Thursday, May 14, 2009

செருப்படி...... முதல் ஜேப்படி வரை.......

சுயனலமில்லாத,கண்டிப்பான ஒரு தகப்பனுக்கும்.வயசுக்கு மீறிய சிந்தனை கொண்ட ஒரு விடலை மகனுக்கும் ஏற்படும் முரண்பாடுகள் ....எனக்கும் ஏற்பட்டது..மயிர் வெட்டி கொள்வதில் தொடங்கி அடுத்த வருடம் வளர இருக்கும் கை,காலுக்கும் சேர்த்து துணி தைத்து கொள்வது வரை(பின்னி தான் நல்லா உழைக்கும்) .நான் பெரியவனாகி விட்டேன் ..ஏன் இந்த முடிவுகளை நானாக எடுக்க கூடாது..அம்மாவிடம் இதை சொன்னால் "போடா .நீ இன்னும் சின்ன குழந்தைதான் என்றாள்.நான் அதை ஏற்க வில்லை.ஒரு மூத்த நண்பன்(பிஞ்சிலே பழுத்த)ஆலோசனையின் பேரில் அப்பாவின் மஞ்ச கலர் டயல் hmt யுடன் கழிவரைக்கு சென்று 15 நிமிடம் முயற்சி செய்து கொண்டிருந்தேன்.வரவே இல்லை.அல்லது எனக்கு வரவழைக்க தெரிய வில்லை(இப்பல்லாம் தொட்டாலே தளும்பி விடுகிறது)..

மீண்டும் மயிர் வெட்டி கொள்ளும் பிரச்சனை வந்தது.ஒட்ட சிரைச்சுட்டு வரலே அவ்வளவுதான்.எச்சரிக்கையுடன் சலுனுக்கு அனுப்ப பட்டேன்..முடி வெட்டி கொண்டு வீட்டுக்கு வந்தால் ஆரம்பித்தது குருஷேத்திரம்.பின்னே நான் ஸ்டெப் கட்டிங் வெட்டி கொண்டு ,ஒரு சுருள் சீப்பு,பின்னால் பார்த்து வாரி கொள்ள ஒரு கண்ணாடி சாதா வில்ஸ் ரெண்டு ஒன்றாக பிடித்து விட்டு மூணு ரோஜா சுபாரியையும் மென்று கொண்டு ஒரு முடிவோடுதான் வந்திருந்தேன்.அடுத்து நடந்தவை..முதலில் கையால் அடிக்க தொடங்கி கீழே தள்ளி காலால் எத்தி கடைசியில் செருப்பை எடுத்தி விளாசியதுதான் என்னை வீட்டை விட்டு ஓடி போக தள்ளியது.

வீட்டை விட்டு வந்ததும் நான் நேராக போய் பார்த்தது ரபீக்கை.ரபீக்கும் வீட்டை விட்டு வந்து ஒரு சினிமா கொட்டகையில்(ஜீபிடர்) கடலை மிட்டாய்,முறுக்கு, சோடா கலர் என்று கூவி விற்று கை நிறைய ??சம்பாதித்து கொண்டிருந்தான்.நம்மலாம் யாருன்னு அவங்களுக்கு நிருபிக்கனும்டா ..ஆறுதல் சொல்லி என்னையும் அந்த வேலையில் சேர்த்து விட்டான் ரபிக்..அந்த வாழ்க்கை எனக்கு புது சுதந்திரத்தையும் அப்பாவை பழி வாங்குற சுகத்தையும் தந்தது(ஊர் முழுதும் நான் அங்கு வேலை பார்ப்பது தெரிந்து எல்லாரும் அப்பாவை துக்கம் விசாரித்தனர்)

அப்ப ஜீபிடரில்" முதல் இரவு" படம் ஓடி கொண்டிருந்தது.சிவக்குமார்,சுமித்ரா நடித்த படம்.அதில் வரும் "மஞ்சள் நிலாவிற்கு ஒரே சுகம்" சுகம் என்ற பாட்டு பெரிய ஹிட்.அந்த பாட்டு பாதி முடியும் போது ரபிக் கழிவரைக்கு போய் விடுவான்.என்னடா என்றால் மீதி பாட்டை மனதில் ஓட்டி பார்தேன் என்பான்.எனக்கு அது புதிராக இருந்தது.பின் எனக்கும்
ரபிக் அந்த வித்தையை கற்று கொடுத்தான்.ஆனால் அதற்க்கு hmt கடிகாரம் தேவைபடவில்லை.ஆனால் இன்னும் ஒன்றை அவன் கற்று தர முற்பட்டபோதுதான் நான் பயந்து விலகி விட்டேன்.அதுதான் ஜேப்படி?/

காசு நிறைய அவனிடம் புரளும்..காரணம் தெரிந்த போது அதிர்ச்சியாக இருந்தது.டிக்கெட் கொடுக்கும் போது அவன் கவுண்டரில் கூட்டத்தோடு மல்லு கட்டுவான்.ஆனால் டிக்கெட் வாங்க இல்லை.திரும்ப வரும்போது பணத்துடன் வருவான்.அந்த பணம் எனக்கும் சபலத்தை தூண்டும்.மேல் பை மற்றும் கீழ் பை வாங்குவதை கற்று கொள்ள ஆசையாக இருந்தது.களவும் கற்று மற என்ற பழமொழி வேறு நினைவுக்கு வந்து தொலைத்தது.ஆனால் ....என் அம்மாவுக்கு வந்த வியாதி என்னை காப்பாற்றி விட்டது.அவள் கர்ப்ப பை புற்று வந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்க பட என் வைராக்கியம்(இனி வீட்டு பக்கம் தலை வைத்து படுக்க கூடாது)உடைந்து நான் திரும்ப வீட்டிற்கு....

Friday, May 8, 2009

ஒரு காற்றில் அலையும் சிறகு ....எங்க இருக்கீங்க? எப்படி இருக்கீங்க? ..
போட்டோ வில் பார்கிறதுதான்..நேரிலே எப்போ?
இங்க நடக்கிறதை பாத்துகிட்டு இருக்கிங்கல்லே
சொந்த வாழ்க்கையும் சொல்லிக்கிற போல இல்லே ..
சோகத்த பங்கு போட ..யாரும் நாதி இல்லே ..
இங்கதான் இப்படி .. அங்க அம்மா வீட்லேயும் ஆறுதல் இல்லே..
பாவம் அங்க அவங்களுக்கே தலைவலியாம் ..
எங்க அய்யா க்கு முதுவலி..பெரியக்கா பஜ்ஜி கடை போட்டு இருக்காம் ..(பச்சை கலர் கேட் வாசல்லே ..)..பிசாவும் விக்கும் போலே ..
எதோ ரெண்டு மாமாங்கரங்க கொஞ்சம் அனுசொரனையா
இருக்காப்லே தெர்யுது?(அதுவும் காரணமாத்தான் )
ரெண்டு பெரிய அய்யாவும் ,ஒரு கைலெ சுத்திஉம் அறிவாளும்
எடுத்துகிட்டு தோட்டத்துக்கு மாம்பழம் பறிக்க போயிஇருக்கங்கலாம் ..
சூப்பர் ,ஞானி ,தளபதி, தலே எல்லாம் ஒரு ஒப்பாரி வைச்சுட்டு
கலைஞ்சுட்டங்க ..
பெரிய டில்லி தாத்தா ஆஸ்பத்திரிலேந்து வந்துட்டாங்க ...
அவங்க எப்பவுமே எதையுமே கண்டிகிட மாட்டாங்க ..மருமக வச்சதுதான் சட்டம் ...(இங்க எங்க தெருவுலே பட்டாசு கடை க்கு சரக்கு சப்ளை பண்ணுறாங்க ..)
சரி ..அத வுடுங்க.. இப்ப உங்க நிலைமையே சரி இல்லையாமே ?
நீங்கதான் நான் னு ஒரு படம் வந்திருக்காமே ??
அதுல வர மாதிரி ..எங்களுக்கு ஏதாவது செய்யுங்க ..
சாமி ஒன்னு கவனிசின்களா?
நீங்க இல்லே ..இல்லேன்னு அடிக்கடி சொல்றவந்தான் உங்க பேரை
நிறைய தடவை சொல்லறான் (மஞ்ச கலர் பையோட இருப்பாங்க இல்லே ..எங்க பெரிய அய்யா (இப்ப கூட ஒடம்பு முடியாம
ஆஸ்பத்திரிலே இருக்காங்க .. இன்னொரு பெரிய யப்பா கருப்பு சட்டை போட்டுக்கிட்டு வீரமா .. கோட்டை வாசலே மணி அடிச்சுகிட்டு இருப்பாங்களே ..அவரு ..நல்லாதானே இருக்காங்க ..

ஆனா மேலுக்குத்தான் உங்களை திட்டறது .

உள்ள பூஜை..புனஸ்காரம் இருக்கும்னு நினைக்கேன்
ஒரே குண்டா பெரிசா போட்டு ..மொத்தமா தீத்துட்டா தேவலைன்னு தோணுது ..

Tuesday, May 5, 2009

கத்திரி வெயிலும் ,,அழ்ஷடமத்து சனியும்

எல்லா பதிவர்களூம் திரைபட விமர்சனம் எழுதறாங்க..நானும் ஒண்ணு எழுதலாம்னுதான்.பசங்க,மூன்றாம் விதி இதை பத்தி எல்லாரும் எழுதிட்டாங்க.நா ஏற்கனவே எழுதுன ஒரு மேட்டர கொஞ்சம் தூசு தட்டி..இதோ...
எப்போ? எப்போ? என்று எதிர்பார்த்த எந்திரன் வெளியாகிவிட்டது..ஆனால் ரோபோ? என்ற பெயரில்..(தமிழ் தலைப்புக்கு வரிச்சலுகை கிடையாது..என்ற புதிய அறிவிப்புதான் காரணம்...(என்ன ஒரு தமிழ் பற்று..)சன் டிவி பிரமாண்ட தயாரிப்பு(200 கோடி என்று பேச்சு). இன்னும் ண்டு பிடிக்காத இடங்கள் தவிர எல்லா இடங்களிலும் படம் பிடித்தது.ரஜினி..முன்னாள் உலக அழகி...ஷங்கர்..ஆஸ்கார் ரகுமான்.அதை விட சன் குழுமத்தின் 24 சானல்கலிளும் 24 மணி நேரமும் விளம்பரம் .
பணம் போடுவதற்க்கு ஆள் கிடைத்தால் எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்வேன்.என்று மீண்டும் நிருபீத்திருக்கிறார் காதல்,கல்லுரி,வெய்யில் போன்ற பட்ஜெட் படங்களின் தயாரிப்பாளர் ஷங்கர் 8
ஹெலிகாப்டர்கள்(ஷங்கரின் ராசி எண்) வானில் வட்டமடிக்க,பூனா மும்பை சாலையில் 24 பி.எம்.டபிள்யூ கார்கள் பறக்க(எவன் அப்பன் வீட்டு காசு),ஒரு காரில் ரஜினி உலக அழகியுடன் பறக்க பின்னால் இன்னொரு ரஜினி துரத்த.படம் சூடு பிடிக்கிறது.
தனது வழக்கமான பார்முலாவை தள்ளி வைத்து விட்டு புதிய பாதையில் பயணித்திருக்கிறார் இயக்குனர்.சைன்டிஸ்ட் ரஜினி? அவரை துரத்தி துரத்தி காதலிக்கும் ஐஸ்.....ரஜினி தந்தையாக நாட்டின் தலைவராக சாருஹாஸன்..அவரை கொன்று விட்டு நாட்டை ஆள நினைக்கும் வில்லன்..வில்லனின் திட்டத்தை தெரிந்து கொள்ளும் சாருஹாசன் தான் ஒரு பனிப்புயலில் சிக்கி மறைந்து விட்ட்து போல் ஒரு நாடகம் போடுகிறார்.சந்தானமும்,கருனாசும் இதற்கு உதவுகிறார்கள்...நாட்டின் தலைமை பொறுப்பு ரஜினியிடம் வருகிறது.ஆனால் ரஜினியோ ஐஸை விட்டு பிரிய மனமில்லாமல்(இருவரும் வேறு நாட்டில் படித்து கொண்டிருக்கும்போது காதலிக்கின்றனர்) தன்னை போலவே ஒரு பிம்பத்தை உருவாக்குகிறார்.அதுதான் ரோபோ..???ரோபோவை நாட்டின் தலைவராக இருக்கும்படி ப்ரொக்ராம் செய்து விடுகிறார்.பின் என்ன?ஐஸ்வர்யாவுடன் கும்மாளம்தான்?
முதல் டூயட் பாடலான

"ஐஸ்..ஐஸ்.. வர்ரியா..கிஸ்..கிஸ்..தர்ரியா..
மெர்க்குரி உதடுதான்... ஸ்டிராபெரி கனவுதான்
பாஸ்பரஸ் படுக்கையில் பகலும் இரவும் பாம்பிங்க்தான்..
வாலி எழுதிய இந்த தமிழ் பாடல் 185 நாடுகளில் 186 நாட்கள் படம் பிடிக்கபட்டது...1500 டான்சர்கள்,1501குதிரைகள்,1502 மான்கள்,1503 மயில்கள்...1000 டன் சாம்பிராணி..2000 டன் தக்காளி
மொத்த செலவு 40 கோடி..
சரி ..கதைக்கு வரலாம்...நாட்டை கைப்பற்ற நினைக்கும் வில்லன் ரோபோ வை ரஜினி என்று நினைத்து கொல்ல முயற்சிக்கிறான்..இந்த காட்சிகளில் ஹாலிவுட்டை அசால்ட்டாக முந்தியிருக்கிறார் இயக்குனர்..திடீர் திருப்பமாக ரோபோவின் சாப்ட்வேர் கரப்ட் ஆகி மனிதனை போல் காதல் உணர்வு வந்து விடுகிறது..வில்லன் ஒரு பெண் ரோபோவை (ஐஸ்வர்யாவை போலவே)உருவாக்கி ரஜினி ரோபோவுடன் நெருங்க விடுகிறார்கள்..நாட்டுக்கு ஐஸூடன் ரகசியமாக வரும் ரஜினி இரண்டு ரோபோக்களும் நெருக்கமாக இருப்பதை பார்த்து விடுகிறார்....தான் செய்த ப்ரொக்ராம் மாறி விட்டது என்று உணருகிறார்...(முதல் பாதி முடிவு)

இடைவேளை வரை ரோபோ விமர்சனம் பார்த்திருப்பீர்கள்..மன்னிக்கவும் நண்பர்களே.நான் அதுவரைதான் படம் பார்த்தேன்..அதன் பின்......கறுப்பு சட்டை அணிந்த குண்டர்களின் தடியடி,ஆசிட் முட்டை வீச்சு.....பெட்ரோல் குண்டுகள் வீச்சு..எங்கும் கலவரம்.....ரத்த ஆறு...????காரணம்..அஞ்சா நெஞ்சன் அழகிரி.... மதுரை மா நகராட்சி பொறுப்பு குழு உறுப்பினர் மாண்புமிகு "அட்டாக்" பாண்டி தலைமையில் வந்த கும்பல்...ரோபோ திரையிடப்பட்டிருந்த அத்தனை இடங்களிலும் இந்த கதிதான்...இந்த சம்பவத்தில் மதுரை ஆட்கள் யாரும் ஈடுபவில்லை...கோர்ட் மூடி விட்டதால் வக்கீல்களுக்கு இந்த பணியை கொடுத்து விடுமாறு அண்ணன் பெருந்தன்மையுடன் கூறி விட்டதாக அவர் மேலும் கூறினார்.

.சம்பவ இடத்தில் பேட்டி அளித்த காவல் துறை தலைவர்..."அனைவரும் அமைதியாக அலறிக் கொண்டே" கலைந்து விட்டதாகவும்,நிலைமை இப்போது கட்டுக்குள் இருப்பதாகவும் தெரிவித்தார்.மேலும் அட்டாக் பாண்டி" அண்ணன் ஆணையின்படி 1500 மொபைல் ஹோம் தியேட்டர்கள் தமிழ் நாடு முழுவதும் உலவிக்கொண்டிருக்கும்..பொது மக்கள் படம் இலவசமாக ரோபோ வை பார்க்கலாம்...மேலும் படம் பார்க்கும் அனைவருக்கும் ஒரு பவுன் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும்..என்றும் அவர் மேலும் கூறினார்.மீறி படத்தை யாராவது திரையிட்டால் அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என்றும் கூறினார்.காவல் துறை தலைவரும் அதை ஆமோதித்தார்.

காற்று கூட எங்கள் இடையில் இனி நுழையாது என்று அழகிரி, மாறன் சகோதரர்களை பற்றி சொன்னது என்னவாயிற்று??கலவரம் எப்படி நுழைந்தது??பின் வரும் ரோபோ உருவாக்கம்...பரபரப்பு செய்திகளில்...................

ரோபோ.....திரைக்கு பின்னால்.....
முதலில் மீண்டும் எப்படி பிரிவு/பிளவு ஏற்பட்டது..
இதற்கு மூலக் காரணம் ஷங்கர்தான் எங்கின்றனர்..தகவலறிந்தவர்கள்..
சன் பிக்சர்ஸ் லோகோ வை சூரியனில் போய் ஷுட் பண்ணலாம் என்று ஷங்கர் பிரியப்பட்டிருக்கிறார்..இதற்காக திரு. மயில்சாமி அண்ணாதுரை, திரு.அப்துல் கலாம் ஆகியோரிடமும் ஆலோசனை கேட்கபட்டிருக்கிறது..ஆனால் அருகிலிருந்த தயாநிதி என்னது?சூரியனுக்கா..நாங்க இங்கிருந்தே சூரியனை(உதய) சுடுவோம்..தெரியுமில்லே..என்று வாய்த் துடுக்காக சொல்லி விட்டாராம்..இது அழகிரி காதுக்கு போக ..வந்தது வினை...
"நாங்கள் சிறியவர்கள்தானே, எங்களை மன்னிக்கக் கூடாதா..என்று செல்வி மூலம் தூது அனுப்பியதாக ஒரு தகவல்???

ஜில்.. ஜில்.. ஜில்... ஜொள்...ஜொள்... ஜொள்....
ஆர்.டி. எக்ஃஸ்.... உன் விழியில்....
என் மடியில் .... டைனமைட்
அண்டார்டிகாவில் செய்வோம்...லவ் ஃபைட்.
பிப்பெட் நீதான்.... பீயுரெட்.நாந்தான்..
டெஸ்ட் டீயூபில்... ரெஸ்ட் இனி ..அதை
யூ ட்யூபில் கண்டு நீ களி ஹனி.....
கூகுளில் தேடி...... குயிக் டைமில் கூடி...
பிளாக்குகளில் பாடி.....பாரடைஸ் போகலாம்...
என் பிளாக் பெர்ரி நீ வாடி....
கலைமாமணி,வித்தக கவிஞர் பா.விஜய் ..எழுதிய இந்தப் பாடல் பனிப் பிரதேசமான அண்டார்டிகாவில் நடை பெற்றது...இப்பாடலுக்கு 5000 குளிர்சாதன பெட்டிகள் கொண்டு செட் அமைக்க வேண்டும் என்று ஷங்கர் பிரியப்பட....உடனே கொரியாவிலிருந்து சாம்சங்க் கம்பெனியிலிருந்து வரவழைககபட்டது.
இங்கு பிரிட்ஜ் விற்ற முதல் கம்பெனி நாங்கள்தான் என்று அக்கம்பெனியின் தலைமை
நிர்வாகி சூ சென் பெருமையுடன் கூறினார்..
படபிடிப்பு முடிந்தவுடன் 5000 குளிர் பெட்டிகளையும் அங்கிருந்த எஸ்கிமோக்களுக்கு இலவசமாகவே வழங்க வேண்டுமென்று ரஜினி கூறி விட கலாநிதி மாறன் மிகவும் பெருந்தன்மையுடன் சம்மதித்து விட்டார்.

கரு விழி..குரு பார்வை
சுரு..சுரு நாசி..என் பெயரை நீ சுவாசி
செவ செவ அதரம்..நீ என் மதுரம்...
பழ ..மலை...கீழே நூலிடை
அதன் பின் ஆலிலை..

வாலி எழுதிய இந்த பாடலும் சீரோ டிகிரி குளிரில் படமாக்கபட்டபோது ரஜினி எவர் சில்வரில் செய்யபட்ட முழு ஆடை அணிந்திருந்தார்(மனிஷ் மல் ஹோத்ரா)..ஐஸ் புதுமையாக(3) இலைகளினால் வடிவமைக்கபட்ட இலக்கிய நயம் சொட்டும் உடை அணிந்திருந்தாராம்.


ஒரு முக்கிய செய்தி...
இயக்குனர் ஷங்கரின் அடுத்த சொந்த படத்தை அவர் உதவியாளர் இயக்குகிறார்.
படபிடிப்பு முழுவதும் "எஸ்" பிக்சர்ஸ் அலுவலகத்திலேயே நடை பெறும்...என்று ஒரு பத்திரிக்கை செய்தி குறிப்பில் கூறப் பட்டுள்ளது.


கத்திரி வெய்யில் நேத்துதான் ஆரம்பிச்சுச்சு..

Saturday, May 2, 2009

சுருக்கமாக சில கிறுக்ஸ்


சைதாபேட்டை பேருந்து நிலையத்தில் கண்ட ஒரு காட்சி.ஒரு இளம் தம்பதி..அருகில் அவன் தாய்..அவன் சூழலை மறந்து மனைவியை கொஞ்சி கொண்டிருந்தான்..மற்றவர்கள் பார்ப்பதை அவர்கள் சட்டையே செய்ய வில்லை..அவன் தாய் முகத்தில் ஒரு இனம் புரியாத கவலை இருப்பதாக எனக்கு பட்டது.அவள் மகன் கவனத்தை திசை (மனைவியிடமிருந்து)திருப்பும் வண்ணம் செயல் பட ,அவனுக்கு வந்ததே கோபம்.தாயை திட்டி தீர்க்க இளம் மனைவி கண்கள் கலங்க.ஒரு மினி சீரியல் பார்ப்பது போல் இருந்தது.சற்று நேரம் ஆயிற்று.அவர்கள் பஸ் வரவில்லை.இளம் மனைவி ஆட்டோவில் போகலாம் என்றாள்.தாய் வெட்டி செலவு என்று மறுக்க மீண்டும் மனைவியின் கண்ணீர்.இளமை வென்றது.ஆட்டோ வந்தது.மனைவி முதலில் ஏறினாள்.மகன் ஏற முற்படுகையில் தாய் அவனிடம் ஆட்டோவின் பின்னால் எழுத பட்ட வாசகத்தை காட்டினாள்.நானும் அதை படித்தேன்..நீங்களூம் படித்திருப்பீர்கள். "சீறும் பாம்பை நம்பு..சிரிக்கும் பெண்னை நம்பதே.." அவர்கள் போய் விட்டர்கள்.

நான் யோசிக்க ஆரம்பிதேன்.ஏன் அந்த தாய் அப்படி நடந்து கொண்டாள். ஒரு வித insecurity யா?கணவனை இழந்த அந்த விதவை தாய்க்கு மருமகள் மகனை தன்னிடமிருந்து பிரித்து விடுவாளோ? என்ற பயம் காரணமா?எப்படி அவர்கள் ஒத்து குடும்பம் நடத்த போகிறார்கள்.காலம் காலமாய் இந்த பிரச்சனை இருந்துதான் வருகிறது.

அமரர் சுஜாதா ஒரு முறை வினோதமாக ஒரு விளக்கம் எழுதி இருந்தார்.
"தாய் தன் மகன் உருவில்,ஜாடையில் தன் புருஷனை பார்ப்பது போல் உணர்கிறாள்.ஆனால் அவன் இன்னொரு பெண்ணுடன் (மனைவியுடன்)வரும் போது அவளை தன் சக்களத்தியாக பார்க்க தொடங்குகிறாள்.

பெண் குழந்தைகள் இல்லாத வீட்டிற்கு மருமகளாக வருபவர்கள் மகளாக நடத்த படுவதாக ஒரு ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.ஆனால் கணவர்களுக்கு உத்தரவாதம் இல்லை.பெண்களோடு வளராததால் அவர்கள் அருமை தெரியாமல் துச்சமாக பெண்டாட்டியை மதிக்கிறார்களாம்.