அப்படித்தான்.......கவிதை
அலைபேசியில்
அழைத்தாள்
பிரிந்து போன
மனைவி..
சந்திக்கலாமா?
ஒரு கோப்பை தேநீருடன்...
ம்...என்றேன்
ஒரு மழைநாள் மாலை
என்ன பேசுவது...
என்று தெரியவில்லை
அதோ அந்த ஒற்றை
மரத்தை பார்
என்றேன்
என்ன அதற்கு
என்றாள்..
அதை பார்த்தால்
ஒரு நிராதரவான
ஜீவன் போல்
தோன்றுகிறது
பாவம் தனித்து
பரிதாபம் இல்லை
என்றேன்
இல்லை
எனக்கு அப்படி
தோன்றவில்லையே
தனித்தும் என்னால்
கம்பீரமாக இருக்கமுடியும்
என்பதை அல்லவா
உணர்த்துகிறது
14 comments:
///அலைபேசியில்
அழைத்தாள்
பிரிந்து போன
மனைவி..///
///தனித்தும் என்னால்
கம்பீரமாக இருக்கமுடியும்
என்பதை அல்லவா
உணர்த்துகிறது///
இதுக்கு அலைபேசியில் அழைக்காமலே இருந்துருக்கலாம்........!!!
இல்லை
எனக்கு அப்படி
தோன்றவில்லையே
தனித்தும் என்னால்
கம்பீரமாக இருக்கமுடியும்
என்பதை அல்லவா
உணர்த்துகிறது//
இதுக்கு பேர் சொஎத செலவில் சூனியம்... தேவையா?
தனித்துக் காட்டும் கம்பீரத்தை ஏன் சேர்ந்து காட்டக்கூடாது என்பதுதன் என் கேள்வி.
பார்க்கும் பொருள் ஒன்றுதான்...அதை நாம் பார்க்கும் விதம் வேறு....என்பதை சுட்டிக் காட்டுகிறது...
வாழ்த்துக்கள்
அன்புடன்
ஆரூரன்
ஆழமாக யோசித்தால் உண்மைதான்.தனித்து என்பது கம்பீரமாய் வீரமாய்.
தனி மரம் தோப்பு ஆகாது...
ஒற்றை மலர், மாலை ஆகாது...
குறிப்பா
ஒற்றை "பெக்கு" போதை தராது... அஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ
என்ன ஆச்சு தண்டாரோ,
வழக்கமான ஒன்னு குறையுதே,
உன்னை விட்டு பிரிந்ததால் நான் குறைந்துவிடவில்லை என்ற அவள் ஈகோ அவனை அழைத்தது.நீ தனிமரமாய் என்ன கிழிக்கமுடியும் என்று அவன் எகத்தாளம்தான் அவனின் தனிமர உதாரணம்.ஆக மொத்தத்தில் இருவரின் ஈகோ விளையாட்டு இது
///தண்டோரா ......
உன்னை விட்டு பிரிந்ததால் நான் குறைந்துவிடவில்லை என்ற அவள் ஈகோ அவனை அழைத்தது.நீ தனிமரமாய் என்ன கிழிக்கமுடியும் என்று அவன் எகத்தாளம்தான் அவனின் தனிமர உதாரணம்.ஆக மொத்தத்தில் இருவரின் ஈகோ விளையாட்டு இது///
///அதை பார்த்தால்
ஒரு நிராதரவான
ஜீவன் போல்
தோன்றுகிறது//
தன்னை அவன் தனிமரமாக பாவித்து அவளிடம் பரிதாபம் தேட முயற்சிப்பதாகவும்
ஒரு தோற்றம் ஏற்படுகிறது .!
//ஆரூரன்:பார்க்கும் பொருள் ஒன்றுதான்...அதை நாம் பார்க்கும் விதம் வேறு....என்பதை சுட்டிக் காட்டுகிறது...
ஹேமா:ஆழமாக யோசித்தால் உண்மைதான்.தனித்து என்பது கம்பீரமாய் வீரமாய்.//
என்ன அழகான பின்னூட்டம். ரிப்பீட்டே!!!!!!!!!1
பப்பு வேகாது போல!
//தனித்துக் காட்டும் கம்பீரத்தை ஏன் சேர்ந்து காட்டக்கூடாது என்பதுதன் என் கேள்வி.//
சேரும் போதே கம்பீரத்தை ஆண் பிடுங்கி கொள்கிறானே!
///தண்டோரா ......
உன்னை விட்டு பிரிந்ததால் நான் குறைந்துவிடவில்லை என்ற அவள் ஈகோ அவனை அழைத்தது.நீ தனிமரமாய் என்ன கிழிக்கமுடியும் என்று அவன் எகத்தாளம்தான் அவனின் தனிமர உதாரணம்.ஆக மொத்தத்தில் இருவரின் ஈகோ விளையாட்டு இது///
///அதை பார்த்தால்
ஒரு நிராதரவான
ஜீவன் போல்
தோன்றுகிறது//
தன்னை அவன் தனிமரமாக பாவித்து அவளிடம் பரிதாபம் தேட முயற்சிப்பதாகவும்
ஒரு தோற்றம் ஏற்படுகிறது .//
Repeatu.. எனக்கும் ஜீவன் சொன்ன மாதிரி தான் தோணிச்சு!!
//என்ன ஆச்சு தண்டாரோ,
வழக்கமான ஒன்னு குறையுதே,//
இதுக்கும் repeatu...
கருத்துக்களை பகிர்ந்துகொண்ட என் அன்பு நண்பர்களுக்கு நன்றிகள்
//இல்லை
எனக்கு அப்படி
தோன்றவில்லையே
தனித்தும் என்னால்
கம்பீரமாக இருக்கமுடியும்
என்பதை அல்லவா
உணர்த்துகிறது//
அவன் பார்வை வலியுடன்...அவள் பார்வை வலிமையுடன்.
ஆழம் பொதிந்த கவிதை....
Post a Comment