வீட்டில் இருந்தால்
அம்மா மடி
வெளியில் என்றால்
அய்யனார் மடியில்
உருட்டு மீசையும்
முரட்டு பார்வையும்
எனக்கு மிகவும் பிடிக்கும்
குலசாமி என்று குடும்பத்தினர்
குலவை இடுவர்
எனக்கோ அவன்
சககூட்டாளிதான்...
அரளியை அரைத்து குடித்து
அம்மா செத்துப்போனதில்
அவனுக்கும் உடன்பாடில்லை
எனக்கும்தான்
அயலூர் வந்துவிட்டதால்
அவனை நேரில் பார்த்து
பல வருடங்களாயிற்று
இன்று என் கனவில்
வந்தான்
ஆபத்தென்றால்
அழைக்க சொல்லி
அவன் அலைபேசி
எண்ணையும் தந்தான்
காதை கிள்ளியது போல்
சிணுங்கியது அலைபேசி
அய்யனார்தான்..
குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறான்
சிறப்பு பொருளாதார மண்டலம்
வருகிறதாம்.....
அவன் வசிப்பிடமும்
கைப்பற்று பட்டுவிட்டதாம்
காப்பாற்ற முடியுமா?
18 comments:
mee firste.
அய்யனார்களே ஒரு சின்ன பொருளாதார மண்டலம்... என்ன செய்ய?? அய்யனாருக்கு வேற இடம் பாக்க வேண்டியதுதான்... :(
மனது கஷ்டமாக உள்ளது.. பொருளாதாரம் மனிதனை மட்டுமல்ல கடவுளையும் பாதிக்கிறதே!!
அய்யனாருக்கு ஓட்டுப்போட்டாச்சு!!
ப்ச்...
சொல்ல ஒண்ணுமில்லீங்க
//சிறப்பு பொருளாதார மண்டலம்
வருகிறதாம்.....
அவன் வசிப்பிடமும்
கைப்பற்று பட்டுவிட்டதாம்
காப்பாற்ற முடியுமா?//
இது சூப்பர் தல.
கவிதை அருமை.
கவிஞர் மணிஜி.. புகைப்படம் அருமை.
கவிதை அருமை.
பாவம் அய்யனார்.
கவிதை நன்று.
ஜெயமோகனின் மாடன் சிறுகதையை படிக்கவும். இதே கருத்து. மிகவும் சிறப்பாக கையாளப்பட்டிருக்கும் கதை.
ஜெயமோகனின் மாடன் சிறுகதையை படிக்கவும். இதே கருத்து. மிகவும் சிறப்பாக கையாளப்பட்டிருக்கும் கதை.
ஈரோடு - சேலம் நெடுஞ்சாலையில் குறுக்கே இருந்த அய்யனார் கூட பெயர்தெடுக்கப்பட்டார்!
நன்றாக பாருங்கள் இரண்டு குறுஞ்செய்தி இருக்கும்!
ஈரோடு - சேலம் நெடுஞ்சாலையில் குறுக்கே இருந்த அய்யனார் கூட பெயர்தெடுக்கப்பட்டார்!
நன்றாக பாருங்கள் இரண்டு குறுஞ்செய்தி இருக்கும்!
ஆடிக் காற்றில் அம்மியே பறக்குது.... இங்கே நடமாடும் மனிதனே நடுத்தெருவில்- அப்பறமென்ன விடுங்க
இதயத்தில் இடந் தந்திருவோம் அய்யனாருக்கு....
கடவுளோட இடத்துக்கே ஆக்ரமிப்பா?
கவிதை நன்று மணிகண்டன்
அடடா.. ஐயனாருக்கே இந்த நிலமனா நமக்கெல்லாம் என்ன நெலமயோ..
கவிதை நல்லாருக்கு
நண்பர்களின் வருகைகும்,கருத்து பகிர்வுக்கும் நன்றிகள்...
Post a Comment