Wednesday, March 31, 2010

மானிட்டர் பக்கங்கள்........31/03/10


புரட்சித்தலைவர் மறைவுக்கு பின் ஜானகி அம்மையார் கொஞ்ச நாள் கோட்டையில் கொலுவீற்றிருந்தார். எந்த புண்ணியவான் மதியூக மந்திரியோ கொடுத்த ஆலோசனையின் படி அம்மையார் கொண்டு வந்த புரட்சி திட்டம்தான் இலவச பல்பொடி திட்டம் . பல்பொடி கொடுத்தது பெரிய சங்கதியில்லை. கூடவே ஒரு பிட் நோட்டீஸ். அதை நான் படித்திருக்கிறேன். கைவசம் இப்போது இல்லை. அதில் குறிப்பிடப்பட்டிருந்தவை .

1. பல்பொடியை இடது உள்ளங்கையில் சிறிதளவு எடுத்துக் கொள்ளவும் .

2.வலது கை ஆள் காட்டி விரலால் தொட்டு பற்களில் வைத்து ,மேலும்,கீழும் தேய்க்கவும்.

3. பின், வாயினுள் விரலை விட்டு மேல் மற்றும் கீழ் பற்களை சுத்தம் செய்யவும்.

4.நீரைக் கொண்டு நன்றாக கொப்பளித்து வாயை சுத்தம் செய்து கொள்ளவும்.

நல்லவேளை ! புண்ணியவதி ஆட்சி பொசுக்குன்னு முடிஞ்சு போச்சு. இல்லைன்னா என்னவெல்லாம் கொடுத்திருப்பாங்களோ ?

பல்பொடின்னவுடனே தோணுது ! கோல்கேட்டின் விளம்பரம். வீட்டுக்கே வந்து பல் தேய்ச்சு விட்ருவாங்க போலிருக்கு. அதுவும் திரிஷா வந்தால் !! ஆட்டோமேட்டிக்கா “ஆ” காமிச்சிடலாம் . நம்ம உடற ஜொல்லுலேயே வாயும் கொப்பளிச்சுக்கலாம். ஆமாம் ! உங்க டூத்பேஸ்ட்ல உப்பு இருக்கா? மானங்கெட்டவனே, சொரணை கெட்டவனே ! உப்பு போட்டுத்தான் பல் தேய்க்கிறயா ?

ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி . ஒரு ஜாதகத்தின் குளோசப் . அதில் இருக்கும் கட்டங்களை காட்டி ஒரு டுபாக்கூர் ஜோசியர் “சனி இங்க இருக்கு. சுக்கிரன் இங்கதான் சுத்தறான்னு” பயம் காட்டிக் கொண்டிருந்தார். கீழே ஸ்கிரோலிங்கில் அதிமுக பெண்ணாகரத்தில் டெபாசிட் இழந்து கொண்டிருந்தது.

போன முறையை விட பாமக அதிக ஓட்டுக்கள் பெற்றது என்பதை சொல்லி இன்னும் மக்கள் மனதில் நாங்கள் இருக்கிறோம் என்று ஜம்பமடித்துக் கொண்டிருந்தார் தமிழ்குடிதாங்கி. கொஞ்சம் “வ” ட்டாரத்தை விட்டு வெளியில் வாங்கய்யா . உங்க பவிஷு தெரியும்.

மீண்டும் அங்காடி தெரு. எழுத்தாளர்களுக்கான திரையிடலில் பதிவர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார் வசந்தபாலன். அகநாழிகை வாசு, அப்துல்லா, பட்டர்ஃப்ளை சூர்யா,ஷங்கர், உண்மைத்தமிழன், கேபிள் சங்கர் அனைவரும் சென்றிருந்தோம். இரண்டாவது முறை பார்க்கையில் படத்தின் நீளம் பொருட்டாக தெரியவில்லை. அநேகமாக அதிகளவு உலகப்படங்களை நான் பார்க்காததால் இருக்கலாம். கும்பமேளாவில் கோட்டு,சூட்டு போட்டுக் கொண்டால் வித்தியாசமாக இருக்கும்தான். அதைப்போல் முன் தீர்மானத்துடன் படத்தை பார்த்து விமர்சனம் எழுதுவதும் என்று நினைக்கிறேன்.


ஒரு வானொலி விளம்பரம் . என் மகள் இன் ஜீனியரிங் படிக்க ஆசைப்படுகிறாள். பணத்துக்கு என்ன செய்வது என்று கவலை. அப்போதுதான் “பாரத் இன் ஜீனியரிங் காலேஜை பற்றி கேள்விப்பட்டேன். நுழைவுத் தேர்வு எழுதினால் 50 % ஸ்காலர்ஷிப் கொடுக்கிறார்கள். பாரத் இன் ஜீனியரிங் கல்லூரிக்கு நன்றி.

மேற்படி கல்லூரி ஆல் இந்தியா ஐஸ் வைப்போர் சங்கத்தலைவரும், பாராட்டு விழா செம்மலுமான திரு . ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமானது. நன்கொடை மேட்டரில் போன வருடம் டைம்ஸ் ஆஃப் இந்தியா அவர்களை தோலுரித்ததும் நினைவிருக்கலாம். ஆமாம்..அந்த கேஸ் என்னாவாச்சு? வள்ளுவர் கோட்டத்துக்கு அடியில் புதைத்து விட்டார்கள் !

வலது காலை முன்னால் வைக்கவும். இடது உள்ளங்கையை விரித்துக் கொள்ளவும். வலது உள்ளங்கையை குவித்துக் கொள்ளவும். மெல்ல இரண்டு கைகளையும் பின்னோக்கி கொண்டு போய், மீண்டும் முன் பக்கம் கொண்டு வரவும் . வலது கையால் இடது கையில் குத்தவும்.மெதுவாக தொடங்கி, படிப்படியாக வேகத்தை அதிகரிக்கவும். பின் இடது கால். வலது கை.. செய்து பாருங்கள். டென்ஷன் குறைந்து ரிலாக்ஸ்டாக இருக்கும். வாசு ஒரு முறை என்னை காத்திருக்க செயத போது இதைத்தான் செய்தேன். பக்கத்திலிருந்த ஒருவர் கேட்டார். “சூப்பர் . வேறு என்ன வித்தைகள்ளாம் தெரியும்”

“ம்ம்.. உக்கார்ந்து கிட்டேயும் போவேன். நின்றுக் கொண்டேயும் போவேன்” என்றேன். நாம் பேருந்தை சொன்னேன். ஆனால் அவர் வேறு அர்த்தம் எடுத்துக் கொண்டார் என்று நினைக்கிறேன். இப்பல்லாம் இப்படித்தான் நடக்குது.


டிஸ்கி கவுஜை :

புரிதலுக்கான அர்த்தம் ஒன்றுதான்
நேற்றும் ,இன்றும் ,நாளையும்
புரிவதும் பின் சேர்வதும்
பின் புரிவதும் பிரிவதும்
சரிதானே...

28 comments:

அகல்விளக்கு said...

மானிட்டர் கலக்கல்...

குறிப்பா டிஸ்கி கவிதை....

:-)

சங்கர் said...

//சரிதானே...//

ரொம்பச் சரி

VISA said...

உலக சினிமாவெல்லாம் வேண்டாம் தலைவரே. தமிழ் சினிமாலயே பிரமிக்க வைக்கிர படைப்பெல்லாம் இருக்கு. தமிழ் சினிமால கத்துக்கவே நிறைய இருக்கு.

vasu balaji said...

சரியானா சரிதான்:)

Romeoboy said...

படத்துக்கு என்னையும் குப்பிட்டு இருக்கலாம்ல தல :-(

T.V.ராதாகிருஷ்ணன் said...

படத்துக்கு என்னையும் குப்பிட்டு இருக்கலாம்

Jerry Eshananda said...

// “ம்ம்.. உக்கார்ந்து கிட்டேயும் போவேன். நின்றுக் கொண்டேயும் போவேன்” என்றேன். நாம் பேருந்தை சொன்னேன். ஆனால் அவர் வேறு அர்த்தம் எடுத்துக் கொண்டார் என்று நினைக்கிறேன். //
படுத்துக்கிட்டு போறதையும் சேர்த்து கங்கப்பு....

Unknown said...
This comment has been removed by the author.
இராகவன் நைஜிரியா said...

// “ம்ம்.. உக்கார்ந்து கிட்டேயும் போவேன். நின்றுக் கொண்டேயும் போவேன்” என்றேன். நாம் பேருந்தை சொன்னேன். ஆனால் அவர் வேறு அர்த்தம் எடுத்துக் கொண்டார் என்று நினைக்கிறேன். இப்பல்லாம் இப்படித்தான் நடக்குது.//

ஆஹா... :-)

Unknown said...

வருகிற "இந்திய மக்கள் தினத்தை" முன்னிட்டு ( அதான் ,ஏப்ரல் 1 முட்டாள்கள் தினம்), அன்னைக்கு ஒரு சிறப்பு பதிவு போட்டா என்ன ?

தராசு said...

//“ம்ம்.. உக்கார்ந்து கிட்டேயும் போவேன். நின்றுக் கொண்டேயும் போவேன்” என்றேன். நாம் பேருந்தை சொன்னேன். ஆனால் அவர் வேறு அர்த்தம் எடுத்துக் கொண்டார் என்று நினைக்கிறேன். இப்பல்லாம் இப்படித்தான் நடக்குது.//

ஆமா தல, எனக்கும் இப்பெல்லாம் இப்படித்தான் நடக்குது.

உண்மைத்தமிழன் said...

கவிதை புரிஞ்சதுண்ணே..! நன்றி..!

நேசமித்ரன் said...

டிஸ்கி கவிதை

எனக்கு ஒரு மினி 7 அப்

:)

வரதராஜலு .பூ said...

//ஆமாம்..அந்த கேஸ் என்னாவாச்சு? வள்ளுவர் கோட்டத்துக்கு அடியில் புதைத்து விட்டார்கள் !//

நல்லது.

//“ம்ம்.. உக்கார்ந்து கிட்டேயும் போவேன். நின்றுக் கொண்டேயும் போவேன்” என்றேன். நாம் பேருந்தை சொன்னேன். ஆனால் அவர் வேறு அர்த்தம் எடுத்துக் கொண்டார் என்று நினைக்கிறேன். இப்பல்லாம் இப்படித்தான் நடக்குது.//

:)

பனித்துளி சங்கர் said...

/////புரிதலுக்கான அர்த்தம் ஒன்றுதான்
நேற்றும் ,இன்றும் ,நாளையும்
புரிவதும் பின் சேர்வதும்
பின் புரிவதும் பிரிவதும்
சரிதானே...//////////

ஒரு மணிநேரமா இதை படிக்கிறேன் இதுவரை புரியவில்லை . அப்பறம்தான் என் நண்பன் சொன்னான் அடே
மாப்புல இது கதை இல்லையாமுடா . கவிதையாம் மேல பாரு மணிஜீ எழுதியிருக்கார் என்று .

பனித்துளி சங்கர் said...

"மானிட்டர் கலக்கல் .
பகிர்வுக்கு நன்றி !

பா.ராஜாராம் said...

:-)))

"உழவன்" "Uzhavan" said...

//பதிவர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார் வசந்தபாலன்//
 
இதையெல்லாம் யாருகிட்டயும் சொல்லிடாதீங்க :-)

ரவி said...

///மேற்படி கல்லூரி ஆல் இந்தியா ஐஸ் வைப்போர் சங்கத்தலைவரும், பாராட்டு விழா செம்மலுமான திரு . ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமானது.////


இந்த கல்லூரியில் சீட்டு, ப்ரொப்பஸர் லெக்சரர் வேலை எதாவது வேண்டும் என்றால் என்னை அணுகவும். எனக்கு தெரிந்தவரு தான் அவரு.

Rajeswari said...

:-))

Unknown said...

இப்பல்லாம் இப்படித்தான் நடக்குது

Unknown said...

//இந்த கல்லூரியில் சீட்டு, ப்ரொப்பஸர் லெக்சரர் வேலை எதாவது வேண்டும் என்றால் என்னை அணுகவும். எனக்கு தெரிந்தவரு தான் அவரு//

எல்லாருக்கும் தான் தெரிவாரு.. கண்ணாடி போட்டா மட்டுந்தான் தெரியிறதுக்கு அவரு என்ன 3-D படமா?

Unknown said...

படுத்துகிட்டும் போத்திக்கலாம்,போத்திக்கிட்டும் படுத்துக்கலாம், அப்பா சாமிகளா சென்னை பதிவர் சங்கமத்துக்கு போயிட்டு வந்தவிய்க எல்லாருக்குமே மந்திருச்சூட்டுட்டாய்க போல, நல்லா இருங்கப்பூ

Unknown said...

//.. முன் தீர்மானத்துடன் படத்தை பார்த்து விமர்சனம் ..//

:-)))

R.Gopi said...

தலைவா....

பதிவு வழக்கம் போல கலக்கல்... அந்த மானிட்டர் கவிதை பலே..

அங்காடி தெரு நன்றாக இருப்பதாக தெரிகிறது.... கண்டிப்பாக பார்க்கணும்...

// செந்தழல் ரவி said...
///மேற்படி கல்லூரி ஆல் இந்தியா ஐஸ் வைப்போர் சங்கத்தலைவரும், பாராட்டு விழா செம்மலுமான திரு . ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமானது.////


இந்த கல்லூரியில் சீட்டு, ப்ரொப்பஸர் லெக்சரர் வேலை எதாவது வேண்டும் என்றால் என்னை அணுகவும். எனக்கு தெரிந்தவரு தான் அவரு.//

உங்களுக்கு அவர தெரியும் ரவி... அவருக்கு உங்கள தெரியுமா... இல்ல விவேக் ஐ.ஜி.. மேட்டர் மாதிரி தானா!!?? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

மணிஜி said...

பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே...

ராம்ஜி_யாஹூ said...

நான் கிளம்பி ஊர்வந்து சேர்ந்தேன். என்னுடைய மனைவி எனக்கு ஒரு மணிமாலையை தந்தாள். அந்த மாலையை ஒரு சாமியார் வந்து கொடுத்ததாகச் சொன்னாள். அந்தச் சாமியார் எப்படி இருப்பார் என்று அவள் சொன்னது அச்சு அசல் சுவாமி சிவானந்தலகரி மகராஜ் மாதியே இருந்தது. எனக்குப் புல்லரித்து விட்டது.
நான் இதுவரை சொன்னதெல்லாம் தப்பு. இப்போது சொல்வதுதான் உண்மை. பிரம்மம் பிரபஞ்ச மனம் என்று ஏதும் இல்லை. ஏனென்றால் நான் பரம்பொருளை ரத்தமும் சதையுமாக நேரிலே கண்டு விட்டேன். தினமும் ஞானமார்க்கமாக அதனுடன் உரையாடிக்கொண்டிருக்கிறேன். சுவாமி சிவானந்தலகரி மகராஜ் தான் கண்கண்ட பரம்பொருள். ஓம் சிவானந்தலகரியே நமஹ!
கட்டுரையை மின்னஞ்சல் செய்ய(Email This Post)
1. 7 Responses to “மனிதராகி வந்த பரம்பொருள்!!”
2. ஜெமோ சார், என்ன இது எனக்கு ஒண்ணுமே புரியல ..
By Nandhan on Apr 1, 2010
3. Your comment is awaiting moderation.
ஏப்ரல் பூல் ஆக்கலியே நீங்க எங்களை.
By ramji_yahoo on Apr 1, 2010
4. அன்புள்ள ஜெமோ,
சிவானந்தலகரி ஒரு மனிதரா? – இல்லை
சிவானந்தலகரி ஒரு துறவியா? – இல்லை
சிவானந்தலகரி ஒரு மெய்ஞானியா? – இல்லை
சிவானந்தலகரி ஒரு அற்புதரா? – இல்லை, பிறகு
சிவானந்தலகரி ஒரு கடவுள்.
நன்றி.
By Venkatesh on Apr 1, 2010
5. உங்கள் பேரை கூகிள் செய்தால் இணையத்தில் கிடைப்பதில் 90 சதம் வசைகள் இத்தனை எதிரிகள் கிடைக்க எவ்வளவு உழைத்திருக்க வேண்டும் என நினைத்துக் கொள்வேன் இந்த கட்டுரையைப் படிக்கும்போது ஓரளவு யூகிக்க முடிகிறது
By gomathi sankar on Apr 1, 2010
6. எனக்கும் காண வேண்டும் என்ற ஆவல் உள்ளது.. சிறு பிள்ளைத்தனமாய் இருக்கிறதா?
By msrinivas. on Apr 1, 2010
7. தல, இது கதையா இல்லை நகைச்சுவையா இல்லை உண்மையா ?
By Prakash on Apr 1, 2010
8. கடவுளை எங்களுக்கும் காட்டித்தருவீர்கள் என நம்புகிறோம் .
By Arangasamy.K.V on Apr 1, 2010
9. அன்புள்ள ஜெமோ,
உங்கள் பழைய நூல்களையும் கட்டுரைகளையும் தயவு செய்து அழிக்க வேண்டாம். அது வழியாக தானே தங்கள் இந்த நிலைக்கு ஏறி வந்தீர்கள்? அதுவும் இருக்கட்டுமே.
By sitrodai on Apr 1, 2010

Unknown said...

ஏப்ரல் 1 என் இனிய
" இந்திய மக்கள் தின" வாழ்த்துக்கள்.
இந்த உலகத்தை காப்பாற்ற முழு முயற்ச்சியில் இருக்கும் ஆற்காட்டாரை பேட்டி எடுத்ததற்கு நன்றி. இந்த உலகமே அஞ்சும் Global Warming பிரச்னைக்கு தனி ஒரு மனிதனாக போராடும் ஆற்காட்டார் வாழ்க. கரன்ட் இருந்தா, வீணா லைட் எரியும், பேன் ஓடும், Ac ஓடும் , மக்கள் வேல செய்வாங்க....உலகம் சூடாவும். அதான் கரன்ட்ட கட் பண்றாரு.
தயவு செய்து அவருக்கு எல்லோரும் ஆதரவு தெரிவித்து, அவரை ஊக்குவிக்கவும். இதே ரீதியில், ஒரு மாதம், ஒரு வருடம் கரன்ட்டை நிறுத்தி சாதனை செய்தால், கின்னஸ் புக்கில் சாதனை வர வாய்ப்பு உள்ளது.எல்லோரும் டாஸ்மாக்கில், பாஸ்மார்க் வாங்கன குடிமகனாவே இருப்போம். மறக்காம மானாட மயிலாட பாருங்க . ( வேற என்ன பண்ணறது.. எல்லாம் வயிற்றெச்சல் தான் )