ஏம்லே ! நம்ம ஊரை சுத்தி, சுத்தி புடிச்சாங்களே..அந்த சினிமா படம் தெங்காசியில ஆடுதாம். பொயித்து வருமாலே !
போலாம்தான். மருமவ வெய்வாலே. காட்டுக்கு காவல் போவச்சொன்னா, சுணங்கிபோய் சுருண்டுக்குவீங்க.. கிழவனுக்கு கொட்டாய் கேக்கா? ம்பளே..
காட்டுக்கு போறொம்ன்னு சொல்லித்து போயிடலாம்வே!
அவள் பெயர் தமிழரசி ! கொஞ்சம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த திரைப்படம். பூர்த்தி செய்திருக்கிறதா என்றால் ஏமாற்றமே ! ஓவியர் வீர சந்தானமும், தியேட்டர் விமர்சகர் தியோடர் பாஸ்கரனும் தங்கள் பங்களிப்பை நிறைவாக செய்திருக்கிறார்கள்.
பொக்கை வாயை மென்னுகிட்டு ரோதணையா இருக்குலே. முந்தா நா தோப்புல தேங்கா வெடி போட்டு திங்குதானுங்க. எச்சிதான் வடியுது. என்ன செய்ய. திருநெல்வேலி போய் பல்லு கட்டுனா என்ன? சொன்னதுக்கு பாவி மவன் பாஞ்சு வரான்.
வெளியே சொல்லாதீரு. என் பொழைப்பும் நாறித்தான்ம்ல கிடக்கு. இந்த மட்டும் கையும் ,காலும் கல்லுக்கணக்கா இருக்கப்போய்தான் கால் வயித்துக்கு கஞ்சியாவது மிஞ்சுது.
அவள் பெயர் தமிழரசி. சிறு பிராயம் முதல் தன்னுடன் உயிராய் பழகிய தமிழை காதலிக்கிறார் ஜெய். அவளோ நன்றாக படித்து வெளி மாநிலத்துக்கு
இன் ஜீனிரியங் படிக்க முயற்சிக்கிறாள். தன்னை விட்டு அவள் போக கூடாது என்பதற்காக அவளை பலவந்தமாக அடைந்து விடுகிறார் ஜெய். அவள் என்ன ஆகிறாள்? எப்படி அவளை மீண்டும் கண்டுபிடிக்கிறார் என்பதை மிகுந்த நாடக தன்மையுடன் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
தோல் பாவை கூத்துதான் கதைக்களம். அதற்காக இயக்குனருக்கு ஒரு சல்யூட். ஆனால் திரைக்கதை? தமிழரசியைப் போலவே அதுவும் திக்கு தெரியாமல் திண்டாடுகிறது.காமிரா பெச வேண்டிய இடங்களில் எல்லாம் வாய் ஓயாமல் பாத்திரங்கள் பேசிக்கொண்டேயிருக்கின்றனர். பிண்ணனி இசையில் சொல்ல வேண்டியதையும் வசனங்கள். நெல்லை ஸ்லாங்கை அலுக்க, அலுக்க திணித்திருக்கிறார்கள்.கு..கு..கூட்ஸ் வண்டி பாடலும், காட்சியமைப்பும் சுஅகம்
பள்ளி மாணவனாக ஜெய் கொஞ்சம் தேறுகிறார். மற்றபடி முகத்திலும், குரலிலும் ஜீவன் மிஸ்ஸிங். நாயகியும் அப்படித்தான். இயல்பான முகத்தோற்றம் இல்லாததால் கவர மறுக்கிறார். கிளைமாக்ஸில் மகாராஷ்டிராவில் அவர் தமிழில் தோல்பாவை கூத்து நடத்துவதாக சொல்லப்பட்டிருப்பது பால்தாக்கரேவிற்கு தெரியாதவரை நமக்கு நல்லது.
போலாம்லே.. கடசி வண்டியை புடிச்சு போயித்தா, படம் முடிஞ்சு விடிஞ்சு பொடி நடையாக்கூட வந்துர்லாமலே..
என்ன பெரிசுங்களா? எங்க ஆட்டிகிட்டு பொறப்டிங்க?
தெங்காசிக்கு சேக்காளி..பயாஸ்கோப் பாக்கத்தான்.
அட ...முட்ட பெரிசுங்களா? உங்களுக்கு சோலியே தெரியாதா? என் கூட வாங்கவோய் !
சேக்காளி பெருசுகளை தன் கூட அவன் அறைக்கு அழைத்துச் சென்றான். வீட்டில் இருந்த டிவி பொட்டியை போட்டான். பெருசுங்களுக்கு எச்சில் ஒழுகத் தொடங்கியது.
ஒரு பெண் ஒருத்தனுக்கு கால் அமுக்கி விடுவதிலிருந்து காட்சி தொடங்குகிறது.
“அவள் பெயர் ரஞ்சிதா”
26 comments:
haa..haa..haa..
எப்புடி இந்த மாதிரில்லாம் யோசிக்கிறீங்க!! அந்த பால் தாக்கரே வரி படிச்சோன spontaneous சிரிப்பு வந்தது.
நிற்க. நேத்து நீங்க என் கனவில வந்தீங்க நண்பா!!
முடிவு சரி இல்ல.கீழே கேப்ஷன் போட வேண்டாமா.வயது முப்பதுக்கும் மேல்.கருப்பு நிறம்.
// இரும்புத்திரை said...
வயது முப்பதுக்கும் மேல்.கருப்பு நிறம்.//
அப்படியா அரவிந்து
/நிற்க. நேத்து நீங்க என் கனவில வந்தீங்க நண்பா!!
//
மோகன் உங்களூக்கு அவ்வளவு வறட்சியா..?:((
அண்ணே.. இது ரொம்ப டூ மச்சு..!
இந்த விமர்சனத்துல போயா இதைச் சொருகணும்..!?
முடிவு !!!!!!!
முடிச்சிருக்கீங்களா, இல்ல இன்னொரு ரவுண்டு ஆரம்பமாகுதா??????
//“அவள் பெயர் ரஞ்சிதா”//
ஹெக்ஹே.....
ரைட்டு......
:-)))
அப்ப படம் பாக்கலாமா வேண்டாமா? கடைசி வரைக்கும் சொல்லவே இல்லையே..?
நன்றி..
மூனாவது பெருசு நக்கீரன் வாசகரா..!
அப்ப டி.வி. பொட்டில ஓடுன படமே தேவலாம் போலல்லா இருக்கு அண்ணாச்சி :))
தமிழரசியை வென்ற ரஞ்சிதா வாழ்க!!!
இஃகி, இஃகி
///நிற்க. நேத்து நீங்க என் கனவில வந்தீங்க நண்பா!!
//
மோகன் உங்களூக்கு அவ்வளவு வறட்சியா..?:((
//
சூப்பர்.....
:)
ரைட்டு..:)
:-))
ஜீ முடியல. நல்லாத்தான் யோசீக்கிறிங்க.
super
பின்னூட்டங்களை படிச்சா... பதிவே மறந்துபோகுது தலைவரே....
Cable Sankar said...
/நிற்க. நேத்து நீங்க என் கனவில வந்தீங்க நண்பா!!
//
மோகன் உங்களூக்கு அவ்வளவு வறட்சியா..?:((
:-)))))))))))
எனக்கும் பிடிச்சது கேபிள் அங்கிள் குறும்பு தான் வேறென்ன.. :)
வருகைக்கும். கருத்துக்களுக்கும் நன்றிகள்...
ஆஹா....
தலைவா... அடுத்த ரவுண்டு ஆரம்பமா???
ஹா...ஹா...ஹா... விட மாட்டீங்க போல இருக்கே....
அப்படியே மோகன் குமார் மேட்டர் என்னான்னு கொஞ்சம் கேளுங்க...
:-))
Post a Comment