இது சாதாரண வாழ்க்கை :
............................................................................................................................................................................
மெண்டோஸ் வாழ்க்கை :
ஸ்கார்ப்பியோ மெலிதாக உறுமி கொண்டிருந்தது. சீரான ஏசி குளுமை. டின் சவுண்டு சிஸ்டம் அலறிக்கொண்டிருந்தது. ஜாக்சனின் டேஞ்சரஸ். ஷிவாஸ் ரீகல் சுகத்தில் தூங்கி கொண்டிருந்தவன் லேசாக கண்களை திறந்தான். ஏரிக்கரையோரம் வண்டி நின்றது. இறங்கினான். வயிற்றை கலக்கியது. நல்ல காற்றோட்டமான இடம்தான். யாருமேயில்லை. ஜீன்சை கழற்றி அமர்ந்தான்.
................................................................................................................................................................................
பின்நவீனத்துவ வாழ்க்கை :
பிரம்ம முகூர்த்தம் . உஷத் கால பூஜை வேளை. அமானுஷயமான அதிகாலை இருள். நிலவின் விழித்திரைகள் மெல்ல மூடத் தொடங்குகிறது. தூரத்தில் தெரியும் நிழல். நீண்ட கடும் கோடை போல் நடை. சற்று அருகில் தெரிய ஏனோ நிழல் சுருங்குவது போல் ஒரு மாயத்தோற்றம். நீட்சியின் ஆயாசம் வெளிப்படுகிறது. சீற்றமில்லா அலைகளுடன் சிணுங்கும் ஏரி. கருவில் இருக்கும் சிசுவாய் மடங்கி காட்சியளிக்கிறான் அவன். கால்மடிந்து தவக்கோலம் பூணுகிறான். சற்றே கழிகிறது ஜாமம். நீரில் முன்னும், பின்னும் நீந்தும் அன்னமாய் அவன் நிழல் மாறுகிறது. துடுப்பாய் இயக்குகிறான் கைகளை. மாயசிரிப்பொலி நீரில்.
19 comments:
நாங்களும் வந்து
"இருந்துட்டு "
ஒட்டு போட்டுட்டு
கெளம்புறோம்...
ஆஹா!!! நன்றாக "இருந்தது" அண்ணே.
ஒ.. மகசீயா... ஒஓ...மகசீயா
தலைவரே,
வர வர உங்க ஸ்டைலே மாறிப்போச்சு. நல்லா இருக்கு.
கஷ்டம்டா சாமி
அண்ணே மணீ அண்ணே.. எப்படிங்க இதெல்லாம்...தாங்க முடியலை
kalakkalpaa...
எல்லா இருத்தல்களிலும்
ஒரே பின்விளைவு
அடிவயிறு லேசாகிறது.
உங்கள் பதிவுகளில்
இருவேறு பின்விளைவுகள்.
மனதுக்கு கண்முளைக்கிறது
கண்ணீர் விட.
அல்லது,
பல் முளைக்கிறது.
ஈ காட்டிச் சிரிக்க!!!
"கலக்கல்" மணிஜி(ஜீ)
அண்ணே ஜெமோ பின்நவினத்துவம் என்றால் என்ன ? என்று ஒரு பதிவு எழுதினாரு , அதை படிச்சு மண்டை காஞ்சி போனதுதான் மிச்சம். நீங்க இவ்வளவு சுலபமா சொல்லி அசத்திடிங்க அண்ணே ..
"பின்னாடி"
போறதுதான் பின்நவீனத்துவமா?!?!
பஸ்ட்டு ரெண்டு ஓகே , இந்த மூணாவது ......( டேய் மங்குனி உனக்கு இன்னு ஞானம் பத்தலடா , இன்னும் பயிற்சி வேணுமோ ?)
மணிஜி!! மனிதரல்ல நீர்!! தெய்...
ரசிக்க முடிகிறது 'கக்கா' வாயினும் வித்தியாசப் படுத்திய நடையழகு
இருந்திருந்தாப்ள மோட்டி பிடிச்சுக்கிருமே உமக்கு.'உக்காந்து' யோசிப்பியளோ...
:-))
மோனி said...
நாங்களும் வந்து
"இருந்துட்டு "
ஒட்டு போட்டுட்டு
கெளம்புறோம்...
:-))))))
”பின்”னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே!!
மணிஜி நான் "வாழும் காலை " னு ஒரு பதிவு போட்டு இருக்கேன், பார்த்திட்டு உங்கள் கருத்தை சொல்லுங்க, கொஞ்சம் உங்கள் பதிவோட related அதான்
:)).போய்ட்டு வந்த கையோட தட்டினதோ?
ஓவரா ‘இருந்தா’ இப்படித்தான்
Post a Comment