Thursday, March 18, 2010

பிறிதொரு சரித்திரம்...........



காலம் கடந்து நிற்கும்

புதினமொன்றை வாசிக்க

ஆரம்பித்திருந்தேன்

கடைசி வரியிலிருந்து


குருதிப்புனலில் தொடங்கும்

சரித்திரம் அது

பின் வாசிப்பில்

இரத்தக்கறைகள் சற்றே

உலரத்தொடங்கியிருந்தன



கையகல சதைத்துண்டும்

சுருண்டிருக்கும் கற்றை முடியும்

அதன் கால் பாவி நிற்கும்

கைப்பிடி மண்ணும்தான்

இக்கோரத்தின் பிரதான பாத்திரங்கள்



அளவிலா ஆசைகளும், ஆணவமும்

இந்த அக்கினியில் நெய்யாக !



விழிப்பில் இருந்து மீண்டும்

உறக்கமும் அதற்குறிய கனவும் என்று

முன்னிரவு நோக்கிய பயணம் போல்

உணர்ந்தேன் அவ்வாசிப்பை


சிரசுகள் ஒட்டிக்கொண்டன

உடைந்த வாள்களும், ஈட்டிகளும்

கரங்களில் சதிராட்டம்


நறுமணத்தை நுகர ஆரம்பித்தேன்

கூடவே வந்த இன்னிசையையும்

என் உடல் பின்னோக்கி

இயங்க முடிந்தது

மெல்ல தலை திரும்ப தொடங்கியிருந்தது

முதல் அத்தியாயத்தின் முதல்

வரிக்கு வந்திருக்கிறேன்

ஆனால் தலைப்புதான் பொருத்தமில்லாமல்

முற்றும் என்று

17 comments:

பித்தனின் வாக்கு said...

முடிவுறாப் பயணங்கள், முற்றும் என்று சொல்வதால் முடிவது இல்லை. நல்ல கவிதை.

vasu balaji said...

முட்டி மோதிப் பார்க்கிறேன். இல்லைன்னா ஃபோன் தான்.:)

Ashok D said...

ஆங்... ரைட்டுங்கண்ணா.... :)

ஆர்வா said...

சே.. நானும் முயற்சி பண்றேன் இந்த மாதிரி அறிவுபூர்வமா எழுத வர மாட்டேங்குது.. நமக்கு வர்றது எல்லாம் ரொமான்டிக் விஷயமாத்தான் இருக்கு,

பா.ராஜாராம் said...

நல்லாருக்கு மணிஜி!!!

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான நினைவுகள்.. கவிதை ரொம்ப சூப்பர்.

நேசமித்ரன் said...

மொழிப் பிரவாளம் அண்ணே .

பொன்னியின் செல்வனை எந்தப் பக்கத்தில் பிரித்தாலும் வாசிக்கதுவங்கலாம்

பைபிளின் பிரித்த பக்கத்தின் வாசகம் அன்றைய நாளுக்கான வசனமாக பாவிக்கப் படுவதொப்ப மரணம் உணர்ந்து கொண்டே வாழ்தலும், மரணத்தேதி உணர்ந்து வாழ்தலும், அந்தந்த நாளில் துவங்குகிறது நேற்றை மறந்து நாளை நிச்சயமற்ற நாள்

கடைசி பக்கத்தில் துவங்கும் புத்தகம் போல

எப்பிடி transription நடக்குதோ அதே கலர் டோன்ல மொழியையும் தேர்ந்தெடுக்குறது பிடிச்சிருக்கு

Mohan said...

நல்லாருக்கு!

ச.முத்துவேல் said...

என்னோட 'கடைசிப் பக்கத்திலிருந்து' கவிதையில கொஞ்சம் மிஸ்ஸிங் இருக்குன்னு நினைக்கிறேன். அத சரியா வலுவா முடிக்க, உங்க சப்ஜெக்ட் நல்லா இருக்கும்னு தோனுது.ரொம்ப ஸ்ட்ராங்காவே இருக்குது கவிதை.

எதாவது வீடியோவ ரிவர்ஸ்ல ஓடவிட்டு பாத்தீங்களா?

Paleo God said...

இரண்டு சாலைகளுக்கு
இணைப்பாய் ஒரு குறுக்கு வழியில்
நடுவிலிருக்கும்
நான் தேடிச்சென்ற மகாமுனியின்
இருப்பிடத்தின் வழியெல்லாம் அகழி
வெட்டி தரிசனம் கிடைக்காதென
பூமி பிளந்து சொன்ன வெளி மொழியில்
கல் இடறி விழாமல் நான்
மவுனம் தாங்கி திரும்பினேன்..!!

பத்மா said...

வாழ்க்கையும் சில சமயம் சிலபேருக்கு இறுதியிலிருந்து துவங்குகிறது .ஒரு முற்றும் அது எதற்கோ ஆரம்பமாக கூட இருக்கலாம் .
நல்ல வார்த்தை தெரிவு .
வாழ்த்துக்கள்

ரோஸ்விக் said...

புரியல அண்ணா...
(பேசாம புரிஞ்சது மாதிரி ஓடிறவா ?) :-))

Romeoboy said...

ஹி ஹி ஹி .. எப்பயும் போல இதுவும் புரியல ...

மணிஜி said...

புரிஞ்சும் ஒன்னும் சொல்லாம போனவங்களுக்கும், புரியாம எதோ சொல்லிட்டு போனவங்களுக்கும், போன் பண்ணி என்னையும் குழப்புனவங்களுக்கும் நன்றிகள்...

பத்மா said...

அப்போ நாங்கெல்லாம் புரியாத தால கமெண்ட்ஸ் போட்டோம் ன்னு சொல்றீங்களா:) அப்போ நானும் புரிஞ்சும் பின்னூட்டம் போடாத க்ரூப்ல சேரலாம்னு இருக்கேன் .ஒரு கெத்தாவது இருக்கும்ல? :))

மணிஜி said...

/padma said...
அப்போ நாங்கெல்லாம் புரியாத தால கமெண்ட்ஸ் போட்டோம் ன்னு சொல்றீங்களா:) அப்போ நானும் புரிஞ்சும் பின்னூட்டம் போடாத க்ரூப்ல சேரலாம்னு இருக்கேன் .ஒரு கெத்தாவது இருக்கும்ல? :))///

அறிந்தும், அறியாமலும், தெரிந்தும், தெரியாமலும், புரிந்தும்,புரியாமலும் சொல்லிட்டேனுங்க!

பத்மா said...

நீங்க பெரிய ஆள்ன்னு அப்புறம் தான் தெரியவந்தது .என் உளறலை எல்லாம் பொருட்படுத்த வேணாம் ஜி