Monday, January 11, 2010

மானிட்டர் பக்கங்கள்........11/01/2010


புத்தகக் காட்சி நடைபெறும் இடத்திற்கு எதிரில் பிளாட்பாரத்தில் நிறைய பழைய புத்தக கடைகள் முளைத்திருந்தன. சல்லிசான விலையில் அருமையான பொக்கிஷங்கள் கிடைத்ததாக ஜ்யோவ்ராம் எழுதியிருந்தார். புத்தகக் காட்சி அரங்கிலும் சில ஸ்டால்களில் குறிப்பாக சிற்றிதழ்களின் பழைய பிரதிகள் பாதி விலைக்கு கிடைத்தது. உன்னதம், பாடம் என்று சில இதழ்களை நானும் வாங்கினேன். விகடன் விருது பெற்ற உன்னதம் ஆசிரியர் தோழர் கெளதம சித்தார்த்தனுக்கு பதிவர்கள் சார்பாக பாராட்டும், வாழ்த்துக்களும்.

உள்ளே இன்னொரு பழைய பேப்பர் கடையும் இருந்தது. இதுவரை அவர்கள் வெளியிட்ட 16 இதழ்களின் விலை 40 ரூ மட்டுமே. அதன் கூட ஆச்சி மசாலாத்தூள் இலவசமாம். அரங்கில் திரும்பிய இடஙகளெல்லாம் அந்த பத்திரிக்கையின் விளம்பரம்தான். தொலைக்காட்சிகளிலும் தூள் பரத்தினார்கள் ஆரம்பத்தில். ஒன்றரை லட்சம் விற்றது போக எஞ்சியதை இப்படி கொடுத்துக் கொண்டிருந்தார்கள் போலும். பத்திரிக்கையின் பெயரை சரியாக சொல்லுபவர்களுக்கு பூச்சி மார்க் விளக்கெண்ணெய் அரை லிட்டர் இலவசம்.

அறிவித்திருந்தபடி பதிவர்கள் கிழக்கில் உதித்தனர். யூத் தலைமையில் அரட்டை கச்சேரி களை கட்டியது. சரமாரியாக பிளாஷ்கள் மின்னியது. பதிவர் சங்கர் விதம் விதமாய் கோணங்கள் வைத்துக் கொண்டிருந்தார். நான் பார்த்தவரை யாரும் மொக்கை பதிவராய் தெரியவில்லை. ஓவ்வொருவரும் தனித்தன்மையுடன் ஷார்ப்பாகத்தான் இருந்தனர். மொக்கை பதிவர்கள் என்று எழுதிய பிரகஸ்பதியுடன் யாரும் அவ்வளவாக கலக்கவில்லை. அவர் அதை விட மொக்கையாக இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

நிறைய புத்தகங்கள் வாங்கினேன். பட்டியல் போடுவதாய் இல்லை. படித்து முடித்தவுடன் அதைப் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் நண்பர்களே!!

சாருவுடன் இரண்டு முறை சோமபானத்தை பகிர்ந்து கொள்ள நேர்ந்தது. சற்றே திட்டமிடப்பட்ட தற்செயலான நிகழ்வு. அதைப் பற்றி ஏற்கனவே எழுதி விட்டேன். சிலரின் தனிப்பட்ட குணாதிசயங்களை பற்றி பேசினார். லத்தீன், தென் அமெரிக்கா இன்னும் பெயர் வராத எழுத்தாளர்களை பற்றி எழுதுகிறீர்களே ? நீங்கள் நிசமாவே படித்திருக்கிறீர்களா சாரு என்று கேட்டேன். முன்னால் இருந்த வெண்ணிலா மீது சத்தியம் செய்தார். வெண்ணிலா ஒரு வகை ஓட்கா..

ஒரு பிரகஸ்பதிக்கு கோபமா. ஆற்றாமையா.. இயலாமையா..என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை. மொன்னைக் கத்திக்கு வெண்ணெய் மீது வரும் கோபம் போல் வருகிறது. ஏன் இப்படின்னு சில பதிவர்களிடம் கேட்டேன். அவர்கள் சொன்ன பதிலைக் கேட்டால் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அப்படியெல்லாம் காரணம் இருக்குமா சகா என்று கேட்டால் ஒரு வேட்டைக்காரன் சிரிப்பு சிரித்தார். யூத்தை கேட்டேன். அவர் சொன்னதை இங்கு எழுத முடியாமைக்கு வருந்துகிறேன். என் கருத்து. ஏரி விழித்திருக்கிறதா என்று சுருட்டை நனைத்து சோதித்த மூடன் சீ..சீடனின் ஞாபகம் வருகிறது.

மக்குபாய்.. மன்னிக்க.. ஜக்குபாய் இணையத்தில் வந்ததை நீங்கள் அறிவீர்கள். அது ஒரு பிரெஞ்சு படத்தின் ஈயடிக்காத காப்பி என்று பில்லா(பழைய) பேத்தியதை..மீண்டும் மன்னிக்க.. பேசியதும் செய்தி. படம் ரிலீசானால் (ஒருவேளை) தியேட்டரில் ஈயடிக்கலாம்.
அதன் பொருட்டு நம் டம்மி நட்சத்திரங்கள் முதல்வரை சந்தித்து (கவர்ச்சியாய் நடிகை சோனா சகிதம்) திருட்டு விசிடியை ஒழிக்க மனு கொடுத்தார்கள். திருவாரூர் மனுநீதி சோழனும் மனம் உருகி கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இது நடந்து மூன்று நாட்கள்தான் ஆகிறது. அட்லீஸ்ட் ஒரு ஆறு மாதமாவது காத்திருந்து பார்க்க வேண்டும். திருட்டு தடுக்கப்பட்டோ அல்லது ஒழிக்கப்பட்டோ விட்டதா என்று. ஆனால் அதற்குள் பாராட்டு விழா தேதி அறிவிக்கப் பட்டு விட்டது. எதற்கு ? பைரைசியை ஒழித்து திரையுலகத்தை ரட்சித்து விட்டாராம். வாழ்த்தவும் விரும்பவில்லை!! வணங்கவும் விரும்பவில்லை !!

ஒரு சுதந்திர போராட்ட தியாகி தமிழர். வயது 85. பென்ஷன் கேட்டு நடையாய் நடந்திருக்கிறார். சுமார் 25 வருடங்களாக. நீங்கள் தியாகி என்பதற்கு சமர்ப்பிக்கப் பட்ட ஆதாரங்கள் போதுமானவையல்ல என்று அரசு தரப்பில் மறுக்கப் பட்டிருக்கிறது. அவர் நீதிமன்ற படியேறினார். அரசு வக்கீலும் சளைக்கவில்லை. எதிராக வாதாடினார்கள். இறுதியில் நீதிமன்றம் பென்ஷன் கொடுக்க சொல்லி உத்தரவிட்டிருக்கிறது. பாவம் அவர். ஒரு திரைப்படத்தில் சின்னதாய் ஒரு வேஷம் போட்டிருந்தால் அவருக்கு எல்லா சலூகைகளும் கிடைத்திருக்கும். ரம்பாவையெல்லாம் நினைத்துப் பாருங்கள். கேட்டவுடன் அப்பாயின்மெண்ட். காயங்களுக்கு உடனே ஆயின்மெண்ட்!!

மழை நீர் தேக்கி வைக்க வக்கில்லாமல் கடலில் கலப்பதை பார்த்தால் கண்ணில் நீர் வரும். வீணாகிறதே செல்வம் என்று. அதே உணர்வு எனக்கு ரமேஷ் வைத்யாவிடம் ஏற்படுகிறது. என்னதான் அன்பையும், கரிசனத்தையும் அவரிடம் யார் காட்டினாலும் அவர் இரண்டாய் இருக்கும்போது மட்டுமே அதை ஏற்று கொள்கிறார். திரும்ப இரட்டிப்பாய் நமக்கு திருப்பி அளிக்கிறார். மிக விநோதமான மனநிலை. போன முறை சந்தித்தபோது சேது படத்தில் வரும் பாண்டிமடம் மாதிரியான இடத்தில் என்னை அடைத்து விட்டார்கள் என்று வெதும்பினார். விதி ! மீண்டும் அவர் அங்கேதான்.

லீனாவின் கவிதை நிறைய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அது போல் நாமும் ஒன்று எழுதினால் எப்படியிருக்கும் என்று சில நண்பர்களிடம் கருத்து கேட்டேன். எழுதிப் பாரேன் என்றார்கள்.முதல் வரியை மட்டும் இன்று எழுதுகிறேன். வரவேற்ப்பை பொறுத்து நீட்டலாம். சீ .. தொடலாம். மறுபடியும் சீ... தொடரலாம்..

தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு
திரிந்து கொண்டிருந்தேன்....

மேற் சொன்ன வரிகளுக்கு நல்ல அர்த்தங்களூம் உண்டு. தப்பிதமாக கற்பித்து கொள்பவர்கள் இலக்கிய உலகத்திற்கு துரோகம் செய்பவர்களாகிறார்கள்.


டிஸ்கி : நண்பர் வெள்ளிநிலா சர்புதீன் கொடுத்த இதழை வாசித்தேன். எனக்கு நிறைய முரண்பாடுகள். சற்று கோபமும் வந்தது. பொது இடங்களில் கொடுக்கப் படும் இன்னொரு மதம் தொடர்பான நோட்டீஸ்களுக்கும் ,அதற்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. உங்கள் பத்திரிக்கையில் நான் எழுதும் பட்சத்தில் அதிலிருந்து ஒரு வரி கூட பிரசுரிக்கப்படாது என்பது நிச்சயம். நண்பர்களாகவே இருந்து விடுவோம் சர்புதீன்..

டிஸ்கி : 2

தொட்டியிருக்கையில்
குப்பையை ஏன்
பக்கத்தில் போடுகிறார்கள்!?

டிஸ்கி :3 தோழர் மாதவராஜுக்கும், வம்சி பதிப்பகம் பவா.செல்லத்துரைக்கும் வாழ்த்துக்கள். ஆனால் நீங்கள் தொகுத்திருக்கும் அத்தனையும் மகா மொக்கைகள். அதை நான் சொல்லவில்லை. ஒரு நாமக்கல் வஸ்துவின் வாக்குமூலம். ஒரு சந்தேகம் தோழர்? பமாரு, டமாரு,டங்குவாரு என்றெல்லாம் பதியப்பட்ட அதாவது சுமார் ஏழேமுக்கால் லட்சம் தடவைகள் வாசிக்கப்பட்ட இலக்கியங்களை ஏன் நீங்கள்கன்சிடர் பண்ணவில்லை. ஒரு அதிமேதாவியின் புலம்பல்கள் உங்களுக்கு கேட்க வில்லையா? ரோஜா பாக்கு மெல்வது எப்படி என்ற அடுத்த எளக்கியம் தயாராகி கொண்டிருக்கிறது. அதை வெறும் வாயில் மெல்லாமல் வெற்றிலையுடன் மென்று குப்பைத் தொட்டியில் துப்பும்படி கேட்டுக் கொள்கிறோம்.

55 comments:

எறும்பு said...

Present sir

Paleo God said...

ராஜகோபால் (எறும்பு) said...
Present sir//

repeat sir.

வெள்ளிநிலா said...

கிழிந்தது போங்கள்!!
என்ன தண்டோரா இப்படி கேட்டுபுட்டீங்க !., அதுக்கு தானே பதிவர்களின் சங்கமமாக ஆக்க முயற்சி பண்ணிட்ருக்கேன்., கண்டிப்பா நாம இத பத்தி பேசுறோம், தல! ஒரு மணி நேரத்தில போன் பேசுறேன் தலைவரே.

sathishsangkavi.blogspot.com said...

//ரம்பாவையெல்லாம் நினைத்துப் பாருங்கள். கேட்டவுடன் அப்பாயின்மெண்ட். காயங்களுக்கு உடனே ஆயின்மெண்ட்!!//

சார் அது ரம்பா சார், ஆது ரம்பா சார்.....

கார்க்கிபவா said...

தயிர்ல போட்டா தயிர் வடை. போடலைன்னா மெதுவடை. ஓட்டை இருந்தா அது ஓட்டை வடை

Raju said...

\\கார்க்கி said...
தயிர்ல போட்டா தயிர் வடை. போடலைன்னா மெதுவடை. ஓட்டை இருந்தா அது ஓட்டை வடை\\

இவ்ளோ தத்துவம் தாங்குதுண்ணா..!
நீ பில்டப்ப ஏத்து...

Raju said...

ஆனா, பதிவு செம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம காரம்ம்ம்ம்ம்ம்ம்.

உண்மைத்தமிழன் said...

அண்ணே..

புதுசா பதிவு எழுத முடியாமல் இருப்பதால் அந்த 'பிரகஸ்பதிக்கு' பதில் எழுத முடியவில்லை.

தான் எழுதுவதைத் தவிர மற்றவைகள் குப்பைகள் என்கிற அகங்கார, திமிரான மனநிலையில் இன்னமும் வலையுகத்துக்குள்ளேயே முத்துக் குளிக்கிறார் அந்தத் தம்பி..! படித்தவர்கள் இதனை எப்படி புரிந்து கொண்டார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இங்கு போலியான நட்புத்தனம் மிதமிஞ்சிய அளவில் இருக்கிறது என்பது இதனை வைத்து புரிந்து கொள்ள முடிகிறது..!

மிகவும் வருந்துகிறேன்..!

ஏற்கெனவே ஒரு முறை அப்படி எழுதியதற்கு நான் பதில் போட்டவுடன் "நான் ஆளப் பிறந்தவன்; ஆத்திரப்படமாட்டேன்" என்று 'பஞ்ச்' டயலாக்கை போட்டு சமாளித்துக் கொண்டார்.

இப்போது இதைப் படித்துவிட்டு எந்த 'பஞ்ச்'சை எழுதி உடம்பை துடைத்துக் கொள்வாரோ தெரியவில்லை..!

இப்படி பஞ்ச் அடிக்கிற சுள்ளான்கள் எல்லாம் ஒரே மாதிரி இருக்காங்களே.. ஏண்ணே..?

என்ன இருந்தாலும் உங்களுடைய வலையுலகப் பாசத்திற்கும், நேசத்திற்கும் என்னுடைய சல்யூட்டுங்கண்ணே..!

Cable சங்கர் said...

இந்த முறை உ.தவை வழிமொழிகிறேன்

madliongold said...

தண்டோரா,

புத்தக கண்காட்சியில் தினம் சுற்றியவர்கள் மட்டுமே புத்திசாலி. ஆகவே நீங்கள் புத்திசாலி. புத்தக கண்காட்சியில் உருப்படியான ஒரு புத்தகம் சொல்ல முடியுமா உங்களால்?
அதுவும் மொக்கைகள் கூடி கும்மியடிக்கும் இடமாக ஆகியிருக்கிறது இந்தவருட புத்தக சந்தை என்று மனச்சிக்கலுக்குள்ளானவர்கள் சொல்கிறார்கள். நான் அதை வாங்கினேன், இந்த புத்தகம் வாங்கினேன், ஜுஸ் குடித்தேன், வோட்கா குடித்தேன் என்று பெருமை வேறு. ஒரு நல்ல புத்தகம் கூட கிடைக்கவில்லை என்று வேறு பலர். பதிவர்களையெல்லாம் எழுத்தாளர் ஆக்குகிறதாய் சொல்லிக்கொண்டு புத்தகம் தொகுப்பாளர்கள் மொக்கைகளை எழுத்தாளர்கள் சொல்லிக்கொள்கிறார்கள். தினமும் புத்தக சந்தை போய் வந்தால் நீங்களெல்லாம் எழுத்தாளர் ஆகிவிடமுடியாது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

present

மரா said...

உன்னதம் ஆசிரியர் தோழர் கெளதம சித்தார்த்தனை நானும் சந்தித்து வாழ்த்தினேன்.’ரமேஷ் வைத்யா’ காலக்கரையான் தின்றுகொண்டிருக்கும்
ஒரு அற்புதக் கலைஞன்..என் செய்ய..விதி வலியது.

Cable சங்கர் said...

மொக்கைகளை படித்து மன் உளைச்சல் ஏற்பட்டிருந்தால் புத்தக கண்காட்சிக்கு மிக அருகிலேயே நல்ல வைத்தியசாலை அங்கு நல்ல முறையில் வைத்தியம் பார்க்கிறார்களாம்.

Vidhoosh said...

அது சரி...

மிளகாயோடு மிளகும் சேர்த்து இருக்கீங்க. அதான் இவ்ளோ காரம்...

-வித்யா

butterfly Surya said...

மானிட்டரை விட சைட்டிஷ் சூப்பர்.

குரு எவ்வழி.. சிஷ்யன் அவ்வழியே..

விட்டு தள்ளுங்கள்.

அகல்விளக்கு said...

மானிட்டர் செம்ம்ம்ம்மம காட்டம் சார்....

சூப்பர் காட்டு காட்டிட்டீங்க போங்க....

Raju said...

\\புத்தக கண்காட்சியில் தினம் சுற்றியவர்கள் மட்டுமே புத்திசாலி. ஆகவே நீங்கள் புத்திசாலி.\\

அப்போ, கால்வலிக்குதுன்னு உக்காந்தவங்கள்ளாம் யாரு...?


\\புத்தக கண்காட்சியில் உருப்படியான ஒரு புத்தகம் சொல்ல முடியுமா உங்களால்?\\

நாங்கள்ளாம் புத்தகத்தை படிக்கதான் செய்வோம். நீங்க அடுத்தவங்க சொல்ல சொல்ல கேட்டுக்குவீங்களோ..?


\\அதுவும் மொக்கைகள் கூடி கும்மியடிக்கும் இடமாக ஆகியிருக்கிறது இந்தவருட புத்தக சந்தை என்று மனச்சிக்கலுக்குள்ளானவர்கள் சொல்கிறார்கள்.\\

ஜெலுசில் எல்லா மெடிக்கல் ஸாப்லயும் கிடைக்குமே..!

\\தினமும் புத்தக சந்தை போய் வந்தால் நீங்களெல்லாம் எழுத்தாளர் ஆகிவிடமுடியாது.\\

ஆமா மணி அண்ணே, தினமும் டாஸ்மாக் போனாதான் எழுத்தாளராக முடியும்.

Jackiesekar said...

செம காரம் தலைவா???

எறும்பு said...

அய்யா madlion gold நீங்க என்ன சொல்லவரீங்கனு கொஞ்சம் தெளிவா சொல்ல முடியுமா??

பாலா said...

என்னது நாமக்கல் வஸ்துவா???

அடங்கொக்கமக்கா..., அப்படியா சங்கதி!!

தண்டோரா... பேரைப் போட்டு எழுதுங்கப்பா..!! நானும் அதே ஊருதான்! :) :)

--

அங்க போய் இப்பதான் படிச்சிட்டு வந்தேன். யாருனா.. கும்மிக்கு ரெடியா...??? நான் போய் தூங்கிட்டு வந்துடுறேன்.

---

எறும்பு said...

//தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டுதிரிந்து கொண்டிருந்தேன்....
//

நீங்க ஆரம்பிங்க தலைவா... மைனஸ் ஓட்டு போட நாங்க இருக்கோம்..
;))

பாலா said...

ராஜகோபால்..

இம்புட்டு நேரம்.. 5/5. இப்ப 5/6!!!

யாரது???! :) :) :)

எறும்பு said...

//ராஜகோபால்..

இம்புட்டு நேரம்.. 5/5. இப்ப 5/6!!!

யாரது???! :) :) :)//

ஆஹா அது நான் இல்லைங்க... ஒரு பேச்சுக்கு சொன்னா குத்திடீங்களே எசமான்
;))

பாலா said...

எதுக்கும் ஸ்டேஷன் வரைக்கும் வந்துட்டு போங்க.

அவதார்.. படத்தோட கலெக்‌ஷன் டீடெய்ல்ஸை... சரியா சொல்லணும் சரியா...!!! :) :)

எங்கே....... சொல்லுங்க பார்க்கலாம்...!! ஒரு கோடிக்கு எத்தன சைபர்???

butterfly Surya said...

ராஜகோபால்.. Cool... மினிமம் 4 மைனஸ் ஓட்டு நிச்சயம்.

butterfly Surya said...

எங்கே....... சொல்லுங்க பார்க்கலாம்...!! ஒரு கோடிக்கு எத்தன சைபர்???///////// hahahahaha.. பாலா, வா ராசா வா..

பாலா said...

தூக்கமா வருது பூச்சி..!! ஆனா.. அந்த ஜோக் எல்லாம் படிச்சிட்டு... தூங்க முடியலை!! :) :)

butterfly Surya said...

இரு.. இந்த வருடம் இன்னும் நிறைய ஜோக்கெல்லாம் இருக்கு..

Ashok D said...

Excuse me Boss... (என்னா...?).. U have a Tsext! message...(சொல்லிட்டு கெளம்பு....

பாலா said...

பூச்சி... வெய்ட்டிங்! வருஷ ஆரம்பம்மே... சூப்பரா இருக்கப் போவுதுன்னு.. ‘குறி’ சொல்லிட்டாங்களே! :)

///தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டுதிரிந்து கொண்டிருந்தேன்....///

மொதல்ல காப்பி ரைட் வாங்குங்க. இதை வைச்சே.. இலக்கியம் எழுதிடுவாங்க.

:) :)

CS. Mohan Kumar said...

செம ஹாட்டு மச்சி

Ashok D said...

நயந்தாராவே... சாரி நயமானவரே... அந்த நாமக்கல் யாருன்னு மெசேஜ் பண்ணவும்

Ashok D said...

//தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டுதிரிந்து கொண்டிருந்தேன்//

0 degreeyil வரும் வரியிது

VISA said...

முன்பிருந்தே ஒரு எழுத்தாளர்
"இணையத்தில் எழுதுபவர்கள் மேல் எனக்கு நம்பிக்கையோ உடன்பாடோ
இல்லை" என்று கூறுவார். இணையத்தில் எழுதப்படுபவை
எல்லாம் குப்பை என்று கூறுவார். ஆனால் அவர் மட்டும் தொடர்ந்து
இணையத்தில் எழுதி வருகிறார்.
அஞ்சு பைசாக்கு பிரயோஜனம் இல்லாத இந்த எழுத்தை
பலர் தங்கள் நேரம் உறக்கம் ஓய்வு எல்லாவற்றையும்
தியாகம் செய்து எழுதுகிறார்கள். அதை எல்லாம் அவர்
மொக்கை என்று வர்ணித்தால் எனக்கு மகிழ்ச்சியே.
நானும் ஒரு மொக்கை பதிவர் என்று சொல்லிக்கொள்வதில்
பெருமை படுகிறேன்.
என்னை பொறுத்தவரை எழுத்து ஒரு சுய இன்பம்.
அவர் வேண்டுமானால் ஆளப்பிறந்தவராக இருக்கட்டும்.
மொக்கை பதிவர் என்ற முறையில் நான் வாழப்பிறந்தவன்.
வாழ்ந்துவிட்டு போகிறோமே தலைவா.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

அவர் மட்டுந்தாங்க இலக்கியவாதி நீங்கல்லாம் மொக்கதான். ஏன்னா அவரோடது எதுவும் அந்த புத்தகத்தில் வரலை பாருங்க.அதுவே வந்திருந்தா அந்தப் புத்தகம் இலக்கிய சூழலில் கவனிக்கத்தக்க ஒரு படைப்பாக மாறியிருக்கும்.இவங்க என்ன கிறுக்குனாலும் தலைவர் போன `ஆயி'ன்னு வேடிக்கை பார்த்த கூட்டம் மாதிரி இவங்களை கொண்டாடனும் போலிருக்கு.நாப்பது ரூபாய்க்கு மொத்தமா கொடுக்கிற தமிழ் இலக்கிய சூழலில் கவனிக்கத்தக்க படைப்பிலக்கிய புத்தகம் எதுன்னு எனக்குத் தெரியும். வேணாம் விடுங்க. ஆனா ராஜு தம்பி சரியாத்தான் சொல்லிருக்கான்.ஜெலுசில் நல்ல மருந்துன்னு அதை உபயோகப்படுத்துற சில இலக்கியவாதிகள்சொல்லறாங்க.

கலையரசன் said...

நீங்க எல்லோரையும் "குறி" வச்சி தாக்குறீங்க தலைவா...

டம்பி ராஜூ! சண்டைக்கு வந்துடாத.. இந்த குறி அந்த குறியில்லப்பா!!

ஜெட்லி... said...

எனக்கு என்ன கமெண்ட் போட்ரதனு தெரியல அண்ணே....


ஆனா நீங்க கண்காட்சியில் சொன்ன விஷ்ணு கதை
உண்மையில் சூப்பர்.....

Ashok D said...

//விஷ்ணு கதை //
அது என்ன கவிதைன்னு உடனே சொல்லு ஜெட்லி

Unknown said...

தல,

உச்சிமண்ட சுர்ர்ர்ர்ர்ர்ன்னு ஒரு காரம்?

ஓண்ணுமே புரியல உலகத்துல!
என்னமோ நடக்குது! மர்மமாய் இருக்குது!

R.Gopi said...

//பத்திரிக்கையின் பெயரை சரியாக சொல்லுபவர்களுக்கு பூச்சி மார்க் விளக்கெண்ணெய் அரை லிட்டர் இலவசம்.//

//மொக்கை பதிவர்கள் என்று எழுதிய பிரகஸ்பதியுடன் யாரும் அவ்வளவாக கலக்கவில்லை. அவர் அதை விட மொக்கையாக இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். //

ஹா...ஹா...ஹா.... டிபிக்கல் தண்டோரா டச்....

//
நிறைய புத்தகங்கள் வாங்கினேன். பட்டியல் போடுவதாய் இல்லை. படித்து முடித்தவுடன் அதைப் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் நண்பர்களே!!//

வெயிட்டிங் தலைவா...

//சாருவுடன் இரண்டு முறை சோமபானத்தை பகிர்ந்து கொள்ள நேர்ந்தது. சற்றே திட்டமிடப்பட்ட தற்செயலான நிகழ்வு. அதைப் பற்றி ஏற்கனவே எழுதி விட்டேன். சிலரின் தனிப்பட்ட குணாதிசயங்களை பற்றி பேசினார். லத்தீன், தென் அமெரிக்கா இன்னும் பெயர் வராத எழுத்தாளர்களை பற்றி எழுதுகிறீர்களே ? நீங்கள் நிசமாவே படித்திருக்கிறீர்களா சாரு என்று கேட்டேன். முன்னால் இருந்த வெண்ணிலா மீது சத்தியம் செய்தார். வெண்ணிலா ஒரு வகை ஓட்கா..//

ஹா...ஹா... கலக்கல்.....

//மக்குபாய்.. மன்னிக்க.. ஜக்குபாய் இணையத்தில் வந்ததை நீங்கள் அறிவீர்கள். அது ஒரு பிரெஞ்சு படத்தின் ஈயடிக்காத காப்பி என்று பில்லா(பழைய) பேத்தியதை..மீண்டும் மன்னிக்க.. //

ஏன் தலை.... இப்போ நீங்களுமா??

//பாவம் அவர். ஒரு திரைப்படத்தில் சின்னதாய் ஒரு வேஷம் போட்டிருந்தால் அவருக்கு எல்லா சலூகைகளும் கிடைத்திருக்கும். ரம்பாவையெல்லாம் நினைத்துப் பாருங்கள். கேட்டவுடன் அப்பாயின்மெண்ட். காயங்களுக்கு உடனே ஆயின்மெண்ட்!!//

தியாகியின் நாட்டிற்கான தொண்டினை விட.... ரம்பாவின் தொடை ரொம்ப பெருசுப்பா.....

//
தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு
திரிந்து கொண்டிருந்தேன்....


மேற் சொன்ன வரிகளுக்கு நல்ல அர்த்தங்களூம் உண்டு. தப்பிதமாக கற்பித்து கொள்பவர்கள் இலக்கிய உலகத்திற்கு துரோகம் செய்பவர்களாகிறார்கள்.//

நான் நல்ல அர்த்தத்தில் மட்டுமே பார்த்தேன்... இதை தொடருங்கள்....

மொத்தத்தில் மானிடர் கலக்கல்............. வாழ்த்துக்கள்..........

கும்மி said...

நான் பேளப் பிறந்தவன்; மூத்திரம்விடமாட்டேன்"
இது தான் அந்தாளு வைக்க வேண்டிய டேக்லைன், ஆளு பார்த்தா கட்டுவெலைக்கு கலவை போடும் பெரியாள் மாதிரி இருக்கான்,
பேச்சு பார்த்தா, ஐஐஎம்ல எம்பிஏ படித்தவன் மாதிரி,துடப்பக்கட்ட.
கழுதைக்கு எதுக்கு சார் சிங்காரம்.
கிழவிக்கு எதுக்கு சார் ஜிமிக்கி?

சங்கர் said...

//தொட்டியிருக்கையில்
குப்பையை ஏன்
பக்கத்தில் போடுகிறார்கள்!?//

பக்கத்தில் யாரும் அமர்ந்திருந்தார்களா?

Unknown said...

மானிட்டர் பக்கங்கள் ரொம்ப சூடா இருக்குங்க..

மரா said...

///தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டுதிரிந்து கொண்டிருந்தேன்....///

தண்டோராண்ணே நீங்க தோளில தூக்கித் திரிந்தது ‘ஆடு’ தானே. எப்புடி கண்டுபுடிச்சோம் பாத்தீகளா? ’மானிட்டர் பக்கங்கள்’ மணிஜி பாரட்டுக்குறியவர்.

பா.ராஜாராம் said...

சார்,ஊர் வந்ததும் எழுப்பி விடுறீங்களா?

(ஒண்ணுமே புரியலை..ஒலகத்துல...)

vasu balaji said...

அடி! தூள் பரத்துங்க தலைவா:))

வால்பையன் said...

//மீண்டும் அவர் அங்கேதான்.//

வருத்தமா இருக்கு!

என்னை போன்றோர்கள் திருந்த தன்னை தானே வருத்தி கொள்கிறாரோ!?

ஈரோடு கதிர் said...

அதென்ன நாமக்கல்...

நம்ம ஊரு பக்கம் யார் அந்த ....!!!???

Romeoboy said...

\\பத்திரிக்கையின் பெயரை சரியாக சொல்லுபவர்களுக்கு பூச்சி மார்க் விளக்கெண்ணெய் அரை லிட்டர் இலவசம்//

விளக்கெண்ணை விலை எல்லாம் ரொம்ப அதிகம் தலைவரே. இதுக்கு வாட்டர் பாக்கெட் தரலாம்

\\நான் பார்த்தவரை யாரும் மொக்கை பதிவராய் தெரியவில்லை. ஓவ்வொருவரும் தனித்தன்மையுடன் ஷார்ப்பாகத்தான் இருந்தனர். மொக்கை பதிவர்கள் என்று எழுதிய பிரகஸ்பதியுடன் யாரும் அவ்வளவாக கலக்கவில்லை//

இது தானே உண்மை. கலக்கவில்லை என்பதற்கு பதில் கண்டுக்கவில்லை என்பதே விஷயம்

மானிட்டர் சூப்பர் ..

ஆரூரன் விசுவநாதன் said...

காரசாரமாகத்தான் இருக்கிறது மானிட்டர்.....

பித்தன் said...

enakku onnume puriyala

குப்பன்.யாஹூ said...

meesaikkaran your tamil is nice, r u writing posts,

அத்திரி said...

இந்த வாரம் ஏன் மானிட்டர் இவ்ளோ??? சூடா இருக்கு......... யாருப்பா அண்ணனை சூடாக்குனது

Beski said...

//தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு
திரிந்து கொண்டிருந்தேன்....//
அடேங்கப்பா...

Kumky said...

ஆஹா, மானிட்டர் அம்சமோ அம்சம்...

அடேங்கஃஃப்பா....
(வெ.ஆ.ஸ்டைலில்)

இரண்டு தடவைகள் பொருமையாய் படித்தேன்....நல்ல வில்லங்க ரசனை சாமி உங்களுக்கு...கூடவே நக்கலும்.

என்னதவம் செய்தேனோ இவர் நட்பை நான் பெருவதற்கு” என்றுதான் தோன்றுகிறது...


எல்லோரின் நினைவில் உறுத்திக்கொண்டிருக்கும் ”அந்த” நண்பரை பார்க்காமல் வந்த பின்னும் மனசு உறுத்திக்கொண்டேயிருக்கிறது..

ஞானி”தான் கஸ்டடி என்று கேள்விப்பட்டேனே...அதும் இல்லையா?
அவரவர் பாடு ஆயிரமிருந்தாலும் இவரை அப்படி விட முடியாதே...ஏதேனும் செய்ய வாய்ப்பிருக்கிறதா பாருங்கள்..மனசு பதைக்கிறது..