Saturday, September 5, 2009

கோணலாயிருந்தாலும் என்னுடையதாக்கும்....




நீண்ட வரிசை
சற்றே ஊர்ந்துதான் போனது

நின்றவர் அனைவருக்கும்
அவரவர் கவலைகள்
கோரிக்கைகள்
பிரார்த்தனைகள்

கட்டியும்,பெட்டியுமாய்
காணிக்கைகள்

சற்றே அலுப்பும்
அவர்கள் முகத்தில்

ஊர்கதையும் கொஞ்சம்
உணர்ச்சியின்பால்
கொஞ்சம் கோவிந்தாவும்தான்

எனக்கும் கவலைகள்
பிரச்சனைகள்
கோரிக்கைதான் இல்லை

பின் கனவில் வந்து
அவன் தானே என்னை
வரச்சொன்னான்..
பார்க்க வேண்டுமாம்

’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’

அன்புள்ள என்று
ஆரம்பித்து
அன்புடன் என்று
முடித்துக்கொண்ட
கடிதங்கள்..

அவற்றின் இடையில்
நாம் பறிமாறி கொண்ட
வரிகள்

நம் பிரிவை கேலி
செய்கிறது
எத்தனை பாசாங்கு
இவர்களுக்குள்?

’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’

அழகாய் இருக்கிறாய்
பயமாய் இருக்கிறது

அதே வரிகள்தான்
ஆனால் இந்த முறை
மகளை பார்த்து..

‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’

ஐயோ ..கொல்ராங்களே...

இந்த முறை தலைவர் இல்லை...

தமிழன்னை??

‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’

54 comments:

பரிசல்காரன் said...

:-)))))))

தருமி said...

//பின் கனவில் வந்து
அவன் தானே என்னை
வரச்சொன்னான்..
பார்க்க வேண்டுமாம்//

பாவம்!
அவனுக்கு என்ன
வேண்டுமோ தெரியவில்லை!!

தருமி said...

//அழகாய் இருக்கிறாய்
பயமாய் இருக்கிறது

அதே வரிகள்தான்
ஆனால் இந்த முறை
மகளை பார்த்து..//


நல்லா இருக்கு .....

Raju said...

\\அழகாய் இருக்கிறாய்
பயமாய் இருக்கிறது

அதே வரிகள்தான்
ஆனால் இந்த முறை
மகளை பார்த்து..\\

இதுதான் டாப்பு தலைவரே..!
சூப்பர்ப்.

Raju said...

\\தருமி Said
அவனுக்கு என்ன
வேண்டுமோ தெரியவில்லை!!\\

தருமி ஸார், அவர் அவனைச் சொல்லவில்லை.
:)

Cable சங்கர் said...

/அழகாய் இருக்கிறாய்
பயமாய் இருக்கிறது

அதே வரிகள்தான்
ஆனால் இந்த முறை
மகளை பார்த்து..
//]]

suuper.

Mahesh said...

எதுவுமே கோணல் இல்லையே...
அருமை !!

தராசு said...

இந்த மாதிரி சூப்பர் கவிதைக்கு ஏன் தலைவா இப்படி ஒரு டெரர் படம்.

உண்மைத்தமிழன் said...

இதுக்கெல்லாம் ஓடி வந்திருவாரே மதுரை பெருசு..! ஒரு பிளாட்பாரம் கிடைச்சுறக் கூடாது.. உடனேயே கொள்கையை பரப்பிரணும்..???

தருமி said...

//இதுக்கெல்லாம் ஓடி வந்திருவாரே மதுரை பெருசு..! ஒரு பிளாட்பாரம் கிடைச்சுறக் கூடாது.. உடனேயே கொள்கையை பரப்பிரணும்..???//

முருகா !!

biskothupayal said...

அன்புள்ள என்று
ஆரம்பித்து
அன்புடன் என்று
முடித்துக்கொண்ட
கடிதங்கள்..


அண்ணே அருமை

anujanya said...

நல்லா இருக்கு.

அனுஜன்யா

ஈரோடு கதிர் said...

//அவற்றின் இடையில்
நாம் பறிமாறி கொண்ட
வரிகள்//

இதுதான் சூடாக, சுவையாக, காரமாக, கசப்பாக, இனிப்பாக, புளிப்பாக

எல்லாக் கவிதையும் இதம்

மணிஜி said...

தருமி ஐயா..வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி(ஆமாம்..உண்மைத்தமிழன் அண்ணன் என்ன சொல்றாரு?)

மணிஜி said...

//பயமாய் இருக்கிறது

அதே வரிகள்தான்
ஆனால் இந்த முறை
மகளை பார்த்து..\\

இதுதான் டாப்பு தலைவரே..!
சூப்பர்ப்.//

உண்மையில் அனுபவிச்சு எழுதினேன் டக்ளஸ்..சா...ரீ,,,,ராஜீ

மணிஜி said...

நன்றி பரிசல்..முகம் மலர்ந்ததுக்கு

மணிஜி said...

கேபிள்..நன்றி(பாக்கியெல்லாம் புரியலையோ)

மணிஜி said...

//எதுவுமே கோணல் இல்லையே...
அருமை !!//

நன்றி..மகேஷ்

மணிஜி said...

//இந்த மாதிரி சூப்பர் கவிதைக்கு ஏன் தலைவா இப்படி ஒரு டெரர் படம்.//

தராசு அண்ணெ..அது நம்ம முகரை..

மணிஜி said...

//இதுக்கெல்லாம் ஓடி வந்திருவாரே மதுரை பெருசு..! ஒரு பிளாட்பாரம் கிடைச்சுறக் கூடாது.. உடனேயே கொள்கையை பரப்பிரணும்..???//

உ.த அண்ணெ..அவர் கொள்கை முருகான்னு சொல்றதா?

மணிஜி said...

//அன்புள்ள என்று
ஆரம்பித்து
அன்புடன் என்று
முடித்துக்கொண்ட
கடிதங்கள்..


அண்ணே அருமை//

நன்றி பிஸ்கோத்துபயல் அவர்களே

மணிஜி said...

//நல்லா இருக்கு.

அனுஜன்யா//

நன்றி கவிஞரே...

மணிஜி said...

///அவற்றின் இடையில்
நாம் பறிமாறி கொண்ட
வரிகள்//

இதுதான் சூடாக, சுவையாக, காரமாக, கசப்பாக, இனிப்பாக, புளிப்பாக

எல்லாக் கவிதையும் இதம்//

கதிர்..கடமையை செஞ்சீங்களா?

Vidhoosh said...

எல்லாக் கவிதையும் நேராத்தானே இருக்குங்க.. :P
:) நல்லா இருக்குங்க.

ம்ம்ம்..///ஆனால் இந்த முறை
மகளை பார்த்து..\\ திருந்தாதா உலகம்... ஐயோ ஐயோ.

--வித்யா

Vidhoosh said...

எல்லாக் கவிதையும் நேராத்தானே இருக்குங்க.. :P
:) நல்லா இருக்குங்க.

ம்ம்ம்..///ஆனால் இந்த முறை
மகளை பார்த்து..\\ திருந்தாதா உலகம்... ஐயோ ஐயோ.

--வித்யா

இராகவன் நைஜிரியா said...

//அழகாய் இருக்கிறாய்
பயமாய் இருக்கிறது

அதே வரிகள்தான்
ஆனால் இந்த முறை
மகளை பார்த்து.. //

ஆஹா... :-)

மணிஜி said...

/எல்லாக் கவிதையும் நேராத்தானே இருக்குங்க.. :P
:) நல்லா இருக்குங்க.

ம்ம்ம்..///ஆனால் இந்த முறை
மகளை பார்த்து..\\ திருந்தாதா உலகம்... ஐயோ ஐயோ//

வித்யா ..நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள் என்று எண்ணுகிறேன்..
அதற்கு வேறு கோணமும் உண்டு..வருகைக்கு நன்றி

மணிஜி said...

//அழகாய் இருக்கிறாய்
பயமாய் இருக்கிறது

அதே வரிகள்தான்
ஆனால் இந்த முறை
மகளை பார்த்து.. //

ஆஹா... :-//

நன்றி ராகவன் ...அரவிந்த் எப்படியிருக்கிறான்?கேட்டதாக சொல்லுங்கள்...

அகநாழிகை said...

தண்டாரோ,
அருமை. வாழ்த்துக்கள்.


‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

R.Gopi said...

//அழகாய் இருக்கிறாய்
பயமாய் இருக்கிறது


அதே வரிகள்தான்
ஆனால் இந்த முறை
மகளை பார்த்து..

‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’

ஐயோ ..கொல்ராங்களே...


இந்த முறை தலைவர் இல்லை...


தமிழன்னை??//

நல்லா கீதுபா... மெய்யாலுமே... இந்த ரெண்டுமே....

சென்ஷி said...

நல்லாருக்குங்க.

மேவி... said...

nalla irukku sir

பித்தன் said...

நல்லா இருக்கு

மணிஜி said...

/தண்டாரோ,
அருமை. வாழ்த்துக்கள்.


‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்//

நன்றி கவிஞரே...

மணிஜி said...

/பயமாய் இருக்கிறது


அதே வரிகள்தான்
ஆனால் இந்த முறை
மகளை பார்த்து..

‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’

ஐயோ ..கொல்ராங்களே...


இந்த முறை தலைவர் இல்லை...


தமிழன்னை??//

நல்லா கீதுபா... மெய்யாலுமே... இந்த ரெண்டுமே.//


கோபி.வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி

மணிஜி said...

/நல்லாருக்குங்க/
/
நன்றி சென்ஷி

மணிஜி said...

/நல்லாருக்குங்க//


நன்றி பித்தன்..

மணிஜி said...

/nalla irukku sir//


நன்றி தம்பிமேவி

Ashok D said...

நல்லாயிருக்குங்க...

மணிஜி said...

/நல்லாயிருக்குங்க...//

அஷோக் நன்றி..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லா இருக்கு.. அதும் அந்த கோவிந்தா லைன்ல எல்லா கதையும் பேசிட்டே போறது :))

ஷங்கி said...

தொகுப்பு சூப்பர்!

வால்பையன் said...

தலைப்புக்கு!

கோணாலா இருந்தாலும் என்னோடதுன்னு சும்மாவே வச்சிருக்க கூடாது! அடிக்கடி யூஸ் பண்ணனும்!

கவிதைகள் நல்லாயிருக்கு!
ஹைகூ மாதிரி நச்சுன்னு!

வால்பையன் said...

தலைப்புக்கு!

கோணாலா இருந்தாலும் என்னோடதுன்னு சும்மாவே வச்சிருக்க கூடாது! அடிக்கடி யூஸ் பண்ணனும்!

கவிதைகள் நல்லாயிருக்கு!
ஹைகூ மாதிரி நச்சுன்னு!

மாதவராஜ் said...

ரசித்தேன்.

butterfly Surya said...

அருமை.

மணிஜி.. என்ன “Full" Time கவிஞராயிட்டீங்க...??

வாழ்த்துக்கள்

பா.ராஜாராம் said...

மை டியர் மணிகண்டன்,கலக்கி இருக்கீங்க!
முதல் கவிதையில் பிளிரிரும் confident,சிலிர்க்குது!
மூன்றாவது கவிதையில்,(மகள்)எல்லா பெண்குழந்தை
தகப்பனின் குரலும் பயமும்,கவிதையை
மற்றொரு தளத்துக்கு கொண்டு போகிறது.
இரண்டும் நான்கும் கொஞ்சம் புரியத்தான் இல்லை.
புரிஞ்ச ரெண்டும் எல்லா கோணல்களையும் சரி செய்யுது.
இன்னும் சாவகாசமாய் வந்து அந்த ரெண்டையும் புரிஞ்சு பார்க்கணும்.
fantastic makkaa!go ahead.

மணிஜி said...

//நல்லா இருக்கு.. அதும் அந்த கோவிந்தா லைன்ல எல்லா கதையும் பேசிட்டே போறது :)//

நன்றி முத்துலட்சுமி,,தங்கள் முதல் வருகைக்கும்,கருத்து பகிர்வுக்கும்

மணிஜி said...

/தொகுப்பு சூப்பர்//

நன்றி சங்கா...

மணிஜி said...

/தலைப்புக்கு!

கோணாலா இருந்தாலும் என்னோடதுன்னு சும்மாவே வச்சிருக்க கூடாது! அடிக்கடி யூஸ் பண்ணனும்!

கவிதைகள் நல்லாயிருக்கு!
ஹைகூ மாதிரி நச்சுன்னு//


நன்றி வால்..நல்லா சொன்னிங்க

மணிஜி said...

ரசிப்புக்கு நன்றி மாதவராஜ் சார்...

மணிஜி said...

நன்றி வண்ணத்துப்பூச்சி....

மணிஜி said...

நன்றி ராஜாராம்...

நித்யன் said...

தலைவரே...

1 2 3 என்று வரிசைப்படுத்திச் சொல்லலாமா?

1 - ஓகே
2 - பிரமாதம்
3,4 - காமெடிப் பட்டாசு


அன்பு

நித்யன்