ஷாப்பிங் உலகின் சூப்பர் ஸ்டோர் என்று அழைக்கப்படும் ரங்கநாதன் தெரு சரவணா ஸ்டோஸின் மறுபக்கத்தை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார்கள்.பெயரை சொல்லாவிட்டாலும், அந்தக் கடையின் பிராண்ட் ஐகான் சிநேகாவைத்தான் குறியீடாக எடுத்துக் கொள்ள வேண்டும். மாம்பலம் காவல் ஆய்வாளர் சொல்கிறார். “அண்ணாச்சி ! ஏற்கனவே ஏகப்பட்ட கேஸ் பெண்டிங்கில் இருக்கிறது” என்று.
ரங்கநாதன் தெரு ஒரு மாயவீதி. சேஃப்டி பின் முதல் சமோசா வரை சல்லிசாக விற்கப்படும் இடம். அண்ணா மற்றும் எம்ஜிஆர் சமாதிகளுக்குப் பிறகு சென்னை வருபவர்கள் தவறாமல் செல்லும் இடமாகி விட்டது. தமிழ் சினிமாவுக்கு புதிய கதைக்களமாக அதை அமைத்துக் கொண்டிருக்கிறார் இயக்குனர் வசந்தபாலன். பாராட்ட வேண்டிய முயற்சி. வாழ்த்துக்கள் பாலன்.
“செப்பல்லாம் மேல : சுடிதார்லாம் கீழ” என்ற குரலை நீங்கள் அங்கு கேட்டிருக்கலாம். சுருதி குறையாமலும்,சமயங்களில் குரல் உடைந்தும் திரும்ப, திரும்ப சொல்லிக்கொண்டே இருப்பாள் தென் தமிழத்தின் பெண் ஒருத்தி. பளிச்சென்று ஏழ்மையை பிரதிபலிக்கும் தோற்றம் . படிக்க வசதியில்லாமல் குடும்பத்தை காப்பாற்ற வந்து ரங்கநாதன் தெரு வாசிகளாகி போன ஜீவன்களை பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் . கொஞ்சம் வலியுடன் . காலை முதல் நின்று கொண்டே இருக்க வேண்டும் . முகத்தில் வேதனையை காட்டக் கூடாது. அடையாள அட்டையைப் போல் புன்னகையையும் அணிந்து கொணடேயிருக்க வேண்டும். முதலாளிகளின் பாலியல் வக்ரங்களையும் விழுங்க வேண்டும். “பெற்றுக் கொண்டேன் “ என்று கையொப்பமிடப்பட்ட மணி ஆர்டர் ரசீதுகளுக்காக!
புறநகர் பகுதிகளில் இருக்கும் மளிகை கடைகளில் வேலை செய்வதற்கு ஆட்கள் கிடைக்கவில்லை. அத்தனை பேரையும் விலை பேசி தூக்கி கொண்டு வந்து விடுகிறார்கள். கோடிக்கணக்கில் விளம்பரத்திற்கும், நட்சத்திரங்களுக்கும் வாரி இறைக்கும் ஜவுளிகடை முதலாளிகள் இவர்களை நடத்துவதைப் பார்த்தால் கனமாகி போகிறது மனசு. அப்பட்டமாக தோலுரித்திருக்கும் இயக்குனருக்கு ஒரு சல்யூட் .
இயல்பான நடிப்பு . அளவான ,ஆழமான வசனங்கள் .”சனியனே ! வூட்டுக்குத்தான் வந்துகிட்டிருக்கேன் “ இதுதான் முதல் வசனம் . தொடர்ந்து “உரையாடல் ஜெயமோகன்” என்று கார்டு வருகிறது. நேட்டிவிட்டி ஸ்லாங் என்று கொல்லாமல் மண்ணின் இயல்போடு எழுதியிருக்கிறார் ஜெமோ. ரிச்சர்டின் உறுத்தாத ஒளிப்பதிவு கதையை விட்டு நம்மை திசை திருப்பாமல் இருக்கிறது. மேனஜராக வரும் இயக்குனர் வெங்கடேஷின் பாத்திரப்படைப்பும் , அவர் அதை வெளிப்படுத்திய விதமும் நன்றாக இருக்கிறது. அண்ணாச்சியாக செருப்பில்லாமல் வெறுங்காலுடன் வரும் பழ்.கருப்பையா, ஒரே ஒரு காட்சியில் வரும் கவிஞர் விக்ரமாதித்யன் ,ரங்கநாதன் தெரு நடைபாதை வியாபாரிகளாக சில பெயர் தெரியாதவர்களும் யதார்த்தத்தை காட்டுகிறார்கள். கனா காணும் காலங்கள் தொடரில் நடித்த பாண்டி, ஸ்டோர் ஊழியர்களாக வருபவர்களின் இயல்பான நடிப்புக்கும் கிரெடிட் வசந்தபாலனுக்கே .
நாயகன் மகேஷ் . அறிமுகம் . கூத்துப்பட்டறையில் பயிற்சி கொடுக்கப்பட்டதாம். பள்ளி இறுதியில் முதல் மாணவன் . தந்தையின் அகால மரணம். குடும்பச்சுமை . வேலைக்கு வந்த இடத்தில் காதல் . முதலாளியோடு மோதல் என்று ஒரு டாட் பால் விடாமல் அடித்து ஆடியிருகிறார். காதல் பரத்தை போல இருக்கிறார். சிறந்த அறிமுகம் வசந்த் .
முதலில் ஜி.வி பிரகாஷ் . பின் விஜய் ஆண்டனி என்று இரண்டு இசையமைப்பாளர்கள் . பிண்ணனி இசை சிங்க் ஆகாமல் திரிகிறது. “அவள் அப்படி ஒன்றும் அழகில்லை “ பாடல் . பாடல் வரிகளும் , காட்சிப்படுத்தலும் “வில்ஸ் ஃபில்டர்” சிகரெட்டைப் போல் "filter and tobacco" perfectly matched.
அங்காடித் தெருவின் அல்டிமேட் அஞ்சலிதான் . பொன்னிறமாய் வறுத்த புகையிலைப் போல் இருக்கிறார். வெடுக்,வெடுக்கென்று அவர் பேசும் வேகத்திற்கு , புருவவெட்டும், மூக்கு சுருக்குதலும் , கண்ணசைப்புகளும் எக்ஸ்லண்ட் . (மன்னித்து விடு ரீமா !) சொந்தக்குரல் என்று நினைக்கிறேன் . மாடுலேஷனும் பின்னல். காமத்தை வெளிப்படுத்தாத அவர் உடல்மொழி அற்புதம் . அவரை பெற்றவர்களுக்கும் , கண்டுபிடித்த இயக்குனர் கற்றது தமிழ் ராமிற்கும் ராயல் சல்யூட்.
எதிர் வினை போல் யதார்த்த மீறல்களும் இருக்கிறது. கொஞ்சம் நீளமோ என்று தோன்றுகிறது . இருந்தாலும் பரவாயில்லை. இதுவரை நாம் கண்டிராத கதைக்களம் . மிகையில்லாத நடிப்பு. போலித்தனமில்லாத இயக்கம். எல்லாவற்றுக்கும் மேல் அஞ்சலியின் "outstanding perfomence "
”அங்காடித்தெரு “ ஒரு அனுபவம்......
44 comments:
மிக அழகான விமர்சனம்...
மத்தவங்க விமர்சனங்கள் எல்லாம் இனிமேல்தான் படிக்கணும்...
அசத்தல் விமர்சனம் ஜி.
போல்டான விஷயங்களை
போல்டா சொன்ன விதம் அழகு..:)
ஒரு இயக்குநரால் மட்டுமே இன்னொரு இயக்குநரின் உழைப்பைக் கண்டு பாராட்டவும், பொறாமைப்படவும் முடியும்...
இல்லையா இயக்குநர் மணிஜி?
இரவு பார்த்துவிடுகிறேன்
தோழமையுடன்
பைத்தியக்காரன்
..// பாடல் வரிகளும் , காட்சிப்படுத்தலும் “வில்ஸ் ஃபில்டர்” சிகரெட்டைப் போல் "filter and tobacco" perfectly matched//..
இது விமர்சனம்..
ரொம்ப நல்ல விமர்சனம்.
அண்ணே மிக அழகான விமர்சனம்
மீண்டும் ஒரு யதார்த்த சினிமா என்று சொல்லுங்க,அவசியம் பாத்திடுறேன்.அண்ணே அஞ்சலி டாப்பு,ரீமாவுக்கு வயசாச்சுண்ணே!!!:)
படம் பார்க்கத்தூண்டும் விமர்சனம் அருமை.
நைட் பார்த்திருவோம்..!
இவ்வளவு அழகா எழுதிறீங்களேண்ணே.. ஏன் எல்லா படத்துக்கும் எழுத மாட்டேங்குறீங்கண்ணே..!
தூள்....
நண்பர் நல்லா இயக்கியிருப்பார்னு எனக்கு நம்பிக்கை. உங்கள் விமர்சனமும் அதையே காட்டுகிறது.
நல்லாருங்க!
இப்படிக்கு:
முதல் நாள் படம் பார்க்க முடியாத நிலையில் தவிக்கும் நான்.
..............
ஐயா, டெம்பிளேட்டை கொஞ்சம் மாத்தினால் நன்றாக இருக்கும். படிக்க முடிக்கவில்லை. கண் வலிக்கிறது.
நல்ல அனுபவிச்சு எழுதி இருக்கீங்க..
பார்த்துடலாம்..
//.. மன்னித்து விடு ரீமா ..//
:-)))
//நண்பர் நல்லா இயக்கியிருப்பார்னு எனக்கு நம்பிக்கை. உங்கள் விமர்சனமும் அதையே காட்டுகிறது.//
அன்பின் ஆடுமாடு,
'லீ' படத்துல 'தண்டோரா கொண்டக்காரி' பாட்டுக்கு அப்புறமா, 'ஊலலலா', தனுஷ் நடிக்கும் 'உத்தமபுத்திரன்' படங்கள்ல பாட்டு எழுதியிருக்கீங்களாமே... பட ப்ரிவ்யூவுக்கு கூப்பிடுவீங்களா?
தோழமையுடன்
பைத்தியக்காரன்
படம் பார்த்து விட்டு சொல்லுகிறேன்
அழகான விமர்சனம்
விமரிசனம் ஆஹா!. டெம்ப்ளேட் கொஞ்சம் பட்டி பாக்கணும்:)
தமிழிஷ் காணோம்? உ.கு?:)))
இன்றூ இரவுக்காட்சிக்கு போவோமா? கேபிள்ட கேட்டு ஃபோன் பண்ணுங்க.
ரீமாக்கு துரோகம் பண்ணிடின்களே அண்ணே. விமர்சனம் அருமை .
டிஸ்கி: படிக்கும் போது ஒரு template இருந்துச்சு. படிச்சி முடிச்சு refresh பண்ண வேற template ..
உங்களின் விமர்சனம் நன்றாக இருந்தது.
/ “வில்ஸ் ஃபில்டர்”/
இது என் பிராண்ட். உங்களூடையது இதில்லையே.
//ஒரு இயக்குநரால் மட்டுமே இன்னொரு இயக்குநரின் உழைப்பைக் கண்டு பாராட்டவும், பொறாமைப்படவும் முடியும்... //
வழி மொழிகிறேன்
அருமையான....! அழகான விமர்சனம் தலைவரே....!
கலக்குங்க மணிஜி.....
nandri
நாளைக்கு முதல் வேலை......
விமர்சனம் சூப்பர்...
உண்மை தமிழன் கேட்ட அதே கேள்வி.....
ஏன் நீங்க எல்லா படத்துக்கும் எழுத கூடாது??
மனிஜி ஜி :),
ஊக்கம் கொடுக்ககூடிய விமர்சனம்..
படம் பார்க்க தூண்டும் விமர்சனம். அருமை சார்.
நல்லா பார்வை :), அஞ்சலியை மட்டுமல்ல...
அங்காடி தெரு முழுக்க :)
நல்ல விமர்சனம் எழுதினால் தான் நல்ல படங்களுக்கு ஊக்கம் கிடைக்கும். அந்த வகையில் நல்ல விமர்சனம். 'அவள் அப்படி ஒன்றும் அழகில்லை" பாடல் ஒவ்வொரு சாதாரண பெண்ணும் தன்னோடு பொருத்திப் பார்த்த பாடல். I love this song.
"வெயில்" வசந்த பாலன் வெற்றி பெற வேண்டும்!
வாசிங்டனிலும் படம் வந்து விட்டது...பார்த்து விடுகிறேன்...
மயிலாடுதுறை சிவா...
நேர்த்தியான விமர்சனம்.
நல்லவேளை, தேறிடுச்சா? பாத்துடவேண்டியதுதான்.
(ஆமா ரங்கநாதன் தெருவில எப்பிடி ஷூட் பண்ணினாங்களாம்? செட் போட்டாங்களாமா?)
“வில்ஸ் ஃபில்டர்” சிகரெட்டைப் போல் "filter and tobacco" perfectly matched.
Superbbbbbbbbb
உங்கள் விமர்சனத்தை படித்துவிட்டு உடனே pvr இல் பார்த்தேன். இரவு தூக்கம் போய் விட்டது. இப்படி ஒரு உலகம் உண்டு என்று தெரியும் ஆனால் அது இவ்வளவு மோசமாக இருக்கும் என்று தெரியாது.இளமையில் வறுமை கொடுமை அதுவும் பெண்குழந்தைகளின் வறுமை இன்னும் கொடுமை.salute டு வசந்தபாலன்.
படம் பார்க்கத் தூண்டும் விமர்சனம்!
ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க மணிஜீ.
நல்லா எழுதியிருக்கீங்க உங்க ஸ்டைலில்...இரவு சந்திப்போம்..
இந்த ஆண்டில் பார்த்த முதல் நல்ல படம் இதுதான்.. வலைப்பூக்களில் வரும் விமர்சனங்களும் திருப்தியாய் உள்ளது. எழுத்தாளர் ஜெயமோகனிடம் படம் குறித்து பேசினேன். அவருக்கும் படம் சக்சஸ் ஆனதில் மிகுந்த மகிழ்ச்சி. இந்த படம் ரெங்கநாதந்தெருவில் பெரிய அதிர்வுகளை உண்டாக்கப்போகிறது என்பது மட்டும் நிஜம்.
-திருவட்டாறு சிந்துகுமார்
படமும் நல்லா இருக்கு... கூடவே உங்க விமர்சனமும்....
வாழ்த்துக்கள் மணிஜீ....
அற்புதமான படத்திற்கு அற்புதமான விமர்சனம் ஜி.
//அங்காடித் தெருவின் அல்டிமேட் அஞ்சலிதான்//
:-)
கண்ணாடித் தொழுவத்தில் சிக்கியவர்கள்: அங்காடித் தெரு
Post a Comment