Friday, September 25, 2009

நாயும்...குருவியும்


நாய் வளர்ப்பு முறைகள்

உ‌ங்க‌ள் ‌வீ‌ட்டில‌் நா‌ய் வள‌ர்‌த்தாலு‌ம் ச‌ரி, நா‌ய் வள‌ர்‌‌க்க ஆசை‌ப்ப‌ட்டாலு‌ம் ச‌ரி இதை முத‌லி‌ல் படியு‌ங்க‌ள்.

பொதுவாக வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் நாய்களின் ஆயுள் 18 முதல் 20 ஆண்டுகள் வரை.

நாய்கள் தனக்குதானே பிரசவம் பார்த்துக் கொள்ளும். நாய்கள் பிரசவம் முடிந்ததும் ஓரிரண்டு குட்டிகளை தானே சாப்பிட்டு விடுவது‌ம் உண்டு.

நாயின் மூக்குப்பகுதி காய்ந்து இருந்தால் அவற்றுக்கு காய்ச்சல் என்று அர்த்தம்.

நாய்கள் அருகம்புல்லை சாப்பிடும் பழக்கமுடையவை. அவற்றின் உடலில் ஏற்படும் பல உபாதைகளுக்கு அரும்கம்புல் மருந்தாகிறது. ‌வீ‌ட்டி‌ல் வள‌ர்‌க்கு‌ம் நாயை பூ‌ங்கா அ‌ல்லது பு‌ற்க‌ள் இரு‌க்கு‌‌ம் பகு‌திகளு‌க்கு ‌நி‌ச்சய‌ம் அழை‌த்து‌ச் செ‌ல்ல வே‌ண்டு‌ம்.

நாய்கள் தினமும் ஒரு வேளை மட்டுமே உணவை உண்ணும் பழக்கம் கொண்டவை. பெரு‌ம்பாலு‌ம் அசைவ உணவுக‌ள்தா‌ன் நா‌‌ய்களு‌க்கு‌ப் ‌பி‌ரிய‌ம்.

தனது குட்டிகளின் மீது அதிக பாசம் கொண்டவை. நாய்கள் பிரியமானவர்களை பிரிந்தால் கண்ணீர் விட்டு அழும்.

நா‌ய் கு‌ட்டியை ஈனு‌ம் வரை ஒரே இட‌த்‌தி‌ல் வ‌சி‌க்கு‌ம். கு‌‌ட்டியை ஈ‌ன்றது‌ம் உடனடியாக ம‌ற்றொரு இட‌த்‌தி‌ற்கு மா‌ற்‌றி‌விடு‌ம் பழ‌க்க‌ம் கொ‌ண்டது.

எப்போதும் நாய்கள் காற்றடிக்கும் திசையை எதிர் நோக்கித்தான் படுக்கும். ஏ‌ன் எ‌ன்றா‌ல், கா‌ற்று மூலமாக வரு‌ம் வாசனையை‌க் கொ‌ண்டு எ‌ந்த ‌விஷய‌த்தையு‌ம் மோ‌ப்ப ச‌க்‌தியாலே க‌ண்ட‌றி‌ந்து கொ‌ள்வத‌ற்காக.

நாய்களுக்கு குளிர் காலங்களில் அதிகமாக முடி கொட்டும். எனவே அதற்கு முன்பாகவே அவற்றுக்கு முடியை வெட்டிவிடுவது நல்லது.

குருவியின் நன்றி உணர்வு

ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனது தோழருடன் ஒரு பாதையில் சென்று கொண்டிருந்தார்.

அங்கே ஒரு மரக்கிளையில் குருவி ஒன்று கத்திக் கொண்டே இருந்தது.

அதைக் கண்ட தோழர், ஏன் இந்தக் குருவி கத்திக் கொண்டே இருக்கிறது என்று கேட்டார்.

அதற்கு நபிகள், அந்த குருவிக்கு கண் தெரியாது. அதனால் இறைவா, எனக்கோ கண் தெரியவில்லை. நான் எப்படி இரை தேடி உண்பேன் என்று கூறி கத்துகிறது என்றார்.

அந்த நேரத்தில் அந்த பக்கம் பந்து வந்த வெட்டுக்கிளி ஒன்று குருவியின் வாயில் விழ, குருவி அந்த வெட்டுக்கிளியை கவ்வி விழுங்கியது. வெட்டுக்கிளியை உண்ட குருவி உடனே மீண்டும் கத்தத் துவங்கியது.

இதைப் பார்த்ததும் வியந்துபோன தோழர், இப்போது மீண்டும் ஏன் கத்துகிறது என்று கேட்டார்.

நபிகள், உணவு கிடைத்ததற்காக இறைவனுக்கு நன்றி சொல்கிறது என்று பதிலளித்தார்.

இந்த பதிவிற்கு உள்/வெளி/சைடு நோக்கங்கள் இருப்பதாக பரப்பப்படும் வதந்திகளை நம்பாதீர்....அப்பளம் சுடுவது எப்படி என்ற என் அடுத்த பதிவிற்கும் உங்கள் பேராதரவை நாடும் ......................

20 comments:

butterfly Surya said...

பகிர்விற்கு நன்றி.

வால்பையன் said...

// நாய்கள் பிரியமானவர்களை பிரிந்தால் கண்ணீர் விட்டு அழும்.//

நாய் மனிதனைவிட மேலானது!

Mahesh said...

//இந்த பதிவிற்கு உள்/வெளி/சைடு நோக்கங்கள் இருப்பதாக பரப்பப்படும் வதந்திகளை நம்பாதீர்//

ஆக்சுவலா இதுதான் பதிவு... மேல இருக்கற்றது எல்லாம் டிஸ்கி... :)))))))))))))))))))

கார்த்திகைப் பாண்டியன் said...

//இந்த பதிவிற்கு உள்/வெளி/சைடு நோக்கங்கள் இருப்பதாக பரப்பப்படும் வதந்திகளை நம்பாதீர்....//

நான் நம்பிட்டேன்..:-))) வதந்திய இல்ல.. உங்க டிஸ்கிய..

இரும்புத்திரை said...

இதில் எதாவது உள்குத்து இருக்கா அண்ணன் தண்டோரா வாங்க

Beski said...

நாய்னு திட்டிட்டாரு, அது தெரியாம இருக்க கூடவே குருவியையும் சேத்துக்கிட்டாரு. உ.போ.ஒ. ல மூனு முஸ்லிம் தீவிரவாதி கூட ஒரு இந்துத் தீவிரவாதிய சேத்த மாதிரி...

இது மாதிரி சொன்னா நம்பாதீங்கன்னுதான கடைசில போல்டா சொல்லிருக்கீங்க?
போல்டுண்ணே.

butterfly Surya said...

அப்பளம் சுடும் பதிவை ஆவலோடு எதிர்பார்க்கிறோம். நானும் அறிவு ஜீவிதான்....

Raju said...

அண்ணே, மார்கழி மாச்த்தப்பத்தி எதாவது...?!?!?

அகநாழிகை said...

தண்டாரோ,
பிராய்லர் கோழிப் பண்ணை வைப்பது எப்படியென தாங்கள் பதிவிட்டால் தன்யனாவேன்.

க.பாலாசி said...

//நாய்கள் தினமும் ஒரு வேளை மட்டுமே உணவை உண்ணும் பழக்கம் கொண்டவை. பெரு‌ம்பாலு‌ம் அசைவ உணவுக‌ள்தா‌ன் நா‌‌ய்களு‌க்கு‌ப் ‌பி‌ரிய‌ம்//

அப்படியா? புது மேட்டரா இருக்கே...

பாலா said...

ஒரு எழவும் புரியலை!

Kumky said...

சீத்தலை சாத்தனார் நினைவு வந்து போனது...

Kumky said...

அப்படியே யார் யார் என்ன சொல்லி திட்டினாலும் அது பற்றிய பதிவுகள் தொடருமா....?

மணிஜி said...

/ஒரு எழவும் புரியலை//

பாலா புரியாம இருக்கிறது எவ்ளோ நல்லது..அதை விடுங்க புது வேலை எப்படி இருக்கு?

மணிஜி said...

/அப்படியே யார் யார் என்ன சொல்லி திட்டினாலும் அது பற்றிய பதிவுகள் தொடருமா...//

நீங்க பெயரில வச்சிருக்கீங்க..நாங்க??

மணிஜி said...

/சீத்தலை சாத்தனார் நினைவு வந்து போனது..//

you mean கடல் head

பாலா said...

///
புது வேலை எப்படி இருக்கு?
/////////

வேலை செஞ்சாதானே.. எப்படி இருக்குன்னு சொல்ல..!! நான் தான் பதிவு எழுதிகிட்டு இருக்கேனே... ஆஃபீஸில் இருந்து..>! :) :) :)

ஜாலியா.. போகுதுங்க தண்டோரா..!
======

உங்களுக்கு எதோ ‘பின்னூட்டம்’ பிரச்சனைங்கற மாதிரி தெரியுது. என்ன மேட்டருன்னுதான் புரியலை.

பிரச்சனைன்னா சொல்லுங்க.... அர்னால்டை வச்சி அடிக்கலாம்.

அது சரி(18185106603874041862) said...

//
இந்த பதிவிற்கு உள்/வெளி/சைடு நோக்கங்கள் இருப்பதாக பரப்பப்படும் வதந்திகளை நம்பாதீர்....அப்பளம் சுடுவது எப்படி என்ற என் அடுத்த பதிவிற்கும் உங்கள் பேராதரவை நாடும் ......................
//

என்ன உள்குத்துன்னு மண்டை காஞ்சிக்கிட்டு இருக்கேன்...

டிஸ்க்கின்னா பின்னாடி தான் போடணும்னு யார் சொன்னா??? முன்னாடியே போட்ருக்கலாமில்ல....

:0)))

செந்தில் நாதன் Senthil Nathan said...

/ஒரு எழவும் புரியலை/

repeatu...

அத்திரி said...

அண்ணே ஒரு வாரமா நீங்க தெளிவா இருக்கீங்களோ?? அதெல்லாம் நமக்கு ஒத்து வருமா.. மிதந்துட்டே இருங்க.அப்ப தான் ஒன்னும் தெரியாது...