Thursday, April 1, 2010

நியாபகம் வருதே.....




மீண்டும் கடுமையான மின்வெட்டு அமலாகிவிட்டது. அதெல்லாம் ஒரு பிரச்சனையில்லை. தமிழக மின்துறை அமைச்சர் திரு.ஆற்காடு வீராசாமிக்கு நியாபக மறதி அதிகமாகிவிட்டதாம். யார்,யார் பெயரில் என்ன என்ன வாங்கி போட்டிருக்கிறோம் என்பதே மறந்து போய்விட்டதால் சம்பந்தபட்ட பினாமிகளுக்கு கொண்டாட்டம் என்று பத்திரிக்கையில் செய்தி வந்திருக்கிறது. ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்தால் சரியாகலாம் என்று மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்கள். பாதி ட்ரீட்மெண்டில் கரண்ட் போகாமல் பார்த்துக்கங்க சாமிகளா! எதற்கும் இருக்கட்டுமே என்று முன்னர் அவர் எங்களுக்கு அளித்த பேட்டியை மீண்டும் வெளியிடுகிறோம்.


1. உங்க பெயர் சொல்லுங்க.. உங்க தொழில் என்ன?

வீராசாமி..அப்புறம் ஆற்காட்டார்...பெரியார் கனவில் வந்து சொன்னதால வீராஸ்வாமின்னு மாத்திக்கிட்டேன்..

எங்கப்பா விசிறி வியாபாரம் பண்ணாரு..நானும் அமைச்சராகறதுக்கு முன்னாடி மெழுகுவர்த்தி வித்துகிட்டிருந்தேன்...



2.கடைசியாக அழுதது எப்பொழுது?

மானாட,மயிலாட பார்த்துகிட்டிருந்தப்ப கரண்ட் போயிடுச்சு..அப்ப அழுதுட்டேன்...அப்புறம் தலைவர்..எழுதற படத்தோட கதையை கேட்டவுடனே அழுகை வந்துச்சு..மக்களை நினைத்து..


3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

தெரியலையே..நா எழுதி ரொம்ப நாளாச்சு...


4).பிடித்த மதிய உணவு என்ன?

கரண்ட் இருக்கிறப்பவே பிளக் பாயிண்ட்ல கையை வச்சு சார்ஜ் ஏத்திக்குவேன்..அதான் பிடிக்கும்..



5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

அது “மாட்லாடறவங்களை”பொறுத்து மாறும்..



6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

வியர்வைல குளிக்க பிடிக்கும்


7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

நெற்றியை...வேர்த்திருக்கிறதான் பார்ப்பேன்...


8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடிச்ச விஷயம்: வியர்வையே சிந்தாம சம்பாதிக்கிறது..
பிடிக்காத விஷயம் : சரியா கேக்கலை...


9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

இந்த கேள்வி தேவையா?


10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

தாமஸ் ஆல்வா எடிசன்...


11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

கும்மிருட்டுல உக்கார்ந்திருக்கேன்..அதனால........


12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

சம்சாரம்...அது மின்சாரம்.....


13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

வேற என்ன கறுப்புதான்


14.பிடித்த மணம்?

வியர்வை நாற்றம்...


15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

விஜயகாந்த்......நல்லா திட்டற மாதிரி நடிப்பாரு....


16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?

கலைஞர்தான் அனுப்பினார்..1,2,3 எண்றதை பத்தி ஒரு பதிவு போட்டிருந்தார்..அப்படியே ”ஷாக்”காயிட்டேன்....


17. பிடித்த விளையாட்டு?

வீட்டுக்குள்ள லைட்டை போட்டு அணைச்சு,திருப்பி போட்டு அணைச்சு விளையாடுவேன்...


18.கண்ணாடி அணிபவரா?

ஆமாம்... “பவர்” கிளாஸ்


19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

கறுப்பு வெள்ளைப் படங்கள்தான் பிடிக்கும்


20.கடைசியாகப் பார்த்த படம்?

மின்சார கனவு.........


21.பிடித்த பருவ காலம் எது?

வெயில் காலம்


22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்:

ஆற்காடு பிரியாணி செய்யறதை ஒரு நவாப் எழுதியிருக்காரு..அதை படிச்சுகிட்டுருக்கேன்..


23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

காலைல 3 வாட்டி....சாயந்திரம் 3 வாட்டி....


24.உங்களுக்கு பிடித்த நகைச்சுவை எதாவது.

நான் டெய்லி பேசறதே நகைச்சுவைதான்..இருந்தாலும் ஒண்ணு சொல்றேன்...

ராமுவும்,சோமுவும் சந்தித்து கொண்டார்கள்.அதில் ராமு கையில் பை வைத்திருந்தான்.சோமு கேட்டான்..”எங்க கடைக்கா? அதற்கு ராமு “இல்லை,இல்லை கடைக்கு என்றான்..உடனே சோமு”ஒஹோ நான் கூட கடைக்குத்தான் போறியோன்னு நினைச்சேன்னான்”


25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

அறிவாலயம்தான்..முக்கியமான டெல்லி மீட்டிங்னாகூட செகரட்டரிதான் போவார்.....


26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

நீ பத்திரிக்கை படிக்கிறதில்லையா?


27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

பல்பும்,ஃபேனும்தான்


28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

சர்தான்...உன் பியூசை புடுங்கினாத்தான் சரிப்படுவே..


29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

நெய்வேலி.......


30.எப்படி இருக்கணும்னு ஆசை?

காற்றாட சட்டையெல்லாம் அவுத்து போட்டுட்டு...


31.கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?

கிரண்டர்ல மாவாட்டறது...


32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?

புழுக்கம்தான்

16 comments:

vasu balaji said...

தொரகினாடு தொங்கா:))

மங்குனி அமைச்சர் said...

நல்ல வேல , இவர டாஸ்மாக் அமைசர் ஆக்கல?

butterfly Surya said...

மணிஜீ.. அனுபவ கதைகள் எழுதவும்

சைவகொத்துப்பரோட்டா said...

கலக்கல்.

Cable சங்கர் said...

மல்லி ரிப்பீட்டு அண்டே கூட ஈ சிட்சுவேஷன்லோ. பாகனே உந்தி..

சங்கர் said...

//10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

தாமஸ் ஆல்வா எடிசன்...//

எடிசன் பக்கத்துல இல்லாததுக்கு இவரு சந்தொஷமில்ல படணும்

ஆடுமாடு said...

//தமிழக மின்துறை அமைச்சர் திரு.ஆற்காடு வீராசாமி//

ஸாரி, தமிழக மின்வெட்டுத்துறை அமைச்சர்?

Jerry Eshananda said...

மின்வெட்டு த்துறை அமைச்சர் வாழ்க.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

கலக்கல் கேள்வி பதில்..

பாக உந்தி சார்..

க ரா said...

நடத்துங்க. நடத்துங்க.

உண்மைத்தமிழன் said...

காது மேட்டரை தவிர்த்திருக்க வேண்டும்..!

பெசொவி said...

Soopparappu...!

(I have referred you in my 50th Post. Pl. visit my blog, Thanks!)

ரவி said...

தொங்கனா கொடுக்கா. ஆட்டோ ச்சேசி ஸ்ச்சம்பேஸ்தாரு !!

ரோஸ்விக் said...

சமதானம் அன்னி பாகுந்தி... ஏம் செப்பாலனி கரக்ட்கா தெளுசுக்குன்னாடு...

Indian said...

//காது மேட்டரை தவிர்த்திருக்க வேண்டும்..//

Repeat.

Indian said...

திமுக ஆட்சிக்கு வந்தபோது, முந்தைய அதிமுக அரசு மின் திட்டங்கள் எதையும் செயல்படுத்தாததால் (long gestation period) இப்போது மின்சாரப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்றார். சரி, இனி அடுத்த அரசு இவரைக் குறை சொல்லாத வண்ணம் எத்தனை மின் திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்?