Tuesday, September 29, 2009

மானிட்டர் பக்கங்கள்........29/09/09


இடி இடிக்கும்,அனல் தகிக்கும் என்று எதிர்பார்த்த பதிவர் சந்திப்பு நீர்த்துபோயிற்று..உபயம்வருணபகவான்
(இந்துத்துவான்னுசாயம்பூசிடாதீங்க)நிறையபுதியபதிவர்கள் வந்திருந்தார்கள்.அறிமுகம்செய்துகொண்டார்கள்.வாழ்த்துக்கள்.அடுத்த முறை எதாவது ஒரு ஹாலில் நடத்தலாம் என்று அனைத்து மூத்த பதிவர்களூம் முடிவு
செய்திருக்கிறார்கள்.பதிவர் சந்திப்பை ஒருங்கினைத்த கேபிளுக்கு நன்றியும்,வாழ்த்துக்களும்.

வெளியே நனைந்தபின் உள் என்ன பாவம் செய்தது என்று மனசாட்சி உறுத்தியதால் பாருக்கு போய் ஏற்றிக் கொண்டோம்.அருமையான விவாதம்..மிகவும் இனிமையாய் கழிந்தது ஞாயிறு மாலை.நண்பர்களுக்கு நன்றி

புதிய தலைமுறை இதழ் காசு கொடுத்து வாங்கி படித்தேன்.விலை ரூ5/- மட்டும்தான்..இலக்கியமும் இல்லாமல் வெகுஜன விசயங்களூம் இல்லாமல் இடைப்பட்டு இருக்கிறது...தொலைக்காட்சிகளில் விளம்பரம் தூள் பரத்துகிறார்கள்.பசையுள்ள பப்ளிஷர்..குங்குமம் போல் சோப்பு,சீப்பு,சீயக்காய் என்று இலவச அன்பளிப்புகளும் கொடுக்கலாம்.நிருபர்களாக பணிபுரியும் நம் வலை உலக சகாக்கள் லக்கிக்கும்,அதிஷாவிற்கும் என் வாழ்த்துக்கள்.(காலும் கை கொடுக்கும் என்ற தலைப்பின் வசீகரம் லக்கியின் ஸ்பெஷல் டச்)

சொத்து வெளியில் போககூடாது என்று சிலர் உறவுக்குள் பெண் கொடுத்து எடுத்துக் கொள்வர்.நமது தலைவரும் அப்படித்தான்.அண்ணா மற்றும் பெரியார் விருதுகளை அவர்களுக்குள் பறிமாறி கொண்டனர்.அன்பழகன் எந்த விருதுக்கும் தகுதியில்லை போலும்.சாய்பாபா விருதும் ஏற்படுத்தி துரைமுருகனுக்கு ஒரு கனையாழி கொடுத்திருக்கலாம்.தா.மோ.அன்பரசன் என்ற அமைச்சர் தன்
மாமியார் வீட்டில் சீதனமாக கிடைத்ததை உருக்கி 100 சவரன் தங்க நாணயம் முதல்வருக்கு பரிசளித்தார்.அண்ணன் அழகிரிக்கு முதல்வர் 51 சவரன் செயினை அணிவித்து மகிழ்ந்தார்.கண்கொள்ளா காட்சி..

இல்லம் தானம்
உடல் தானம்
பத்திரிக்கையில்
பெருமிதம்
மக்கள் இந்த
நாட்டையே
தானமாக தந்து
விட்டதை
சொல்வதாயில்லை...
யாருமே.....

அந்த நீலக்கலர் ஓயரையும்,சிகப்பு கலர் ஒயரையும் இணைங்க.பச்சை கலரை கட் பண்ணுங்க.பாம் வெடிக்காது..உ.போ.ஒருவனில் காமன் மேன் சொல்லும் வசனம் இது.சிகப்பும்,நீலமும் கலந்தால் ஆரஞ்சு கலர் டோன் கிடக்கும்.இது ஒரு குறியீடு.பச்சை நிறம் இன்னும் ஒரு குறியீடு.இது எப்படி நம் அறிவு ஜீவிகள் விமர்சனத்தில் விடுபட்டது என்று தெரியவில்லை..கமலை கேட்டால்
அவர் என்ன சொல்லுவார்..அவர் மட்டுமல்ல எந்த சினிமாக்காரனை கேட்டாலும் சொல்வார்கள்.சினிமாவில் டோன்/கலர் என்றால் அது RGB தான்..அதனால்தான் அந்த வசனம்.இதைப்போல்தான் இவர்கள் சொன்ன மற்ற உதாரணங்களும்..

60 ரூ சரக்கு இல்லை..70 தான் இருக்கு...
மச்சான் 80 ரூபாதான் இருக்கு.
சரி வாங்கிடு
இல்லைடா.காலைல பாலுக்கு வேணும்டா.
அப்ப குடிக்காத..வீட்டுக்கு போ...

டாஸ்மாக்கில் நான் சரக்கு வாங்கும் போது கேட்ட உரையாடல்..அவன் வீட்டுக்கு போகவில்லை..அவனுக்கு நான் 20ரூ கொடுக்கலாம்னு நினைச்சு அப்புறம் ஒரு குடிகாரனுக்கு இன்னொரு குடிகாரன் உதவி செய்வது குடி கெடுக்கும் செயலாகும் என்பதால்....

டிஸ்கி :இன்னொரு பெரிய ஜோக்..சிவாஜி சிறந்த படம்..இரண்டாவது மொழி..அதக்கூட விட்டு தள்ளுங்க..சிறந்த வசனகர்த்தா கருணாநிதி..படம் உளியின் ஓசை.பின்ன கஞ்சா கருப்புக்கே கலைமாமணி கொடுக்கும்போது இது ஒன்னும் ....




33 comments:

selventhiran said...

இல்லம் தானம்
உடல் தானம்
பத்திரிக்கையில்
பெருமிதம்
மக்கள் இந்த
நாட்டையே
தானமாக தந்து
விட்டதை யாருமே
சொல்வதாயில்லை...

"நச்"

GHOST said...

மானிட்டர் பக்கம் கலக்கல்

அதிலும்

இல்லம் தானம்
உடல் தானம்
பத்திரிக்கையில்
பெருமிதம்
மக்கள் இந்த
நாட்டையே
தானமாக தந்து
விட்டதை யாருமே
சொல்வதாயில்லை...

டாப்

Raju said...

அண்ணே, கஞ்சா கருப்புவை விட மாட்டீங்க போலயே...!
அவரு இப்போ செலிப்பிரட்டி தெரியுமில்ல..?
:‍-)

butterfly Surya said...

கலக்கல்.

நீங்கள் அறிந்த காக்டெயில் பற்றி பதிவர்களுக்கான பாப்கார்ன் பகுதியில் பார்க்கவும்.

http://mynandavanam.blogspot.com/search/label/popcorn4

Cable சங்கர் said...

நல்ல சுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ருனு ஏறும் மானிட்டர்...

உண்மைத்தமிழன் said...

துரைமுருகனுக்கு அவ்ளோ வயசா ஆயிப் போச்சு..? கட்சில இருந்து ஒதுங்குற ஸ்டேஜ்ல தானா கூப்பிட்டு விருது கொடுப்பாங்க. அதுதான் அவங்க பழக்கம்..

உண்மைத்தமிழன் said...

அந்த டாஸ்மாக் மேட்டரு சூப்பரப்பூ..! ஆனா என்னால நம்பத்தான் முடியல.. கெடுக்கமயா விட்டீங்க..!

உண்மைத்தமிழன் said...

டிஸ்கில நீங்க போட்டிருக்குற மாதிரி 3 வரில கதையை எழுதத் தெரியலண்ணே..! என்ன செய்றது?

உண்மைத்தமிழன் said...

நானும் ஒரு ஓட்டு போட்டுட்டேன்..! சத்தியமா நம்புங்க சாமி..!

உண்மைத்தமிழன் said...

மழை கொட்டித் தீர்க்கப் போகுதுன்னு வானத்தை அண்ணாந்து பார்த்தப்பவே தெரிஞ்சு போச்சு. அதான் வீட்ல போர்வையை போர்த்திக்கிட்டு குப்புறப் படுத்திட்டேன்..

நாங்க 20 கிலோமீட்டர் தள்ளியிருந்து மாங்கு, மாங்குன்னு ஓடி வருவோம். நீங்க என்னடான்னா வாங்க.. வாங்கன்னு ரெண்டு வார்த்தை சொல்லிப்புட்டு குப்.. குப்புன்னு புகையை விட்டுட்டு கடைசீல டாட்டா காட்டிட்டு பாருக்கு போய் உங்க வேலைய கவனிப்பீங்க..

நாங்க மட்டும் பட்டிக்காட்டான் மாதிரி திரும்பி அதே 20 கிலோ மீட்டரு வியர்க்க, விறுக்க ஓடியாகணும்..!

எங்களை என்ன..?

நையாண்டி நைனா said...

present sir.

R.Gopi said...

//இன்னொரு பெரிய ஜோக்..சிவாஜி சிறந்த படம்.//

ஆமாம்...தசாவதாரம் கூட....

மணிஜி said...

///இன்னொரு பெரிய ஜோக்..சிவாஜி சிறந்த படம்.//

ஆமாம்...தசாவதாரம் கூட//

ரஜினி ரசிகரே..வருகைக்கு நன்றி...

மணிஜி said...

/present sir//

யூனிபார்ம் போட்டுகிட்டு வந்திங்களா?

ஜெட்லி... said...

//அப்புறம் ஒரு குடிகாரனுக்கு இன்னொரு குடிகாரன் உதவி செய்வது குடி கெடுக்கும் செயலாகும் என்பதால்....
//

என்னா ஒரு மனிதாபிமானம்....
பாராட்டுக்கள்....
எனக்கு குவாட்டருக்கு கொஞ்சம்
காசு குறையது... ஒரு 75 ரூபாய்
கொடுத்தால் நல்லா இருக்கும்....

ஜெட்லி... said...

மானிட்டர் செம மப்பு.....

தேவன் மாயம் said...

டிஸ்கி :இன்னொரு பெரிய ஜோக்..சிவாஜி சிறந்த படம்..இரண்டாவது மொழி..அதக்கூட விட்டு தள்ளுங்க..சிறந்த வசனகர்த்தா கருணாநிதி..படம் உளியின் ஓசை.பின்ன கஞ்சா கருப்புக்கே கலைமாமணி கொடுக்கும்போது இது ஒன்னும் ....
//

டிஸ்கி டாப்!

தமிழ் அமுதன் said...

//இல்லம் தானம்
உடல் தானம்
பத்திரிக்கையில்
பெருமிதம்
மக்கள் இந்த
நாட்டையே
தானமாக தந்து
விட்டதை
சொல்வதாயில்லை...
யாருமே.....//

;;((

அகநாழிகை said...

தண்டோ...ரா...ரா...
தாங்கல்ல்ல்லலல....
ரொம்ப நல்லாயிருக்குன்னு சொல்ல வந்தேன்.

வால்பையன் said...

அருமை
பெருமை
எருமை!

கலையரசன் said...

சகுட்டுமேனிக்கு அடிச்சு நெரவுறீங்க?
சரக்கையல்ல, இடுகையை!
எல்லாமே பக்கா.. பக்கா!!

ஈரோடு கதிர் said...

மானிட்டர் அருமை
டிஸ்கி செம அருமை

இரும்புத்திரை said...

இதுல பிடிச்சதே டிஸ்கி தான்..

இப்படி போட்டதுக்கு உங்களுக்கு உளியின் ஓசை டி.வி.டி பார்சல்

Beski said...

தானம் சூப்பரு.

//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
அந்த டாஸ்மாக் மேட்டரு சூப்பரப்பூ..! ஆனா என்னால நம்பத்தான் முடியல.. கெடுக்கமயா விட்டீங்க..!//

அது உள்ள போகும்போது, வெளிய வரும்போதுன்னா 70 ரூவாவே கொடுத்திருக்க வாய்ப்பிருக்கு.

அக்னி பார்வை said...

பொறிப்பறக்குது

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

ஓட்டு போட்டாச்சு.ரெண்டுலயும்.

Romeoboy said...

பத்த வச்சிடியே பரட்ட ,,

சூப்பர் சரக்கு பாஸ் ..

பிரபாகர் said...

அண்ணே,

த்மிழக மக்களின் தலை விதி. அனுப்வ்த்து தான் ஆகவேண்டும். ஒரு விஷயத்தில் நாங்களெல்லாம் கொடுத்து வைத்தவர்கள், காணாமல் அயல் நாட்டில் இருப்பதால்...

பிரபாகர்.

பிரபாகர் said...

மேல போட்டது தப்பாயிடுச்சி அண்ணே, சரியா சொல்ல வந்தது இதுதான்.

தமிழக மக்களின் தலை விதி. அனுபவித்துத் தான் ஆகவேண்டும். ஒரு விஷயத்தில் நாங்களெல்லாம் கொடுத்து வைத்தவர்கள், காணாமல் அயல் நாட்டில் இருப்பதால்...

பிரபாகர்.

Kumky said...

சுருக்..
நறுக்...
நச்......
பாகவுந்தி தண்டோராகார்லூ.

மணிஜி said...

வருகைக்கும்,வாசித்து கருத்து பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி நண்பர்களே..தொடர்ந்து வாங்க.வாசிங்க

அன்புடன்
தண்டோரா

பித்தன் said...

இல்லம் தானம்
உடல் தானம்
பத்திரிக்கையில்
பெருமிதம்
மக்கள் இந்த
நாட்டையே
தானமாக தந்து
விட்டதை யாருமே
சொல்வதாயில்லை...

"நச்"

பா.ராஜாராம் said...

சுறு,சுறு,சுறு,மணிஜி!டிஸ்க்கி ஜாலி!