Monday, September 21, 2009

மானிட்டர் பக்கங்கள்........21/09/09

உன்னை போல் ஒருவனை பெரிய.... பதிவர்களில் முக்கியமானவர்கள் (அதாவது மோசமானவர்களில் முக்கியமானவர்கள்) கும்மி,குதறி தீர்த்து விட்டார்கள்..அதாவது தாங்கள் எழுதும் பதிவுகளில் எந்த சமூக அக்கறையையும் காட்டாதவர்கள்..பேசி வைத்துக் கொண்டு சர்ச்சையான பதிவு எழுதி பின்னூட்டங்களில் விவாதிப்பார்கள்.திரைப்படம் வெகுஜன மீடியாதான்.அதில் சொல்லப்படும் ஒரு தவறான கருத்து நிச்சயம் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது உண்மை..ஆனால் அப்படி என்ன தவறான கருத்து உ.போ ஒருவனில் சொல்லப்பட்டு விட்டிருக்கிறது?

இஸ்லாமீயர்களை தீவிரவாதியாக காட்டி விட்டார்களாம்.இந்தியாவில் இருக்கும் 20 கோடி முஸ்லீம்களும் தீவிரவாதிகள் என்றா சொல்லி விட்டார்கள்.சமீபத்தில் விடுதலை செய்யபட்ட கைதிகள் கோவை குண்டு வெடிப்பில் ஈடுபட்டவர்கள்தான்.ஆனால் அவர்கள் விடுதலை யார் எதிர்த்தார்கள்?25 நாளில் அவர்கள் தண்டனை காலமே முடிய இருக்கும் நிலையில் அரசு சுய விளம்பரத்திற்காக மட்டுமே இதை செய்தது


பெண்சிங்கம் திரைபடத்திற்காக முதல்வருக்கு கொடுக்கப்பட்ட 50 லட்சத்தை ஒரு பிரிவினருக்கு கொடுத்து விட்டார்.அதற்கு விளம்பரம் செய்த வகையில் சுமார் 25 லட்சம் செலவாகியிருக்கும்.அதுதான் இந்த அரசின் விளம்பர மோகம்.
அதை விடுஙகள்.இந்த பதிவு உன்னை போல் ஒருவனை நியாயபடுத்திதான்.
இவர்கள் அதை விமர்சிக்க ஒரே காரணம் பார்ப்பனிய துவேஷம் மட்டுமே.இந்துத்துவாவை படம் பூசி கொண்டிருக்கிறது என்று கூற வேறு காரணம் இல்லை.நடந்த நிகழ்வுகளில் சிறிது கற்பனை கலந்து எடுக்கப்பட்ட படம்தான் அது.இத்தனைக்கும் கமலின் ஜாதி மறுப்பு ஊரறிந்த விஷயம்.நாத்திகவாதியாக தன்னை அடையாளம் காட்டி கொண்டிருக்கிறார்
ஆனால் அவர் வேண்டுமென்றே விஷத்தை விதைத்திருக்கிறார் என்ற வாதம் கேலிக்குறியது.

என்னை புருட்டஸாக வர்ணித்த ஒரு அன்பு நெஞ்சத்தின் கடந்த கால திருவிளையாடல்கள் சமீபகாலமாக பதிவுலகில் விவாதிக்க பட்டு வருவது தினம் இணையத்தை மேயும் சுமார் ஏழே முக்கால் லட்சம் பேருக்கும் தெரிந்தே இருக்கிறது.

ஒரு சினிமாவை கலைவடிவமாக பாருங்கள்.அதன் நேர்மையை தயவு செய்து திரித்து எழுதவேண்டாம்.பூடக்கண்ணாடி வைத்து தேடினால் எதுவும் விமர்சனத்திற்கு தப்பமுடியாது என்று எண்ணுகிறேன்.

சுகுணாதிவாகரின் பதிவில் நான் இட்டிருந்த ஒரு பின்னூட்டம் எந்த உள் நோக்கமும் இல்லாமல் இட்டதுதான்.ஆனால் அதற்கு வேறு ஒரு தொனியும் இருப்பதாக உணர்ந்ததால் அதை டெலிட் செய்து விட்டேன்.லக்கியின் பதிவில் இட்ட பின்னூட்டமும் அப்படித்தான்.யோக்கியன் வரான்.சொம்பை எடுத்து உள்ளே வை என்ற ரீதியில் அவர் பதிலளித்திருக்கிறார்.நன்றி ”ஆளப்பிறந்தவரே”

58 comments:

Mahesh said...

ஆரம்பிச்சாச்சா? விடுங்கண்ணே...

பிரபாகர் said...

அண்ணே,

ஐந்து இந்து தீவிரவாதிகளால் ஒரு முஸ்லிம் பயங்கரமாக பாதிக்கப்படுவதாக படம் எடுத்தால் ஒருவேளை சந்தோஷப்படுவார்களோ என்னவோ?

பிரபாகர்.

shabi said...

என்னை புருட்டஸாக வர்ணித்த ஒரு அன்பு நெஞ்சத்தின் கடந்த கால திருவிளையாடல்கள் சமீபகாலமாக பதிவுலகில் விவாதிக்க பட்டு வருவது தினம் இணையத்தை மேயும் சுமார் ஏழே முக்கால் லட்சம் பேருக்கும் தெரிந்தே இருக்கிறது..///ஒண்ணுமே புரியல எதாவது எழுதுனா புதுசா படிக்கிறவங்களுக்கும் கொஞ்சம் புரியும் படி எழுதுங்கள்

ஈரோடு கதிர் said...

//பெரிய.... பதிவர்களில் முக்கியமானவர்கள் (அதாவது மோசமானவர்களில் முக்கியமானவர்கள்) ..//

இஃகிஃகி

தினேஷ் said...

ரைட்டு...

Barari said...

5 indu theeviravaathikalaal oru muslim paadikappattal// een ayya gujraath unmai nikazvu maranthu vittathaa--pagalpoor--meerat-mumbai innum solli konde pokalaam padaththil karpanaiyai thaan edukkalaam.aanaal nijamo?

Beski said...

:|

samundi said...

உன்னைபோல ஒருவன் குறித்த அருமையான விமர்சனம் http://kattamanaku.blogspot.com/2009/09/blog-post.html

butterfly Surya said...

ஒரு சினிமாவை கலைவடிவமாக பாருங்கள்.அதன் நேர்மையை தயவு செய்து திரித்து எழுத வேண்டாம்.பூடக்கண்ணாடி வைத்து தேடினால் எதுவும் விமர்சனத்திற்கு தப்பமுடியாது என்று எண்ணுகிறேன்.//////// Exactly.

அகநாழிகை said...

தண்டாரோ,
தெளிவாக உங்கள் கருத்தை பதிவு செய்திருக்கிறீர்கள்.

உண்மைத்தமிழன் said...

///திரைப்படம் வெகுஜன மீடியாதான். அதில் சொல்லப்படும் ஒரு தவறான கருத்து நிச்சயம் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது உண்மை. ஆனால் அப்படி என்ன தவறான கருத்து உ.போ. ஒருவனில் சொல்லப்பட்டு விட்டிருக்கிறது?///

தீவிரவாதத்தை வைத்து எடுக்கப்படும் திரைப்படங்களில் அநேக தீவிரவாதிகள் முஸ்லீம்களாக திரிக்கப்படுவதை எதிர்த்துத்தான் பலரும் குற்றம் சாட்டியிருக்கிறார்கள்.

இந்து மதத் தீவிரவாதிகளை வெளிச்சம் போட்டுக் காட்டிய திரைப்படங்களை கொஞ்சம் எடுத்துக் காட்டுங்கள் பார்ப்போம்.

இத்திரைப்படத்தை பார்க்கின்ற நம்மை அல்லாத பெருவாரியான ரசிகர் பெருமக்களின் மனதில் முஸ்லீம்கள்தான் தீவிரவாதிகள் என்கிற எண்ணம் உருவாகிவிடாதா..?

இத்திரைப்படத்தில் முஸ்லீம்களின் பல தார மணத்தைக் கிண்டல் செய்துகூட வசனம் இருக்கிறது.. ஏன் இந்து மதத்தில் யாருமே இதைச் செய்வதில்லையா..?

இத்திரைப்படத்தில் இந்த வசனத்தை வைக்க வேண்டிய அவசியம் என்ன? திரைப்படத்தின் கதையைப் பொறுத்தவரையில் அது தேவையில்லாதது.. அந்த கிண்டலை எடுத்துவிடுவது யார்? ஒரு இந்து.. இது போதாதா..?

ஒரு காழ்ப்புணர்ச்சியின் ஒரு பக்கத்தை இதில் காட்டியிருக்கிறார்.

முஸ்லீம் தீவிரவாதிகளின் பெயர்களையும், இடங்களையும், நாடுகளையும் அழுத்தம்திருத்தமாகச் சொன்னவர்கள் பெஸ்ட் பேக்கரி சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் பெயர்களையும், இயக்கத்தையும் வெளிப்படையாகச் சொல்லாதது ஏன்..?

யோசியுங்கள்..!

(என் பதிவில் நான் எழுதியிருந்த இந்தப் பத்தி கடைசி நிமிடத்தில் பிளாக்கரின் சொதப்பலால் காணாமல் போய்விட்டது என்பதை இங்கு பதிவு செய்து கொள்கிறேன்..)

உண்மைத்தமிழன் said...

[[[இஸ்லாமீயர்களை தீவிரவாதியாக காட்டி விட்டார்களாம். இந்தியாவில் இருக்கும் 20 கோடி முஸ்லீம்களும் தீவிரவாதிகள் என்றா சொல்லி விட்டார்கள்?]]]

அத்தனை பேரும் என்று சொல்லவில்லை. தீவிரவாதிகள் என்றாலே மெஜாரிட்டி முஸ்லீம்கள்தான் என்று சொல்லியிருப்பது கண்டனத்துக்குரியது..

உண்மையில் பாபர் மசூதியை இடித்தபோது அதில் கலந்து கொண்ட அத்தனை இந்து வெறியர்களும் தீவிரவாதிகளே..!

[[[சமீபத்தில் விடுதலை செய்யபட்ட கைதிகள் கோவை குண்டு வெடிப்பில் ஈடுபட்டவர்கள்தான்.ஆனால் அவர்கள் விடுதலை யார் எதிர்த்தார்கள்? 25 நாளில் அவர்கள் தண்டனை காலமே முடிய இருக்கும் நிலையில் அரசு சுய விளம்பரத்திற்காக மட்டுமே இதை செய்தது.]]]

உண்மைதான்.. இதற்கு நீங்கள் அரசைத்தான் குற்றம் சொல்ல வேண்டும். இவர்களது விடுதலையை எதிர்த்தது இந்து தீவிரவாதிகள்தான்..

உண்மைத்தமிழன் said...

[[[இந்த பதிவு உன்னை போல் ஒருவனை நியாயபடுத்திதான்.
இவர்கள் அதை விமர்சிக்க ஒரே காரணம் பார்ப்பனிய துவேஷம் மட்டுமே. இந்துத்துவாவை படம் பூசி கொண்டிருக்கிறது என்று கூற வேறு காரணம் இல்லை.]]]

முஸ்லீம் இளைஞர்களில் சிலர் தீவிரவாதிகளாக மாற வேண்டிய சூழலை ஏற்படுத்திய இந்துத்துவாவை கண்டிக்கும் எதுவும் இத்திரைப்படத்தில் இல்லாததினால் இது இந்துத்துவாவை தூக்கிப் பிடிப்பதாகத்தான் நினைக்க வேண்டியிருக்கிறது.

[[[நடந்த நிகழ்வுகளில் சிறிது கற்பனை கலந்து எடுக்கப்பட்ட படம்தான் அது. இத்தனைக்கும் கமலின் ஜாதி மறுப்பு ஊரறிந்த விஷயம். நாத்திகவாதியாக தன்னை அடையாளம் காட்டி கொண்டிருக்கிறார். ஆனால் அவர் வேண்டுமென்றே விஷத்தை விதைத்திருக்கிறார் என்ற வாதம் கேலிக்குறியது.]]]

கமல் மற்றும் இரா.முருகனின் ஜாதியை இதில் இழுத்து இதற்கு பார்ப்பனீயம் என்கிற வார்த்தையை தோய்த்து அலங்கார வார்த்தைகளில் பவனி வரும் மேல்தட்டு வர்க்க எழுத்து நிச்சயம் கண்டிக்கத்தக்கது.

கமலும், முருகனும் தங்களது ஜாதி சார்ந்து இதை எழுதவில்லை.. தங்களது மேலான பொது அறிவு.. அறிவுஜீவித்தனம் இவற்றை மையமாக வைத்து எடுத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

இதிலும் இரா.முருகனின் பங்கு அவர் வெறும் வசனகர்த்தாதான். கமல் என்ன கேட்டிருப்பாரோ அதைச் செய்திருப்பார் என்று நினைக்கிறேன்.

முழு தவறும் அண்ணன் கமலஹாசன் மீதுதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[என்னை புருட்டஸாக வர்ணித்த ஒரு அன்பு நெஞ்சத்தின் கடந்த கால திருவிளையாடல்கள் சமீபகாலமாக பதிவுலகில் விவாதிக்கபட்டு வருவது தினம் இணையத்தை மேயும் சுமார் ஏழே முக்கால் லட்சம் பேருக்கும் தெரிந்தே இருக்கிறது.]]]

எந்த நேரமும் புரூட்டஸாகவே வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு அந்த வார்த்தைகள் நுனி நாக்கில் தவழ்ந்து கொண்டேயிருக்கும் என்பதால், சர்வசாதாரணமாக அவைகள் வெளியில் வந்துவிடும்.

நாம்தான் அதி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்..

அவர்களைத் தேடிப் போனது உமது தவறு..!

உண்மைத்தமிழன் said...

[[[ஒரு சினிமாவை கலைவடிவமாக பாருங்கள். அதன் நேர்மையை தயவு செய்து திரித்து எழுதவேண்டாம். பூடக்கண்ணாடி வைத்து தேடினால் எதுவும் விமர்சனத்திற்கு தப்பமுடியாது என்று எண்ணுகிறேன்.]]]

அதன் நேர்மையும் விமர்சனத்திற்கு உட்பட்டதுதான்..!

நாளை ஏதாவது ஒரு திரைப்படத்தில் பிளாக்கில் எழுதுபவர்கள் எல்லாம் முட்டாள்கள் என்று ஒரு வசனம் வந்தால் என்ன செய்வீர்கள் தண்டோராஜி..!

பொங்கி எழ மாட்டீர்களா..?

உண்மைத்தமிழன் said...

[[[சுகுணாதிவாகரின் பதிவில் நான் இட்டிருந்த ஒரு பின்னூட்டம் எந்த உள் நோக்கமும் இல்லாமல் இட்டதுதான். ஆனால் அதற்கு வேறு ஒரு தொனியும் இருப்பதாக உணர்ந்ததால் அதை டெலிட் செய்து விட்டேன்.]]]

சுகுணாவைத் தெரியாமல் பின்னூட்டம் போட்டது உமது தவறு..!

அதிலும் அவரது அதிரடி பதிலுக்குப் பின்னர் உடனேயே அவரது வேலையைக் குறிப்பிட்டுத் தாக்கி, பதிலுக்கு அவரும் தாக்கி.. தேவையில்லாத சர்ச்சை இது..

இனிமேல் ஆள் பார்த்து பின்னூட்டமிடுங்கள்..!

பார்ப்பனீயம் என்பதற்கு ஆள், ஆளுக்கு அர்த்தம் வேறுபடும்..

அதிலும் சுகுணாவின் அர்த்தம் கொள்கை சார்ந்தது.. அவ்ளோதான்..

உண்மைத்தமிழன் said...

[[[லக்கியின் பதிவில் இட்ட பின்னூட்டமும் அப்படித்தான். யோக்கியன் வரான். சொம்பை எடுத்து உள்ளே வை என்ற ரீதியில் அவர் பதிலளித்திருக்கிறார்.நன்றி ”ஆளப்பிறந்தவரே”]]]

உமக்கு கொழுப்பு..? வேறென்ன..?

உண்மைத்தமிழன் said...

இது பின்னூட்டங்கள் பெறுவதற்காக..!

Beski said...

//தீவிரவாதத்தை வைத்து எடுக்கப்படும் திரைப்படங்களில் அநேக தீவிரவாதிகள் முஸ்லீம்களாக திரிக்கப்படுவதை எதிர்த்துத்தான் பலரும் குற்றம் சாட்டியிருக்கிறார்கள்.//

ஒருவேளை அவர்கள் உலகம் முழுதும் பரவியிருப்பதால், உலகம் முழுவதும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய படமாக இருக்குமென்று அவர்கள் நினைத்திருக்கலமல்லவா? உலகம் முழுதும் ரிலீஸ் செய்து காசு பார்க்கலாமே. இந்துத்தீவிரவாதத்தைப் பற்றி எடுத்தால் மற்ற நாட்டினர் பார்க்க கஷ்டமாய் இருக்குமே... (இப்படிக்கூட இதுக்கு ஒரு காரணம் கண்டுபிடிக்கலாம்)

//இத்திரைப்படத்தை பார்க்கின்ற நம்மை அல்லாத பெருவாரியான ரசிகர் பெருமக்களின் மனதில் முஸ்லீம்கள்தான் தீவிரவாதிகள் என்கிற எண்ணம் உருவாகிவிடாதா..?//
முதல்வன் போன்ற அரசியல்வாதிகளின் சாயம் வெளுக்கும் படம் பார்த்தது மக்கள் திருந்தி நல்லவர்களுக்கு ஓட்டுப்போட்டார்களா என்ன? தென்னவன் பார்த்ததும் தேர்தல் முறையை மாற்ற நினைத்தார்களா என்ன? (அந்தப் படத்தை எத்தனை பேர் பார்த்தார்கள் எனபது வேறு விசயம்), மக்கள் மனதில் படங்கள் தாக்கத்தை ஏற்படுத்துமானால் இன்னேரம் ஒன்று நாடு உருப்பட்டுருக்கும், இல்லை நாசக்காடாய்ப் போயிருக்கும் மக்களால். மக்கள் எப்போதும் ஒன்றும் செய்ய முடியாதவர்களே, ஆட்டுவிப்பார் ஆடினால் மட்டுமே ஆடுவர், இப்படிப் படம் பார்த்து அல்ல.

மொத்தத்தில் படம் பார்த்து மக்கள் மனது ஒன்றும் கெட்டுப்போய் விடாது. நீங்கள் இப்போது சொன்ன பிறகுதான் இதைப் பற்றியே சிந்திக்க ஆரம்பித்திருப்பார்கள், என்னைப் போல.

selventhiran said...

என்ன தண்டோரா அண்ணே, பார்க்கிற படத்துல எதாவது நொட்ட சொன்னாத்தானே அறிவு ஜீவின்னு தொண்டரடிப்பொடிகள் நினைச்சுக்குவாங்க...

எனக்குத் தெரிஞ்சு எந்த இந்தியனோ குறிப்பா இந்துவோ பாகிஸ்தானுக்கோ, ஆப்கானிஸ்தானுக்கோ போயி பொது இடங்களில் குண்டு வைச்சதாகவோ, ரயில்வே ஸ்டேசன்களில் புகுந்து பச்சைக் குழந்தையிலிருந்து பூக்காரக் கிழவி வரை சுட்டுக் கொன்னதாகவோ, பாராளுமன்றத்துக்குள் புகுந்து சுட்டதாகவோ சரித்திரம் இல்லை. மதம் எதுவாயினும் தீவிரவாதம் தீவிரவாதம்தான். . ஐம்பதாண்டு காலமாக மனித உரிமை மண்ணாங்கட்டி சமாச்சாரத்தைப் பேசி பேசி வீடு முழுக்க மூட்டைப்பூச்சிகள். பெரும்பான்மையின் பாதுகாப்பு என்கிற ஒரு காரணம் போதும் அவர்களை நசுக்கிக் கொல்வதற்கு மனிதனுக்கே இல்லாத மனித உரிமைகள் மிருகங்களுக்கு என்ன மயிருக்கு? என்றுதானே கமல் கேட்கிறார்.

மும்பை பயங்கரத்தை மக்கள் வெகு வேகமாக மறக்கிறார்களே என்ற கவலையை கொஞ்சம் தள்ளிப்போட வைத்தது உ.போ.ஒ.

பத்தாம் நம்பர் செருப்பால் அடித்துப் பக்குவப்படுத்துகிற பதிவு. என்னைப் போல் ஒருவனைக் கண்ட மகிழ்ச்சி.

ஆமா நீங்க சென்னைப் பதிவர்தானே...?!

Thamira said...

உண்மைத் தமிழன்(15270788164745573644) September 21, 2009 1:43 PM
இது பின்னூட்டங்கள் பெறுவதற்காக..!

//

பெரிய பூனைக்கு ஒண்ணு, சின்ன பூனைக்கு ஒண்ணுன்னு ரெண்டு வாசல் வச்சாராம் ஒரு விஞ்ஞானி. ஹிஹி..

Cable சங்கர் said...

/இத்திரைப்படத்தை பார்க்கின்ற நம்மை அல்லாத பெருவாரியான ரசிகர் பெருமக்களின் மனதில் முஸ்லீம்கள்தான் தீவிரவாதிகள் என்கிற எண்ணம் உருவாகிவிடாதா..?//

ஆமா கமல் இந்த படத்தை எடுத்ததுக்கு அப்புறம்தான் இந்தியா பூராவும் அந்த எண்ணம் உருவாயிருச்சு.. சும்மா ப்டம் பார்த்துட்டு போவீங்களா..?


//இத்திரைப்படத்தில் முஸ்லீம்களின் பல தார மணத்தைக் கிண்டல் செய்துகூட வசனம் இருக்கிறது.. ஏன் இந்து மதத்தில் யாருமே இதைச் செய்வதில்லையா..?//

இந்து திருமண சட்டத்தில் முறையாய் ஒரு திருமணம மட்டுமே செய்ய முடியும். ஆனால் அவர்க்ள் அப்படியல்ல.. அதெல்லாம் சரி முதல்ல ஒரு கல்யாணத்தை செய்யுங்க.. அப்புறம் மத்த விஷயஙக்ளை பாக்கலாம்..

அது சரி.. இப்ப்டி பின்னூட்டத்தையே பதிவு மாதிரி போட்டா.. அப்புறம் கல்யாணம் ஆவுர்றது கஷ்டம்

க.பாலாசி said...

இதற்கான உங்களின் நிலைமையை எடுத்துரைத்த விதம் பாராட்டுக்குரியது...

butterfly Surya said...

அது சரி.. இப்ப்டி பின்னூட்டத்தையே பதிவு மாதிரி போட்டா.. அப்புறம் கல்யாணம் ஆவுர்றது கஷ்டம்/////

தல என்ன இப்படி சொல்லீடீங்க...

தை பிறந்தா வழி பிறக்கும்...

உண்மைத்தமிழன் said...

[[[எவனோ ஒருவன் said...

//தீவிரவாதத்தை வைத்து எடுக்கப்படும் திரைப்படங்களில் அநேக தீவிரவாதிகள் முஸ்லீம்களாக திரிக்கப்படுவதை எதிர்த்துத்தான் பலரும் குற்றம் சாட்டியிருக்கிறார்கள்.//

ஒருவேளை அவர்கள் உலகம் முழுதும் பரவியிருப்பதால், உலகம் முழுவதும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய படமாக இருக்குமென்று அவர்கள் நினைத்திருக்கலமல்லவா? உலகம் முழுதும் ரிலீஸ் செய்து காசு பார்க்கலாமே. இந்து தீவிரவாதத்தைப் பற்றி எடுத்தால் மற்ற நாட்டினர் பார்க்க கஷ்டமாய் இருக்குமே... (இப்படிக்கூட இதுக்கு ஒரு காரணம் கண்டுபிடிக்கலாம்)]]]

தீவிரவாதம் யார் செய்தாலும் ஒன்றுதான் சாமி..! முஸ்லீம் தீவிரவாதிகளை வெளிப்படையாகக் கண்டித்த அளவுக்கு இந்து தீவிரவாதிகளை ஏன் கண்டிக்கவில்லை என்பதுதான் கேள்வி..

[[[//இத்திரைப்படத்தை பார்க்கின்ற நம்மை அல்லாத பெருவாரியான ரசிகர் பெருமக்களின் மனதில் முஸ்லீம்கள்தான் தீவிரவாதிகள் என்கிற எண்ணம் உருவாகிவிடாதா..?//

முதல்வன் போன்ற அரசியல்வாதிகளின் சாயம் வெளுக்கும் படம் பார்த்தது மக்கள் திருந்தி நல்லவர்களுக்கு ஓட்டுப்போட்டார்களா என்ன? தென்னவன் பார்த்ததும் தேர்தல் முறையை மாற்ற நினைத்தார்களா என்ன? (அந்தப் படத்தை எத்தனை பேர் பார்த்தார்கள் எனபது வேறு விசயம்), மக்கள் மனதில் படங்கள் தாக்கத்தை ஏற்படுத்துமானால் இன்னேரம் ஒன்று நாடு உருப்பட்டுருக்கும், இல்லை நாசக்காடாய்ப் போயிருக்கும் மக்களால். மக்கள் எப்போதும் ஒன்றும் செய்ய முடியாதவர்களே, ஆட்டுவிப்பார் ஆடினால் மட்டுமே ஆடுவர், இப்படிப் படம் பார்த்து அல்ல.]]]

உண்மைதான். ஆனால் எண்ணம்..? அது ஒரு விஷமாச்சே.. அதை ஏன் மக்கள் மனதில் புகுத்துகிறீர்கள் என்றுதான் கேட்கிறோம். முஸ்லீமும் அடிக்கிறான்.. இந்துவும் அடிக்கிறான்னு சொல்லு.. முஸ்லீம் மட்டுமே கொல்றான்னு சொன்னா நீ என்ன யோக்கியனா..?

[[[மொத்தத்தில் படம் பார்த்து மக்கள் மனது ஒன்றும் கெட்டுப்போய் விடாது. நீங்கள் இப்போது சொன்ன பிறகுதான் இதைப் பற்றியே சிந்திக்க ஆரம்பித்திருப்பார்கள், என்னைப் போல.]]]

நன்றி.. யோசியுங்கள்.. புரியும்..!

உண்மைத்தமிழன் said...

[[[செல்வேந்திரன் said...
எனக்குத் தெரிஞ்சு எந்த இந்தியனோ குறிப்பா இந்துவோ பாகிஸ்தானுக்கோ, ஆப்கானிஸ்தானுக்கோ போயி பொது இடங்களில் குண்டு வைச்சதாகவோ, ரயில்வே ஸ்டேசன்களில் புகுந்து பச்சைக் குழந்தையிலிருந்து பூக்காரக் கிழவிவரை சுட்டுக் கொன்னதாகவோ, பாராளுமன்றத்துக்குள் புகுந்து சுட்டதாகவோ சரித்திரம் இல்லை.]]]

ஆனால் நன்றாக இருந்த ஒரு தேசத்தில் மிகப் பெரும் மோதலையும், அழிவையும் தரக்கூடிய அளவுக்கு இரு சமூகத்தினரிடையே பிளவை உருவாக்கத் தெரிந்த சகுனிகள் இந்துத்துவா தீவிரவாதிகள்.

அவர்களுடைய பாபர் மசூதி இடிப்பு என்பது உலகத் தீவிரவாதத்தின் உச்சக்கட்டம் என்றே நான் சொல்லுவேன்..

இதன் பின்புதான் மற்றவையெல்லாம்..

முஸ்லீம் தீவிரவாதத்திற்குப் பின்னால் நிச்சயம் ஒரு ரத்தம் சிந்திய காரணம் இருக்கும்.. ஆனால் பாபர் மசூதி இடிப்புக்குப் பின்னால் கேவலமான, கேடுகெட்டத்தனமான பி.ஜே.பி.யின் பதவி வெறிதான் கண்ணுக்குத் தெரிகிறது..

உண்மைத்தமிழன் said...

[[[ஆதிமூலகிருஷ்ணன் said...

உண்மைத் தமிழன்(15270788164745573644) September 21, 2009 1:43 PM
இது பின்னூட்டங்கள் பெறுவதற்காக..!//

பெரிய பூனைக்கு ஒண்ணு, சின்ன பூனைக்கு ஒண்ணுன்னு ரெண்டு வாசல் வச்சாராம் ஒரு விஞ்ஞானி. ஹிஹி..]]]

மறந்துட்டேன் சாமி. அதான் கடைசியா போட வேண்டியதா போச்சு.. இதுலேல்லாம் வந்து கரெக்ட்டா குத்தம் கண்டுபிடிச்சிருங்க.. ஆனா வர வேண்டிய இடத்துக்கு மட்டும் வந்திராதீங்க..!

அடப் போங்கப்பா..!

உண்மைத்தமிழன் said...

[[[Cable Sankar said...

/இத்திரைப்படத்தை பார்க்கின்ற நம்மை அல்லாத பெருவாரியான ரசிகர் பெருமக்களின் மனதில் முஸ்லீம்கள்தான் தீவிரவாதிகள் என்கிற எண்ணம் உருவாகிவிடாதா..?//

ஆமா கமல் இந்த படத்தை எடுத்ததுக்கு அப்புறம்தான் இந்தியா பூராவும் அந்த எண்ணம் உருவாயிருச்சு.. சும்மா ப்டம் பார்த்துட்டு போவீங்களா..?]]]

அப்ப இந்த படத்தோட கதைக்கருவே தப்புன்னு தெரியுதுல்ல.. அப்புறம் அதைப் பத்தி பேசாம வேற எதைப் பத்தி பேசுறது..?

//இத்திரைப்படத்தில் முஸ்லீம்களின் பல தார மணத்தைக் கிண்டல் செய்துகூட வசனம் இருக்கிறது.. ஏன் இந்து மதத்தில் யாருமே இதைச் செய்வதில்லையா..?//

இந்து திருமண சட்டத்தில் முறையாய் ஒரு திருமணம மட்டுமே செய்ய முடியும். ஆனால் அவர்க்ள் அப்படியல்ல..]]]

முறைப்படிதான செய்ய முடியாது. ஆனா வைச்சுக்க முடியுதுல்ல.. வைச்சிருக்காங்கள்லே.. அப்புறம் என்ன நம்ம யோக்கியம் பேசிக்கிட்டு..?

[[[அதெல்லாம் சரி முதல்ல ஒரு கல்யாணத்தை செய்யுங்க.. அப்புறம் மத்த விஷயஙக்ளை பாக்கலாம்..]]]

நானா மாட்டேங்குறேன்.. முருகன் ஆளை காட்ட மாட்டேங்குறான்..!

[[[அது சரி.. இப்ப்டி பின்னூட்டத்தையே பதிவு மாதிரி போட்டா.. அப்புறம் கல்யாணம் ஆவுர்றது கஷ்டம்]]]

முதல்ல ஒரு ஆசி.. அப்புறம் ஒரு சாபம்..

அடப்பாவிகளா.. உங்களையெல்லாம் தம்பியா வேற நினைக்கணுமாக்கும்..!

உண்மைத்தமிழன் said...

[[[butterfly Surya said...

அது சரி.. இப்ப்டி பின்னூட்டத்தையே பதிவு மாதிரி போட்டா.. அப்புறம் கல்யாணம் ஆவுர்றது கஷ்டம்/////

தல என்ன இப்படி சொல்லீடீங்க...
தை பிறந்தா வழி பிறக்கும்...]]]

அவர் வேறென்ன சொல்வாரு.. பொறாமைதான்..! இவன் மட்டும் நல்லாயிருக்கானேன்னு..

சூர்யாஜி உங்களோட நல்ல எண்ணத்துக்கு தேங்க்ஸூ..

Beski said...

//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
தீவிரவாதம் யார் செய்தாலும் ஒன்றுதான் சாமி..! முஸ்லீம் தீவிரவாதிகளை வெளிப்படையாகக் கண்டித்த அளவுக்கு இந்து தீவிரவாதிகளை ஏன் கண்டிக்கவில்லை என்பதுதான் கேள்வி..//

அது சரி அண்ணே, தீவிரவாதம் யார் செய்தாலும் தப்புதான். எதுக்கு தராசு போட்டு எல்லாரையும் கண்டிக்கனும், இவங்க படம்தானே எடுக்குறாங்க, பாடமா எடுக்குறாங்க?

இது ஒரு படம், ஒரு கதை அவ்வளவுதான் நம்ம அறிவுக்கு. நீங்கள்தான் அறிவைத் தூண்டிவிடுகிறீர்கள்.

வால்பையன் said...

பிரபலமாவதற்கு உண்டான தகுதிகள் உங்களிடமும் வந்து கொண்டிருக்கிற்து!

அத்திரி said...

என்னய்யா நடக்குது இங்க............. வணக்கம் தண்டோரா அண்ணே

அத்திரி said...

//வால்பையன் said...
பிரபலமாவதற்கு உண்டான தகுதிகள் உங்களிடமும் வந்து கொண்டிருக்கிற்து!//


ஒரு பெரிய ரிப்பீட்டு...............

Power Bala said...

//////
சூர்யாஜி உங்களோட நல்ல எண்ணத்துக்கு தேங்க்ஸூ..
//////

உங்களுக்கு கல்யாணம் நடக்கனும்-னு சாபம் கொடுக்கறாரு. அதை நல்ல எண்ணம்-ன்னு நினைக்கறீங்களே.

இன்னும்.. எவ்ளோ நாளுக்குதான் இப்படி வெள்ளந்தியாவே இருப்பீங்க?!

-ஹாலிவுட் பாலா

சுகுணாதிவாகர் said...

அன்பின் இனிய தண்டோரா,

நான் பதிவில் எழுதிய தகவல்கள் குறித்தோ அதன் பின்னுள்ள அரசியல் குறித்தோ ஒரு சொல்லும் உதிர்க்கவில்லை. ஆனால் போகிற போக்கில் என்னைக் குறித்து பல தட்டையான பிம்பங்களை எழுப்பிக் கொண்டு போகிறார்கள்.

/தாங்கள் எழுதும் பதிவுகளில் எந்த சமூக அக்கறையையும் காட்டாதவர்கள்..பேசி வைத்துக் கொண்டு சர்ச்சையான பதிவு எழுதி பின்னூட்டங்களில் விவாதிப்பார்கள்./

எனக்கு என்ன சமூக அக்கறை இல்லை என்பது குறித்து நீங்கள் சொன்னால் எனக்கு புரிதல் பலப்படும். அல்லது சமூக அக்கறை குறித்து நீங்கள் என்ன கருத்து வைத்திருக்கிறீர்கள் என்பதாவது எனக்கு விளங்கும். உ.போ.ஒ பற்றிய விமர்சனமே சமூக அக்கறைதான் என்பது எனது கருத்து. நான் இதுவரை பதிவுகளில் எழுதியுள்ள விஷயங்களுக்கும் நீங்கள் உங்கள் பதிவுகளில் எழுதியுள்ள விஷயங்களுக்கும் உள்ள ஒப்புமைகளையும் சமூக அக்கறை குறித்தும் மனச்சாட்சியோடு யோசிக்கவும்.

/ஆனால் அப்படி என்ன தவறான கருத்து உ.போ ஒருவனில் சொல்லப்பட்டு விட்டிருக்கிறது?/

நிச்சயமாக உங்கள் சீதைக்கு ராமன் சித்தப்பாதான்.

கோவை குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்டவர்களில் எத்தனை பேர் குற்றம் நிரூபிக்கப்பட்டவர்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டு 9 ஆண்டுகள் தன் வாழ்க்கையை இழந்த மதானிக்கு நீங்கள் என்ன பதில் வைத்திருக்கிறீர்கள்? தடா வழக்கில் 80 சதவிகிதத்திற்கும் மேல் பொய்வழக்குகள்தான் என்று தடா நீதிமன்றமே கூறியதே. ஒரு முஸ்லீம் இளைஞனைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட காரணத்திற்காக 'மனித வெடிகுண்டு பெண்' என்று ஊடகங்களால் சித்தரிக்கப்பட்ட ஆயிஷா (எ) சங்கீதாவின் கண்ணீர்க் கதை தெரியுமா உங்களுக்கு? போலீஸால் கைது செய்யப்படுபவர்களை எல்லாம் எந்த விசாரணையும் இன்றி, உங்கள் கமல் கருத்துப்படி பொட்டல் வெளியில் சுட்டுத் தள்ளலாமா? அல்லது பாம் வைத்த ஜீப்பில் ஏற்றலாமா?

குஜராத்தில் ஒரு கல்லூரி மாணவி உட்பட நான்கு இளைஞர்கள் மீது நடத்தப்பட்டது போலி என்கவுண்டர் என்று மாஜிஸ்டிரேட் தமாங் அறிக்கை சமர்ப்பிக்கிறார். அரசால் நியமிக்கப்பட்ட கமிஷனின் அறிக்கையை தன் பிட்டத்திற்குக் கீழ் போட்டு அழுத்துகிற நரேந்திர மோடியை என்ன செய்யலாம் தண்டோரா அல்லது கமல்...? என்கவுண்டர்..? பாம் ஜீப்...?

''எனக்கு மரணதண்டனையின் மீது நம்பிக்கையில்லை. ஆனால் யாரையாவது சுட்டுத் தள்ள வேண்டும் எண்ரால் நான் சுட்டுக் கொல்கிர முதல் ஆள் மோடி"" என்றார் மகாராஷ்டிர நாடக ஆசிரியர் விஜய் டெண்டுல்கர். அவர் கலைஞன். கமல்..?

சுகுணாதிவாகர் said...

உங்கள் பதிவின் பெரும்பாலான பின்னூட்டங்கள் நான் எதிர்பார்த்த மாதிரியே. ஆனால் எதிர்பாராதது உண்மைத்தமிழனிடமிருந்து சரியான விமர்சனங்கள்.

‍ ‍மோசமானவங்களில் முக்கியமானவன்.

சுகுணாதிவாகர் said...

செல்வேந்திரம் மாதிரியான மடபாஸ்கர்களுக்கு எல்லாம் எதிர்வினை புரிய நேர்ந்தது காலத்தின் கொடுவினைதான். அந்த பத்தாம் நம்பர் செருப்பு எது செல்வேந்திரன், ஜ்யோராம் சுந்தரிடம் அடி வாங்கினீர்களே அந்த செருப்புதானா?

மணிஜி said...

/செல்வேந்திரம் மாதிரியான மடபாஸ்கர்களுக்கு எல்லாம் எதிர்வினை புரிய நேர்ந்தது காலத்தின் கொடுவினைதான். அந்த பத்தாம் நம்பர் செருப்பு எது செல்வேந்திரன், ஜ்யோராம் சுந்தரிடம் அடி வாங்கினீர்களே அந்த செருப்புதானா//

நீங்கள் எழுதுவதை விட்டு விட்டு சும்மா சொறிந்து கொண்டிருக்கலாம்..ஏன் மடபாஸ்க......

அப்புறம் அது என்ன ஜ்யோவ்...அவர் சைஸ் 10ஆஆஆஆ

மணிஜி said...

உண்மைத்தமிழன் உங்களை ஆதரித்ததில் என்ன உள் நோக்கம்?

மணிஜி said...

காட்டாமணக்கு?நல்ல பேர்தான்..வெட்ட வேண்டியதுதான்....

மதி.இண்டியா said...

//இத்திரைப்படத்தில் முஸ்லீம்களின் பல தார மணத்தைக் கிண்டல் செய்துகூட வசனம் இருக்கிறது.. ஏன் இந்து மதத்தில் யாருமே இதைச் செய்வதில்லையா..?//

இந்து எவனும் அதை மதத்தின் பேரால் , எங்க அல்லா 4 கல்யாணம் செய்ய சொன்னார்ன்னு சொல்லி செய்வதில்லை .

கொஞ்சம் கரக்ட்டா உதாரணம் சொல்லுங்க அண்ணாச்சி .

மதி.இண்டியா said...

//முஸ்லீம் தீவிரவாதிகளின் பெயர்களையும், இடங்களையும், நாடுகளையும் அழுத்தம்திருத்தமாகச் சொன்னவர்கள் பெஸ்ட் பேக்கரி சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் பெயர்களையும், இயக்கத்தையும் வெளிப்படையாகச் சொல்லாதது ஏன்..?
//

கருநாநிதி ஆட்சியில கருத்து சுதந்திரம் கொடிகட்டி பறக்குதுன்னும் குஜராத்துல மோடியை பெயர் சொல்லியே தாக்கியிருக்காங்களே ?

(கருத்து சுதந்திரம் ஹாத்வேயில பறக்குதுன்னு உங்க பதிவ பாத்துதான தெரிஞ்சுகிட்டம் ?)

மதி.இண்டியா said...

//குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டு 9 ஆண்டுகள் தன் வாழ்க்கையை இழந்த மதானிக்கு நீங்கள் என்ன பதில் வைத்திருக்கிறீர்கள்?//

இந்த ஒரு கமண்டுக்கே ப.சீனிவாசன் கிட்ட சொல்லி உமக்கு இன்கிரிமெண்ட் போட சொல்லனும்யா ,

அவனுக்கு கால் எப்படி போச்சு ? சக்கரை வியாதியிலயா ? குண்டு தயாரிச்ப்ப வெடிச்சுதான ?

ஏது அ.மார்க்ஸ் கொஞ்சம் எலும்பு போடறாரு போல ?

selventhiran said...

சுகுணா திவாகர் எனும் சிந்தனைவாதி, சீரிய இலக்கியவாதி அவர்களின் மேலான கவனத்திற்கு...

உம்ம நுண்ணரசியல், புண்ணரசியல், புண்ணாக்கு அரசியலெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். மதானியின் விடுதலைக்குப் பின் இருக்கும் நேரடி அரசியல் கூட தெரியாத நீங்களெல்லாம் பத்திரிகையில் பணியாற்றுவது காலத்தின் கொடுங்கனவுதான். இன்னும் குஜராத்தைப் பற்றியே பேசிக்கொண்டிருங்கள். இஸ்லாமாபாத்திலிருந்து பொடிநடையாக வந்து உங்கள் சூ**ல் சுக்கை வைத்து ஊதுவான்கள்.

Cable சங்கர் said...

உண்மைதமிழன் அண்ணே..போய் வேலைய பாருங்கண்ணே.. இவங்க எல்லாம் சும்மா புதுசு புதுசா கண்டுபிடிச்சி பேசிட்டு இருப்பாங்க பொழுது போகாம.. அங்க படம் நல்லா கல்லா கட்டுது.. நீங்கதான் பிசிஆவணும்.. போய் கல்யாணத்தை பண்ணி புள்ளை குட்டிகளை படிக்க வைக்க பாருங்க..:)

மணிஜி said...

நான் கூட மதானியை மாபாவி என்று நினைத்தேன்..அவர் மகாத்மா என்று சொன்ன சுகுணாவிற்கு நேற்று அநேகமாக அவர் வீட்டிலிருந்து பிரியாணி வந்திருக்க வேண்டும்.//

அப்புறம் உண்மைத்தமிழன் அண்ணே.சத்தியமாக உங்களுக்கு கதை எழுத வராது என்பது தெரிந்த ரகசியம்..பின் ஏன்???

எஸ்ரா சற்குணம்,முஸ்லீம்லீக்,தலித் கட்சிகள் இவற்றுடன் கூட்டணி வைத்து,அதற்கு மதசாற்பற்ற அணியென்று பெயரிடுவதை போல் இருக்கிறது உங்கள் வாதம்...

போங்கய்யா...போலி செக்யூலரிஸ்டுகளா?

Unknown said...
This comment has been removed by the author.
Sanjai Gandhi said...

//இத்திரைப்படத்தை பார்க்கின்ற நம்மை அல்லாத பெருவாரியான ரசிகர் பெருமக்களின் மனதில் முஸ்லீம்கள்தான் தீவிரவாதிகள் என்கிற எண்ணம் உருவாகிவிடாதா..?//

கரெக்ட். இனி அப்துல்லா , தமிழ் பிரியன் என என் உறவுக்காற முஸ்லிம்களை எல்லாம் தீவிரவாதியாகவே பார்ப்பேன் என அண்ணன் உண்மைத் தமிழனின் 3வது சின்ன வீட்டின் மீது ஆணையாய் சொல்கிறேன்.

Sanjai Gandhi said...

//போலீஸால் கைது செய்யப்படுபவர்களை எல்லாம் எந்த விசாரணையும் இன்றி, உங்கள் கமல் கருத்துப்படி பொட்டல் வெளியில் சுட்டுத் தள்ளலாமா? அல்லது பாம் வைத்த ஜீப்பில் ஏற்றலாமா?//

நீங்கள் படத்தை முழுமையாகப் பார்த்துவிட்டு தான் விமர்சனம் எழுதி இருக்கிறீர்கள் என நினைத்து எனக்கும் சில காட்சிகள் பிடிக்கவில்லை என சொல்லி இருந்தேன். மேலே இருக்கும் உங்கள் வரிகளில் மாறுபடுகிறேன். அந்த தீவிரவாதிகள் தங்கள் வாயாலேயே தாங்கள் செய்த குற்றங்களை ஒப்புக் கொள்கிறார்கள். நீங்கள் சொல்வது போல் விசாரனைக் கூட இல்லாமல் கொல்வதில்லை.

மணிஜி said...

///இத்திரைப்படத்தை பார்க்கின்ற நம்மை அல்லாத பெருவாரியான ரசிகர் பெருமக்களின் மனதில் முஸ்லீம்கள்தான் தீவிரவாதிகள் என்கிற எண்ணம் உருவாகிவிடாதா..?//

கரெக்ட். இனி அப்துல்லா , தமிழ் பிரியன் என என் உறவுக்காற முஸ்லிம்களை எல்லாம் தீவிரவாதியாகவே பார்ப்பேன் என அண்ணன் உண்மைத் தமிழனின் 3வது சின்ன வீட்டின் மீது ஆணையாய் சொல்கிறேன்//

உங்கள் தலைவியே மன்னித்து விட்ட நளினியின் விடுதலைக்கும் கொஞ்சம் போராடுங்கள் சஞ்சய்..(அப்படியே உங்க ஊரில் அகால மரணமடைந்த ஆத்மாக்களுக்கும் அஞ்சலி செலுத்துங்கள்)

Sanjai Gandhi said...

//கரெக்ட். இனி அப்துல்லா , தமிழ் பிரியன் என என் உறவுக்காற முஸ்லிம்களை எல்லாம் தீவிரவாதியாகவே பார்ப்பேன் என அண்ணன் உண்மைத் தமிழனின் 3வது சின்ன வீட்டின் மீது ஆணையாய் சொல்கிறேன்//

உங்கள் தலைவியே மன்னித்து விட்ட நளினியின் விடுதலைக்கும் கொஞ்சம் போராடுங்கள் சஞ்சய்..(அப்படியே உங்க ஊரில் அகால மரணமடைந்த ஆத்மாக்களுக்கும் அஞ்சலி செலுத்துங்கள்) //

2 பின்னூட்டங்களுக்கும் உள்ள தொடர்பு கூட புரியாத சராசரிக்கும் கீழான எனக்கு புதசெவி.

samundi said...

பூணூல் போடாத பார்ப்பனீயவாதிகள்
http://kattamanaku.blogspot.com/2009/09/blog-post_21.html

மணிஜி said...

சஞ்சய்...பின்னுட்டங்கள் புரிகிறது.புதசெவி???

மணிஜி said...

சஞ்சய்..எல்லா இலங்கை தமிழரையும் நாம் தனுவாகவும்.சிவராசனாகவும் பார்க்கமுடியுமா?

Sanjai Gandhi said...

//சஞ்சய்..எல்லா இலங்கை தமிழரையும் நாம் தனுவாகவும்.சிவராசனாகவும் பார்க்கமுடியுமா? //

எனக்குத் தெரிஞ்சி எந்த மடையனும் பார்க்க மாட்டான்.

மணிஜி said...

// SanjaiGandhi said...

//சஞ்சய்..எல்லா இலங்கை தமிழரையும் நாம் தனுவாகவும்.சிவராசனாகவும் பார்க்கமுடியுமா? //

எனக்குத் தெரிஞ்சி எந்த மடையனும் பார்க்க மாட்டான்.//

அப்படியா?நீங்கள் தலைமைக்கு தகுதியானவர்தான்....

yegalaivan said...

ஒன் பேரு மதி இந்தியாவா?மடையன் இந்தியாவா? பிராக்டிகலா எங்க பாத்த நாலு கல்யாணம் பண்ணத? ஒன் கடவுள் ராமனுக்கு எத்தனை ஆயிரம் சித்திகள்னு ஒன் மரமண்டைக்கி தெரியுமா?தெரியாதா?

Kumky said...

யார் எதுக்கு சப்போட் பண்றாங்கன்னு ஒர் எழவும் புரியலயே...அண்ணாத்த அதுக்கு ஒரு கோனார் போடப்படாதா..?