சும்மா அங்கிட்டும், இங்கிட்டும் திரிஞ்சிகிட்டேயிருக்கோம். கொஞ்சம் கூடி பேசலாமா? என்ன பேசலாம் ?
1. தமிழ்மணத்தில் எப்படி ஓட்டு வாங்குவது?
2. எப்படி குழு அமைப்பது?
3. ப்ளஸ், மைனஸ் மற்றும் இடைத்தேர்தல் ஓட்டு, அதாங்க கள்ள ஓட்டு எப்படி போடறது?
4. எதிர்பதிவுகள்/எதிர்வினை பற்றிய தெளிவுகள்
அன்பு வலைத்தமிழ் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளே ! படைப்பாளி சொந்தங்களே !
நட்சத்திரப் பதிவர் உண்மைத்தமிழனார் அழைக்கிறார்...9840998725
கேபிளார் அழைக்கிறார் ... 9840332666நரசிம்மார் அழைக்கிறார்.. 9841888663
அகநாழிகையார் அழைக்கிறார்.. 9994541010
லக்கியார் அழைக்கிறார்.... 9500061605
அதிஷார் அழைக்கிறார்...... 9500061607
யார்/ஆர்னு வருவதால் யார் இவர்கள் என்று கேட்கவில்லை. உங்களுக்கே தெரியும். இவர்கள் மோசமானவங்கள்ளேயே முக்கியமானவங்க ! மற்றும் உங்களை நீங்களே அழைத்துக் கொண்டும் வந்து விடுங்கள்.
சென்னைவாழ் பதிவர்களுக்காக ஒரு அமைப்பு ஏற்படுத்தும் அவசியம் வந்திருக்கிறது. அமைப்பின் பயன்கள் சில ;
1 . வலைப்பதிவர்களுக்கு பத்திரிக்கையாளர் அட்டை வழங்கப்படலாம். அதை வைத்துக் கொண்டு ஒன்வேயில் போகலாம். மாமூல் கொடுக்காமல் தப்பிக்கலாம்.
2. சினிமாக்களை ஓசியில் பார்க்கும் வாய்ப்பும், கவர் வாங்கி கொண்டு விமர்சனம் எழுதும் வாய்ப்பும் கிடைக்கலாம்.
3. வலைப்பதிவர் நலவாரியம் அமைக்கப்படலாம்.
4. சோழிங்கநல்லூரில் இலவச வீட்டு மனை கிடக்கப்பெறலாம்.
5. ஆளுங்கட்சிக்கு ஜால்ரா அடிப்பவர்களுக்கு கணையாழி விருதும் கிடைக்க வாய்ப்புண்டு.
நிகழ்ச்சி நிரல்
தேதி : 27.03.10/சனிக்கிழமை நேரம் : மாலை 5.30 இடம் : டிஸ்கவரி புக் பேலஸ் 6.முனுசாமி சாலை முதல் மாடி, மஹாவீர் காம்ப்ளெக்ஸ் பாண்டிச்சேரி ஹவுஸ் அருகில், மேற்கு கே.கே.நகர் சென்னை –78
அன்புடன் அனைவரையும் வரவேற்கும்
34 comments:
கணையாழி இன்னும் வருதா? வேணும்னா உயிர்மை விருதோ, தமிழினி விருதோ குடுக்க சொல்லுங்க
சங்கர் . அது கழகத்தின் விருது !
ஓடிக்கோ ஒதுங்கிக்கோ...
தஞ்சாவூர் காளை நின்னு வெள்ளாடுது..!
\\உங்களை நீங்களே அழைத்துக் கொண்டும் வந்து விடுங்கள்.\\
இந்த இடம் தரம்..!
ரைட்டு.. வந்திடறோம்..:)
தாகசாந்தியெல்லாம் உண்டுல்ல
சரி:)
ஓ, நிறைய விருது குடுத்து வாங்கிக்கறாங்களா, அது தான் தெரியாம போச்சு
வாழ்த்துக்கள் தலைவரே.... ‘கலக்’கவும்...
உங்கள் பெயருக்குரிய (தண்டோரா ) வேலையை கச்சிதமாக முடித்து விட்டீர்கள் . வாழ்த்து.
ரைட்டு .. கண்டிப்பா வரணும்.
உங்க நம்பரை போடுங்க மணிஜீ.
//இவர்கள் மோசமானவங்கள்ளேயே முக்கியமானவங்க // Ha ha ha !!
மோசமானவங்கள பாக்க மோச்மான நாங்களும் வந்துர்றோம்...
5 பாயிண்ட்ஸும் அருமையா இருக்குஜி
வலைத்தமிழ் படைப்பாளி kuttathirku Vazthukkal...
- Kanchi Murali
கலக்குங்க..
வாசல் தெளிச்சாப்லயும் ஆச்சு மேலுக்கு குளிச்சாப்லயும் ஆச்சுன்னு
ஓடிகிட்டே குளிப்பாக
அப்பிடித்தேன் பதிவாவும் ஆச்சு அழைப்பாவும் ஆச்சு அது சரி
நாங்க எல்லாம் எப்பிடி இங்கயே அமைச்சுகிறதா ?
:))
வாழ்த்துக்கள் மக்கள்ஸ்!!
:-))
அப்ப நான் நைனா எல்லாம் வரலாமா கூடாதா(நைனா இரண்டு மாசமா சென்னையில் இருந்து எல்லோருக்கும் டேக்கா கொடுத்திட்டார்.)
// உங்களை நீங்களே அழைத்துக் கொண்டும் வந்து விடுங்கள்.//
:-)
மணிஜி,
குழம்பினேன் கேபிள் சங்கரின் இடுகையை கண்டு - குழு அமைக்க அவசியம் என்னவென்று? தெளிந்தேன் உங்களின் இடுகை கண்டு... நன்றி
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
போட்டோல்லாம் போடுங்க .பாக்கலாம் .வாழ்த்துக்கள்
மணிஜி!
இந்த மீட்டிங்க வைச்சு நம்ம பங்குக்கு(வெள்ளிநிலா) ஏதேனும் யோசிக்கவா, வேணாமா.,??!!
எனக்கு கணையாழி விருதெல்லாம் வேணாம்..
டீயும், பிஸ்கட்டும் கொடுத்தாலே போதும்..!
ரைட்..,..வந்துடுவோம்....
இதுக்குத்தான் உள்ளூர்லய இருக்கணும் போல. ம்ம்ம்...
டிஸ்கவரி புக் பேலஸ் வலைபதிவாளர்களுக்கு என்றே எழுதி குடுத்துடாங்களா.
அண்ணே மணி அண்ணே... என் பேர் போட்டு ஒரு கார்டு வாங்கி வச்சுடுங்க அண்ணே..
வந்துடுறேன்...
"உரையாடல் கவிதைப் போட்டியைப் பற்றி ஒரு “வெள்ளை அறிக்கை” தாக்கல் செய்யப்படுமா?
வணக்கம் . எல்லோருக்கும் நன்றி . இங்கன வந்ததுக்கும், அங்க வரப்போறதுக்கும்...
அங்க வந்தா ஆள் வச்சு அடிப்பாங்கனு சொல்றாங்க...!உண்மையா
குகன் said...
அழைப்பை.. இவ்வளவு நகைச்சுவை கலந்து சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. மிகவும் ரசித்தேன் என்பதை விட சிரித்தேன் என்று சொல்லலாம்.
கண்டிப்பாக வருகிறேன்.
:-))
www.tamilarkalblogs.com தமது இணையதளத்தினை அனைவருக்கும் அறிமுகப்படுத்தும் விதமாகவும் வலைப்பதிவாளர்களை ஊக்குவிக்கும் முகமாகவும் போட்டியொன்று நடாத்த திட்டமிட்டு உள்ளது. போட்டியில் வெற்றிபெறும் 10 பதிவர்களுக்கு 25 GB's of Space மற்றும் 1 Domain Name இலவசமாக வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு http://www.tamilarkalblogs.com/page.php?page=announcement இந்த இணைப்பினை பார்க்கவும்.
Post a Comment