Wednesday, September 2, 2009

திருப்பள்ளி எழுச்சி...ஜெயலலிதா



கொடநாடு எஸ்டேட்...அடிமைகள் போல் எல்லோரும் பம்மி கிடக்கின்றனர்.ஒபிஎஸ்,ஜெயக்குமார்,வளர்மதி,செங்கோட்டையன்,செம்மலை என முன்னாள் மந்தி(ரி)கள் மற்றும் கட்சிக்காரர்கள்.

பெரிய யாககுண்டங்கள் தயாராக இருக்கிறது.

இன்னிக்கு 09/09/09..அம்மா இன்னிக்குத்தானே முழிக்கறதா சொலியிருக்காங்க சின்னம்மா?பவ்யமாக கேட்கிறார் ஒபிஎஸ்

ஆமாம் ..9 மணிக்கெல்லாம் எழுந்துடுவாங்க

மணி 9 ஆச்சு..அசையறாப்ல தெரியலயேம்மா ..செங்க்ஸ்

தாயே..ஆதிபராசக்தி..டான்சி ராணியே..தெய்வமே

துதிகோஷம் காதைப்பிளக்கிறது.

ஹீஹிம்..அம்மா ..சலனத்தையே காணும்

சசிகலா..அம்முவுக்கு டிரைஜின்ல இளநீர்,லைம்கார்டியல் மிக்ஸ் பண்ணி,அதுல துளசியை போட்டா வர ஸ்மெல் ரொம்ப பிடிக்கும்

அதுக்கு எழுந்திருவாங்க..

அம்மா அசருவதாக இல்லை..

அனைவரும் கூடி ஆலோசிக்கின்றனர்.

அதிமுகவில் புதுசாக ஊடுருவியிருக்கும் புல்லுருவி டாக்டர் வெங்கடேஷ் ஒரு ஐடியா கொடுக்கிறார்

அதன்படி ஒரு சிடியை ஒலிக்க விடுகின்றனர்..

இன்னும் சத்தமா வைங்க

சிடி அலறுகிறது

“ஐயோ கொல்றாங்களே

“ஐயோ கொல்றாங்களே

தலைவரின் குரல் ஒலிக்க

ஜெ விருட்டென்று எழுந்து வருகிறார்.

மகாவிஷ்ணுவை பார்த்த தேவர் கூட்டம் போல் ஒட்டுமொத்தமாக அனைவரும் காலில் விழுகிறார்

இது பழசுதானா?என்ன பண்ணிகிட்டிருக்கீங்க எல்லாம்?ஆட்சி என்னாச்சு?

அம்மா ..துரையை தூக்கிட்டாங்க..அனிதாவை புள்ளை புடிக்கிறவன் புடிச்சுட்டு போயிட்டாங்க..

அந்த கோமாளி சேகர்?

அந்தாளு காதுல பூவை சொருகிட்டு,அல்வா கொடுத்துட்டு போயிட்டாருங்க..

இடைத்தேர்தல் என்னாச்சு?

அதுல ஸ்ரேயா ஜெயிச்சிட்டாங்க

என்ன உளர்றீங்க?

குமுதம் அரசு கேள்வி பதில்ல திரிஷா,அசின்.ஸ்ரேயா மூணு பேருக்கும் “இடைத்தேர்தல்வச்சாங்க..அதுலதான்

மாகாதேவன்..இங்க வந்து இந்தாள் மேல விழுங்க

புல்டோசர் விழுந்த எபெக்ட்டில் திண்டுக்கல் சீனிவாசன் நசுங்கிபோகிறார்.

அம்மா..விஜயகாந்த் நிறைய ஓட்டு வாங்கறாரு.அவரு கிட்ட கூட்டணி வச்சா?

ஆமா..அவருக்கும் சேர்த்து நா ஊத்தி கொடுக்கணுமா?ஏன் எல்லாரும் முகமூடி போட்டிருக்கீங்க?அது போடாமயேத்தானே கொள்ளையடிச்சோம்.

பன்றிக்காய்ச்சல் நாட்டை மிரட்டுது தாயே..ஒரு போராட்டம் அறிவிச்சா ..செல்வாக்கை பெருக்கிடலாம்.

மண்ணாங்கட்டி..மக்கள்தான் எல்லா ஓசியையும் வாங்கிட்டு நன்றிக்காய்ச்சல் வந்து அலையறாங்களே

அப்போது பின் பக்க சுவர் ஏறி குதிச்சு வைகோவும்,ராமதாசும் ஓடி வருகிறார்கள்..

யார் மேன் நீங்க?

அம்மா என்னைத்தெரியலையா?நாந்தான் வைகோ

இங்க வர்றவங்க எல்லாம் பொட்டியை வச்சுட்டு கோதான்..நீ யாருய்யா?

ராமதாஸ் வைகோவிடம் ‘சீக்கிரம் அழுதுகாட்டுங்கஅம்மா மறந்துட்டாங்க போல

வைகோ தரையில் படுத்து புரண்டு ஓ வென கதறுகிறார்.

அந்த அழுவாச்சியா?சரி என்ன வேணும்?

தேம்பி,தேம்பி அழுகிறார்.

சசி..இந்தாளுக்கு ஜவ்வு முட்டாய் வாங்கி கொடுத்து துரத்து.நான்சென்ஸ்..நீங்க யாரு?எஸ்டேட்ல மரம் வெட்டற ஆளா?

அன்பு சகோதரி..என்னை தெரியலையா?நான் தான் தமிழ்குடிதாங்கி.அன்புமணிக்கு ராஜ்யசபா..

போங்கய்யா ..தரித்திர சுமைதாங்கி.உங்ககூட சேர்ந்துதான் குடியே மூழ்கி போச்சு..சனிப்பொணம் தனிப்போகாதுன்னு என்னையும் சேர்த்து இழுத்துட்டு போயிட்டீங்க..

அப்படி சொல்லாதீர்கள் அன்புசகோதரி..அன்புமணி அத்தை,அத்தை என்று உங்கள் நினைவாகவே இருக்கிறார்

சசி...இவரை தோட்டத்துத்து அனுப்பு..கைல கோடாரியை கொடுத்து மரம் வெட்டினாத்தான் கஞ்சி..உப்பு போடாம..

செக்யூரிட்டி யாரையோ இழுத்து கொண்டு வருகிறான்..

“அம்மா யாருண்ணு தெரியலை..ஒரு தகர டப்பாவை வச்சுகிட்டு குலுக்கிட்டிருந்தாரு..பூம் பூம் மாட்டுக்காரன் மாதிரி தெரியுது..ஆனா மாடு இல்லை

மாடு எங்கய்யா?

அதை வித்துதான் இடைத்தேர்தலில் நின்னோம்

ஜெ கண்டுபிடித்து விடுகிரார்.

தா.பாண்டியனா?

ஆமாம்மா...

சசி..இவர் கைல சுத்தியும்,அரிவாளும் கொடு..ஒழுங்கா வேலை செய்யனும்..என்ன?

எல்லாரும் நா சொல்றதை கேளுங்க..நீண்ட நாள் ஓய்வில இருந்ததால எனக்கு ரொம்ப களைப்பா இருக்கு..அதனால் நா திரும்ப ஓய்வு எடுக்கப்போறேன்..இந்த மைனாரிட்டி ஆட்சி ஒழியனும்..இருள் விலகணும்,..அதனால வீட்டுக்கு ஒருத்தர் தீக்குளிங்க....

சசி எல்லாருக்கும் சோறு போட்டு அனுப்பு..

விஜயகாந்த் மட்டன் பிரியாணி போடராரும்மா..நீங்களும்..

ஆட்சி வரட்டும்.ஊரையே அடிச்சு உலை வச்சிடலாம்.சசி..ஆளுக்கு 20ரூபா கொடுத்தனுப்பு.சைதாபேட்டையில தண்டோரா ஆபிசுக்கு பக்கத்தில ஒரு வண்டியில மீன்குழம்பு சாப்பாடு நல்லாயிருக்கும்.வாங்கி கொட்டிக்கங்க.

அம்மா திரும்ப எப்ப உங்களை எழுப்பறது?

ம்ம்ம்..10/10/10 லதான்

27 comments:

கலையரசன் said...

//ராமதாஸ் வைகோவிடம் ‘சீக்கிரம் அழுதுகாட்டுங்க”அம்மா மறந்துட்டாங்க போல’//

சத்தமா சிரிச்சிட்டேன்..
அரசியல் நைய்யான்டின்னா..
நீதான் உடன்பிறப்பே கலக்குகிறாய்!!

மணிஜி said...

கலை நம்பர் கொடுங்க..பேசலாம்...

Raja said...

Excellent! Well Done!!

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

அடேங்கப்பா !ரொம்ப தைரியந்தான் உங்களுக்கு.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

அடேங்கப்பா !ரொம்ப தைரியந்தான் உங்களுக்கு.

பித்தன் said...

சிரிச்சிட்டேன்..

ஆரூரன் விசுவநாதன் said...

இதப் படிச்சாவது இவனுங்களுக்கு அறிவு வந்தா சரி.
வாழ்த்துக்கள்
அன்புடன்
ஆரூரன்

தங்கராசு நாகேந்திரன் said...

//அப்படி சொல்லாதீர்கள் அன்புசகோதரி..அன்புமணி அத்தை,அத்தை என்று உங்கள் நினைவாகவே இருக்கிறார்//

கலக்கல் சகோதரா
வேறு யாரும் அம்மாவை இப்படி
கலாய்ச்சதில்லை
அடுத்த திருப்பள்ளியெழுச்சிக்கு இன்னும் 13 மாதங்கள் காத்திருக்கனுமே....
பாராட்டுக்கள்

DHANA said...

அண்ணக்கு
ஒரு லாரி பார்சல்

DHANA said...

அண்ணக்கு
ஒரு லாரி பார்சல்

Raju said...

"ஜெ"யம் உண்டாகட்டும் "மவனே"..!

ஈரோடு கதிர் said...

//தண்டோரா ஆபிசுக்கு பக்கத்தில ஒரு வண்டியில மீன்குழம்பு சாப்பாடு நல்லாயிருக்கும்//

நெஜமாலுமா???

அகநாழிகை said...

தாங்க முடியல...வேறென்ன, சிரிப்புதான்.
ஊமைக்குசும்பாயில்லே இருக்கு.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

கார்த்திகைப் பாண்டியன் said...

//மந்தி(ரி)கள்//

//இடைத்தேர்தல் என்னாச்சு?
அதுல ஸ்ரேயா ஜெயிச்சிட்டாங்க
என்ன உளர்றீங்க?

குமுதம் அரசு கேள்வி பதில்ல திரிஷா,அசின்.ஸ்ரேயா மூணு பேருக்கும்“இடைத்தேர்தல்”வச்சாங்க..
அதுலதா//

//க்கள்தான் எல்லா ஓசியையும் வாங்கிட்டு நன்றிக்காய்ச்சல் வந்து அலையறாங்களே//

//எஸ்டேட்ல மரம் வெட்டற ஆளா?//

போட்டுத் தாக்குங்க.. அடி தூள்.. ரசிச்சு சிரிச்சேன்..

குடந்தை அன்புமணி said...

கலக்கல் எழுச்சி இடுகை. சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குதுப்பா....

Ashok D said...

நல்ல காமெடிங்க.....

உண்மைத்தமிழன் said...

ஐயோ.. ஐயோ.. கலக்கலோ கலக்கல் தண்டோரா..

உங்களுக்கு நகைச்சுவை இயல்பாகவே வருகிறது..!

கொடுத்து வைத்தவர் போங்க..!

ᾋƈђἷłłἔṩ/அக்கில்லீஸ் said...

சூப்பரா இருந்துச்சு... :)

Cable சங்கர் said...

தலைவரே.. பின்னிட்டீங்க போங்க.. அவ்வள்வு இயல்பான காமெடி..

பாலா said...

ஜெ = 9

GHOST said...

எதுக்கும் ரெடியா இருங்க, ஆட்டோ வர போகுது

கலையரசன் said...

//கலை நம்பர் கொடுங்க..பேசலாம்...//

ஹய்யா.. பிரபல பதிவர்கிட்ட பேச போறேனே...
என் நம்பர் : 00971507174360

உங்க நம்பரை : rkarasans@gmail.com க்கு அனுப்புங்க

R.Gopi said...

தம்பி தண்டோரா...

தங்களின் நகைச்சுவை என்னை மிகவும் கவர்ந்தது... வடிவேலு பக்கத்து வீடா.. விவேக் எதிர்த்த வீடா...

நம் கழகத்தில் இணைய விருப்பமா? "குரசொலி"யில் உதவி ஆசிரியர் வேலை தயார்.. இல்லையெனில், "புலியின் மீசை" படத்தில் உதவி வசனகர்த்தாவாக பணியாற்று..

குண்டனாக விருப்பம் இல்லையெனில், தொண்டனாகவாவது இரு..

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

சசி எல்லாருக்கும் சோறு போட்டு அனுப்பு..


விஜயகாந்த் மட்டன் பிரியாணி போடராரும்மா..நீங்களும்..


ஆட்சி வரட்டும்.ஊரையே அடிச்சு உலை வச்சிடலாம்.சசி..//


(:
சூ.....ப்பர்!

நித்யன் said...

தல...

கலக்கல்.

கோபாலபுரத்த கண்டாலும் பாயுறீரு... கொடநாட்டு மேலயும் பாயுறீரு...

படித்துப் படித்துச் சிரித்தேன்.

அன்பு

நித்யன்

Senthil Kumar said...

Sir unga post romba superb analum ungalukku romba than dhiriyam.

ஜெட்லி... said...

ஒன்னும் சொல்றதக்கு இல்ல.....
நடத்துங்க.....