Monday, January 25, 2010

மானிட்டர் பக்கங்கள்------25/01/2010


ஆதவன் படத்தில் நடித்த சூர்யா, வடிவேல் மற்றும் இயக்குநர் ரவிக்குமார் வீடுகளில் வருமானவரித்துறையினர் ரெய்டு. நயன் தாரா தப்பி விட்டார். காரணம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். சந்துல சிந்துதான். ஆனால் ஆதவன் படத்தின் தயாரிப்பாளர் வீட்டில் சோதனை இல்லை. அவர் ஒரு ரூபாய் அரிசி வாங்க ரேஷன் கியூவில் நின்றதை ஒரு அதிகாரி பார்த்ததே காரணமாம்.

சக்கரத்தாழ்வாருக்கு நிறைய சக்தி உண்டு. அதுவும் மதுரை மோகூர் கோவிலுக்கு எக்ஸ்ட்ரா சக்தி என்று நம்பதகுந்த வட்டாரங்கள் கூறுகிறது.நானும் ஒரு முறை போயிருக்கிறேன். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். அவரவர் வினைக்கேற்ப பலாபலன்கள் கிட்ட பெறுகின்றனர். ஆதிசங்கர்? இவர் ஒரு திமுக எம்.பி. இவர் நெற்றியில் இருந்த குங்குமத்தை பார்த்து ஒருவர் கிண்டலடித்தார். என்ன அது இரத்தமா என்று? ஆனால் இந்த பகுத்தறிவு சூரியனின் மூத்த வாரிசு(இரண்டாவதின்) அதிரடி மன்னனாய் இருந்தவர் இன்று ஆன்மீக செம்மலாய் மாறி வருகிறாராம். நல்லதுதான். இவரே இப்படித்தான். வீரமணியே வீட்டுக்கே கால் கோள் பூஜை நடத்தினாராம். திருட்டு சைவைப்பூனைகள். அண்ணா பெயரை சொல்லி விநாயகசதுர்த்தி அன்று சேனல் ஆரம்பித்தவர்கள் அல்லவா! பையனை கண்டிக்க சொல்லுங்கள் பார்ப்போம்! மதுரை பற்றி எரியும் என்பது தெரியும் அவருக்கு. அப்புறம் இந்த தை முதல் நாளை எத்தனை பேர் தமிழ் புத்தாண்டாய் கொண்டாடினார்கள்?

கொஞ்சம் கல்கட்டா! நான் போனபோது அதுதான் பெயர். ஆனால் அப்போதே ஒரு டாக்ஸி டிரைவர் கொல்கத்தா என்றுதான் உச்சரித்தார். ஹவுராவில் இறங்கி லாட்ஜில் ரூம் போடும்போது மாடியிலிருந்து சில ரசகுல்லாக்கள் ஸ்வெட்டர் போட்டு இறங்கி கொண்டிருந்தனர்.தோல் பிசினஸ். சோத்துக்குத்தான் அலையவேண்டியிருந்தது. ஒரு ஓட்டலில் பூரி என்றவுடன் எகிறிகுதித்தேன். ஆனால் தொட்டுக் கொள்ள அவன் தந்தது அல்வா!!

அங்கு சைனா டவுன் என்று ஒரு ஏரியா. முற்றிலும் சீனர்கள். அவர்கள் வழிபாட்டு தலங்கள். சிக்கலான அந்த உணவு. சிலருக்கு தமிழும் தெரிந்திருக்கிறது. காரணம். அவர்களின் தோல் தொழில். இங்கு வாணியம்பாடி, நாகல்கேணி, ஆம்பூர் தொடர்புகள். என்னை அழைத்து போன நண்பரும் ஒரு டேனரியின் முதலாளி. ஒரு மொழிபெயர்ப்பாளானாக போனேன்.நீங்கள் மஜ்னு திரைப்படம் பார்த்தால் உங்களுக்கு தெரிந்திருக்கலாம். அந்த சின்ன மண் கப்பில் டீ கொடுப்பார்கள். கூடவே கொஞ்சம் இனிப்பும். சலங்கை ஒலியில் கமல் ரீயாக்‌ஷன் ஞாபகம் வருகிறதா? அந்த பானா…பானா..

சோனாகஞ்ச். மகாநதி மூலம் நிறைய பேருக்கு தெரியும். ஆனால் இன்னொரு இடம் போபசார். இரண்டு இடங்களிலும் தோல் பிசினஸ்தான். கையில் வில்லை கட்டியிருக்கிறார்கள். டாக்டர் சர்ட்டிபிகேட்டும் இருக்கிறது. துணி போட்டு குளிக்கலாம். இல்லை அவுத்து போட்டும். ரிஸ்க் இல்லை.நான் சும்மா அந்த இடத்தை சுற்றி பார்த்து விட்டு வந்தேன்.(நிசமா)

முக்கியமான மேட்டர். அங்கு டிராபிக் அதிகம். நம்மூர் மாமாக்கள் போல் வண்டியை நிறுத்தி அது ,இது என்று கேட்கவே முடியாது. காரணம். ஒரு வண்டி நின்றால் அவ்வளவுதான். சிட்டி ஜாம்.

நாங்கள் போனபோது ஒரு டிராம் லைனுக்கு நடுவே ஒரு போலிஸ் ஜீப், இரண்டு அம்பாசிடர் கார்கள் புகுந்து போயின. எங்கள் டாக்ஸி டிரைவர் சொன்னார். பாசுஜி போகிறார் என்று!அவ்வளவு எளிமையான மனிதர். ”ரெட் ராயல் சல்யூட் காம்ரேட்”

காஞ்சிபுரம் தேவநாதன் சிடி ஐந்து லட்சம் விற்பனையாகி சாதனை படைத்திருக்கிறது. அடுத்து என்.டி.திவாரியின் சிடியும் தயாராகி விட்டதாம்.அந்த சனியனை கிளிப்பிங்ஸ் மட்டும்தான் பார்க்க முடிந்தது. சிடியை கொண்டு வாங்கப்பா சீக்கிரம். நம்மூர் அமைச்சர்கள் சிடியும் இருந்தால் பார்க்கலாம். வரும்.

மீண்டும் ஆயிரத்தில் ஒருவன் பார்த்தேன். ராம்ஜியின் ஷோ. பி.சி. ஸ்ரீராமுக்காக திரையிடப்பட்டது. அன் கட் வர்ஷன்.அதில் பிசிக்கு பிடித்ததும் ரீமாதானாம். நான் விட்டு கொடுத்து விட்டேன்.போர்க்களம் நாயகிதான் இப்போதைக்கு. படம் சும்மா அதகளம்தான். கொஞ்சம் ராமயணம், மகாபாரதம். ப்ரூ காபி மாதிரி பர்பெக்ட் கலவை. அந்த கலர் டோன். நான் தாடிக்கு அடிக்கும் கார்னியரில் கொஞ்சூண்டு மருதாணி பவுடர் கலந்த மாதிரி. கிஷோரின் உடல் மொழியும், குரலும் படத்திற்கு மிகப்பெரிய பலம். நாயகியின் முகத்தையே சரியாக காட்டவில்லை. பொழைக்க தெரியாத இயக்குநர். கலை இயக்குநரை பாராட்டியே தீர வேண்டும். மீண்டும் பார்க்க தூண்டிய படம். வாழ்த்துக்கள் சரோஜ்!!


டிஸ்கி கவுஜை:

கூட்டத்தை வகுந்து

உள்ளே போனேன்!

நல்லவேளை! யார் செய்த புண்ணியமோ!

பெரிசா ஒன்னும் அடியில்லை

ஆங்காங்கே திருப்திகள்!

எனக்குத்தான் ஏதோ

ஏமாற்றம்??

31 comments:

மரா said...

//அவர் ஒரு ரூபாய் அரிசி வாங்க ரேஷன் கியூவில் நின்றதை ஒரு அதிகாரி பார்த்ததே காரணமாம்//
ஏன் இப்படி..

//”ரெட் ராயல் சல்யூட் காம்ரேட்”//
அருமையான மனிதர். நாம் எல்லோருக்குமே பெரிய இழப்புதான்.

//நான் சும்மா அந்த இடத்தை சுற்றி பார்த்து விட்டு வந்தேன்.//
நம்பிட்டோம்.

CS. Mohan Kumar said...

வாரத்துக்கு ஒரு ஹீரோயன் மாத்துறீங்க??

சங்கர் said...

//வீரமணியே வீட்டுக்கே கால் கோள் பூஜை நடத்தினாராம்.//

துணையெழுத்துக்கு மேலே புள்ளி இருக்கோன்னு நினைச்சிட்டேன் :))

எறும்பு said...

கூட்டத்தை வகுந்து

உள்ளே போனேன்!

நல்லவேளை! யார் செய்த புண்ணியமோ!

பெரிசா ஒன்னும் அடியில்லை

ஆங்காங்கே திருப்திகள்!

எனக்குத்தான் ஏதோ

ஏமாற்றம்??///


சோனாகஞ்ச் experience....

:)

மணிஜி said...

/மோகன் குமார் said...
வாரத்துக்கு ஒரு ஹீரோயன் மாத்துறீங்க?

தினமும் மாத்தனும் ஆசைதான்!

மணிஜி said...

///நான் சும்மா அந்த இடத்தை சுற்றி பார்த்து விட்டு வந்தேன்.//
நம்பிட்டோம்//

அந்த இடத்தை சுற்றல்லாம் முடியாது சுவாமி...

மணிஜி said...

/ சங்கர் said...
//வீரமணியே வீட்டுக்கே கால் கோள் பூஜை நடத்தினாராம்.//

துணையெழுத்துக்கு மேலே புள்ளி இருக்கோன்னு நினைச்சிட்டேன் :)//

சங்கர் ரசித்தேன். சூப்பர் கமெண்ட்!!

மணிஜி said...

// எறும்பு said...
கூட்டத்தை வகுந்து

உள்ளே போனேன்!

நல்லவேளை! யார் செய்த புண்ணியமோ!

பெரிசா ஒன்னும் அடியில்லை

ஆங்காங்கே திருப்திகள்!

எனக்குத்தான் ஏதோ

ஏமாற்றம்??///


சோனாகஞ்ச் experience....

:)//

போபசார்

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-))

செ.சரவணக்குமார் said...

கலக்கல் தலைவரே. பா.ராஜாராம் அண்ணன் உங்களோடு அலைபேசியில் பேசியதைப் பற்றி சிலாகித்து சொன்னார். மிக்க மகிழ்ச்சி. விரைவில் அலைபேசியில் அழைக்கிறேன்.

மணிஜி said...

இதுக்கு மைனஸ் ஓட்டு போட்ட சோனாகஞ்ச் மாமாவிற்கு வந்தனம்..

Paleo God said...

ஹவுரா ன்னா சொன்னாங்க ஹவுடா இல்ல..??

:))))

shortfilmindia.com said...

சோனாகஞ்ச் போய்விட்டு சும்மா வந்த தானை தலைவன் தண்டோரா.. வாழ்க..வாழ்க..

கேபிள் சங்கர்

Ramprasath said...

இரண்டாவது பாரா நச் .. தொடரட்டும் ஆப்புகள்

வரதராஜலு .பூ said...

//அவர் ஒரு ரூபாய் அரிசி வாங்க ரேஷன் கியூவில் நின்றதை ஒரு அதிகாரி பார்த்ததே காரணமாம்//

//அவர் ஒரு ரூபாய் அரிசி வாங்க ரேஷன் கியூவில் நின்றதை ஒரு அதிகாரி பார்த்ததே காரணமாம்//
//நம்பிட்டோம்.//

ரிபீட்டேய்

:-)

Ashok D said...

//சோனாகஞ்ச் போய்விட்டு சும்மா வந்த தானை தலைவன் தண்டோரா.. வாழ்க..வாழ்க..//

நானும் வழிமொழிகிறேன் :))

Raju said...

இந்த சங்கரு மட்டும் எங்க போனாலும் வடைய சும்மா சூப்பரா கவ்வுறாப்லப்பா..!
:-)

பா.ராஜாராம் said...

//அதில் பிசிக்கு பிடித்ததும் ரீமாதானாம். நான் விட்டு கொடுத்து விட்டேன்.//

நான் விட்டுத் தரலை.விலகுங்க பிசி.

:-)

தொடர்பு கொள்ள முயன்றேன்.தூங்கிட்டீங்களோ?

vasu balaji said...

அங்க பூரிக்கு அல்வா குடுத்தாங்களோ என்னமோ. இங்க பொரிச்ச பச்சை மிளகாய். சுர்ர்ர்ர்ர்ர்ர்ர்..

Unknown said...

மானிட்டர் இன்னிக்கு செம போதை..

அகல்விளக்கு said...

மானிட்டர் செம கிக்கு ........

நேசமித்ரன் said...

ஆத்தீ அதகளம்

க ரா said...

//அவர் ஒரு ரூபாய் அரிசி வாங்க ரேஷன் கியூவில் நின்றதை ஒரு அதிகாரி பார்த்ததே காரணமாம்//

கலக்கல்

ஜெட்லி... said...

//அவர் ஒரு ரூபாய் அரிசி வாங்க ரேஷன் கியூவில் நின்றதை ஒரு அதிகாரி பார்த்ததே காரணமாம்.
//

:))

ஜெட்லி... said...

//தோல் பிசினஸ்//


அங்கே தோல் பிசினஸ் எப்படி இருக்கு....??
ஆட்டு தோலுக்கு நல்ல மவுசா இல்ல மாட்டு தோலுக்கு மவுசா??

Paleo God said...

ஜெட்லி தானே பேரு அப்ப சைனீஸ் தோலுக்குத்தான் மதிப்பாம்.. போறீங்களா..?? :)

sathishsangkavi.blogspot.com said...

தோல் பிசினஸ் பத்தி ஆராய்ச்சி பண்ணிட்டிங்களோ.....

தாராபுரத்தான் said...

நெத்தி அடி கொடுத்துள்ளீர்கள்.

Kumky said...

:--)))

அப்பாலிக்கா வரேன்..

Pradeep said...

I am reading ur articles now a days...really good and somewhat diffrent compare to others.....

ரோஸ்விக் said...

ஹூக்ளி நதியும், அதன் மீதமைந்துள்ள ஹௌரா பாலமும் மிக அருமையாக இருக்கும். அங்கு தோல் வியாபாரம் மிகப் பிரசித்தியாம். எவ்வளவு நெருக்கடியான டிராபிக்கிலும் குறுக்கே குறுக்கே புகுந்து சென்றாலும்... ஒருத்தனுக்கு ஒருத்தன் பாடு-னு திட்டிக்கொள்வதில்லை :-)

சாலையின் மத்தியில் டிராம்ப் செல்வது நன்றாக இருக்கும். மண் கலையத்தில் டீயும், ரசகுல்லாவும் சுவையானது.

யாரையாவது தொலைக்கனும்னா ஹௌரா ரயில் நிலையத்தில் விட்டுவிட்டு வந்தால் போதும். :-))

மொத்தத்தில் மானிட்டரில் வழக்கம் போல கிக் அதிகம் தல.