”நீ”
நீ என்ற சொல்லை
எப்போது முதலில்
கேட்டோமென்று
நினைவிருக்கிறதா?
நீயுமா என்றே
அடிக்கடி கேட்கப்படுகிறோம்
உரிமைகள் நீ என்று
அழைக்கும் போது
ஏற்றுக் கொள்கிறோம்
முரண்களில்
அதே நீ சினமூட்டுகிறது
நெருக்கத்தின் வெளிப்பாடாகவும்
வெறுப்பின் உமிழ்தலாகவும்
”நீ” அடையாளப்படுத்தப்படுகிறது
நான் மற்றும் நாமுக்கு
நீ என்பது
ஆரம்ப எழுத்தாகவே...
எல்லோரும் நிச்சயம் கேட்பீர்கள்.
நீ என்ன சொல்ல வருகிறாய் ?
நான் கேட்கிறேன்.
நீ என்ன புரிந்து கொண்டாய் என்று!!
26 comments:
Present sir
//நான் கேட்கிறேன்.
நீ என்ன புரிந்து கொண்டாய் என்று!!//
ஒன்னும் புரியலை... அதென்னமோ மல்லாக்க படுத்து யோசிச்சும் ஒரு கவுஜ கூட புரிய மாட்டேங்குது..
:(
உள்ளேன் ஐயா
நீ’ங்கலாக நீ’ங்களுமாவாக..
சரிங்க தலைவரே...
அப்பவே சொன்னேன் நகுலன் புக்கெல்லாம் படிக்காதிங்கன்னு.. கேட்டீங்களா
ஏண்ணே..
நைட் "அடிச்சது" இன்னும் இறங்கலையா..?
நன்றி...
"”நீ”"
கடைசி வரை வந்ததுக்கு.
புரியிது..::))
உள்ளேன் அய்யா..
தலை நீங்களூமா.....?
:)
நல்லா இருக்குண்ணே
//நீயுமா என்றே
அடிக்கடி கேட்கப்படுகிறோம்//
class
ரை ரைட்....
good one
நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீ நீயா கமலஹாசன் படம் அதுக்கு இன்னா இப்ப???
வர வர ஒரு மார்கமா தான் எழுதுறிங்க..:)
ஒ.. அந்த நீ.. யா..??
எழவு எது எழுதினாலும் ஓட்டுப் போடுறாங்கய்யா உங்களுக்கு.
பாலா. நன்றி.
மறந்திட்டேன்..
போட்டாச்சு..
தண்டோராவுக்கு.. நீதான் நித்தம் போன் போடுறியாமே..??
”நீ” எப்போதும் இதே போல் எழுதி கொண்டிரு.... படிக்க “நாம்” இருக்க என்ன கவலை உனக்கு?
//நான் கேட்கிறேன்.
நீ என்ன புரிந்து கொண்டாய் என்று!!//
--------
ஏன் இப்படி கேட்கிறீர்கள்.... நீங்கள் எழுதும் எதுவும் எனக்கு எதுவும் புரியாது என்ற நினைப்பா உங்களுக்கு... இருந்தாலும் உங்களுக்கு ஒரு உண்மை சொல்கிறேன்... எனக்கு சத்தியமாக ஒன்றுமே புரியவில்லை..
என்னய்யா நீ?
பெரிய கவிஞனா நீ?
நீ சொல்வது பலருக்கு புரிவதில்லை
புரிந்தால் நீ சொல்வது உணர்வதில்லை
எல்லோரும் நீ சரியில்லை எனும் போதும்
நீ ஆமாம் என்று ஒத்துக் கொள்வதால்
நீ மனுஷன்யா..
"நீ" ளந்தான்.[கவிதைய சொன்னேன்]
\\எல்லோரும் நிச்சயம் கேட்பீர்கள்.
நீ என்ன சொல்ல வருகிறாய் ?
நான் கேட்கிறேன்.
நீ என்ன புரிந்து கொண்டாய் என்று!!//
நான் கேட்கிறேன்.. என்னதான் தலைவரே சொல்லவரிங்க ???
//Cable Sankar said...
என்னய்யா நீ?
பெரிய கவிஞனா நீ?
நீ சொல்வது பலருக்கு புரிவதில்லை
புரிந்தால் நீ சொல்வது உணர்வதில்லை
எல்லோரும் நீ சரியில்லை எனும் போதும்
நீ ஆமாம் என்று ஒத்துக் கொள்வதால்
நீ மனுஷன்யா..//
கடைசில.. கேபிள் அங்கிள் கவிதை எழுதிட்டாரே? :)
நீங்க நீங்க...
Post a Comment