எலி கடித்த கால் சட்டை
விரல் நுழைகையில்
பல்லிடுக்கில்
கடலை உருண்டையின்
மிச்சம்!!
இங்கதானே வச்சேன்
காணலையே?
அப்பா தேடும் அந்த
பத்து ரூபாய்!!
காட்டிக் கொடுக்க
விரும்பாமல்
கக்கூஸில் கழிந்தது
சாந்தி புரோட்டாவும்
தேங்காய் குருமாவும்.
எதையோ தேடுகையில்
புடவை தலைப்பில்
பொத்தி வைத்திருந்த
புகைப்படம்!
எனக்கும் அவள்
ஞாபகம் வந்தது!!
குனிந்து கீழே விழுந்த
காசை எடுக்கையில்
யாராவது பச்சைக்குதிரை
தாண்ட மாட்டார்களா?
என்ற ஏக்கமும்!!
29 comments:
டாப் டக்கர்... தலைப்பிலிருந்து, கடைசி வரி வரை..:))
முதல் முடிச்சவிழும் தருணம் புரிந்தது.
இரண்டாவது..??
அடுத்த பதிவர் சந்திப்புல உங்களை குனிய வச்சு எல்லாரும் தாண்டுறோம் :))
//எதையோ தேடுகையில்
புடவை தலைப்பில்
பொத்தி வைத்திருந்த
புகைப்படம்!
எனக்கும் அவள்
ஞாபகம் வந்தது!!//
முடிச்சு போட்டுட்டீங்களே தல....
:-)))
பழைய காதலி ஞாபகம் வந்துருச்சாண்ணே?
’’லூசு மாமா’’
//சங்கர் said...
அடுத்த பதிவர் சந்திப்புல உங்களை குனிய வச்சு எல்லாரும் தாண்டுறோம் :))
//
ரிப்பீட்டேய்
/// D.R.Ashok said...
’’லூசு மாமா’’///
:))
கவிதைகளா... தனித்தனி ஹைக்கூக்களா
நன்றாக "முடிச்சி'ருக்கீங்க .
சூப்பருங்கண்ணே..!
கடைசி வரியால ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது..!
எல்லாம் அருமை.
உள்ளதைச் சொல்கிறீர்கள்.
Good One.
என்ன இப்படி எல்லாரும் "மூட" கெளப்புறீங்க
superb...!!!
மிகவும் அழகான கவிதை.
கடைசி வரிகள் ரொம்ப பிடித்திருக்கின்றன...
அடுத்த பதிவர் சந்திப்புல உங்களை குனிய வச்சு எல்லாரும் தாண்டுறோம் //
நானும் சொல்லிக்கிறேன்!
ரொம்ப நல்லா இருக்கு :-)
பின்னூட்டங்களுக்கு நன்றிகள். அப்புறம் நான் கேட்காமலேயே என்னை அன்போடு “மாமா” என்று விளித்து அவர் பெயரை சொன்ன கவிஞருக்கு ஸ்பெஷல் நன்றி.(எனக்கு வேறு பெயர்களும் உண்டு தம்பி)
:--()
ரைட்டு.
//(எனக்கு வேறு பெயர்களும் உண்டு தம்பி)//
டெண்டெண்...பாட்ஷா.. மாணிக் பாட்ஷா...டெண்டெண்...அதுவா?
அடங்குங்க அதுகூட ‘அஷோக் மாணிக் பாட்ஷா’ தான் :))
கவிதைகள் சூப்பர்.. எனக்கே புரிஞ்சதுன்னா பாருங்களேன்..
//சாந்தி புரோட்டாவும்
தேங்காய் குருமாவும்.//
தாங்கள் தஞ்சாவூர் தானே ?
//சாந்தி புரோட்டாவும்
தேங்காய் குருமாவும்.
//
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்துக்கு ரெண்டு டிக்கெட் கொடுங்க!!!
உங்களுக்குள்ள எத்தனை முடிச்சு??
/அப்துல் சலாம் said...
//சாந்தி புரோட்டாவும்
தேங்காய் குருமாவும்.//
தாங்கள் தஞ்சாவூர் தானே ?//
ஆமாம்..சலாம் அலைக்கும்!
/ mayilravanan said...
//சாந்தி புரோட்டாவும்
தேங்காய் குருமாவும்.
//
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்துக்கு ரெண்டு டிக்கெட் கொடுங்க!!!
உங்களுக்குள்ள எத்தனை முடிச்சு??//
நான் ஒரு முடிச்சவுக்கி!!
//ஆமாம்..சலாம் அலைக்கும்!//
ஆகா அருமை !! நான் பூண்டி புஷ்பம் கல்லூரி மாணவன் தான்
தற்சமயம் மலேசியாவில் குப்பை கொட்டுகிறேன்!!
ஒருக்கா இங்க வாங்க. என் காண்டாக்ட் நம்பர் 0060174940495
Post a Comment