Tuesday, September 8, 2009

கவிதை பலாப்பட்டறை----பதிவர்கள் கும்மி


கவிதை எழுத கற்றுதரும் பட்டறை ஒன்று நடக்கிறது.அதில் நமது பதிவர்கள் கலந்து கொண்டு விவாதிக்கிறார்கள்.பெயர் இல்லை.மொழி,நடையை வைத்து இன்னார் என்று அடையாளம் காணலாம்.முழுக்க நகைச்சுவைக்காகவே...


முதல்ல ஒரு விஷயம்...இதுக்கு யாரும் ஆசிரியர் கிடையாது.நீங்களே,ஏன் நாமேதான் ஆசிரியர்கள்.இன்னும் சொன்னா நாமதான் மாணவர்களும் கூட.தயங்காம,வெளிப்படையா,ஓப்பனா உரையாடலாம்.ஆனா அதிகாரம் பண்ணக்கூடாது.யாரும்,யாரையும்..

இதை நீங்க அதிகாரமா சொல்றிங்களா?இல்ல தோழமையுடனா?

அது..அப்படிங்கும்போதே இது அப்படின்னு ஞாபகம் வருது.அது கூடாது.இது தான் முதல் பாடம்.இந்த இடத்துல கூர்ந்து கவனிச்சீங்கன்னா, இடத்துல அர்த்தமற்ற வார்த்தை பிரயோகமா இருக்கு..

யூத்து..
யூ டூ
மி ஒன்லி...
இது எப்படியிருக்கு?அப்புறம் ஒரு நிதர்சனகவிதை.ஒரு பிராஸ்ட்டியூட் பத்தி பின்நவீனத்துவ கவிதை ..

தலைவரே..அப்ப அது முன் நவீனத்துவ கதையால்ல இருக்கணும்..சரி எஃப் டிவி சரியா தெரியல..பாத்துட்டு போங்க

ஒரு மயிறும் இல்லை..அந்த கதையை கதராடை சிறுகதை போட்டிக்கு அனுப்புங்க...இப்ப மேஜிக்கல் ரியலிசம்

அப்படின்னா ஜேம்ஸ் மேஜிக் ஷோவா குருவே?

மண்ணாங்கட்டி.உனக்கு உடம்பு பூரா கொழுப்புத்தான் குடிகாரா..

மூணாவது தெரு
முண்டகண்ணி
முனியனோட போனா
ஓடி
முந்தா நா ராத்திரி
திரும்பி வந்தா
தாலியோட
ஆனா
கழுத்து இல்லை

ஏ அப்பா..நா ஒண்ணு எழுதியிருக்கேன் கேளுங்கப்பா..

அரசு கோப்புகள் பார்க்க ஆசை
அரசின் கோப்பைகளை
உரசியதால் இன்று
ஆல்ப்ஸ் மலை உச்சியில்
ஆல்கஹாலின் அபத்தம்

எப்பூடீடீயீஈஈஈ

கவிஞர் காத்தமுத்துவிடம் 32 கேள்விகள் எழுதியிருக்கேன்..படிங்க..நானே பர்சனலா வந்து கிச்சு,கிச்சு மூட்டறேன் சிரிங்க

1921 ல வந்த ஒரு திரைப்படம்..கவிதை பத்தி.இதை பத்தின ஒரு கல்வெட்டு தேனி நாகராஜன் சந்துல இருக்கு

நான் எழுதியதையும் கேளுங்க மக்கா

படகில் விரிசல்
துறையில் நெரிசல்
மனதில் மெரிசல்
இப்படிக்கு.......

திருப்பூருக்கு கள்ளத்தோணி இருக்காப்பு?


பழனி பஞ்சாமிர்தம்
குற்றால குறவஞ்சி
கோவை கொண்டாட்டம்
எப்படி இருக்கு நண்பா..அப்புறம் ஜப்பான்லேர்ந்து ஒரு மிஷின் வாங்கியிருக்கேன்.ஆனா அதுல ஒன்லி ஹைக்கூ மட்டும் தான் அச்சடிக்க முடியும்..

முருகா சரணம்..முடிந்தால் வரவும்

நீங்க எங்க இங்க?வரமாட்டீங்களே அண்ணே?

எவனோ ஒரு திரிசமம் புடிச்சவன் நா டைப் அடிக்க கூடாதுன்னு ஸ்டே வாங்கியிருக்கான்.லாயரை பாரக்கலாம்னு சேம்பருக்கு போனா அவரை காணும்?

நீங்க பிலிம் சேம்பருக்கு போயிருப்பிங்க..சரி கவிதை சொல்லுங்க

போலி பாண்டு அவனுக்கு
ரெண்டு வாண்டு..ஹால்ல
வச்சிருக்கு பேண்டு நீ
மிதிக்காம தாண்டு
முருகா..

அந்த வேலை எடுத்து இவருக்கு அலகு குத்தி விடுங்கப்பா..வாயை திறக்காம இருக்கட்டும்..


நா கடலூர்ல ஐஞ்சாவது படிக்கிறப்ப எழுதினது..கேக்கறிங்களா?

சார் சார் ஒண்ணுக்கு
தட்டான் மேல ரெண்டுக்கு
நான் போறேன் ஊட்டுக்கு
நாளைக்கு வாரேன் ஸ்கூலுக்கு

அலெக்சா ரேங்கிங் பத்தி தெரியுமா உங்களுக்கு?

சாரி பாஸ்..பிளைட் லேட்.டெல்லி போயிருந்தேன்.அப்புறம் நம்ம பதிவுல ஒரு அலுமினிய தட்டு படம் சைடுல இருக்கும்.அதை சுட்டு பாருங்க ..அது ஒரு நலிந்த கவிஞர் அமைப்புக்கு போகும்.உங்க கிட்ட மீந்து போன பழைய கவிதைகள் இருந்தா கொடுக்கலாம்.அவிங்களுக்கு உதவியா இருக்கும்.எதாவது செய்யணும் பாஸ்..

டிஸ்கி: ஒருத்தர் விட்டு போயிட்டாரு..அதான்..

தலை நானும் கவிதை எழுதுவேன் தல

சுருட்டிகிட்டு எழுதணும் சரியா?

சரக்கு
கையிருப்பு
அரைமூடி
மோந்துக்கோ
இல்ல
கவுந்துக்கோ

ஒட்ட நறுக்கணும்...

27 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

ஒண்ணு ரெண்டு பேரைத் தவிர மத்தவங்க எல்லாரும் அடையாளம் புரியுது.. சும்மா பேரைச் சொல்லியே எழுதி இருக்கலாம் தலைவரே..

Vidhoosh said...

:)

வேறென்ன சொல்ல..
-வித்யா

Raju said...

செம..செம..
பேர் சொல்லாமயே எல்லாரையும் தெரிஞ்சுக்க முடியுது..!

நான் சொல்றேன்..

துத்துக்குடி ஊத்துக்குளி
துர்கா ஊர்மிளா
துரோகம் ஊர்வம்பு

எப்புடீஇஈஈ..!

ஈரோடு கதிர் said...

ரொம்ப கும்மியிருக்கீங்க

நையாண்டி நைனா said...

அண்ணாத்தே... கலக்கலோ கலக்கல்... எல்லாரையும் கண்டு பிடிச்சிட்டேன்....

உங்களுக்கு ஒரு மானிட்டர் கவிதை போட்டாலும் போட்டேன்... என்னோட பதிவு மானிட்டர் அடிச்சிட்டு மட்டையாகிடுச்சு.... ஹி... ஹி... ஹி....

GHOST said...

///எவனோ ஒரு திரிசமம் புடிச்சவன் நா டைப் அடிக்க கூடாதுன்னு ஸ்டே வாங்கியிருக்கான்.லாயரை பாரக்கலாம்னு சேம்பருக்கு போனா அவரை காணும்?


நீங்க பிலிம் சேம்பருக்கு போயிருப்பிங்க..சரி கவிதை சொல்லுங்க


போலி பாண்டு அவனுக்கு
ரெண்டு வாண்டு..ஹால்ல
வச்சிருக்கு பேண்டு நீ
மிதிக்காம தாண்டு
முருகா..


அந்த வேலை எடுத்து இவருக்கு அலகு குத்தி விடுங்கப்பா..வாயை திறக்காம இருக்கட்டும்..////

சிரிச்சு சிரிச்சு வயிறு வலி வந்துடுச்சு

சாமிங்களா ஒரு பட்டறை ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சாங்க நீங்க பண்ற அலப்பறை தாங்க முடியல,

Ashok D said...

கட்ச்சிவரைக்கும் ‘பலா’ பத்தியும் ‘பட்டறை’ பத்தியும் ஒன்னும் சொல்லலையே? :)

அகநாழிகை said...

ஹா..ஹா..ஹா..
தாங்க முடியல.
எவ்ளோ அடிச்சாலும் தாங்கறீங்களே எப்படி தண்டாரோ.

வால்பையன் said...

//பிராஸ்ட்டியூட் பத்தி பின்நவீனத்துவ கவிதை ..

தலைவரே..அப்ப அது முன் நவீனத்துவ கதையால்ல இருக்கணும்.//


டாக்கி ஸ்டைல் பிடிச்சவங்களுக்கு பின் நவீனத்துவ கவிதை!

வால்பையன் said...

//படகில் விரிசல்
துறையில் நெரிசல்
மனதில் மெரிசல்
இப்படிக்கு.......

திருப்பூருக்கு கள்ளத்தோணி இருக்காப்பு?//

நல்ல பரிசல் ஒண்ணு இருக்கு வர்றிங்களா?

வால்பையன் said...

இதுல நானும் இருக்கேனாமே!
அப்படியா!?

குடந்தை அன்புமணி said...

இந்த சிறுகதைப் பட்டறை முடிந்ததும் ஒரு தோதான நேரத்தில் கவிதையாளர்கள் மட்டும் கலந்துகொள்ளும் ஒரு பதிவர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தேன். இப்ப அது கேன்சல்.

வாழ்க் வளமுடன்.

குடந்தை அன்புமணி said...

மேல் தோன்றும் பின்னூட்ட முறையை மாற்றுங்கப்பா... ப்ளீஸ்...

உண்மைத்தமிழன் said...

செம நக்கலுதான் போங்க..!

என் கவிதை மட்டும் எனக்குத் தெளிவா புரிஞ்சது..!

முருகனுக்கு நன்றி..!

Jerry Eshananda said...

மேட்டேரு கொஞ்சம் ராவா இருந்தாலும்,சரக்கு நல்லா இருக்கு.

ரமேஷ் வைத்யா said...
This comment has been removed by the author.
ரமேஷ் வைத்யா said...

பதிவைப் பத்திச் சொல்றதா, பின்னூட்டங்களைப் பத்திச் சொல்றதா... ஒண்ணுமே புரியலே. தண்டோரா, திட்டமிட்டு இப்படி எழுதவே முடியாது. கை குடுங்க... தம்பி, முடியலை... ஒரு எம்சி குடுப்பா...

தராசு said...

கலக்கல் தல

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

butterfly Surya said...

hahahahaha...

Super.. செம.. செம.. கலக்கல்..

எதாவது செய்யணும் பாஸ்ன்னு ரொம்ப நாளா சொல்லிடிருந்தீங்களே...???

அது இது தானா...

இரும்புத்திரை said...

//சார் சார் ஒண்ணுக்கு
தட்டான் மேல ரெண்டுக்கு
நான் போறேன் ஊட்டுக்கு
நாளைக்கு வாரேன் ஸ்கூலுக்கு//

ரொம்ப நல்லா இருக்கு

Cable சங்கர் said...

haiyaa.. enna pathi ethuvum ezhuthala.. :)

யாத்ரா said...

:)

பிரபாகர் said...
This comment has been removed by the author.
பிரபாகர் said...

நண்பா,

கலக்கலாய் நன்றாக வாரியிருக்கிறீர்கள். சற்றேறக்குறைய யாரென தெரிகிறது, ஒன்றிரண்டை தவிர. ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவமான நடை இருக்கவேண்டும் இது போன்ற விமர்சனங்களில் வருவதற்கு என்பது தெள்ளென தெரிகிறது.

பிரபாகர்.

R.Gopi said...

யப்பா தண்டோரா...

ஒன்னோட அலப்பறை தாங்க முடியலேப்ப்ப்பா...

இருந்தாலும் நல்லா கீதுபா.....

மணிஜி said...

நண்பர்களின் வருகைக்கும்,கருத்து பகிர்வுக்கும் நன்றிகள்

அன்புடன்
தண்டோரா