Saturday, January 9, 2010
நசுங்கி போன நெஞ்சுக்குழி
வீட்டுக்குள் சுற்றிக்கொண்டேயிருக்கிறது
சாவின் வாசனை.
பெரிசா ஒன்னுமில்லை
பெரிசுக்கு இழுத்துக் கொண்டிருக்கிறது
இப்பவோ, அப்பவோ
எப்பவோ என்பதே
எல்லோரிடமும் பேச்சு
தாங்கலாம் ஆனால் தங்காது
வைத்தியரின் வாக்குமூலம்
அதுதான் தெரியுமே
அதிலென்ன புதுசு
கஷ்டப்படாம போயிட்டா
நல்லாயிருக்கும்
யார் கஷ்டப்படாம?
மூத்திரம் அள்ளி கொட்டும்
மூத்தவன் சம்சாரத்தின் அங்கலாயிப்பு
சஷ்டி சொல்லுங்க
அப்படியே கொஞ்சம்
சீமைப்பாலை ஊத்திப்பாருங்க.
என்னவோ மனசுல இருக்கு
அதான் இழுத்துக் கிட்டுயிருக்கு
என்னவா இருக்கும் ?
சினை நண்டு விரும்பி
தள்ளுவாரு.
அது அம்மாவாசைக்கு
அடுத்த நாள்தானே கிடைக்கும்
அட! அம்மாவாசைன்னா தங்காது
நண்டை படையல் போட்டுடலாம்
சாவுறதுக்கும் கொடுப்பினை வேணுமய்யா!
எலப் போட்டு
சோத்தை அனுபவிச்சவருக்கு
இருபது வருசமா
கஞ்சி ஊத்தினஅந்த
அலுமியத்தட்டுதான் நசுங்கி
நெஞ்சுக்குழியை அடைச்சுக்கிட்டு
இருக்குன்னு யாருக்குமே புரியலை..
Subscribe to:
Post Comments (Atom)
24 comments:
Realities !!!அருமையான கவிதை .. வாழ்த்துக்கள தண்டோரா
//சீமைப்பலை// கவனிங்க
புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்.
கொடுப்பினை கொடுப்பன
இலைப் போட்டு எல போட்டு
நல்லாயிருக்கு ஜி
அருமையான கவிதை
நன்றி மாயக்கவிஞன் அஷோக்
/கொடுப்பினை கொடுப்பன
இலைப் போட்டு எல போட்டு
//
ரொம்பமுக்கியம்..:))
அண்ணாச்சி பின்றேள் போங்க... அருமையா இருக்கு...
// Cable Sankar said...
/கொடுப்பினை கொடுப்பன
இலைப் போட்டு எல போட்டு
//
ரொம்பமுக்கியம்..:))//
எண்டர் கவிஞரே காண்டாவாதேள்... இப்படி தான் கவுஜ எழுதனும்.. :))
கொன்னுட்டீங்க.......:(
அருமை அருமை தலைவரே.
நல்ல கவிதை...
தலைவரே கலக்கல் கவிதை...
ரசித்தேன்.!!
touchy maniji..! ரொம்ப நேரத்ல இப்டி ஆடிப் போக வச்சிடுறீங்க..!
மனதும் நசுங்குகிறது
நல்ல கவிதை.
அருமையான கவிதை.
எலப் போட்டு
சோத்தை அனுபவிச்சவருக்கு
இருபது வருசமா
கஞ்சி ஊத்தினஅந்த
அலுமியத்தட்டுதான் நசுங்கி
நெஞ்சுக்குழியை அடைச்சுக்கிட்டு
இருக்குன்னு யாருக்குமே புரியலை..///
நெஞ்சிலேயே நிக்குது!!
நல்லாருக்கு தலைவரே! ஆனா நடைலதான் ஏதோ நெருடல்.என்னன்னு சொல்லத் தெரியல.
அண்ணே கலக்குங்க
//நன்றி மாயக்கவிஞன் அஷோக்//
யாருங்க அவரு மாயக்கவிஞரு :)
நிதரிசனத்தை வெளிப்படுத்தும் கவிதை. மிகவும் அருமை. வாழ்த்துகள், தண்டோரா அண்ணே!
மிகவும் வருத்தமாக இருக்கிறது நண்பரே.. கவிதை படிக்கும் போதே நம் வீட்டில் இழவு விழுந்துவிட்டது போல் ஒரு சோகம்...
\\ இருபது வருசமா
கஞ்சி ஊத்தினஅந்த
அலுமியத்தட்டுதான் நசுங்கி
நெஞ்சுக்குழியை அடைச்சுக்கிட்டு //
பின்னூட்டம் இட்டவர்கள் யார் வீட்டிலும் அந்த அலுமினிய தட்டு இல்லாமல் இருந்தால் சந்தோசம்..
மனிதம் வாழட்டும்.
Post a Comment