு அடிக்கடி சொல்றவந்தான் உங்க பேரை
நிறைய தடவை சொல்லறான் (மஞ்ச கலர் பையோட இருப்பாங்க இல்லே ..எங்க பெரிய அய்யா (இப்ப கூட ஒடம்பு முடியாம
ஆஸ்பத்திரிலே இருக்காங்க .. இன்னொரு பெரிய யப்பா கருப்பு சட்டை போட்டுக்கிட்டு வீரமா .. கோட்டை வாசலே மணி அடிச்சுகிட்டு இருப்பாங்களே ..அவரு ..நல்லாதானே இருக்காங்க ..

ஆனா மேலுக்குத்தான் உங்களை திட்டறது .

உள்ள பூஜை..புனஸ்காரம் இருக்கும்னு நினைக்கேன்
ஒரே குண்டா பெரிசா போட்டு ..மொத்தமா தீத்துட்டா தேவலைன்னு தோணுது ..

Thursday, February 19, 2009

கொஞ்சம் ராவா ?







உங்களுக்கு கதிரை தெரியுமா கதிரை எல்லோருக்கும் தெரியும் (எங்க ஏரியா வில் )அந்த கூட்டத்தில் அவன் பார்வை படதா என்று கையில் பணத்துடன் காத்திருக்கும் மக்கள் கூட்டம் அது ?ஏய் மச்சான் எவளவு நேரம் நிக்கேன் ..அறுவது ஒன்னு கொடு ..கதிர்க்கு முதலில் வந்தர்வர்க்கு முன்னுரிமை என்ற கொள்கை எல்லாம் கெடையாது ..அவன் பார்வை யார் மேல் படுகிறதோ? அவர்க்கு ஜென்ம விமோசனம் ?கதிரின் உறவினர் ஒருவர் இறந்ததற்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டது ..ஹி ..ஹி கதிரை எனக்கும் தெரியும் .கதிர் ??டாஸ்மாக் கடை விற்பனையாளன் ..ஒரு நாள் கதிரிடம் சில கேள்விகள் கேட்டேன் ..அது முக்கியமல்ல ..பதில்தான் முக்கியம் .



எனக்கு குடி பழக்கம் இல்லே ..



என் ஒரு நாள் வருமானம் சுமார் ஆயிரம் ரூபாய்கள்



அரசாங்க சம்பளம் 5000 ரூபா ..மிச்சமெல்லாம் ..இதோ..கதிர் கை காட்டிய இடத்தில் ஒரு குடிமகன் ..படம் காண்க






ஒரு நாள் எல்லா சரக்கும் காலி .. லாரி வந்து கொண்டு இருக்கு ..இருக்கிறது ரெண்டு கேப்டன் ரம் புல் ..இருக்கரன்வங்க உங்கள்ளுக்கு லே ஷேர் போட்டுக்கிட்டு வாங்க என்று கதிர் சொல்ல



அன்றுதான் கதிர் என்ன ஜாதி என்று என்னக்கு தெரிந்தது ..



ஒருவன் உள்ளே வந்து ஒரு காலி பாட்டிலை மட்டும் எடுத்து கொடு போவான் ..என்னய்யா பண்ணுவேன்னு கேட்டேன் .அண்ணே என்னும் முப்பது பாட்டில் தேத்தனும் ..நா???

??????

கேளம்பிடன்யா ..
மிரட்டவில்லை ...வேண்டுகோள் ??








கூட்டணி தர்மம் ..கொள்கை குழப்பம் ?? இலங்கை இனி ?
கண்டு சிரியுங்கள் ஆரம்பம் "சிரிப்பொலி" புதிய நகைச்சுவை சேனல் ....




சட்டம் ஒழுங்கு சந்தியில் ???

கருப்பு சட்டையும் ,காக்கி சட்டையும் பலப்பரிட்சை ......சந்தி சிரிக்குது ...கும்பி எரியுது ....














Tuesday, February 17, 2009

விஜயகாந்த் மரியாதை கிடைக்குமா?

ஒரு மருத்துவர் புதிதாக மருத்துவமனை தொடங்கினார் .ஒரு புது இடம் பிடித்து தொழில் தொடங்கினார் ..நாட்கள் ஓடின ..ஒரு நோயாளி கூட வரவில்லை ..தொழில் மறந்து விடுமோ என்று பயம் வந்து விட்டது ..தானே வாசலில் இருந்து ஐயாஃ உள்ளே வரலாமா என்று கேட்டு விட்டு மீண்டும் உள்ளே சென்று... வாருங்கள் ..என்ன செய்கிறது என்று உரையாடலை தொடர்வார்.மனைவியும் மச்சினனும் பார்த்தார்கள் .இதற்க்கு என்ன காரணம் என்று யோசித்தார்கள் ..பலாப்பழ ஊர்காரர் சொன்னார் ...அண்ணியாரே தப்பு பண்ணிட்டோம்னு வாசலுக்கு கூட்டி கொண்டு போய் காட்டினர்..அங்கே ..வியாதியஸ்தர்கள் உள்ளே வரக்கூடாது என்ற பலகை இருந்தது ..அந்த இடம் இதற்க்கு முன் ஹோட்டேல் ஆக இருந்த இடம் ..தவசிக்கு இப்போ புரிந்தது ..இனி அவரும் .. பதினொன்னு .....

இலங் கை

மெல்ல மறக்கப்படும் .....இலங்கை.?? தேர்தல் நெருங்குகிறது ....
இரண்டு செவிடர்கள் சந்தித்து கொண்டார்கள் .ஒருவன் கையில் பை வைத்து இருந்தான் ..முதல் செவிடன் கேட்டான் .எங்க? கடைக்கா ?
அதற்கு இன்னொருவன் சொன்னான் ..இல்ல ..இல்ல ..கடைக்கு
உடனே முதல் செவிடன் ஓஹோ ...கடைக்குத்தான் போறியோ என்று நினைத்தேன் ...இது எப்படி இருக்கு ....?இதைதான் நமது மத்திய மாநில அரசுகள் இலங்கை பிரச்சனயில் செயது கொண்டு இருக்கிறார்கள் ..இதில் பை செவிடன் யார்.....

Sunday, February 15, 2009

முதல்வர் பாராட்டு விழாக்களில் கலந்து கொள்வதன் மூலம் முதுகு வலியை மறந்து வந்தார்... மருத்துவர்கள் ...

தலைவா... உன்னை நான் வேதனை படுத்தி விட்டேனா ..அடுத்த பிறவியில் நான் உனக்கு மகனாக பிறக்க வேண்டும் ....(கோபலபுரத்திலா ,CIT COLONIஆ என்று தெரியவில்லை .....
ஆல் இந்தியா ஐஸ் விற்பவர் சங்க தலைவர்....... ஜெகத்ரட்சகன் )

Friday, February 13, 2009

தலைவலியும்,முதுகு வலியும்


தீராத தலைவலிக்கு மருந்து?மருத்துவர்கள் சாதனை..போயே போச்சு....இட்ஸ் கான்...
போயீந்தே...
சரிய்யா...எப்படி?
முதுகில் கத்தி போட்டால் ...போதுமாம்..
அட...தலைவர் அடிச்சார் பாருங்க ஒரு ஜோக்.. ஏ அப்பா ..இவ்வளவு கட்டணமா..
சீக்கிரம் வீட்டுக்கு போயிடனும்...