Showing posts with label அழைப்பு. Show all posts
Showing posts with label அழைப்பு. Show all posts

Friday, April 9, 2010

பதிவர்களுக்கு சம்திங் ராங்க்...............??


ஆத்திரத்தை அடக்க முடிந்தாலும்
மூத்திரத்தை அடக்க முடியவில்லை...
டயாபட்டிக்..

மூத்திரத்தை அடக்க முயன்றாலும்
ஆத்திரத்தை அடக்க இயலவில்லை...
ஹைபர்டென்ஷன்..

கிழிந்த நைட்டியில்
வழியும் இளமை
கிளர்ச்சியில்லை..
இம்பொடன்ஸ்...

இருட்டினதும் விளக்கை அணைக்கிறேன்...
டிமென் திஷியா..

வாங்கின கடன்
நினைவில் இல்லை..
செலக்டிவ் அம்னீஷீயா...

பல்லவன் படிக்கட்டில்..
ஏற கஷ்டம்
ஆர்த்தரைடிக்ஸ்..

விரல் மரத்து அவஸ்தை..
ஸ்பாண்டிலைட்டிஸ்

சட்டென்று பெயர் மறந்து போகிறது..
அல்சைமர்..

இதெல்லாம் சரிதான்...
இப்போதெல்லாம்
இடுகையிடாமல் இருக்க முடியவில்லை..
சம்திங் ராங்க்...


மேற்கண்ட அறிகுறிகள் உங்களுக்கு இருக்கிறதா? நீங்கள் நிச்சயம் வாருங்கள். ஸ்பெஷலிஸ்ட்களின் ஆலோசனைகள்/ தீர்வுகள் . துறை வல்லுநர்களின் விளக்கங்கள் . கட்டணம் ஏதுமில்லை. காந்திசிலை பின்புறம்/மெரினா கடற்கரை/ மாலை 5.30 மணி அளவில் . சனிக்கிழமை 10/04/10 .

இது ஒரு பொதுவான அழைப்பிதழ்

நிபந்தனைகள் பொருந்தாது.

கிணற்றை காணும் என்போர் புகார் கொடுக்கலாம். ரசீது கொடுக்கப்படும்.

பொக்கை வாய் கிழவனின் காலடியில் மொக்கை போட வாரீர்....வாரீர்...