சாயந்திரம் சீக்கிரம் வாங்க. எங்கப்பாவை பார்த்துட்டு வரலாம்.
நானுமா?
ஆமாம். கார்ல போகணும்!
வரச்சொன்னாரா?
கூப்பிட்டாத்தான் போகணுமா? எனக்கு உரிமையில்லையா?
அதில்லை. அழையாம போயிட்டு அவமானம்தான் மிஞ்சும். அப்புறம் ஒரு வாரத்துக்கு மூஞ்சியை தூக்கி வச்சு கிட்டிருப்ப. ஏற்கனவே லட்சணம் !!
இந்த மூஞ்சிக்குத்தானே அந்த அலை அலைஞ்சீங்க. சீக்கிரம் வர வழியை பாருங்க.
அவள் சொன்னது உண்மைதான். ஆனா அது அப்போடின்னு சொல்ல முடியுமா? திருமணமாகி இத்தனை வருடத்தில் மாமனார் வீட்டுக்கு ஒரே ஒரு முறைதான் போயிருக்கிறேன். அதுவும் அழையா விருந்தாளியாகத்தான். செளக்கியமா என்று ஒற்றை வார்த்தையுடன் முடித்து கொண்டு விட்டார். திமிர் என்று சொல்ல ஆரம்பித்து பிடிவாதக்காரர் என்ற பட்டம் சூட்டி இப்போதெல்லாம் வைராக்கியம் அதிகம் என்பதாக அனுமானம் செய்து கொள்கிறேன். எனக்கு ஒன்றுமில்லை. அலம்பி கவிழ்த்து ரொம்ப நாளாச்சு. மனைவிதான் பாவம். இத்தனைக்கும் இவள் என்றால் அவருக்கு உயிர்.
மாமனார் வீடு சிட்லபாக்கத்தில் இருக்கிறது. மாடியில் மச்சினி குடும்பமும், கீழ் போர்ஷனில் மாமியார், மாமனார் இருவர் மட்டும். வெளியில் எங்கும் போவதில்லை. அதிகபட்சம் மருத்துவர் வீடு இல்லையென்றால் கோவில். மச்சினி என்னுடன் நன்றாக பேசுவாள். சகலையும் பேசுவார். எனக்குத்தான் புரியாது. உலக பொருளாதாரம் புண்ணாக்கு இத்யாதிகள். சினிமா, கதையெல்லாம் அவருக்கு காத தூரம்.
அப்பாவுக்கு பாசந்தின்னா உயிர் என்றாள் மனைவி. வாங்கி கொண்டோம். கொஞ்சம் பழங்கள் மற்றும் பூ..
வீட்டு வாசலை கார் நெருங்கும்போதே கீழ் போர்ஷனில் விளக்கு அணைக்கப்பட்டது. எதிர்பார்த்ததுதான். ஒரு கேள்விக்குறியுடன் மனைவியை நோக்கினேன்.
பின்ன நான் செஞ்ச காரியத்துக்கு ஆரத்தியா எடுப்பாங்க என்றாள்.
அப்புறம் எதுக்குடி வரணும்?
நான் அவரை பார்க்க வரலை. எங்க அக்காவை பார்க்கத்தான் வந்தேன்.
அப்ப பாசந்தி?
அதை கொடுத்துட்டு போயிடலாம். சாப்பிடலைன்னா தூக்கி வீசட்டும்.
மாமியார் மெல்ல மாடியேறி வந்தார். என்னையும் போக கூடாதுன்னு சொன்னார். எனக்குத்தான் மனசு கேக்கலை.
அப்பாவுக்கு இன்னும் கோபம் போகலையாம்மா?-மனைவி
கட்டை வேகற வரைக்கும் தீராது. நானும் எவ்ளவோ சொல்லிட்டேன். நீயும் உன் பொண்ணு கூடவே போயிடுன்னுட்டார்.
அலுவலகம் போன தகப்பன் வீடு திரும்பும்போது மகள் வீட்டில் இல்லையென்றால் எப்படியிருக்கும்? திட்டமிட்டு செய்யவில்லை. தவிர்க்க முடியாமல் நடந்துவிட்டது. அதற்கும் உங்கள் அணுகுமுறையும் காரணம் என்று ஆயிரம் சொல்லியும் பலனில்லை. மகள் பிறந்த பிறகு கொஞ்சம் சரியாவது போல் இருந்தது. என்ன நினைத்தாரோ ! மீண்டும் வேதாளம் மரத்தில் ஏறிக்கொண்டது.
காஃபி குடித்தவுடன் புகைக்க வேண்டும் போலிருந்தது. சகலையை வருகிறீர்கள் என்றேன். நோ...நோ.. நான் விரதத்தில் இருக்கிறேன் என்றார்.
அருகிலேயே இருந்த கடையில் சிகரெட் வாங்கி பற்ற வைத்தேன். மெல்ல மாமனார் வந்து கொண்டிருந்தார். அவரமாக அணைத்துவிட்டு பவ்யமாக நின்றேன்.
நீங்க கொஞ்சம் காரெடுத்து கிட்டு வர்றீங்களா? வெளியில் போயிட்டு வரலாம்.
காரை எடுத்துக்கொண்டு வந்தேன். பின்னாடி செளகர்யமாக உட்காருங்களேன் என்றேன்.
இல்லை . பரவாயில்லை. முன்னாடி உக்காரத்தான் எனக்கு பிடிக்கும். டிரைவிங் கிளாஸ் போனீங்களா?
இல்லை மாமா. கார் வாங்கி நானேதான் கத்துக்கிட்டேன்.
நீங்க வர்றச்சே பாத்தேன். அவளுக்கும் கார் ஓட்ட கத்துக்கொடுக்கிறதுதானே ! ஆனா அவளுக்கு சைக்கிளே ஓட்ட வராது. அவ்வளவு பயம் ! உன் கூட ஓடி வரதுக்கு மட்டும் எங்கேயிருந்து தைரியம் வந்ததுனுதான் தெரியலை !
அது தான் கண்மூடித்தனம் மாமா !
எப்படி அவளுக்கு இந்த சீட் பத்துது. சின்னதுலேர்ந்து அவ கொஞ்சம் பப்ளிமாஸ்தான். அவளை ஸ்கூலுக்கு கார்லய கொண்டு விடறீங்க?
இல்லை மாமா. ஸ்கூட்டர் இல்லைன்னா நடந்து போயிடுவா .
நடக்கறதுதான் நல்லது. பாசந்தி வாங்கிட்டு வந்தாளா?
நான் என்ன சொல்வதுன்னு மெளனமாக இருந்தேன்.
ம்ம்...ஆனா நீங்க சாபிடுவீங்களா?
என் பொசிஷனில் நீங்க இருந்தா என்ன பண்ணுவீங்க?
தெரியலை !
கவலைப்படாதே ! உன் பொண்ணு அப்படி பண்ண மாட்டா?
எப்படி சொல்றீங்க?
அவ அம்மா அவஸ்தையை பாக்கிறா இல்லை!
இல்லை மாமா! காதலை பத்தி நாம ஒன்னும் சொல்ல முடியாது. என்ன வேணுமின்னா நடக்கலாம்.
சரி. நான் நடந்து போயிக்கிறேன். அவ கிட்ட ஒன்னும் சொல்ல வேண்டாம்.
ஏன் மாமா ?
இன்னும் எனக்கு கோபம் தீரலைன்னு மட்டும் சொல்லிடு. பாத்து காரை ஓட்டுங்க. அவளுக்கு சைனஸ் பிரச்சனை எப்படியிருக்கு ? மைலாப்பூர்ல ஒரு நேச்சுரோபதி டாக்டர் இருக்கார். அவர் கிட்ட காமிங்க..
மீண்டும் நான் மனைவியை அழைத்துக்கொண்டு கீழிறங்கும்போது விளக்குகள் அணைக்கப்பட்டிருந்தது. ஜன்னல் வழியே இரண்டு கண்கள் பளபளப்பது போல் பிரமை.
கையில் ஏதோ பிளாஸ்டிக் கவர் வைத்திருந்தாள்.
என்ன அது ? பொறந்த வீட்டு சீதனம் என்றேன்..
வீட்டுக்கு வந்தவுடன் பிரித்து காட்டினாள்.
“பொருள் விளங்கா உருண்டைகள்”
கையில் ஏதோ பிளாஸ்டிக் கவர் வைத்திருந்தாள்.
என்ன அது ? பொறந்த வீட்டு சீதனம் என்றேன்..
வீட்டுக்கு வந்தவுடன் பிரித்து காட்டினாள்.
“பொருள் விளங்கா உருண்டைகள்”
46 comments:
அட்டகாசம்.. தண்டோரா..
அட்டகாசம்..
Me two vote
எங்க ஊர்ல, பொருள் விளங்கா உருண்டை ஈஸியா உடையாது, உங்க ஊர்லயும் அப்படிதானா
நல்லாயிருக்குங்க..
அற்புதம்........அனைத்து கதாபாத்திரங்களுமே இயல்பாக வைத்து ஒரு கதை..........மிகவும் அருமை!
அருமை தலைவா அருமை. வேகமான ஒரு விளம்பரப்படம் பார்க்குறாப்ல இருந்திச்சு. நச்சுன்னு.
இதுதான் ஜி எண்டர் கவிதை. அப்படியே உள்ள புகுந்து உலுக்குது. எப்புடிங்க?
அட்டகாசம்
வெரி வெரி நைஸ்
சீக்கிரமா உங்களது படைப்புகளை புத்தகமாக வெளியிடுங்கள்ண்ணே..!
சிம்ப்ளி சூப்பர்ண்ணே..!
//சங்கர் said...
எங்க ஊர்ல, பொருள் விளங்கா உருண்டை ஈஸியா உடையாது, உங்க ஊர்லயும் அப்படிதானா
//
கவிதைக் கதைக்கு ஹைக்கூ பின்னூட்டம்.. :))
நைஸ்...பீலிங்க்ஸ்...
மனதிற்கு நெருக்கமான புனைவு. ஆனால், புனைவு தானா என்று சந்தேகம் வர வைக்கும் எழுத்து உங்களுடையது. இந்தப் புனைவின் பலமும் அதுவே...
பொருள் விளங்கா உருண்டைகள் - உருண்டையும் வட்டம்ன்னு தெரியாத :)
கலக்கிட்டீங்க தலைவரே... நாங்களும் நெறைய மேட்டரு தெரிஞ்சிக்கிட்டோம் ;)
புனைவா???
நல்லா எமோஷனலா இருக்கு.
கதைகள் வாழ்க்கையிலிருந்தே சுரண்டப்படுகின்றன.
நல்லா எழுதி இருக்கீங்க தல...
அதுவும் கடைசியில் வந்த அந்த “பொருள் விளங்கா உருண்டை” பலே ஜோர்....
கடைசி மிடறு அன்னம் கீறி...
ரொம்ப அருமை மணிஜி... :)
அருமையாய் எழுதி இருக்கீங்க மணிஜி.
இப்ப உங்க குரல் கேட்கணும் போல இருக்கு.'யோவ்..'என்று தொடங்கி சகட்டு மேனிக்கு திட்டுவீங்களே அந்த குரலை. :-)
புனைவுன்னு போட்டு யாரை ஏமாத்த விரும்புறீங்க? :-)
beatiful!
very nice
வேகமா சொன்னா பொருள் விளங்கா உருண்டையை பொள்ளங்கா உருண்டை என்ரு சொல்வோம் எங்கூருல.
அப்படியொன்னும் பொருள் விளங்கா உருண்டைகள் அல்ல. பொருள் விளங்கும் அவைதான். ‘மனைவி’ விளங்கிக்கொண்டாள். கணவனும் கொண்டான். ஆனால் இருவரும் ஒரு நாடகத்தை தங்களுக்குள்ளே அரங்கேற்றிக்கொள்கிறார்கள். cheating themselves.
தந்தை பாத்திரம் இயற்கை. தாய் வழக்கம்போல - இயற்கைதான்.
தாயும் தந்தையும் உயர்ந்து நிற்கிறார்கள். கண்வனும் மனைவுயும் தாழ்ந்து வீழ்கிறார்கள்: தங்களைப்பிறர் புரியவேண்டும்; ஆனால், பிறரை நாங்கள் புரியமாட்டோம்!
The father correctly pointed out that, 'உன் பொண்ணு அப்படி பண்ண மாட்டா?
எப்படி சொல்றீங்க?
அவ அம்மா அவஸ்தையை பாக்கிறா இல்லை!
'
The husband does not understand that the அவஸ்தை is in fact that of father's also. So, he is presumptive: இல்லை மாமா! காதலை பத்தி நாம ஒன்னும் சொல்ல முடியாது. என்ன வேணுமின்னா நடக்கலாம்!
The father hits the well known truism: Fathers will be fathers. The husband doest not catch it.
--------------------------------
Now about the writing
இலக்கணப்பிழைகள் இருக்கின்றன. ஒருமை-பன்மை விகுதியில். வாரப்பத்திரிக்கைகளுக்கு அனுப்பினால், அவர்கள் திருத்திக்கொள்வார்கள்.
தந்தை பேச்சு குழப்பமாக வருகிறது சிலவிடங்களில்:
நீங்கள், நாங்கள் என்று பேசியவர், சில இடங்களில் நீ, உன் எனச் சொல்கிறார். ஏன்?
------------------------------
Theme of a father's abiding concern for daughter. Hackneyed. But worthy of repetition.
Good story.
You know how to sustain the interest it and cap it with a single phrase climax, like O.Henry or Saki.
சூப்பர் உருண்டை !
அருமையான கவிதைக்கதை.
அருமை; அருமை!
கண்முன் நடப்பதுபோல் எழுத்து.
நன்றி @ கேபிள்..சிங்கை பயணம் சிறப்புற வாழ்த்துக்களூம்
நன்றி @ எறும்பு..ஜீனியர் எப்படியிருக்கார்?
நன்றி சங்கர்...உடைஞ்சாலும் விளங்கிடும்!
நன்றி சென்ஷி
நன்றி பெயர் சொல்ல விருப்பமில்லை.(சரி விட்ருங்களேன்)
நன்றி கிரம் கதை மன்னன் விசா!!
நன்றி பாலா சார்
நன்றி டி.வி.ஆர். சார்(உங்க கமெண்ட் கார்க்கிக்கு பிடிக்காது. நன்றி பரிசல்)
நன்றி வரதராஜீலு
நன்றி உண்மைத்தமிழன் அண்ணே!(நீங்க சிங்கப்பூர் போவலையா?)
நன்றி முகிலன்
நன்றி ஜெட்லி (எப்படிரா எல்லா படத்தையும் பாக்குறீங்க?)
நன்றி கேவிஆர். நிகழந்தது புனையப்பட்டது.
நன்றி அஷோக்..ஆமாம்யா...ஆமாம்!
நன்றி ரவிஷங்கர் சார்.
நன்றி செல்வா..தலைவர் எப்படி?
நன்றி கோபி சிஷ்யா !
நன்றி புரியறாப்ல சொல்லக்கூடாதா நேசா? எப்ப வர்றீங்க?
நன்றி ப்ரியா..
நன்றி பா.ரா.அந்த மேட்டர் எனக்கப்புறம் உங்களுக்குத்தானே தெரிந்தது ! யோவ்வ்... அதுக்கு சுதி வேணுமே!
நன்றி ரசனைக்காரி மேடம்
நன்றி செந்தழல்...உங்கூர்ல மட்டும் இல்லை. எல்லா ஊர்லயும் அப்படித்தான்.
நன்றி ஜோ...... டோ..மூச்சு வாங்குது. பிரிச்சு மேஞ்சிட்டீங்க !
நன்றி ராஜன்
நன்றி இப்னு ஹம்துன்
நன்றி யோகன்.. நீண்ட நாட்களாயிற்று என்று நினைக்கிறேன்.
அட்டகாசம்...
மிக அருமையாக, நேர்த்தியாக எழுதப் பட்ட கதை, மிகவும் ரசித்தேன்.
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
உங்கள் மாதிரி ஆளுங்க எழுதுறத படிக்கும் போது எல்லாம் நான் ப்ளாக் எழுதுறத நிறுத்திடலாம்ன்னு இருக்கு தல. படிக்க படிக்க அதில் இருக்கும் அத்தனை உணர்ச்சிகளையும் உள்வாங்குவது என்பது ரொம்ப அவஸ்தையா அல்லது சந்தோஷமான்னு தெரியல. ஒரே வார்த்தையில் சுவாரசியம் அல்லது அருமைன்னு சொல்ல மனசு வரல. அதுக்கு எல்லாம் மேல என்ன வார்த்தை இருக்குன்னு தெரியல பட் அதை தான் சொல்ல ஆசைபடுகிறேன்.
அவர் கோபமும் அவரும் பெரிய புடலங்கா !நாங்க பொருள் விளங்கா உருண்டையை எங்க பக்கம் பொல்லாங்கா உருண்டைன்னு தான் சொல்வோம் .நல்ல நடை .நல்ல கதை
ரசித்து படித்தேன்.
அகநாழிகைக்கு ஒரு போன் போடுங்க.... சிங்கப்பூர் வரும்போது புத்தகத்தோட வாங்க....
ச்சின்னப்பையன் வாங்க..நெம்ப நாளாச்சு..
மிக்க மகிழ்ச்சி ஸ்ரீராம்..நன்றியும் !
நன்றி ரோமியோ..(கொஞ்சம் ஓவரா சொல்றீங்கன்னு நினைக்கிறேன்!)
நன்றி பத்மா ...
வணக்கம் டி.எஸ்.பி சார்..
நன்றி மகேஷ்..அடுத்த மாதம் சந்திப்போம்..
//வீட்டுக்கு வந்தவுடன் பிரித்து காட்டினாள்.
“பொருள் விளங்கா உருண்டைகள்”//
:-))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
மீண்டும் நான் மனைவியை அழைத்துக்கொண்டு கீழிறங்கும்போது விளக்குகள் அணைக்கப்பட்டிருந்தது. ஜன்னல் வழியே இரண்டு கண்கள் பளபளப்பது போல் பிரமை.
நச் வரிகள்
புத்தக வெளியீடு ஜுன் லயா?
சூப்பர்.
உங்களால் ஐநூறு முடியும் என்று எனக்கு தெரியும். பல தடவை சொல்லியாச்சு.
விரைவில் ஐம்பது கதைகளாவது எழுதுங்க..
அப்புறம் புத்தகம் போடலாம்.
ரொம்ப அருமை.
கெளதம் மேனன் படம் விண்ணைத்தாண்டி வருவாயா ....பகுதி இரண்டு பார்த்த மாதிரி இருந்திச்சு..//என் பொசிஷனில் நீங்க இருந்தா என்ன பண்ணுவீங்க?//* "பொருள் விளங்கா உருண்டைகள்....." கதை அல்ல வாழ்வியலின் கவித்துவம்
நன்றி ஸ்ரீ..
நன்றி காவிரி கணேஷ்
நன்றி சூர்யா..
நன்றி பிரின்ஸ்..
நன்றி அக்பர்...
:) ரொம்ப அருமையான புனைவு..
அழகான கவிதையான கதை. படிபவர்களை பாத்திரத்துடன் ஒன்ற செய்யும் எதார்த்தமான நடை, ரசிக்கும் படி இருந்தது
இயல்பான கதை. எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
Post a Comment