மீண்டு புத்தகக் காட்சி. நிறைய வாங்க வேண்டும் என்று நினைவில் இருந்தது எதையும் வாங்கவில்லை. புத்தகங்களின் தலைப்புகளை அழகாக எழுதி , கொஞ்சம் செப்பனிட்டு, அங்கும், இங்குமாக சில எண்டர்களை தட்டினால் , அருமையான ஒரு பின்னவீனத்துவ கதையோ, கவிதையோ, இன்ன பிற அபாயகரமான எழுத்துக்களோ அமைந்துவிடும் வாய்ப்பிருகிறதை கண்டு கொண்டேன்.
இருந்தாலும் தமிழினி மற்றும் வம்சி பதிப்பகங்களில் சில புத்தகங்களை வாங்க வேண்டும். அரங்குகளை பார்க்கும்போது மலைப்புதான் ஏற்படுகிறது. நான் அடுத்த தளத்துக்கு செல்ல வேண்டிய கட்டாயம். சென்று விட்டோம். வேறெங்கே? அங்குதான். அங்கு நடந்த சூடான் விவாதங்களீல் அத்தனை எழுத்து சிகாமணிகளூம் கிழித்தெறியப்பட்டனர் எனலாம்.
பிலிம் சேம்பர் அரங்கில் சந்திராவின் கவிதை தொகுப்பு வெளியீடு. இலக்கியத்தை வளர்ப்பதற்காக அங்கும் சிறிது நேரம். அரங்கில் அஜயன்பாலா பேசுகையில் உயிர்மை கட்டுரையில் அமீரின் அட்டைப் படத்தை போட்டதை காரசாரமாக குறை கூற, நான் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க அரங்கில் கொஞ்சம் சலம்பல். அருமை நண்பர் சுகுணா திவாகரும் வந்திருந்தார். ஷோபா சக்தியிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார். உலகின் அழகிய முதல் பெண் ? லீனாவிடம் கை குலுக்கி அவரின் கவிதைக்கான என் பாராட்டுக் “குறிகளை” தெரிவித்தேன். சுகுணாவை பாருக்கு அழைத்தபோது அநேகமாக அவருக்கு ரோசா ஞாபகம் வந்ததா என்று தெரியவில்லை. ஷோபாவுடன் புத்தக காட்சிக்கு போவதாகவும் ,பின் சந்திக்கலாம். நானே உங்களுடன் நிறைய பேச வேண்டும் என்றும் கூறினார். எனக்கும் நான் மப்பில் ஏதோ அவரிடம் உளறியதைப் போல் இருந்தது. சரியாக நினைவில் இல்லை.
பலமுறை சந்திருந்த சசிகுமாரிடம் “நாம் சந்தித்திருக்கிறோம்” என புன்னகையுடன் தலையாட்டி விட்டு அகன்று விட்டார்.
அடுத்து ஒரு பர்சனல் பிரச்சனை. அது ஏற்கனவே கேபிளுக்கும், அப்துல்லாவிற்கும் தெரிந்திருந்தபடியால் அவர்களூடன் அங்கு போக வேண்டியதாயிற்று. நன்றி இருவருக்கும் !!
வழக்கம் போல்
அலைக்கழித்த இரவு.
அர்த்தமில்லாத கனவுகளின்
ஆங்கார அழுகைகள்
அன்றைய துரோகங்களின்
எஞ்சிய துகள்கள்
தூக்கத்தை சிராய்த்து கொண்டிருந்தன.
முழுக்க திரட்டி
பந்தாய் அடக்கினேன் வாய்க்குள்.
வன்மம் குலையாமல் கண்விழித்து
முகம் தேடி அலைந்தேன்
என்னவோ தோன்ற
காரி துப்பிக்கொண்டேன்
மல்லாந்து படுத்து..
30 comments:
//மீண்டு புத்தகக் காட்சி. நிறைய வாங்க வேண்டும் என்று நினைவில் இருந்தது எதையும் வாங்கவில்லை//
ஏன் சார் புக் வாங்கவில்லை?நிறைய புத்தகங்கள் வந்திருக்கிறது.
// நான் அடுத்த தளத்துக்கு செல்ல வேண்டிய கட்டாயம். சென்று விட்டோம். வேறெங்கே? //
கட்டுடைத்தலா?
//கே.ரவிஷங்கர் said...
//மீண்டு புத்தகக் காட்சி. நிறைய வாங்க வேண்டும் என்று நினைவில் இருந்தது எதையும் வாங்கவில்லை//
ஏன் சார் புக் வாங்கவில்லை?நிறைய புத்தகங்கள் வந்திருக்கிறது.
// நான் அடுத்த தளத்துக்கு செல்ல வேண்டிய கட்டாயம். சென்று விட்டோம். வேறெங்கே? //
கட்டுடைத்தலா?//
சார் இன்று, நாளை வாங்கிவிடுவேன்..வருகைக்கு நன்றி சார்,,
//வழக்கம் போல்
அலைக்கழித்த இரவு.
அர்த்தமில்லாத கனவுகளின்
ஆங்கார அழுகைகள்
அன்றைய துரோகங்களின்
எஞ்சிய துகள்கள்
தூக்கத்தை சிராய்த்து கொண்டிருந்தன.
முழுக்க திரட்டி
பந்தாய் அடக்கினேன் வாய்க்குள்.
வன்மம் குலையாமல் கண்விழித்து
முகம் தேடி அலைந்தேன்
என்னவோ தோன்ற
காரி துப்பிக்கொண்டேன்
மல்லாந்து படுத்து..//
நீங்க வாங்கிய புத்தகங்களின் பட்டியலா இவை
புத்தக கண்காட்சி அனுபவமும், கவிதையும் அருமை... ஆமா அந்த படத்துல யாருங்க... தமிழ்பட வில்லன் மாதிரி இருக்கறது.
தலைவரே கடைசி பாரா சூப்பர்
தண்டோரா அவர்களே,
கவிதையின் வாயிலாக இலக்கிய வட்டத்துக்குள் தாங்கள் மிக வேகமாக உட்செல்வதை போல் இருக்கிறது.
அசத்தல் கவிதை. அந்த புகைப்படம் எடுத்தவரை வன்மையாக கண்டிக்கிறேன். இந்த பூச்சாண்டிக்கெல்லாம் பயப்பட மாட்டோம்.:))
பிரபல கவிஞர் D.R.அஷோக்கின் பாதிப்பு கவிதையில் தெரிந்தாலும்; இன்னும் கொஞ்சம் செப்பனிட்டுயிருக்கிலாம்.
//புகைப்படம் எடுத்தவரை வன்மையாக கண்டிக்கிறேன். இந்த பூச்சாண்டிக்கெல்லாம் பயப்பட மாட்டோம்.:))//
வழிமொழிகிறேன் :))))))
தலைவரே..
கடைசிக்கு முந்தின பாரா சூப்பர்..!
மல்லாந்து படுத்து
காரி துப்பிக்கொண்டேன்
என்னவோ தோன்ற
முகம் தேடி அலைந்தேன்
வன்மம் குலையாமல் கண்விழித்து
பந்தாய் அடக்கினேன் வாய்க்குள்.
முழுக்க திரட்டி
தூக்கத்தை சிராய்த்து கொண்டிருந்தன.
அன்றைய துரோகங்களின்
எஞ்சிய துகள்கள்
ஆங்கார அழுகைகள்
அர்த்தமில்லாத கனவுகளின்
அலைக்கழித்த இரவு.
வழக்கம் போல்
//பின்னவீனத்துவ கதையோ, கவிதையோ//
கவிதை தான் சார்...::))
தல கட்டுரையில் இருந்த சில கிண்டலை வெகுவாக ரசித்தேன். போட்டோ இவ்ளோ க்ளோஸ் up- லயா எடுக்கிறது?
கவிதை சூப்பர்...!!!!
முதல் பாரா ரெண்டாவது பாரா சூப்பரோ சூப்பர்
:))
கவிதையை படிச்சா அப்படித்தான் தோன்றுகிறது...
நீங்கள் அடுத்த கட்டத்துக்கு சென்றுவிட்டீர்களோ என்று... ம்... ஐமாய்ங்க...
//பிரபல கவிஞர் D.R.அஷோக்கின் பாதிப்பு கவிதையில் தெரிந்தாலும்; இன்னும் கொஞ்சம் செப்பனிட்டுயிருக்கிலாம்//
ரீப்பீட்....
இப்படிக்கு
கவிதை புயல் டாக்டர் அசோக் தொண்டர் படை...
அண்ணே நீங்க நிறையவே பேசுங்க
ஓட்டுக்கள் போட்டாச்சு
நீங்க கொஞ்சமா பேசினால் தான் நல்லது...
மொபைல் பில் எகிறுதே....
//அங்கும், இங்குமாக சில எண்டர்களை தட்டினால் //
ஏன் இப்புடி...’எண்டர்’ வார்த்தைக்குதேன் வயர் பதிவர் காப்பிரைட் வாங்கியிருக்காருல்ல!அப்புறமென்ன சும்மா சும்மா அதையே யூஸ் பண்ணிக்கிட்டு.’புதிய கலாச்சாரம்’ ஸ்டால்ல பாத்ததா யாரோ சொன்னாங்கெ..?
தலைவரே கவிதை கலக்கல....
கவிதை கலக்கி விட்டது...
என்னமோ எனக்கு வயத்த கலக்கிவிட்டது,..
ஏன் தலைவரே நாம கூப்ட்டா அவரு வரமாட்டாராமா...?
எப்படியாச்சும் தொகுதிக்கு அழைத்து வந்துவிடுங்கள்...மற்றதை ரோசா எனக்கு கற்றுத்தந்திருக்கிறார்...
இந்த நாய்களின் பழக்க வழக்கங்கள் குறித்து கொஞ்சம் பேச வேண்டும்.
:-))
Visit 10 websites and earn 5$. Click here to see the Proof
Burj Dubai opening ceremony Photo Gallery
"Burj" is Arabic for "Tower" World Wonder Burj Dubai Photo Gallery
//எப்படியாச்சும் தொகுதிக்கு அழைத்து வந்துவிடுங்கள்...மற்றதை ரோசா எனக்கு கற்றுத்தந்திருக்கிறார்...//
சே இந்த இலக்கியவாதிங்கன்னாலே ரவுடிங்க போலயிருக்கே...
பிரபல கவிஞர் D.R.அஷோக்கின் பாதிப்பு கவிதையில் தெரிந்தாலும்; இன்னும் கொஞ்சம் செப்பனிட்டுயிருக்கிலாம் // ha ha nice
அன்பின் தண்டோரா
புத்தகம வாங்காததற்கு சாக்கு சொல்ல வேண்டாம் - விரைவினில் வாங்குக
கவிதை சூப்ப்ப்ப்பர்
எல்லாக் கோபங்களையும் அடக்கி, அடக்கி, காறித்துப்பும் போது மல்லாந்து படுத்திருப்பது - இவை அனைத்துக்கும் நாமும் காரணமோ என்ற குற்ற உணர்வா
ம்ம்ம் நல்வாழ்த்துகள் தண்டோரா
:(.. nallarukku..
கவிதை நிஜமாக நல்லா இருக்குங்க.
Post a Comment