என் வழியெங்கும்
அது காத்துக் கொண்டிருக்கிறது
ஒரு வேட்கையோடு..
இங்கு நான் என்பது
நீயும்தான்
அறியாமல்
அதன் பலியாகிறோம்
தெரிந்தே அடுத்தவனை பலியாக்குகிறோம்..
ஒத்த பெயருடைய இருவரில்
ஒருவனை சாய்த்து இட்ட கூக்குரல்
குருவையே வீழ்த்தியது
’குருஷேத்திரம்’ முதல்
அதன் பலியாகிறோம்
தெரிந்தே அடுத்தவனை பலியாக்குகிறோம்..
ஒத்த பெயருடைய இருவரில்
ஒருவனை சாய்த்து இட்ட கூக்குரல்
குருவையே வீழ்த்தியது
’குருஷேத்திரம்’ முதல்
தொடர்கதையாய் வரும்
எல்லா துரோகங்களின் முடிவிலும்
கேட்கப்படும்
”நீயா’ என்ற கேள்விக்கு
நாமாகவும் இருந்தோம்
என்பது வேதனையின்
வெளிப்பாடாகவே.
எல்லா துரோகங்களின் முடிவிலும்
கேட்கப்படும்
”நீயா’ என்ற கேள்விக்கு
நாமாகவும் இருந்தோம்
என்பது வேதனையின்
வெளிப்பாடாகவே.
27 comments:
//”நீயா’ என்ற கேள்விக்கு
நாமாகவும் இருந்தோம்
என்பது வேதனையின்
வெளிப்பாடாகவே//
ஜி. உச்சிமண்டைல நச்சுன்னு அடி:(. இது சத்தியமான வார்த்தை.
நாலே வரியில இப்படி நச்சின்னு அடிக்கிறியே அது எப்படி நைனா..
//”நீயா’ என்ற கேள்விக்கு
நாமாகவும் இருந்தோம்
என்பது வேதனையின்
வெளிப்பாடாகவே.//
நச்சுன்னு இருக்கு தல....
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...
நிறைவு
தல...
கிர்ர்ர்ங்குது..::))
கலக்கிட்டீங்க...::)
நச்....
நச்சுன்னுதான் இருக்கு.. கூடவே தலையும் கிர்ருன்னு சுத்துதுண்ணே..!
நான் நீ என்றால் உதடுகள் ஒட்டாது, நாம் என்று சொன்னால்தான் உதடுகள் கூட ஓட்டும்.
:)
Typical Good One.
நல்லா இருக்கு அண்ணே... பொங்கல் வாழ்த்துக்கள்...
அண்ணே சூப்பரு
முதலில் நாய் (சண்டை), அப்புறம் நான், இப்போ நாம், அடுத்து ??
நல்லா இருக்கு அண்ணே
:)
நான், நீ, நாம்..
இன்னம் 'நீ' வரலை!!
மிக அருமை மணிஜி!
எத்தனை அழகான கவிதை. மிகவும் நேர்த்தியாக சொல்லப்பட்டிருக்கிறது.
//.. ”நீயா’ என்ற கேள்விக்கு
நாமாகவும் இருந்தோம் ..//
நச்..
இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்..
எப்படிங்க இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க.அருமை.
பொங்கல் வாழ்த்துகள்.
"அறியாமல்
அதன் பலியாகிறோம்
தெரிந்தே அடுத்தவனை பலியாக்குகிறோம்.."
உண்மைதான்...
எனக்கு ஏன் எதுவுமே புரியமாட்டேங்குது ?
உங்கள் வரிகள் அனுபவத்தின் இயல்பான வெளிப்பாடாக உள்ளன!!
அண்ணே ஒரு அட்டணன்சு போட்டுக்கறேன்,அப்படியே ஓட்டுக்களும்
அண்ணே,
தொடர்ந்து உங்கள் கவிதை வாசிக்கிறேன்.நல்ல நயம்.
புத்தகம் போட முயற்சிக்கவும்.
தங்களுக்கு என்னின் தமிழ் புத்தாண்டு , பொங்கல் வாழ்த்துக்கள்.
அண்ணே கொஞ்சம் புரியுது. நிறைய புரியல . கடைசி நாலு வரி மட்டும் நச்சு.
மிகவும் நன்றாக உள்ளது. தொடரவும்.
வாழ்த்துக்கள்
அன்பின் தண்டோரா
ஆதங்கம் புரிகிறது - ம்ம்ம்ம்
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்
அன்புள்ள தண்டோரா ., இனிய உளம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்
Post a Comment