Thursday, September 17, 2009

சம்மதங்கள்........




அழைப்பிதழ் தொடங்கி
ஆபரணம் வரை
எல்லாம் அமர்க்களம்தான்

அசல் சரிகையில்
அஞ்சாறு பட்டு
சீலைகள்

அரங்கம் பற்றி
சொல்லவே வேண்டாம்
சொர்க்கலோகம்தான்

இப்படியொரு விருந்தை
வாழ்நாளில் உண்டதில்லை
கேட்ட தந்தைக்கு
உச்சி குளிர்ந்தது

திருழ்டி கழிக்கும்போது கூட
நான் சொல்லவில்லை
எனக்கு மாப்பிள்ளையை
பிடிக்கவில்லை என்பதை

25 comments:

நையாண்டி நைனா said...

Me Firste...

நையாண்டி நைனா said...

Me Seconde...

நையாண்டி நைனா said...

Me Thirde....

Unknown said...

நல்லா இருக்கு.

பிரபாகர் said...

ஒரே வார்த்தையில் விமர்சிக்க வேண்டுமென்றால்....,

அமர்க்களம்.

பிரபாகர்.

தமிழ் அமுதன் said...

வழக்கம் போல் கலக்கல் ..!

ஜெட்லி... said...

கடைசி வரி ...
நெஞ்சை தொட்டுடிங்க ஜி....

லோகு said...

அருமையான கவிதை அண்ணா.. ரொம்ப நல்லா இருக்கு..

ஹேமா said...

சின்ன வரிகளில் பெரிய வலி.

கிருஷ்ண மூர்த்தி S said...

சம்மதம் கேட்காத தந்தைக்குத் தண்டனை கொடுக்க
அந்த மாப்பிள்ளையுடன் வாழ்நாள் முழுக்க வாழ்ந்தேன்! வாட்டினேன்!
நேற்றைய கோலம் இது அதனால்தான்
என்மகளுக்கும் அதே கோலம்!
கலியாணம் பேசும்போது சம்மதம்
கேட்கவில்லை நானும்!

நையாண்டி நைனா said...

அண்ணன் சூரியன் அவர்கள் எங்கிருந்தாலும், ஒரு குவாட்டரை அடித்து விட்டு பேனா பேப்பரோடு வரவும் வேலை(ளை) வந்திருக்கு...

நையாண்டி நைனா said...

அண்ணன் சூரியன் அவர்கள் எங்கிருந்தாலும், ஒரு குவாட்டரை அடித்து விட்டு பேனா பேப்பரோடு வரவும் வேலை(ளை) வந்திருக்கு...

தினேஷ் said...
This comment has been removed by the author.
தினேஷ் said...

தலை நையாண்டி நைனாவின் அழைப்பை ஏற்று போட்டாச்சு ..

இங்க வாங்க

இரும்புத்திரை said...

எதிர்கவுஜ எழுத வாய்ப்பு வழங்கும் கவுஜ கிங் தண்டோரா வாழ்க

Romeoboy said...

சூப்பர் அப்பு ..

இந்த சைடு கொஞ்சம் எட்டி பாருங்க ..

http://ennaduidu.blogspot.com/2009/09/blog-post_1559.html

அகநாழிகை said...

தண்டாரோ,
நான் ஏற்கனவே கூறியது போல (எப்படா சொன்னே பு.ம.) சமுகத்தின் மேல் உங்கள் கோபமான பார்வை (சரி..சரி..)

நல்லாயிருக்கு, தண்டாரோ.

(இந்த கேபிளை என்ன செய்யலாம் ? தொல்லை தாங்க முடியலையே)

மணிஜி said...

பெரியோர்களே...நண்பர்களே..உங்கள் பேராதரவிற்கு நன்றி

tc said...

முடியல சார்... !

Cable சங்கர் said...

/தண்டாரோ,
நான் ஏற்கனவே கூறியது போல (எப்படா சொன்னே பு.ம.) சமுகத்தின் மேல் உங்கள் கோபமான பார்வை (சரி..சரி..)

நல்லாயிருக்கு, தண்டாரோ.

(இந்த கேபிளை என்ன செய்யலாம் ? தொல்லை தாங்க முடியலையே)//

ஒரு கவிதை எழுதினதுக்கே உங்களால முடியலையா..?

இருங்க அடுத்த கவிதை எழுதறேன்.

அப்புறம் தண்டோரா.. கவிதை நல்லாருக்கு..:)

"உழவன்" "Uzhavan" said...

ஐயோ.. இன்னும் பெண் இந்த இடத்தில்தான் இருக்கிறாள் என்பது எவ்வளவு பெரிய கொடுமை.
அருமையான கவிதை

அன்பு நைனா.. மீ த பர்ஸ்ட்டு, செகண்டு னு கமெண்ட் போடுறவங்கள தேடிப்போயி உதைங்கனு சிறுகதைப் பட்டறையில் பா.ரா பேசும்போது சொல்லிருக்காரு. பார்த்து இருங்க தண்டோரா அண்ணன் உங்களைத் தேடி வந்தாலும் வரலாம் :-))

வால்பையன் said...

//திருழ்டி கழிக்கும்போது கூட
நான் சொல்லவில்லை
எனக்கு மாப்பிள்ளையை
பிடிக்கவில்லை என்பதை//


வீட்ல அக்கா எழுதி வச்சிருந்த கவிதையா!?

அன்புடன் நான் said...

கவிதை கருத்தோடு கம்பீரமா இருக்குங்க பாராட்டுக்கள்.

velji said...

//திருழ்டி கழிக்கும்போது கூட
நான் சொல்லவில்லை..//
இதுக்கு திருக்ஷ்டி வேறன்னு நெனைச்சிருப்பாங்களோ...!
-காலகாலமாய் நடக்கும் வேதனையைச் சொன்ன கவிதை!

உண்மைத்தமிழன் said...

சமூகப் போராளி..!