Monday, August 30, 2010

(பெயர் மாற்றப்பட்டுள்ளது)


அப்பனாலேயே
புணரப்பட்டவள் நான்

ஒரு தலைக்காதலனால்
ஆசிட் ஊற்றப்பட்டவள்


கூட வந்தவர்களுக்கு
ஊற்றி கொடுக்க வைத்தான்
கட்டியவன்

கூடவே படுக்கவும்
சொன்னான்

இணையத்தில் அதையும்
நீங்கள் பார்த்திருக்கலாம்

அது நான் இல்லை
இருந்தாலும் அவளின்
(மாற்றப்பட்ட) பெயராக
நான் தான் இருந்தேன்




Thursday, August 26, 2010

நாகம்மா...


ஊருக்கு போகும் பாதை முற்றிலும் மாறி விட்டிருந்தது . இங்க தான் ஒருபெரிய புதர் இருந்தது . அந்த அடர்த்தியான நாகமரம் மட்டும் இன்னமும் . கிழடு தட்டி . பழங்கள் இல்லை . அந்த மரத்தில் கண் போல் ஒரு முட்டு உண்டு . அது இன்னமும் இருந்தது . நாகம்மா..

ஊர் வரைக்கும் பஸ் போகும் என்றார் நடத்துனர் . ஆனால் வேலு முன்னரே இறங்கி கொண்டான் . நடக்க வேண்டும் போல் இருந்தது . ஊரில் யார் , யார் இருப்பார்கள் என்று எண்ணிக்கொண்டான் . பாண்டிக்கு மட்டும் ஒரு முறை லெட்டர் போட்டிருந்தான் . வேலு ஊரை விட்டு போகும் போது அப்பத்தா கிழவி மட்டுமே இவனுக்கு சொந்தம்னு சொல்லிக்க இருந்தாள் . அவளும் போய் சேர்ந்திருப்பாள் . சைக்கிள் கடை பாண்டி மட்டும் இருப்பான் என்று நினைத்தான் . நாகம்மா இருப்பாளா?

எல்லாக் காலங்களில் நாகமரம் காய்த்து கொட்டும் . சரியாக விளக்க முடியாத ஒரு ருசி நாகப்பழத்துக்கு . முட்டை வடிவில் , கருநீலமாக , சதைபிடிப்பாக.. நாகம்மாவின் இடுப்பு நினைவுக்கு வரும் . நாகம்மாவும் அந்த பழத்தின் நிறம் தான் . அதுவும் அவள் இடுப்பு . அதில் மின்னல் போல் ஒரு வளைவு . அதற்காகத்தானே வேலு அப்படி செய்தான் .


பாண்டி ! அவளை பார்த்தாலே வேட்டி நனையுதுடா . என்ன செஞ்சாச்சும் தூக்கிட்டு போயிடனும்டா . நாகமர புதருக்குள்ள வச்சு ..

வேலு நாகம்மா நெருப்பு . அந்த சூட்டை கூட பொறுத்துக்கலாம் . பாத்து சூதானமா நடந்துக்க .. இல்ல ஊர்ல நாறி போயிடுவே

வேலுக்கு எதுவும் பொருட்டாயில்லை . பற்றி எரிந்தது . இத்தனைக்கும் அவன் ஒன்னும் பொம்பளை பொறுக்கியில்லை . அவளை பார்த்தவுடன் முனி அடித்த மாதிரி ஆகிப் போனான் . சாடையாய் அவளிடம் சொல்லிப்பார்த்தான் . ராசாத்தி மாதிரி வச்சுக்கிறேண்டி உன்னைய என்றான் . அவள் சிரித்து இவனை மேலும் போதையாக்கி நழுவிக் கொண்டேயிருந்தாள் . காரணம் பிற்பாடுதான் தான் தெரிந்தது . மாரியப்பன் . நாகமரத்தடியில் இருவரும் சிரித்து பேசிக்கொண்டிருப்பதை வேலு பார்த்து விட்டான் . அவன் பார்க்கும் போது மாரியின் கை இடுப்பு மின்னலை பிடித்துக் கொண்டிருந்தது ..

பாண்டியின் கடை கொஞ்சம் பெரிசாக மாறியிருந்தது . பாண்டி அப்படியேதான் இருந்தான் . வேலுவை பார்த்ததும் கட்டிக்கொண்டான் . பாட்டில் கொண்டு வந்தியா பங்காளி என்றான் .

நைட்டு வச்சுக்குவோம் கச்சேரியை என்று சொல்லி விட்டு நாகம்மா இன்னும் இங்கதான் இருக்காளாடா என்றான் வேலு

பாண்டிக்கு முகம் மாறியது . வேலு அவ இருக்கா . நீ பழசை மறந்துடு . அவ இப்ப குறிகாரியாயிட்டா . ஊருக்கு இப்ப அவ சாமி மாதிரி .

புரியலடாயா மாப்ள..

மிலிட்டரி சரக்கும் , சேர்மானங்களும் எடுத்துக் கொண்டு தோட்டத்துக்கு போனார்கள் . மூன்றாவது ரவுண்டில் பாண்டிக்கு கண்கள் சொருக ஆரம்பித்தது . நாகம்மாவின் குடிசை எங்கிருக்கிறது என்ற வேலுவின் கேள்விக்கு அவனிடம் பதில் இல்லை . அவளை இப்போதே தேடி பிடிக்க வேண்டும் என்ற வெறி வேலுவுக்கு .

நீ பாத்தியா வேலு ? அந்த மாரி பயலா . மச்சம்டா அவனுக்கு . ஆனா அவனும் ஆளு நல்லா ஓங்கு தாங்காத்தான் இருப்பான் .

ஏன் நான் மட்டும் எப்படியிருகேன் ? இதை விடப் போறதில்லைடா . அவ கால்ல கூட விழுந்து பார்த்தேன்டா . அதுக்கும் சிரிச்சா . மாரியோட ....... மயித்துக்கு கூட நீ பொருந்த மாட்டேன்னுட்டா .. குச்சிக்காரி.. அவளை..கறுவினான் வேலு...


என்ன வேலு தம்பி . பட்டாளத்து சரக்கு கும்முன்னு தூக்குது . எங்களுக்கு ஒரு கோடு தரக்கூடாதா என்றார் நாட்டாமை வீட்டு கணக்கு பிள்ளை.

ஒரு பாட்டிலே தாரேன் கணக்கு . இந்த நாகம்மா இப்ப எங்க இருக்கான்னு மட்டும் சொல்லு . இன்னும் வைரம் பாஞ்சு மெருகோட இருப்பா . அன்னிக்கு விட்டதை , இன்னிக்கு அள்ளிடனும் . இப்பதான் மாரி இல்லியே . அன்று மாரி துரத்தினதை நினைச்சா இன்னிக்கு ஈரக்குலை உதறும் வேலுக்கு . என்ன சிரிப்பு சிரிச்சா குச்சிக்காரி அன்னிக்கு . அதுல போனவன் தானே வேலு . மாரி நாலு பேத்தை வெட்டிட்டு என்று பாண்டி சொன்னது ஒலித்துக் கொண்டே இருக்கிறது . நல்லவேளை வேலு . அன்னிக்கு நீ ஓடிட்ட . உன்னைய மாதிரிதான். அவனுங்களும் நாகம்மாவை துக்கிட்டு போகப்பார்த்தாங்க . வெட்டி சொருகி வச்சுட்டான் . அந்த நாகமரத்துலதான் .. இன்னும் கூட அந்த வீச்சம் இருக்குடா.. அதுக்கப்புறம்தான் அது பட்டு போக ஆரம்பிச்சிருச்சு ..

மாரி எப்டி செத்தான் ?

நாகம்மாவுக்கும் அவனுக்கும் கல்யாணம் . ஒரு பய போகலை . யாரையும் கூப்பிடலை . மறுநாள் போயிட்டான் . நெஞ்சுவலின்னு பேசிகிட்டாங்க . ஆவி அடிச்சிருச்சுன்னும் பேச்சிருக்கு . நாகம்மா வாயை தொறக்கலை . திடீர்னு ஊருக்குள்ள வருவா .. ஒரு நாள் நாட்டாமை வீட்டுக்கு போனான் . இந்த இடத்துல பாம்பு இருக்கு . இன்னிக்கு ராத்திரி இங்க நுரை தள்ளப்போகுதுன்னா . போடி கோட்டிக்காரின்னு கழுத்தை பிடிச்சு தள்ளினாங்க . ஆனா அன்னிக்கு ராத்திரியே நாட்டாமை சம்சாரத்தை தீண்டிடுச்சு . அதுலேர்ந்து ஊருக்குள்ள அவளுக்கு பேர் . அவளா வந்தாத்தான் ஆச்சு . கணக்கு அரை பாட்டிலை தீர்த்து விட்டு ஆட ஆரம்பித்தார் .


நாட்டாமை , நீ , நான் மூணு பேர் மட்டும் போறோம் என்ன என்றான் வேலு பாண்டியிடம்

உண்மையா இருந்தா அந்த செறுக்கியை வெட்டி போடனும் என்றார் நாட்டாமை . அவருக்கும் அவள் மேல் ஒரு கண் இருந்தது . மசியாத கடுப்பு .

போனார்கள் . சம்போகம் நடந்து கொண்டிருந்தது . அந்த காட்சி . இரண்டு நாகங்கள் பின்னி பினைந்து ஆடிக் கொண்டிருந்தன . பச்சை பத்திக் கொள்ளும் உஷ்ணம் . தகிக்கிறது . அவர்களை தடுக்க தோன்றவில்லை . ராஜசம்போகம் . சத்தம் போடாமல் திரும்பி விட்டார்கள் . அடுத்த நாள் வேலு நாகம்மாவை மடக்கி இழுத்தான் . முந்தின நாள் நடந்ததை பார்த்து விட்டேன் என்றான் . எனக்கும் விரி . இல்லை ஊர் சிரிக்கும்னு மிரட்டினான் . நாகம்மா அதற்கும் சிரித்தாள் . மாரி வருவான் . உன்னைய வெட்டுவான் . வேணுமின்னா உன் பொணத்தோட படுக்கறேன் . ரெண்டும் ஒன்னுதான் என்று சிரித்தாள் .

வேலு வேண்டாம் . இப்ப போகாதே என்று தடுத்தார் கணக்கு . வேலுவுக்கு போதையும் , காமமும் தலைக்கேறியிருந்தது . நாகப்பழ வாசனை அடித்தது . அதோ ..அந்த செறுக்கிதான் வர்றா..இன்னும் அந்த இடுப்பில் மின்னல் ஓடிக் கொண்டிருந்தது . அவள் இடுப்பை வளைத்து தூக்கி கொண்டான் . நாகமரத்துகு பின்னால் சாய்த்தான் . அப்போதும் அவள் சிரிக்கவே செய்தாள் . உதடுகளை குவித்து அவன் முகத்தை நெருங்கினாள் .


மறுநாள்.. நாகமரத்துக்கு அடியில் வேலு செத்து போயிருந்தான் . உடல் நீலம் பாரித்திருந்தது . உதட்டில் ஒரு பொட்டு . அதில் ரத்தக்கறை... மரத்தில் பழமே இல்லை . எப்படி நாகப்பழ வாசனை என்று ஊர்க்காரர்களுக்கு ஆச்சர்யம்தான்

Tuesday, August 24, 2010

முன்னாளும் , இந்நாளும் சந்திக்கிறார்கள்


அத்வானி மன்மோகனை சந்தித்து வாழ்த்து சொகிறார்..நிதிஷ் லாலு சந்தித்து கொள்கிறார்கள்.. ராகுல் அத்வானியிடம் ஆசி பெற்றுக் கொள்கிறார்..தமிழகத்தின் முன்னாள் உபத்திரமும் , இன்னாள் மூலப்பத்திரமும் (சேலத்தில் மு.கவை வாழ்த்தி இந்த வாசகம் பார்த்தேன் ) நேற்று சந்திப்பார்கள் என்று நவ”கிரக”ங்களும் ஆவலுடன் இருந்ததாம் . ஆனால் அந்த சரித்திர பிரசித்தி பெற வேண்டிய சந்திப்பு நடைபெறவில்லை . சந்தித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் . கடும் முயற்சிக்குப் பிறகு....


அண்ணா சமாதிக்கும், எம்ஜிஆர் சமாதிக்கும் இடையில் மேடை அமைக்கப் பட்டு இருக்கிறது.. கருணநிதி சரியான நேரத்துக்கு வந்து விடுகிறார்.. அண்ணா சமாதியை பார்த்தவுடன் அவருக்கு உண்ணாவிரதம், இருக்கும் ஆசை வருகிறது . உதவியாளர் முதல்வர் காலையிலேயே செட் தோசை சாப்பிட்டதை நினைவுபடுத்துகிறார் . சரிய்யா..அந்தம்மா வரும் வரைக்கும் நான் உண்ணாவிரதம் என்று சொல்ல , கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி கொண்டிருந்த “மாரியம்மன் மகிமை “ சீரியல் நிறுத்தப்பட்டு , உண்ணாவிரதம் நேரடி ஒளிபரப்பு .

அம்மாவை பற்றி சொல்ல வேண்டுமா? தூங்கி முழிச்சு , அணிந்திருந்த நகைகளை கழட்டி விட்டு வழக்கம் போல் லேட்டாக வர. கருணாநிதி விரல்களால் முகத்தை மூடிக் கொண்டு விரலிடுக்கு வழியாக அம்மையாரை பார்க்கிறார்..

”என்ன என் முகத்தை நேருக்கு நேர் பார்க்க பயமா?

இல்லை அம்மணி “கிரகணத்தை” அப்படித்தான் பார்க்கனும்..கேள்விப் பட்டதில்லையா?

வார்த்தை விளையாட்டு வேண்டாம்..மக்களுக்காக என்ன செஞ்சிருக்கிங்க..

இன்னிக்கு முரசொலி வாசிக்கலையா ? கின்னஸ்ல என் பேர் வந்திருக்கு . அதிகமா தபால் எழுதினதுக்காக .எல்லாருக்கும் எல்லாம் செஞ்சாச்சு..இனி கனி மட்டும்தாம் மீதம்.அதையும் செஞ்சுட்டா என் தலைவலி ஒழியும்..

நான் தமிழக மக்களுக்கு என்ன செஞ்சிங்கன்னு கேட்டேன்..உங்க ஆட்சியில எத்தனை அதிகார மையங்கள்..ஆளாலுக்கு ஆடறாங்க..

அதிகாரம் பரவலாக்கபட வேண்டும் என்பதுதானே அண்ணனின் ஆசையும் கூட..ஆமாம்..உங்களுக்கு இலவச தொலைகாட்சி கிடைத்ததா ? ஒரு ரூபா அரிசிதான் நீங்களும் சாப்பிடறீங்கன்னு உளவுத்துறை ரிப்போர்ட்

நான்சென்ஸ்..நான் இப்ப பிஸ்ஸாவுக்கு மாறியாச்சு . உங்க கையை வீக்காக்க போறேன். விலைவாசிய பாத்திங்களா? விலைன்னு எழுதி வாசிக்கத்தான் முடியுது...

அம்மையாரே..மக்களின் வாங்கும் சக்தி அதிகமாகிவிட்டது..அதை விட மக்களை வாங்கும் சக்தியும் அதிகமாகி விட்டது...இந்த தேர்தலில் தெரிந்து கொண்டோம்..

ரொம்ப பீத்திக்காதீங்க...கோவையையும் , திருச்சியையும் பார்த்தீங்கள்ளே . அடுத்த ஆட்சி என்னுடையதே..அப்ப வச்சுக்கறேன்...ஆமாம்..எனக்கு எதாவது மிச்சம் இருக்குமா ? சசி ரொம்ப நாளா ஒரு மூக்குத்தி கேட்டு கிட்டு இருக்காங்க


மதுரை தம்பி கிட்ட கேளுங்க.. கம்மல் ,கால் கிலோ கறி எல்லாம் உண்டு . ஓட்டை சூரியனுக்கு போடுங்க போதும்

இந்த முறை அது நடக்காது . அடுத்த மைனாரிட்டி ஆட்சி என்னுதுதான்

அம்மணி....இனி வெற்றி என்பது வாங்கபடவேண்டிய ஒன்று.. 2011 தேர்தலுக்கு நாங்க இப்பவே பட்டுவாடாவை ஆரம்பிச்சுட்டோம்..எப்புடி??

வாக்கு சீட்டு முறை வந்துட்டா நீங்க ஜெயிக்கவே முடியாது..

அறியாமையில் அரற்றுகிறீர்கள்..அது இன்னும் சொர்க்கம்...உங்களுக்கு சுத்தம்..ஒன்னு காந்தி, இல்லன்னா கத்தி..எவனாச்சும் எதிர்ப்பான்?

இடையில் தண்டோரா குறுக்கிட்டு..நீங்க மக்கள் பிரச்சனையை பத்தி ஒன்னுமே பேசலையே..

கருணாநிதி..அம்மையாரே, நம்ம லாவணியை அப்புறம் கூட வச்சுக்கலாம்..முதல்ல இந்த மாதிரி புல்லுருவிகளை என்ன பண்ணனும் தெரியுமில்ல...

ஆமாமாம்..இந்த விஷயத்துல நீங்களும் நானும் ஒரே கட்சிதானே..

அப்புறம் என்ன? ஸ்டார்ட் மூஜிக்....



Sunday, August 22, 2010

விளம்பரக்காரன்





விளம்பரக்காரன்னு நிறுவனத்துக்கு பெயர் வைத்துக் கொண்டு , சுய விளம்பரம் செய்து கொள்ளாமல் இருக்க முடியுமா ? நான் எடுத்த பட்டுப்புடவை விளம்பரம் ..புகைப்படங்கள் எடுத்த ஜாக்கிக்கு நன்றி















Saturday, August 21, 2010

மலடி..காயடி..கசையடி



மனுநீதி சோழன் மாளிகை
வாசல் மணியை அடித்தது
ஷகீலா போஸ்டரை தின்ற மாடு
குறை கேட்ட மன்னன்
காயடிக்க உத்தரவாம்
யார் அடிப்பது என்று
அவன் வாரிசுகளுக்குள் விவாதம்
ஆளை விடுங்கள் என்ற மாடு
மனுவுடன் போயஸ் கார்டன் போனது
காளை மாட்டில் பால் கறக்க
அங்கு உத்தரவாம்
“கை” யை யாராவது இரவல்
கொடுங்க சாமீகளா !

கொண்டு வந்த அவலை
டாஸ்மாக்கில் தீர்த்து விட்டான் குசேலன்
கூட குடித்த அத்தனைப்பேருக்கும்
இலவச விநியோகம்
மிஞ்சியிருந்த அவிச்ச கடலையுடன்
குவார்ட்டர் அடிச்ச மப்புடன்
கோவிந்தனை காண
கோகுலம் போனான்
அன்பை மெச்சிய கண்ணன்
தமிழால் தடவி கொடுத்தான்
இலவச தொலைக்காட்சியும்
காமசூத்ரா காண்டம் ஒரு அட்டையும்
கூடவே மிட்நைட் மசாலா
பார்க்கும்படி பரிந்துரையும்

அறிவாலயத்தில் அடையாள அட்டை
வாங்கும் கீயூவில்
இளங்கோவனும்
அவர் இல்லையப்பா இவர்
பின்னால் தொல்..இவரும் அவர் இல்லை
தொல்காப்பியராம்
அவசரத்துக்கு ஒதுங்கும் இடத்தில்
முளைத்திருந்தது செடிகள்
அதற்கு ஒரு பெயரும் இட்டிருந்தார்கள்
தொல்காப்பிய பூங்காவாம்


ராஜாவா ... ராணியா...
இன்னும் என்ன கொடுப்பான்
கலியுக கர்ணன் ?
பேரத்துக்கு ஜோக்கர்கள்
படிகிறார்கள்
தாயம் பன்னிரண்டு விழுமா ?
வழக்கம் போல் மெண்டோஸ்
வாழ்க்கைக்கு தயராகிறார்கள்
தினத்தந்தி வாசகர்கள்

இழவு வீட்டிலும்
வீடியோ எடுக்க வந்துவிட்டது
இளைஞர் கூட்டம்
அத்தனை பேர் தலையிலும்
சூரியன் முளைத்திருக்கிறது
ஒன்று சும்மா இருங்கள்
இல்லை சூத்தை காட்டுங்கள்
வாங்க மட்டுமே நீ
அடிக்கும் ஆசையிருந்தால்
முதல் பாராவில் சொன்ன
மாட்டை நினைத்துக் கொள்
காயடிப்பார்கள்
மலடியை கர்ப்பமாக்குவார்கள்
பாலியல் சட்டத்தில் உன்னை
பலியாக்குவார்கள்
போடா ஆமாம் என்று
சொல்லிவிட்டு
வெண்ணெய்......................


Thursday, August 19, 2010

மானிட்டர் பக்கங்கள்.....19/08/10


(உலக அமைதிக்காக பிரார்த்தித்து கொண்டிருக்கிறேன்)



எழுதி ரொம்ப நாளாச்சு ! எழுதனும்னு கட்டாயமா ? காலத்தின் கைஅரிப்பான்னு தெரியலை . மொக்கைக்கு இவ்வளவு பில்டப்பான்னு ஜ்யோவ்ராம் சுந்தரின் ஸ்டேட்டஸ் மெசேஜ் சிரிக்கிறது . (30/06/2010 ) . இன்று திருமணநாள் காணும் சுந்தருக்கு வாழ்த்துக்கள் . எனக்கு அடுத்த மாசம் (ட்வின் டவர் அட்டாக் )

பாங்காக்கில் வாசு புலியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார் . நான் ஒரு கிளியுடன் ...(படம் போட இயலவில்லை..பர்சனலாக காட்டுகிறேன் .வாசு எடுத்த கோணம் சரியில்லை )

பொதுவாகவே மேலை நாடுகளில் ஹாரன் அடிப்பதில்லை . இங்கும் அப்படித்தான் . ஆனால் அதற்கு பதிலாகத்தான் நாங்க வாய் ஓயவே இல்லை .

அங்கு சாப்பிட்ட பேப்பர் மசால் தோசை 165 பாட் . கிட்டதட்ட 270 ரூ . நான் அதில் 200 ஐ சர்வீஸ் செய்த அந்த கொத்தமல்லி செடிக்கு (கொத்தமல்லி செடியில் எலுமிச்சை பழம் அங்கு காய்க்கிறது ) கொடுத்தேன் . மீதியை ஓட்டல்காரனுக்கு அழுதேன்

போன் , ரூம் இவை நான் சந்தித்த (அதாவது பெயர் கேட்ட ) இரு பெண்களின் பெயர்கள் . பெயர்க் காரணம் தெரியவில்லை

ஒருவன் ஆபாசபடத்தை காட்டி எனக்கு தூண்டில் போட்டான் . நான் மறுக்க , என்னை தாக்கிவிட துணிந்துவிட்டான் . நானும் முஷ்டியை ஓங்கி , நம்மூரின் உட்சபட்ச கெட்ட வார்த்தையை சொன்னேன் . சிரித்து அனுப்பி விட்டான் . அந்த வார்த்தைக்கு தாய்லாந்தில் மரியாதையான அர்த்தம் இருக்குமோ ?


ஏழு நாள் பாங்காக்கில் தளும்பியது (சரக்குங்க ) ஒத்துக் கொள்ளவில்லை . இங்கு வந்து இறங்கியதும் , ஏழரையை (அந்தாள் இல்லிங்க) காட்டியது . டாக்டரிடம் போய் ஆறு மாதமாகி விட்டது போலும் . மனைவி என்னங்க இப்படி என்றாள் .
ஒரு முயற்சி என்றால் , இப்படிப்பட்ட இடைஞ்சல்களை சகிக்கத்தான் வேண்டும் என்று வியாக்கியானம் பேசி விட்டு போனேன் .

என்னாச்சு மணிகண்டன் ?

நீங்கதான் சொல்லனும் சார்

வழக்கம் போல்தானே என்றவர் பெரிய சீட்டை எழுத ஆரம்பித்தார் . நல்லவேளை ஐ.சி.யூ வெல்லாம் இல்லை . அந்தளவுக்கு ராஸ்லீலையெல்லாம் தாய்லாந்தில் நடக்கவில்லை . வெண்சீருடையில் செவிலிகள் போன முறையைவிட அழகாக தெரிந்தார்கள் . கொஞ்சம் அறிமுகமான அந்த பெண் லேசாக சிரித்தாள் . அங்காடித்தெரு அஞ்சலி சாயல் அவளுக்கு இருப்பதாக பட்டது . உன் பெயர் ”கனி”யாம்மா என்றேன் . இல்லை சார் “தமிழ் “ என்றாள் . ரெண்டும் ஒன்னுதாம்மா என்றேன் . அவளுக்கு புரியாமல் சிரிப்பு வந்தது .

சார் ! அடிக்கடி இங்க வர்றீங்க

உன்னைப் பார்ப்பதற்காக இருக்கலாமோ ? இதை சொன்னவுடன் அவளுக்கு லேசாக வெட்கம் வந்தது . சகோதரியை வெட்கப்படுத்தியிருக்கிறேன் . பாங்காக்கில் அந்த ஈரான் பெண்ணிடம் நாலு வரிகள் சொன்னேன் . அதற்கே அங்கிருந்த பஞ்சவர்ண கிளிக்கு டெபாசிட் போனது . எங்கள் ஊரில் இப்படி சொன்னால் அவ்வளவுதான் . நாக்கை வெட்டி சூலத்தில் சொருகி விடுவார்கள் . ஆமாம் .. உங்க நாடும் கடுமையானதுதானே . இதற்கு தண்டனை உண்டா ? என்றேன்

ஆம் . உண்டு . நான் புகார் கொடுத்தால் . ஆனால் நாக்கை மட்டுமல்ல என்றாள் அவள் ..


டாக்டர் வந்தார் . எப்படியிருக்கு மணி ?

சரியாகி போச்சு .

அதுக்குள்ளவா ? நிலா வரலையா ?

சரக்கு தீர்ந்து போச்சுன்னு சொன்னேன் .

பாரு . தலைவர் மதுவிலக்கு கொண்டுவரப்போறாராம் . என்னப் பண்ணுவீங்க ?

அதெப்படி தாய்லாந்துல இவர் கொண்டு வரமுடியும் என்றேன் . இவருக்கு மயக்க ஊசி போடுமா என்றபடி கையை ஆட்டி விட்டி அகன்றார் .


இன்னும் முடிக்காமலிருந்த தஞ்சை பிரகாஷை முடித்தேன் . ஏஜன்சியிடம் இருந்து போன் .

ஜீ..கிளையண்ட் வர சொல்லிட்டாங்க



எங்க ? எப்ப ?

காங்கேயம் . நாளைக்கு ..கான்செப்ட் ரெடி பண்ணுங்க . ஒரு நாலாவது ..

காங்கேயத்தில் ஒரு நெய் கம்பெனி ..பலமுறை சந்தித்தும் வேலையாகவில்லை . இந்த முறை பார்க்கலாம் . ஒவ்வொரு முறையும் ஈரோடு , பார் , குப்பண்ணா , டேம் ஃபிஷ் என்றே பொழுது கழிந்தது . இந்த முறை நேரமிருந்தால் நண்பர்களுக்கு போன் செய்கிறேன் . ஈரோடு தொடாமல் கார் மூலம் காங்கேயம் வருகிறேன்


கணவன் ஹாலில் அமர்ந்து பேப்பர் படிக்கிறான்

மகள் அவன் கழுத்தை கட்டிக் கொண்டிருக்கிறாள்

அப்பா ! கோடிக்கு எத்தனை சைஃபர்ப்பா ?

சமையலைறையிலிருந்து வாசனை அலை அலையாய் வருகிறது (கிராஃபிக்ஸ்)

கணவன் : டார்லிங் ! ஸ்ண்டே ஸ்பெஷலா?

மனைவி : சம்திங் ஸ்பெஷல் ..

மகள் : அப்பா ! பிராண்ட் நேமை சொல்லி..அதுல சமைச்சா எவ்ரிதிங்க் ஸ்பெஷல்தானே (குழந்தைங்கன்னா , கிழவி ரேஞ்சிற்கு பேசனுமே )

மனைவி பல உண்வுகளை சமைக்கும் காட்சிகள் .

நெய் டின்னின் குளோசப் காட்சிகள் .. கணவன் ஒரு ஸ்வீட்டை எடுக்க . மனைவி :நோ “ கெஸ்ட் ஃப்ர்ஸ்ட் என்கிறாள்

கணவன் யார் கெஸ்ட் என்று மகளிடம் ஜாடையில் கேட்கிறான் . மகளும் , அம்மாவும் நக்கலாக சிரித்துக் கொள்கிறார்கள்

மனைவி : எல்லாம் உங்க சொந்தகாரங்கதான் என்கிறாள்.


வாசலில் காலிங் பெல் அடிக்கிறது.

மனைவி கெஸ்ட் வந்தாச்சு என்கிறாள்.

அதாவது “உங்க மாமனாரும் , மாமியாரும் என்கிறாள்

----------- நெய் ..குஷி , ருசி , குதூகூலம்

“மணம் வீசும்...மனம் பேசும் “

எதாவது பெட்டரா கேப்ஷன் இருந்தால் கொடுங்க .. கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா பரிசு உண்டு


ஒரு ஆசை : ஆட்சி மாறிடும் சூழல் தெரிகிறது என்று சஞ்சய் மாதிரி அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள் . எதுவானாலும் பேயும் , பிசாசும்தாம் நமக்கு சாஸ்வதம் . ஆனால் காட்சிகள் மாறும் போது , படம் எப்படி விருவிருப்பாக இருக்குன்னு பார்க்க ஆசை..உங்களுக்கு ?

கொஞ்சம் டிஸ்கிகள் :

ஒரே இடத்தில் நடந்த மாபெரும் விருந்து..பிரமிப்பூட்டும் அசைவ சாப்பாடு..இன்று இரவு நிஜம் நிகழ்ச்சியில்...........


பி.கு : நிகழ்ச்சியை வழங்குபவர்கள் “ஆச்சி” மசாலா..இணைந்து வழங்குபவர்கள் “ மை” டாய்லெட் கீளினர்


எதிர் வீட்டுக்காரர் மாடியில் இரண்டு அறைகள் கட்டிக் கொண்டிருக்கிறார். ஒரு பையன் ,ஒரு பொண்ணு அவருக்கு .பொண்ணை கட்டி கொடுத்துட்டா , பையனை மேல வச்சுட்டு , நானும் மனைவியும் கீழே காலத்தை கழிச்சுடுவோம் என்றார் . என்ன ஒரு நம்பிக்கை பாருங்கள் ! எங்கள் வீட்டுக்கு அருகில் ஒரு முதியோர் இல்லம் இருக்கிறது

கோவிந்தா கோஷம் எங்கும் ஒலிக்கிறது. பக்தி பரவசம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆனால் எனக்குத்தான் கோவிந்தா என்றால் அதற்கு முன்னால் இருக்கும் குவார்ட்டர் என்ற அடைமொழிதான் நினைவுக்கு வருகிறது


இது பெஸ்கியோட டிஸ்கி


சண்டே வித் தங்கமணி

தங்கமணி: ஏங்க, பெப்பர் சிக்கன் பண்ணட்டுமா?
நான்: வேணாம்மா
தங்கம்: இல்லன்னா, பட்டர் சிக்கன்?
நான்: நோ.
தங்கம்: செட்டினாடு சிக்கன்?
நான்: அதல்லாம் வேணாம்மா, வெறும் குழம்பு மட்டும் வை, போதும்.
தங்கம்: இப்படி ஒரு புருசன் கிடைக்க நான் குடுத்து வச்சிருக்கனும், நான் கஷ்டப்படக்கூடாதுன்னு ஒன்னும் வேணாம்னு சொல்றீங்களே.
நான்: அது நீ கஷ்டப்படக் கூடாதுங்கிறதுக்காக இல்லம்மா, நான் கஷ்டப்படக் கூடாதுங்கிறதுக்காக

ஒரு கவிஜை :
இடது, வலது
ஏறி, இறங்கி
மேலும்,கீழும்
சரியும்,தவறும்
நடத்தலும்,நிற்றலும்
முன்னும்,பின்னும்
அந்தப்புறம், இந்தப்புறம்
ஆணும்,பெண்ணும்
இதுவரை சரிதான்
ஆனால்
உனக்கும்,எனக்கும்
எனக்கும்,உனக்கும்
என்பதில் உடன்பாடில்லை
அது நான்,நீ என்று
திருத்தப்படுகிறது.

Saturday, August 14, 2010

சேஷீ


விடாமல் மொபைல் அடித்துக் கொண்டேயிருந்தது. கண்ணை திறக்கமுடியாமல் எரிச்சல். நைட்டு அடிச்சது கொஞ்சம் ஓவர்தான். மீண்டும் ஒலிக்க எடுத்தால் “சேஷு” calling.. என்ன இந்த நேரத்துல.. கரகரப்பாய் ஹலோ என்றேன்.. அண்ணா..பாரதி பேசறேன்.. குரல் உடைந்து இருந்தது.பாரதி சேஷுவின் மனைவி.

என்னம்மா? சேஷு இன்னும் வரலையா?

அண்ணா..அவர் போயிட்டார்.

குப்பென வியர்த்தது..வாட்..என்னம்மா சொல்றே?

ராத்திரியெல்லாம் தூக்கம் வராம அவஸ்தை பட்டு கிட்டிருந்தாரு..டீ வேணும்னு கேட்டாரு.. போட்டு எடுத்துகிட்டு வர்ரதுக்குள்ள..... அழ ஆரம்பித்தாள்.

சேஷு ஒரு விளம்பர காப்பி ரைட்டர். பெரிய ஏஜன்சிகளின் ஆபத்பாந்தவன். கான்செப்ட்டும்,ஒரு மணி நேரமும் கொடுத்தால் போதும்.. பின்னி விடுவான்.. அந்த பெயிண்ட் விளம்பரமும்,மசாலா விளம்பரமும் ஹிட் ஆனதுக்கு முழு காரணம் சேஷூதான். குடி,சிகரெட் எல்லாம் ஓவர்டோஸ்தான். குழந்தை இல்லை. ”பாரதிதான் எனக்கு குழந்தை.என்ன... அவதான் குழந்தை இல்லைன்னு பித்து பிடிச்சு பேசுவா.

பாரதி..நா கிளம்பிட்டேன். நீ தைரியமா இரு..

அண்ணா..அவர் வீட்டுல சொல்லிடுங்க.

இருவரும் காதல் திருமணம். பாரதிக்கு அப்பா,அம்மா யாருண்ணே தெரியாது. ஒரு ஆசிரமத்தில் வளர்ந்தவள்.. சேஷூவின் வீட்டில் எதிர்ப்பு.மீறி பதிவு திருமணம். நான் தான் கையெழுத்து போட்டேன்.” இனி அந்த பெண் என்ன செய்யப் போகிறாள்..

ரெண்டாவது ஒலிப்பில் போனை எடுத்து விட்டான் ராஜூ.. சேஷூவின் தம்பி. ஸ்ரீ வில்லிபுத்தூரில் ஒரு பாங்கில் வேலை..

என்னன்னா? இந்த நேரத்தில்..

விவரம் சொன்னேன்...

நா வர்ர வரைக்கும்???

பாவி நீதான் கொள்ளி போடணும்.. சீக்கிரம் வா.. ஃப்ரிசர் பாக்ஸ் அரேஞ்ச் பண்ணிடறேன்..

லிண்டாஸ் வைத்தி, ஓ அண்ட் எம் காத்ரீன் சொன்னவுடன் வெடித்து அழ ஆரம்பித்தாள். நைட்டு மப்பு இன்னும் இருக்கும் போல. போன வாரம் அவள் வீட்டில் ஒரு பார்ட்டி.. குறையொன்றும் இல்லை என்று சேஷூ பாட, அவள் ஒன்ஸ் மோர் கேட்டது ஞாபகம் வந்தது. நெருங்கிய அனைவருக்கும் தகவல் சொல்லி நான் சேஷூவின் வீட்டை அடைந்தபோது யாரும் வந்திருக்கவில்லை. வாசலில் பாரதி விலகி வழிவிட ஹாலில் அது ஒருக்களித்து இருந்தது. திடுக்கிட்டு பாரதியை கேள்விக்குறியுடன் பார்த்தேன்..

இப்பதான் அண்ணா..திரும்பி படுத்துகிட்டார் என்றாள்

தலை சுற்றுவது போல் இருந்தது..பாரதி வெறித்த பார்வையுடன் இருக்க உலுக்கினேன்

இல்லண்ணா..ஒரே பக்கமா படுத்து உடம்பு வலிக்குமேன்னு நாந்தான் திருப்பிபடுக்க வச்சேன்..எழுப்பட்டுமா?

சேஷூவை தொட்டு பார்த்தேன்.உடல் சில்லிட்டு சர்வ நிச்சயமாக செத்து போயிருந்தான்.

அண்ணா ..அவருக்கு போட்ட டீ ஆறி போய் அப்படியே இருக்கு.சூடு பண்ணி கொண்டு வரட்டுமா?


கடவுளே.என்ன கொடுமை இது..என்ன ஆச்சு ?இவளுக்கு? மனசிதைவு? நொடியில் மனம் பிறழுமா என்ன?

பாரதி..நீதானே சொன்ன..சேஷூ போயிட்டான்னு..அதுதான் உண்மை...உனக்கு அழுகை வரலையா?வாய் விட்டு கதறுடி..

தெளிஞ்சவுடனே அவரே எழுந்திருப்பார் விடுங்கண்ணா..

தகவல் தெரிந்த நண்பர்கள் வர ஆரம்பித்திருந்தனர்.. காத்ரீன் பாரதியை ஆறுதலாக அணைத்து விசும்ப ஆரம்பித்திருந்தாள்.. அநேகமாக வரும்போது லேசாக குடித்திருக்க வேண்டும். ஃப்ரிசர் பாக்ஸ்காரன் மொபைலில் அழைத்து விலாசம் சரி பார்த்துக் கொண்டான். எனக்கு குடிக்க வேண்டும் போல் இருந்தது. காத்ரீனிடம் இருக்கா என்று கேட்டேன்.. கார் சாவியை கொடுத்தாள்.

சேஷூ....எனக்கு தாமதமாகத்தான் அறிமுகம்.. நமக்கு மிகவும் பிடித்தமானவர்கள் தாமதமாக அறிமுகமாகி,சீக்கிரம் பிரிந்து விடுவது எவ்வளவு வேதனையை தருகிறது. தண்ணீர் கொஞ்சமாகத்தான் இருந்தது. இருந்தாலும் அந்த எரிச்சல் எனக்கு தேவையாயிருந்தது. சிகரெட் பற்ற வைத்து கொண்டேன்.. சேஷூவுக்கும்,எனக்குமான நட்பு ஒரு எட்டு வருடம் இருக்கலாம் முதல் சந்திப்பே ஒரு மதுக்கடையில்தான்.. யாருடனோ விவாதித்து கொண்டிருந்தவன் என் கவனத்தை இழுத்தான்.. தீப்பெட்டி இருக்குமா?என்ற சாதாரண கேள்வியுடன் அவர்கள் உரையாடலில் நுழைந்தேன்.. அவன் பேச,பேச என்னை அவனிடம் இழந்தேன். ம்ம் சேஷூவிற்கு இப்படி எதுகை,மோனை பிடிக்காது .அது ஆர்டிபிஷியலாக இருக்கும்.. நேரா சொல்லணும் என்பான்.. மொபைல் அடித்தது.ராஜு..

அண்ணா..திருச்சி தாண்டிட்டேன்.இன்னும் அஞ்சு மணிநேரம் ..வந்துர்றேன்..

மரணத்தை பற்றி சேஷூவிற்கு சிலாகித்து பேச பிடிக்கும். அதுவும் சாராயம் குடித்து விட்டால் சாவை கொண்டாடியே விடுவான். இதற்கென்று திருநீர்மலைக்கு போவோம்...வா அய்யரே..வரவேற்று சொம்பில் கொடுப்பார்கள். சேஷூ முதலில் பியுரிட்டி செக் பண்ணனும்னு சொல்லி பத்து ரூபாய் நோட்டை நனைத்து கொளுத்துவான்.. ஸ்பிரிட் வரைக்கும் எரியும் பாரும்பான்.. பின் பேச ஆரம்பித்தால் அருவிதான். ஆங்கிலமும் தமிழும் அருவியாய் கொட்டும். உலகசினிமா,இலக்கியம் எல்லாவற்றிலிருந்தும் மேற்கோள்களுடன்... சிகரெட் கையை சுட இன்னொன்று பற்ற வைத்துக் கொண்டேன்..

செத்தா அழறது எனக்கு பிடிக்கலை.எதுக்கு அழனும்? ஒரு போராட்டத்துக்கு அப்புறம் கிடைக்கிற விடுதலைடா.. அதை அனுபவிக்கனும்டா..படுக்க வச்சு, மெலிதாக பகவத்கீதை, கண்ணதாசன் பாடல்கள், எம்.எஸின் பஜகோவிந்தம் , அப்புறம் குறையொன்றும் இல்லை ஒலிக்கணும்.

சே..நினைச்சாலே எவ்வளவு ஆனந்தமா இருக்கு.. அதுவும் கண்ணதாசன் மரணத்தை வென்றவன்.. அவன் பாட்டு சாவு வீட்டில ஒலிக்கிறது எவ்வளவு பொருத்தம்.. ஆனா அவன் தான் “பாவி..அல்பாயுசல போயிட்டியேடா? போதை தலைக்கேற சேஷூ அழ ஆரம்பித்தான்.

மழுங்க வழிக்கப்பட்டு குளிப்பாட்டி திருமண்,ஸ்ரீசூர்ணம் இட்டு சேஷூ என்ற சேஷாத்திரி அய்யங்கார் ஹாலில்கிடத்தப்பட்டிருந்தார்..மெல்லியதாக எம்.எஸின் குரல் கேட்டுக் கொண்டிருக்க அருகில் சென்றேன்...

காலையில் பார்த்த சவக்களை இல்லை. ஒரு வித பரவசம்..தேஜஸ்.. சொல்லிக்க முடியலைடா..திடீர்னு அழைப்பு வந்துடுச்சு.. என்று அவன் முகத்தில் உறைந்திருந்த மர்மபுன்னகை சொல்வது போல் இருந்தது

என் பிரிய சிநேகிதா..சேஷா...போ..வருகிறேன்.. சந்திப்போம்...குனிந்து அவன் கன்னத்தில் முத்தமிட்டேன்...துக்கமும்,போதையும் தலைக்கேறியிருந்தது..

அவனுக்கு மிகவும் பிடித்த, இந்த பாட்டுக்காக சாகலாம்டா என்று அவன் உருகிய.....

"மலர்ந்தும் மலராத பாதி மலர்போல

வளரும் விழி வண்ணமே - வந்து

விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக

விளைந்த கலை அன்னமே!

நதியில் விளையாடி கொடியில் தலைசீவி

நடந்த இளந்தென்றலே - வளர்

பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு

பொலிந்த தமிழ் மன்றமே!'

சத்தமாக வாய் விட்டு பாடி...

“பாவி கண்ணதாசன் மட்டுமா?நீயும்தாண்டா....அடக்க மாட்டாமல் வெடித்து..........

Thursday, August 12, 2010

ஜோரா கை தட்டுங்கப்பா.....


மூன்றாயிரம் பாராட்டு விழா கண்ட
மு.கவிற்கு மீண்டும் ஒரு கூத்து
சீத்தலை சாத்தானார்தான்
சிறப்பு அழைப்பாளர்
வார்த்தைகள் அனைத்தையும்
வாலியும் , வைரமுத்துவும்
வாயிலெடுத்து விட்டார்களாம்
செப்டிக் ஆனது
சாத்தானாரின் மண்டை

கொடநாடு லாயத்தில்
ஜான்சிராணியின் குதிரை
கொள்ளு வாங்கியதில் ஊழலாம்
குற்றப்பத்திரிக்கை நகல்
தமிழில் கேட்டு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில்
முன்னாள் நிரந்தர முதல்வர்
மனுத்தாக்கல்
பாவம் ஜான்சிராணி
பச்சை சேலையில் வாள்வித்தை
பழகி கொண்டிருக்கிறாள்


அடுத்த வம்சவிளக்கும்
அரிதாரம் பூசி விட்டது
தாத்தாவுக்கு புளகாங்கிதம்
கலை சேவைக்கு இன்னொரு
கழக வாரிசு
இருப்பவனுக்கு ஒரு வீடு
ஒரு வீட்டையும் கொடுத்தவருக்கு
உலகமே வீடாம்
மூன்றெழுத்தில் மூச்சிருக்கும்
அட..”.பணம்” இல்லையப்பா


யார் தச்ச சட்டை
எங்க தாத்தா தச்ச சட்டை
தைலாபுரத்தில்
பேரக்குழந்தைகள்
தமிழ் கற்றுக் கொள்கிறார்கள்
எட்டு தலைமுறைக்கு
விறகுக்கு பஞ்சமில்லையாம்
அடுப்பெரிக்க
மண் பயனுற வேண்டும்
மர(ண)மில்லா பெருவாழ்வு
வேண்டும்


பெரியாரின் பொடி டப்பாவில்
இன்னும் காரம் மிச்சமிருக்கிறது
ஈரோட்டில் போட்டால்
கோபாலபுரத்தில் தும்மல்
கதர் சட்டைக்குக் கூட கொஞ்சம்
இருக்குப்பா..நம்புங்க
கருப்பு சிவப்புக்கு நடுவில்
வெள்ளை வந்துடுமோ ?


காங்கிரஸ் தொப்புளில்
பம்பரம் விடப் பார்க்கிறார்
சின்னக் கவுண்டர்
விருதகிரிக்கு விமோசனம்
வருமா ? ஜாட்டையை சுழட்டுங்கப்பா


டாக்டர் ஃபீஸ் மிச்சமாம்
கட்சி வளர்ச்சிக்கு அதையும்
கொடுத்தார் கலிங்கப்பட்டியார்
நடவாத காரியங்களுக்கு
நடைபயணம் ..நல்லதே நடக்கும்
என்று அக்டோபஸ் சொல்கிறது
துண்டு மட்டும்தான் மிச்சம்
நாஞ்சில் சம்பத்துக்கு


நமத்துப்போன கேப்பை
சுத்தியல் தட்டிக் கொண்டிருக்கிறது
போயஸ் தோட்டத்து அம்மியில்
அரிவாளை சாணை பிடிக்கிறார்
தா.பா.
சைனா சாக்லேட்டுனா
ரொம்ப இஷ்டமாம்
ரெண்டு சாக்கை கொடுங்கய்யா
காம்ரேட்கள் குப்பை பொறுக்கட்டும்
பூத் செலவுக்கு ஆகட்டும்


இன்னுமா தூக்கம் ..?
தமிழா ! இருப்பாய் செருப்பாய் !
இருந்தது போதும் நெருப்பாய் ...
எதுகையும் , மோனையும் பேசியே
தமிழ் வளர்த்த கூட்டம்
அணி வகுக்கிறது
சுண்ணாம்பில் மஞ்சளை குழை
ஆரத்தி ரெடி
ஐநூறு நிச்சயம் கேரண்டி
எந்திரி... எந்திரன் வருகிறான்
கள்ள மார்க்கெட் டிக்கெட்
ஐநூறு ரூபாயாம்
எது உன்னுடையதோ
அது உன்னுடையதல்ல..
எல்லாம் அவர்களுக்கே


இன்னும் இரண்டு கைகள்
இலவசம்
தேர்தல் அறிக்கையில்
தலைவர் உத்தரவாதம்
நல்லா...நல்லா...
ஜோரா தட்டுங்கப்பா

Wednesday, August 11, 2010

பஞ்சாயீ..........










பயணக்கட்டுரை எழுதும் அளவுக்கு ஒன்றும் பெரிய விஷயம் இல்லை . அப்படியே எழுதினாலும் மடிப்பாக்கம் மகாவிஷ்ணு போன்ற ஜாம்பவான்களின் பகடிக்கு ஆளாகும் அபாயம் தொக்கி நிற்பதால் , அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள் . (ளலாம் ) கடல் கடந்து முதல் பயணம் . நாங்கள் புறப்படுவதற்கு முதல் நாள் தான் பாகிஸ்தான் விமானம் விபத்துக்குள்ளாகியிருந்தது . கொஞ்சம் உதறல்தான் . இருந்தாலும் ஆர்வம் அதை விஞ்ச .... ஸ்வெய்ங்.....


கிட்ட தட்ட 16 மில்லியன் மக்கள் தொகை . அதில் பாங்காக்கில் மட்டும் 10 மில்லியன் பேர் வசிக்கிறார்கள் . 80 % வருமானம் சுற்றுலாவின் மூலம் . 70 % புத்த மதத்தை பின்பற்றுபவர்கள் . முஸ்லீம்கள் , இந்துக்கள் என்ற கலவையான தேசம் தாய்லாந்து . நம்மூரில் மு.க படம் தெருவெங்கும் தொங்குவதை போல் அங்கும் அந்நாட்டு ராஜா , ராணி படம் தென்படுகிறது . ராஜாவுக்கு உடல் நிலை சரியில்லை . 83 வயதாகிறது . சிகிச்சையில் இருக்கிறார் . ராணிக்கு 76 . பிரதம மந்திரியின் பெயர் ஏதோ சொன்னார்கள் . மறந்து விட்டேன் . அவரால்தான் நாடு குட்டி சுவராகிறது . மக்களுக்கு அவர் மேல் ஏக அதிருப்தி . தேர்தல் வந்தால் தோற்று விடுவார் என்று எங்கள் கைடு ஒரு மினி சொற்பொழிவாற்றினாள் . நாங்கள் போன போதும் ஏதோ கவுன்சிலர் தேர்தல் போல் நடந்து கொண்டிருந்தது . மூலைக்கு மூலை பேனர்கள் .




முதலில் பட்டயா . (உண்மையில் பட்டையை கழற்றும் ஊர்) . அவர்கள் பத்தையா என்றும் உச்சரிக்கிறார்கள் . அதே சப்பை மூக்குடன் , ஆனால் விதம் விதமான பெண்கள் . ஒரு சின்ன டிராயர் , லிப்ஸ்டிக் . கண்களில் ஒரு அலட்சியம் . சிகரெட் .
அங்கு சலூன்களில் நல்ல பிஸினஸ் . தலை முடியை (???? ) பராமரிப்பதில் மிகுந்த அக்கறை காட்டுகிறார்கள் . ஏராளமான மசாஜ் பார்லர்கள் . நமக்கு தேவை நிறைய வலியும் , பாட்களும் ( தாய் கரண்சி) . நீளமான , அழகான கடற்கரை சாலையில் “காய்”த்து தொங்குகிறார்கள் . அநேகமாக நுரை பஞ்சு கச்சை . ஒரு அடி டிராயர் . அவ்வளவுதான் . விஷயம் ரொம்ப சிம்பிளாக இருக்கிறது . தயக்கம் , தடங்கல் , குறுக்கீடுகள் எதுவும் இல்லை . அந்த இடத்திற்கு வாக்கிங் ஸ்ட்ரீட் என்று பெயர் . பொருத்தமான பெயர்தான் . வரிசையாக மதுபான விடுதிகள் . மசாஜ் பார்லர்கள் . மீன் மசாஜ் , ஆயில் , ஷாம்பூ மசாஜ் . சாண்ட்விச் மசாஜ் , பாரம்பரிய தாய் மசாஜ் இன்ன பிற ...



பஞ்சவர்ண கிளி நீ பறந்த பின்னாலும்......

எந்த நாடு என்று கேட்டேன்
ஈரான் என்றாள் .
இரேன் என்றேன் .
சிரித்தாள்
தமிழ் தெரியாது
அழகாய் இருக்கிறாய் என்றேன் ஆங்கிலத்தில்
உண்மை என்றால்
நன்றி என்றாள்


மதுபான விடுதிகளில் பெண்கள் கிட்ட தட்ட அம்மணம்தான் . ஆட்டம்தான் . விடிய , விடிய களிநடனங்கள் . பயந்து , பயந்து இங்கு சிடியில் பார்க்கும் சங்கதிகள் அங்கு அப்பட்டமாய் மேடையில் . நல்ல வெளிச்சத்தில் . யாரும் அதை பொருட்படுத்துவதேயில்லை . நிறைய இந்திய பெண்களும் கொஞ்சம் பண்பாட்டு , கலாசார முகமூடிகளை கழற்றி வைத்து விட்டு , ஜோதியில் ஐக்கியம் . என்ன முதலில் கொஞ்சம் அதிர்ச்சியை காட்டினாலும் , ரசிக்கிறார்கள் என்றே தோன்றுகிறது .


வைகோவின் தம்பியாம் . பொடாவுல பிடிச்சு போடுங்கப்பா


கலாசார ஷோக்கள் , மிருக காட்சி சாலைகள் , பாரா செய்லிங் என்று நிறைய சமாசாரங்கள் இருந்தாலும் , உலகின் புராதான தொழிலுக்குத்தான் அங்கு மவுசு இருக்கிறது .


அங்கிருக்கும் உணவு பண்டங்களின் பெயர்களே வாயில் நுழையவில்லை. உணவும் அப்படித்தான் . ஆனால் ரசித்து சமைக்கிறார்கள் . ருசித்து சாப்பிடுகிறார்கள் . பாம்பை அவர்கள் அறுத்து சமைக்கும் விதமே அலாதி . நாம் வெள்ளிக்கிழமைகளில் புற்றுக்கு பால் தெளிப்பதோடு சரி .







சைனா டவுன் என்று ஒரு ஏரியா . பெளரத் என்று அழைக்கிறார்கள் . மினி கூவம் போல் ஒன்று ஓடுகிறது . அங்கு பத்துக்கு பத்து கடைகளில் அமர்ந்திருக்கும் சீக்கியர்கள் . சாம்சங் , சோனி எல்.சி.டிக்களை ஷோரூம் விலையை விட குறைவாய் கொடுப்பது ஆச்சர்யமூட்டுகிறது . அங்கு ஒரு பர்மா ஆசாமி ஓட்டல் வைத்திருக்கிறார் . எங்களை பார்த்தவுடன் தமிழில் கோழிக்கறி , மீனுக்கறி சோறு , வெண்டைக்காய் இருக்கிறது . சாப்பிட வாங்க என்று அழைத்தார் . நளபாகம் . ஆனால் ஐந்து நாள் தான் தாங்க முடிகிறது . அதற்கு பிறகு வத்தக்குழம்புக்கு நாக்கு ஏங்க ஆரம்பித்து விடுகிறது


ஆர்யாஸ் என்று ஒரு ஓட்டல் . அங்கு சாப்பிட்டு விட்டு வெளியில் வந்தோம் .(கிட்ட , தட்ட அப்பன் , முப்பாட்டன் சம்பாத்தித்த பாட்களை எழுதி கொடுக்க வேண்டும்) . எதிரில் வந்தாள் அழகிய தாய் பெண்ணொருத்தி . சற்றே மோதுவதை போல் வந்து “நமஸ்தே “ என்றாள் . என் காதில் "how much you pay ? " என்று விழுந்தது . தாய்லாந்து..........


Tuesday, August 3, 2010

கலி முத்தி போச்சு



செம்மொழி மாநாட்டு வாயிலில்
வள்ளுவன் நிறுத்தப்பட்டான்
அடையாள அட்டையோ
அனுமதி சீட்டோ இல்லையாம்

எனக்கேவா என்றவனை
தேற்றினார்கள்
பாரதியும் , தமிழ்த்தாத்தாவும்
பக்கத்து தியேட்டரில்
தமிழ்ப்படம் பார்க்க உ.வே.சா போனார்
பாரதி வீரப்பன் காட்டுக்கு
பஸ் ஏறினான்

பாரதிதாசனை உள்ளே விட்டு விட்டார்கள்
பார்க்க மந்திரி தோரணை
தெரிந்ததாம்

கேவல்சந்த் கோத்தாரி கடையில்
கண்ணகியின் கால் சிலம்பு
அடகு வைத்தவன் கோவலன் இல்லை
என்பதுதான் செய்தி
பாண்டியன் கஜானா காலியாம்

பற்றி எரியட்டும் என்றாள் கண்ணகி
கொட்டி தீர்த்தது
தினகரன் அலுவலகத்துக்கு
சேதாரம் குறைச்சல்தான்

பிரபல சேனலில்
மாதவியின் பேட்டி
நயன் தாராதான் பிடித்த
நடிகையாம்
பொதுப்பணித்துறைக்கும் , டாஸ்மாக்குக்கும்
அட்சயப்பாத்திரம்தான்
அடையாள சின்னம்

தவளையின் வயிற்றில்
பாம்புகுட்டிகள்
கலி முத்தி போனதுக்கு
அது மட்டுமல்ல சாட்சி
இந்த கவுஜையும்தான்

Monday, August 2, 2010

எந்திரன்


எந்திரன் ஃபீவர் ஆரம்பமாகி விட்டது . தமிழ் திரையுலகின் மைல் கல்லாக இந்த படம் இருக்கும் என்று சொல்கிறார்கள் . இசையை பற்றி சொல்வதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை . (இப்போதைக்கு ) . எல்லோருக்கும் எந்திரன் படத்தின் கதை என்ன என்று ஆவல் இருக்கும் . உங்களுக்காக எந்திரன் விமர்சனம் .. முன்பே எழுதியது . மீண்டும்..


எப்போது.. எப்போது ? என்று எதிர்பார்த்த எந்திரன்வெளியாகிவிட்டது..ஆனால் ரோபோ? என்ற பெயரில்..(தமிழ்தலைப்புக்கு வரிச்சலுகை கிடையாது..என்ற புதிய அறிவிப்புதான்காரணம்...(என்ன ஒரு தமிழ் பற்று..) சன் டிவி பிரமாண்டதயாரிப்பு (200 கோடி என்று பேச்சு). இன்னும்
கண்டு பிடிக்காத இடங்கள் தவிர எல்லா இடங்களிலும் படம்பிடித்தது. ரஜினி.. முன்னாள் உலக அழகி...ஷங்கர்..ஆஸ்கார்ரகுமான். அதை விட சன் குழுமத்தின் 24 சானல்கலிளும் 24 மணிநேரமும் விளம்பரம் . பணம் போடுவதற்க்கு ஆள் கிடைத்தால் எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்வேன் என்று மீண்டும்நிருபித்திருக்கிறார் காதல், கல்லுரி, வெய்யில் போன்ற பட்ஜெட் படங்களின் தயாரிப்பாளர் ஷங்கர்


எட்டு ஹெலிகாப்டர்கள் ( ஷங்கரின் ராசி எண் ) வானில் வட்டமடிக்க, பூனாமும்பை சாலையில் 24 பி.எம்.டபிள்யூ கார்கள் பறக்க(எவன் அப்பன்வீட்டு காசு), ஒரு காரில் ரஜினி உலக அழகியுடன் பறக்க பின்னால்இன்னொரு ரஜினி துரத்த.படம் சூடு பிடிக்கிறது.
தனது வழக்கமான பார்முலாவை தள்ளி வைத்து விட்டு புதியபாதையில் பயணித்திருக்கிறார் இயக்குனர். சைன்டிஸ்ட் ரஜினி? அவரை துரத்தி துரத்தி காதலிக்கும் ஐஸ்.....ரஜினி தந்தையாக நாட்டின் தலைவராக சாருஹாஸன்.. அவரை கொன்று விட்டு நாட்டை ஆள நினைக்கும் வில்லன்.. வில்லனின் திட்டத்தைதெரிந்து கொள்ளும் சாருஹாசன் தான் ஒரு பனிப்புயலில் சிக்கிமறைந்து விட்ட்து போல் ஒரு நாடகம்போடுகிறார். சந்தானமும்,கருனாசும் இதற்கு உதவுகிறார்கள்...நாட்டின் தலைமை பொறுப்பு ரஜினியிடம்வருகிறது. ஆனால் ரஜினியோ ஐஸை விட்டு பிரியமனமில்லாமல் (இருவரும் வேறு நாட்டில் படித்துகொண்டிருக்கும்போது காதலிக்கின்றனர்) தன்னை போலவே ஒருபிம்பத்தை உருவாக்குகிறார். அதுதான் ரோபோ..??? ரோபோவை நாட்டின் தலைவராக இருக்கும்படி ப்ரொக்ராம் செய்துவிடுகிறார். பின் என்ன?ஐஸ்வர்யாவுடன் கும்மாளம்தான்?




முதல் டூயட் பாடலான

"ஐஸ்..ஐஸ்.. வர்ரியா..கிஸ்..கிஸ்..தர்ரியா..
மெர்க்குரி உதடுதான்... ஸ்டிராபெரி கனவுதான்
பாஸ்பரஸ் படுக்கையில் பகலும் இரவும் பாம்பிங்க்தான்..
வாலி எழுதிய இந்த தமிழ் பாடல் 185 நாடுகளில் 186 நாட்கள் படம்பிடிக்கபட்டது...1500 டான்சர்கள்,1501குதிரைகள்,1502 மான்கள்,1503மயில்கள்...1000 டன் சாம்பிராணி..2000 டன் தக்காளி மொத்த செலவு 40 கோடி..

சரி
.. கதைக்கு வரலாம்...நாட்டை கைப்பற்ற நினைக்கும் வில்லன்ரோபோ வை ரஜினி என்று நினைத்து கொல்லமுயற்சிக்கிறான்.. இந்த காட்சிகளில் ஹாலிவுட்டை அசால்ட்டாகமுந்தியிருக்கிறார் இயக்குனர்.. திடீர் திருப்பமாக ரோபோவின்சாப்ட்வேர் கரப்ட் ஆகி மனிதனை போல் காதல் உணர்வு வந்துவிடுகிறது.. வில்லன் ஒரு பெண் ரோபோவை (ஐஸ்வர்யாவைபோலவே) உருவாக்கி ரஜினி ரோபோவுடன் நெருங்கவிடுகிறார்கள்.. நாட்டுக்கு ஐஸூடன் ரகசியமாக வரும் ரஜினிஇரண்டு ரோபோக்களும் நெருக்கமாக இருப்பதை பார்த்துவிடுகிறார்....தான் செய்த ப்ரொக்ராம் மாறி விட்டது என்றுஉணருகிறார்...(முதல் பாதி முடிவு)

இடைவேளை வரை ரோபோ விமர்சனம்பார்த்திருப்பீர்கள்.. மன்னிக்கவும் நண்பர்களே.நான் அதுவரைதான்படம் பார்த்தேன்..அதன் பின்......கறுப்பு சட்டை அணிந்தகுண்டர்களின் தடியடி,ஆசிட் முட்டை வீச்சு.....பெட்ரோல் குண்டுகள்வீச்சு..எங்கும் கலவரம்.....ரத்த ஆறு...????காரணம்..அஞ்சாநெஞ்சன் அழகிரி.... மதுரை மா நகராட்சி பொறுப்பு குழு உறுப்பினர் மாண்புமிகு "அட்டாக்" பாண்டி தலைமையில் வந்தகும்பல்...ரோபோ திரையிடப்பட்டிருந்த அத்தனை இடங்களிலும்இந்த கதிதான்...இந்த சம்பவத்தில் மதுரை ஆட்கள் யாரும்ஈடுபவில்லை...கோர்ட் மூடி விட்டதால் வக்கீல்களுக்கு இந்தபணியை கொடுத்து விடுமாறு அண்ணன் பெருந்தன்மையுடன் கூறிவிட்டதாக அவர் மேலும் கூறினார்.

சம்பவ இடத்தில் பேட்டி அளித்த காவல் துறைதலைவர்..."அனைவரும் அமைதியாக அலறிக் கொண்டே"கலைந்து விட்டதாகவும், நிலைமை இப்போது கட்டுக்குள்இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் அட்டாக் பாண்டி" அண்ணன் ஆணையின்படி 1500 மொபைல் ஹோம் தியேட்டர்கள் தமிழ் நாடுமுழுவதும் உலவிக்கொண்டிருக்கும்.. பொது மக்கள் படம்இலவசமாக ரோபோ வை பார்க்கலாம்... மேலும் படம் பார்க்கும்அனைவருக்கும் ஒரு பவுன் தங்க நாணயம் பரிசாகவழங்கப்படும்..என்றும் அவர் மேலும் கூறினார். மீறி படத்தை யாராவது திரையிட்டால் அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம்பாயும் என்றும் கூறினார். காவல் துறை தலைவரும் அதைஆமோதித்தார்.

காற்று கூட எங்கள் இடையில் இனி நுழையாது என்று அழகிரி,மாறன் சகோதரர்களை பற்றி சொன்னது என்னவாயிற்று?? கலவரம்எப்படி நுழைந்தது?? பின் வரும் ரோபோ உருவாக்கம்...பரபரப்புசெய்திகளில்...................

ரோபோ.....திரைக்கு பின்னால்.....

முதலில்
மீண்டும் எப்படி பிரிவு/பிளவு ஏற்பட்டது..


இதற்கு
மூலக் காரணம் ஷங்கர்தான்எங்கின்றனர்..தகவலறிந்தவர்கள்..

சன் பிக்சர்ஸ் லோகோவை சூரியனில் போய் ஷுட் பண்ணலாம் என்று ஷங்கர் பிரியப்பட்டிருக்கிறார்.. இதற்காக திரு. மயில்சாமிஅண்ணாதுரை, திரு.அப்துல் கலாம் ஆகியோரிடமும் ஆலோசனை கேட்கபட்டிருக்கிறது..ஆனால் அருகிலிருந்த தயாநிதிஎன்னது? சூரியனுக்கா..நாங்க இங்கிருந்தே சூரியனை(உதய)சுடுவோம்..தெரியுமில்லே..என்று வாய்த் துடுக்காக சொல்லிவிட்டாராம்..இது அழகிரி காதுக்கு போக ..வந்தது வினை...
"நாங்கள் சிறியவர்கள்தானே, எங்களை மன்னிக்கக் கூடாதா..என்றுசெல்வி மூலம் தூது அனுப்பியதாக ஒரு தகவல்???

ஜில்.. ஜில்.. ஜில்... ஜொள்...ஜொள்... ஜொள்....
ஆர்.டி. எக்ஃஸ்.... உன் விழியில்....
என் மடியில் .... டைனமைட்
அண்டார்டிகாவில் செய்வோம்...லவ் ஃபைட்.
பிப்பெட் நீதான்.... பீயுரெட்.நாந்தான்..
டெஸ்ட் டீயூபில்... ரெஸ்ட் இனி ..அதை
யூ ட்யூபில் கண்டு நீ களி ஹனி.....
கூகுளில் தேடி...... குயிக் டைமில் கூடி...
பிளாக்குகளில் பாடி.....பாரடைஸ் போகலாம்...
என் பிளாக் பெர்ரி நீ வாடி....

கலைமாமணி
,வித்தக கவிஞர் பா.விஜய் ..எழுதிய இந்தப் பாடல்பனிப் பிரதேசமான அண்டார்டிகாவில் நடைபெற்றது...இப்பாடலுக்கு 5000 குளிர்சாதன பெட்டிகள் கொண்டு செட்அமைக்க வேண்டும் என்று ஷங்கர் பிரியப்பட....உடனேகொரியாவிலிருந்து சாம்சங்க் கம்பெனியிலிருந்துவரவழைககபட்டது.


இங்கு
பிரிட்ஜ் விற்ற முதல் கம்பெனி நாங்கள்தான் என்றுஅக்கம்பெனியின் தலைமை

நிர்வாகி சூ சென் பெருமையுடன் கூறினார்..

படபிடிப்பு
முடிந்தவுடன் 5000 குளிர் பெட்டிகளையும் அங்கிருந்தஎஸ்கிமோக்களுக்கு இலவசமாகவே வழங்க வேண்டுமென்றுரஜினி கூறி விட கலாநிதி மாறன் மிகவும் பெருந்தன்மையுடன்சம்மதித்து விட்டார்.


கரு விழி..குரு பார்வை
சுரு..சுரு நாசி..என் பெயரை நீ சுவாசி
செவ செவ அதரம்..நீ என் மதுரம்...
பழ ..மலை...கீழே நூலிடை
அதன் பின் ஆலிலை..

வாலி எழுதிய இந்த பாடலும் சீரோ டிகிரி குளிரில் படமாக்கபட்டபோது ரஜினி எவர் சில்வரில் செய்யபட்ட முழுஆடை அணிந்திருந்தார்( மனிஷ் மல் ஹோத்ரா)..ஐஸ்புதுமையாக(3) இலைகளினால் வடிவமைக்கபட்ட இலக்கிய நயம்சொட்டும் உடை அணிந்திருந்தாராம்.


ஒரு முக்கிய செய்தி...
இயக்குனர் ஷங்கரின் அடுத்த சொந்த படத்தை அவர் உதவியாளர்இயக்குகிறார்.
படபிடிப்பு முழுவதும் "எஸ்" பிக்சர்ஸ் அலுவலகத்திலேயே நடைபெறும்...என்று ஒரு பத்திரிக்கை செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.