துரத்துவது யார் என்று
திரும்பி பாராமலே
அனுமானிக்க முடிகிறது
அறிந்தும் அறியாமலும்
செய்த அத்தனையும்தாம்
அரூபமாய்!
கடல் மலை தாண்டி
உயிரை பதுக்க
ஓடுகிறேன்
சின்னதாய் தேங்கியிருந்த
கோணமற்ற அந்த
சிறு குளத்தில்
முகம் பார்க்கவும்
சலக்கென்று குதித்து
ஒலியெழுப்பவும்தான்
அதீத ஆசை!
----------------------------------------------
கனவுகள் விற்கலாம்
என்று கடை பரப்பினேன்
விலையென்று ஒரு
நிர்ணயம் இல்லை
வந்தவர் எல்லோரிடமும்
அதுவே இருந்தது.
உனக்காக ஒன்று
கண்டு தருகிறேன்
வாங்குகிறாயா?
காதில்தான் கேட்டேன்!
சினத்தை காட்டி
சீ என்று உமிழ்ந்தான்
வலிக்கவில்லை
அதில் நியாயம்
இருந்ததாலோ என்னவோ?
27 comments:
//அதில் நியாயம்
இருந்ததாலோ என்னவோ?//
ஓ... அப்டியும் இருக்குமோ..???
நல்ல கவிதைகள்...
This one is nice.
தலைப்பு புரியவில்லையே...
துரத்தலும், கனவும் நன்றாகயிருந்தது. கனவு கொஞ்சம் டாப்பே :)
//சினத்தை காட்டி
சீ என்று உமிழ்ந்தான்
வலிக்கவில்லை
அதில் நியாயம்
இருந்ததாலோ என்னவோ?//
அப்படி என்ன தல கேட்டீங்க...
முதல் கவிதை சூப்பர்:)
தலைவரே நெஞ்சுகுழி நசுங்கிடிச்சி..!
கவித ! கவித !..
இந்த மானே தேனே பொன்மானே எல்லாம் எங்க காணோம் .
//சினத்தை காட்டி
சீ என்று உமிழ்ந்தான்
வலிக்கவில்லை
அதில் நியாயம்
இருந்ததாலோ என்னவோ//
அண்ணே இரவு நேரக் குவளையின் மீத திரவத்தில் ஒளிரும் நிலா இவ்வரி
nice
கேபிளிடம் நட்பாய் இருப்பவர்களாலும் நல்ல கவிதை எழுத முடியும் என்று தினம் தினம் நிருபித்துக் கொண்டிருக்கும் அண்ணன் தண்டோரா வாழ்க, வாழ்க :))
ஏன் இப்படி கொடுமை மேல கொடுமை பண்றீங்க..?
அண்ணன் தண்டோரா வாழ்க, வாழ்க
கவிஞர் தண்டோரா வாழ்க!
முதல் கவிதை மிக அருமை பாஸ்!
அண்ணே, முடியலை......
:)
//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
ஏன் இப்படி கொடுமை மேல கொடுமை பண்றீங்க..?//
இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க
ரெண்டு கவிதையும் சூப்பர்... ரெண்டாவது கவிதை டாப்
கவிதை நல்லாதான் இருக்கு. ஆனா தலைபுத்தான் புரியல.
/கேபிளிடம் நட்பாய் இருப்பவர்களாலும் நல்ல கவிதை எழுத முடியும் என்று தினம் தினம் நிருபித்துக் கொண்டிருக்கும் அண்ணன் தண்டோரா வாழ்க, வாழ்க :))//3
வந்தோமா ..கவிதை படிச்சோமா..நல்லாருக்கு. நல்லால்லை எதையாவது சொன்னோமான்னு இல்லாம என்னை ஏன்யா இழுத்திட்டு.. நானெல்லாம் பிற்வி கவிஞன்ய்யா..:)) எலலாத்தையும் எண்டர் போட்டு படிக்கவும்
நல்லாயிருக்கு தண்டோராஜி.
//வலிக்கவில்லை
அதில் நியாயம்
இருந்ததாலோ என்னவோ//
இந்த வரிகள் தான் தல வைர வரிகள்.அருமையான கவிதை.
//வந்தோமா ..கவிதை படிச்சோமா..நல்லாருக்கு. நல்லால்லை எதையாவது சொன்னோமான்னு இல்லாம என்னை ஏன்யா இழுத்திட்டு.. நானெல்லாம் பிற்வி கவிஞன்ய்யா..:)) எலலாத்தையும் எண்டர் போட்டு படிக்கவும்//
அதானே
முதல் கவிதை நல்லா இருக்கு தண்டோரா...
//Cable Sankar said...
வந்தோமா ..கவிதை படிச்சோமா..நல்லாருக்கு. நல்லால்லை எதையாவது சொன்னோமான்னு இல்லாம என்னை ஏன்யா இழுத்திட்டு.. நானெல்லாம் பிற்வி கவிஞன்ய்யா..:)) எலலாத்தையும் எண்டர் போட்டு படிக்கவும்//
கேபிளால மட்டும் இல்லை, அவரோட நண்பர்களாலையும் கூட நல்ல கவிதை எழுத முடியும்னு நான் சொல்ல வந்தேன்னு நீங்க அர்த்தம் எடுத்துக்குங்க :))
நாலு பேரு நாப்பது சொல்லுவாங்க அதுக்காக நீங்க உங்க தமிழ்த் தொண்டை எப்பவும் கைவிட்டுடக் கூடாது :))
//D.R.Ashok said...
அதானே//
எதுதானே? :))
\\வந்தவர் எல்லோரிடமும்
அதுவே இருந்தது.//
எதுவாக இருந்தது தலைவரே ... எப்படியும் போல இதுவும் புரியல :(
அன்பின் தண்டோரா
கவிதை அருமை - தூக்க மாத்திரை போட்டும் கனவு வருகிறதா - கனவுகளைப் பகிரலாம் - விறக இயலாதே - இறுதியில் நச்சென்று இருக்கும் கவிதை
நல்வாழ்த்துகள் தண்டோரா
வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி நண்பர்களே...
Post a Comment