Tuesday, February 9, 2010

உலக்ஸ்சும் , நானும், ஒரு திங்கட்கிழமையும்


திங்கட்கிழமை என்றாலே சைக்கலாஜிக்கலாக மனம் சுறுசுறுப்பாகி விடுகிறது. வேலை இருக்கோ, இல்லையோ பரபரப்பாக கிளம்ப தோன்றுகிறது. வாரத்தின் முதல் நாள் என்ற செண்டிமெண்ட் காரணமா என்று தெரியவில்லை. சில வருடங்களுக்கு முன் சென்னையில் நிரந்தர வேலை எதுவும் இல்லை. கடன் தொல்லை வேறு. மனசு சரியில்லாமல் ஊருக்கு போய்விட்டேன். அங்கு எதாவது வேலை பார்த்துக் கொள்ளலாம் என்று. ஞாயிறு வழக்கம் போல் அங்கு சபாவில் கச்சேரியை (ஓசித்தண்ணிதான்) முடித்து விட்டு வீட்டுக்கு கிளம்பும் போது உலக்ஸ் சொன்னான். “மாப்ள ! காலையில் 9 மணிக்கெல்லாம் வந்துடுவேன். ரெடியா இரு. அனாவசியமா வெயிட் பண்ண வைக்காதே.

எங்கடா போகணும்?

அது சஸ்பென்ஸ். காலையில் சொல்றேன். சிகரெட் வேணுமா? காசு இருக்கா?

இல்லைடா ! அரை பாக்கெட் வாங்கி கொடுத்துட்டு போ !

இரவு முழுவதும் தூக்கமே வரவில்லை. எங்க கூட்டிட்டு போகப்போறான் இந்த பய. எதாவது வேலை விஷயமா இருக்குமோ? அவன் சித்தப்பா ஒரு பெயிண்ட் கம்பெனி வச்சிருக்கார் (சுந்தரம் பெயிண்ட்). அங்க வேலைக்கு சொல்லப் போறானா? ஆனா அவங்களுக்கும், இவனுக்கும் பேச்சு வார்த்தை கிடையாதே! உலக்ஸ் ஒன்னும் அவ்வளவு பெரிய ஆள் இல்லையே! வடுவூர்ல அவன் சொந்தக்காரன் ஒருத்தன் பெட்ரோல் பங்க் வச்சிருக்காரு. சினிமா எடுக்கணும்னு அடிக்கடி சொல்லிகிட்டிருப்பாரு. ஒரு வேளை அங்க இருக்குமோ?

காலையில் சீக்கிரம் எழுந்து குளித்து இருந்ததில் நல்ல பேண்ட், சட்டையை அயர்ன் பண்ணி ரெடியாகி விட்டேன். உலக்ஸ்சிடம் பங்சுவாலிட்டி அதிகம். 8.55 க்கு டாண்ணு வந்துவிட்டான். அம்மாவை நோண்டி கொஞ்சம் காசு புடுங்கி கொண்டேன்.

“எங்கப்பா போற? எதாவது வேலை விஷயமா?

ஆமாம்மா ! உலக்ஸ் கூட!

ஏண்டா ..அவனுக்கே வேலை இல்லை. அவங்கப்பா எண்ணேய் வியாபாரத்தைதானே பாக்கிறான்.

அம்மாவிடம் ஆசி வாங்கி கொண்டு வந்தால் வாசலில் உலக்ஸ் டி.வி.எஸ் 50 ஐயை துடைத்துக் கொண்டிருந்தான்.

நீ வந்திருக்கேன்னுதான் மாப்ளை வண்டியை எடுத்தேன். இல்லைன்னா சைக்கிள்தான். உலக்ஸ் கையில் ஒரு பெரிய பிளாஸ்டி கவர் வைத்திருந்தான்.

என்னடா இது?

சொல்றேன். இங்க பிரிச்சு பாக்காதே. அம்மா கிட்ட மதிய சாப்பாட்டுக்கு வரலைன்னு சொல்லிடு. நம்ம வீட்டுலதான் சாப்பாடு.

சரி இப்ப எங்க போறோம்?

உலக்ஸ் பதில் சொல்லாமல் வண்டியை ஸ்டார்ட் பண்ணினான். முரண்டு பிடிக்கும் பொண்டாட்டி போல் இருந்தது அந்த வண்டி. பின்னால் உட்கார்ந்து கொண்டேன். வழி முழுவதும் எதிர்படுபவர்கள் உலக்ஸ்சிற்கு வணக்கம் சொல்லி கொண்டே இருந்தனர். பரவாயில்லை. நம்மாள் கொஞ்சம் பெரியாள்தான் என்ற நினைப்பு எனக்குள் ஓடியது. வண்டியின் இன் ஜீன் சத்தம்தான் ஈனஸ்வரத்தில் இருந்தது. சிவகங்கை பூங்கா வழியாக சீனிவாசபுரத்தில் நுழைந்தான். அட ! இங்க இவன் மாமா ஒருத்தர் டிரான்ஸ்போர்ட் கம்பெனி வைத்திருக்கிறார். மாப்ளை ! அங்கயடா என்றேன். நீ வேற ! அவனுங்க உறவையெல்லாம் அத்து ரொம்ப நாளாச்சு. நீ சும்மா வா.

வண்டி ரெட்டிப்பாளையம் ரோட்டில் திரும்பியது. அங்கு சாராயம் காய்ச்சுவார்கள். நாங்கள் கல்லூரியில் படிக்கும்போது அங்கு போனதுண்டு. அங்கு என் கல்லூரி நண்பன் ஒருவன் குடும்பமே சாராயம் காய்ச்சும்.

மாப்ளை ! ராஜதுரை வீட்டுக்கா?

இல்லை. அதுக்கு முன்னாடியே.

இந்த இடத்தில் எனக்கு என்ன வேலை இருக்கப்போகிறது. சரி . இதுக்கு மேல் கேட்டால் கடுப்பாகிவிடுவான். பேசாமல் வேடிக்கை பார்த்தபடி வந்தேன். வடவாறு கரையில் சுடுகாடு ஓரமாய் வண்டியை நிறுத்தினான். நான் ஒரு சாதா கோல்டுபிளேக்கை பற்ற வைத்துக் கொண்டேன்.

இங்கதாண்டா கால் முட்டிவரைக்கும் தண்ணி ஓடும். சரியான இடம் என்றான். சுற்றும் முற்றும் பார்த்தேன். நிறைய சின்னப்பசங்க விளையாடிக் கொண்டிருந்தார்கள். சற்று தள்ளி பெண்கள் துணி துவைத்துக் கொண்டிருந்தார்கள்.

என்னடா பண்றே?

உலக்ஸ் அந்த பிளாஸ்டிக் கவரை பிரித்தான். உள்ளே வில் மாதிரி எதோ இருந்தது. கூடவே சில சைக்கிள் ஃபோக்ஸ் கம்பிகள். அதன் ஒரு முனை கூராக்கப்பட்டிருந்தது.

நைட்டு ஃபுல்லா உக்கார்ந்து தேய்ச்சேன் மாப்ளை என்றான் உலக்ஸ்.

என்ன பண்ணப் போறடா?

வா சொல்றேன். பேண்டை ஏத்தி விட்டுக்கோ. அவன் வேட்டையை மடித்து கட்டிக்கொண்டான். மெல்ல நீருக்குள் இறங்கினோம்.

அங்க பாரு . எவ்வளவு மீனு. நீந்தாம அப்படியே மிதக்குது பாரு. இந்த மீனுக்கு பேரு ஆரா மீனு மாப்ளை. பாம்பு மாதிரித்தான் இருக்கும். ஆனா விராலோட டேஸ்டா இருக்கும். உலக்ஸ் சொல்லிக் கொண்டே வில்லில் ஒரு அம்பை பொருத்தி துரோணாச்சாரியாரின் நேரடி சிஷ்யன் ரேஞ்சுக்கு குறி பார்த்து எய்தான். அதுவரை இருந்த அத்தனை மீனும் நொடியில் மாயமாகின. உலக்ஸ் சளைக்கவில்லை. எனக்கு டிவியில் ராமாயணம் பார்ப்பது போல் இருந்தது. சரமாரியாக அம்பு விட்ட வண்ணம் இருந்தான். ஆனால் மீன் தான் விழவில்லை.

மணி ! நீ டிரை பண்ணு என்றான். நான் என்ன ஏகலைவனா? எனக்கும் மீன் பெப்பே என்றது. ஏண்டா ? இதுக்கா என்னைய கூட்டிட்டு வந்த?

இல்லை மாப்ளை. உனக்கு மீன்னா ரொம்ப பிரியம். அதான் என் கையால பிடிச்சு சமைச்சு போடலாம்னு பார்த்தேன். வக்காளி ! மாட்டுதா பாரேன். அன்னிக்கு அவன் கரெக்டா பொத்து பொத்துன்னு போட்டானே. வேற ஏதோ டிரிக் இருக்குடா மாப்ளை !

நான் இன்னொரு சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டு சுற்றிலும் பார்த்தேன். அங்கு ஒரு சின்னப்பையன் அம்பு விட்டுக் கொண்டிருந்தான். அவர்கள் பரவாயில்லை. ஆனால் நான் ? கல்யாணம் ஆகி ஒரு பிள்ளையும் பெத்தபிறகு ? உலக்ஸ் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. வா அங்க போவோம். இருவரும் அவன் அருகில் போனோம். சுமார் ஒரு 20 மீன்களை அடித்து விட்டான் அவன். இலை, கிளை எதுவும் தெரியவில்லை. இலக்கு மட்டுமே தெரிகிறது என்ற அர்ஜீனன் போல் ஒரு அம்பு அடி கூட வீணாகவில்லை. உலக்ஸ் அந்த பையனை நெருங்கி சூட்சுமத்தை கேட்டான். ஆனால் அவன் அதை மட்டும் சொல்ல மாட்டேன். வேணுமின்னா உங்களுக்கு மீன் அடிச்சு தரேன்னு சொல்லிவிட்டான்.

மாப்ளை நீதான் கில்லாடியாச்சே! அவன் அடிக்கிறதை கரெக்ட்டா நோட் பண்ணிக்கோ! ஆனால் அந்தப் பையன் அதற்கெல்லாம் சந்தர்ப்பமே கொடுக்கவில்லை. மின்னல் வேகம். கணிக்கவே முடியவில்லை.அவன் அடித்து கொடுத்த 25 ஆரா மீன்களை பிளாஸ்டிக் கவரில் சுற்றி கொண்டோம். சிறுவன் தட்சணையாக வில்லையும், அம்பையும் கேட்டான். உலக்ஸ் என்னை ஒரு கேள்விக்குறியுடன் பார்த்தான். நான் அதை அந்த பையனிடம் கொடு என்றேன். ஒரு பத்து ரூபாயையும் (மீதி பத்து இருந்தது) கொடுத்தேன்.

பள்ளிக்கூடம் போகலியாப்பா ?

நான் படிப்பை நிறுத்திட்டேன் சார்!

ஏம்பா உங்கப்பா என்ன செய்றாரு?

சாராயம் காச்சிகிட்டிருந்தாரு. இப்பதான் ஜெயில்ல போட்டாங்க!

உலக்ஸ் வீடு வரும்வரை நான் எதுவும் பேசவில்லை. காலையில் அயர்ன்காரன் கொஞ்சம் லேட் பண்ணதுக்கு அவனை கண்டமேனிக்கு ஏறியது நியாபகம் வந்தது.

உலக்ஸின் மனைவிக்கு ஆச்சர்யம். (மிக வெள்ளந்தியான கிராமத்து பெண்).என்னங்க இவ்வளவு மீனு! நீங்களா அடிச்சிங்க என்றாள்.

என்ன நினைத்தானோ தெரியவில்லை. உலக்ஸ் சட்டென்று எங்கடி! நமக்கு கைவரவேயில்லை. மணிதான் சட்டு சட்டுன்னு போட்டு தாக்கிட்டான். நான் முன்னமே சொல்லியிருக்கேன் இல்லை. மணி மெட்ராசில் இருக்காண்டி. அவனுக்கு தெரியாததே இல்லை. அப்படி தெரியலைன்னாலும் டக்குன்னு கத்துக்குவான். “மாப்ளை நீ பெரியாள்டா” என்றான்..

சாப்பாட்டுக்கு முன்னால் லைட்டா கட்டிங் போடும்போது கேட்டேன். எதுக்குடா அனாவசியமா பொய் சொல்றே?

இல்லை. மாப்ளை. எனக்குத்தான் வரலை. உனக்கும் அடிக்க வரலைங்கிறதை என்னால ஏத்துக்கவே முடியலை.

என்னடா பைத்தியக்காரத்தனமா இருக்கு? எனக்கு எல்லாம் தெரியுமா என்ன?

பள்ளிக்கூடத்திலேர்ந்து உனக்கு தெரியாதது எதுவுமே இல்லைங்கிற நினைப்புத்தான் எனக்கு. அதான். என்ன ஒரு ரெண்டு நாள் போனா உனக்கு சூப்பரா அடிக்க வந்துடும். நாளைக்கு காலைலே கரெக்டா 9 மணிக்கெல்லாம் ரெடியா இரு.

எனக்கு சிரிப்பும் வந்தது. கூடவே அந்த சிறுவனின் முகமும்!!

49 comments:

கே.என்.சிவராமன் said...

ரொம்ப நல்லா இருக்கு...

வாழ்க்கையோட சோகத்தை, அதன் இயல்போடயே பதிவு செய்திருக்கீங்க...

தோழமையுடன்
பைத்தியக்காரன்

Unknown said...

நல்லா இருக்கு... அண்ணே..., இப்பவும் வடவாறுல மீன் வெட்டுரது உண்டா??

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நல்லாயிருக்கு தண்டோரா. இதை ஒரு கதையாத்தான் படிச்சுகிட்டு வந்தேன். கடைசி வரி சரியில்லையேன்னு நினைச்சு லேபிளை அப்புறம்தான் பார்த்தேன் :)

சென்ஷி said...

அருமைண்ணே....

iniyavan said...

தலைவரே,

அருமையா இருக்கு.

என் பேர் வரதுனால ரொம்ப நல்லா இருக்கு.

☀நான் ஆதவன்☀ said...

nice thala :)

na.jothi said...

வெள்ளந்தியான நண்பர்களும்
நல்லாருக்குங்க

உண்மைத்தமிழன் said...

படிச்சிட்டேன்..

தெளிஞ்சிட்டேன்..

நானெல்லாம் உங்க முன்னாடி ச்சும்மா டுபாக்கூர்ண்ணே..!

shortfilmindia.com said...

உலக்ஸை எனக்கு தெரியும் என்பதால் இன்னும் சுவையாய் இருக்கிறது.. தண்டோரா..

கேபிள் சங்கர்..

sathishsangkavi.blogspot.com said...

//எனக்கு சிரிப்பும் வந்தது. கூடவே அந்த சிறுவனின் முகமும்!!//

தலைவரே கலக்கல்....

எப்படி இப்படி எல்லாம்......

பாபு said...

அருமையா இருக்கு.

Paleo God said...

அருமை தலைவரே.. தொடர்ந்து கலக்குங்க..:))

ஆடுமாடு said...

நல்ல அனுபவம்.

வர்றீங்களா கூவத்துல டிரை பண்ணுவோம்!

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமை

Ashok D said...

தலைவரே.. நானும் உங்களுக்கு எல்லாமே தெரியும்ன்னு நெனச்சேனே...

அனுபவக்கதைகள் அருமை :)

இராகவன் நைஜிரியா said...

//எதுக்குடா அனாவசியமா பொய் சொல்றே?
இல்லை. மாப்ளை. எனக்குத்தான் வரலை. உனக்கும் அடிக்க வரலைங்கிறதை என்னால ஏத்துக்கவே முடியலை. //

நண்பன் என்றால் இவரல்லவா நண்பன். என்னா ஒரு பாசம்.. கொடுத்து வைத்தவர்தான் நீங்க

R.Gopi said...

இப்போவாவது “அர்ஜூனன்” ரேஞ்சுக்கு இல்லேன்னாலும், ஓரளவுக்கு குறி பார்த்து அடிக்கறீயளா?

அயிரை வேட்டை தொடருதா....

இது கலக்கல்......

//“எங்கப்பா போற? எதாவது வேலை விஷயமா?
ஆமாம்மா ! உலக்ஸ் கூட!
ஏண்டா ..அவனுக்கே வேலை இல்லை. //

settaikkaran said...

பின்னிட்டீங்க அண்ணே! நல்லாயிருக்கு....!!

CS. Mohan Kumar said...

அருமை தண்டோரா. தஞ்சையை பற்றி சொன்னதால் கூடுதல் மகிழ்ச்சி

அகநாழிகை said...

Nalla pagirvu manig

எறும்பு said...

நல்லாருக்கு தலிவா

பா.ராஜாராம் said...

விடுங்க மணிஜி.மீன் பிடிக்க வராட்டி என்ன?எழுத வருதுல்ல...

அருமையாய் எழத..

Romeoboy said...

நல்ல இருக்கு தலைவரே. உங்களைவிட நண்பருக்கு உங்கள் மேல் நிறைய நம்பிக்கை.வாழ்க நட்பு

மணிஜி said...

நன்றி @ சிவராமன். அது ஒரு கனாக்காலம்

நன்றி @ பேநாமூடி.

நன்றி @ குருஜி

நன்றி @ சென்ஷி

நன்றி @ உலக்ஸ். செளக்கியமா?

நன்றி @ நான் ஆதவன்

நன்றி @ ஜோதி

நன்றி @ உண்மைத்தமிழன்(ஏன் இப்படி?)

நன்றி @ கேபிள்(நீங்க குற்றாலத்துல பாத்தீங்க இல்ல?)

நன்றி @ சங்கவி

நன்றி @ பாபு

நன்றி @ ஷங்கர்

நன்றி @ ஆடு மாடு. செஞ்சிடுவோம்!

நன்றி @ டி.வி.ஆர். சார்

நன்றி @ அஷோக்

நன்றி @ ராகவன்

நன்றி @ கோபி..ம்ஹீம்..சான்ஸே இல்லை.

நன்றி @ வாசு

நன்றி @ சேட்டைக்காரன்

நன்றி @ எறும்பு

நன்றி @ பா.ரா

நன்றி @ ரோமியோபாய்

மணிஜி said...

நன்றி @ மோகன்குமார்.மறக்கமுடியுமா?

கண்ணகி said...

மீன் வேட்டை நல்லா இருக்குது...

Rajan said...

மீன் நெளியுது
மீன் நெளியுது

வால் அசையுது வால் அசையுது !
தோல் உரியுது தோல் உரியுது !

தூண்டில் காரன் வராத பாத்து ! போகஸ் கம்பி பள பளக்க !ஆரா மீனு கிளு கிளுக்க பார்ந்து வரான் தூண்டில் காரன் டீவீஸ் பிப்டி ஹேண்டில் காரன் !

anujanya said...

வாவ், அட்டகாசம் மணிஜி. ரொம்ப நல்லா இருக்கு. இதுவும், மனோஜ் கதையும் இன்றுதான் படித்தேன். அதுக்கும் ஒரு 'சூப்பர்' இங்கயே சொல்லிக் கொள்கிறேன். ஸ்டைல் ரொம்ப இயல்பா, பிரமாதமா இருக்கு. கண்டின்யு ப்ளீஸ்.

செ.சரவணக்குமார் said...

எத்தனை நேர்த்தியாக எழுதியிருக்கிறீர்கள். மிக அருமை தண்டோரா அண்ணா.

மணிஜி said...

நன்றி @ கண்ணகி

நன்றி @ ராஜன்

நன்றி @ அனு

நன்றி @ சரவணக்குமார்

பாலா said...

எந்த பேமானி சொன்னது.... ப்லாகில் எழுதறதெல்லாம் குப்பைன்னு??!

இங்க வந்து பாருய்யா... எங்கண்ணன் எழுதியிருக்கற பதிவை!!!!!!!!!! :) :)

ஊருக்கு வந்தா.. உலக்ஸை பார்க்கணும்!!!!!! :)

இராஜ ப்ரியன் said...

தல பின்னிட்டிங்க அருமை .....

இதை எல்லோரும் தெரிந்துகொண்டு கேட்காமல் போயிருக்கிறார்கள்.ஆனால் அடியேனின் சிறிய மூளை அந்த கேள்வியை கேட்க தூண்டிக்கொண்டே இருக்கிறது.

(வண்டி ரெட்டிப்பாளையம் ரோட்டில் திரும்பியது. அங்கு சாராயம் காய்ச்சுவார்கள். நாங்கள் கல்லூரியில் படிக்கும்போது அங்கு போனதுண்டு. அங்கு என் கல்லூரி நண்பன் ஒருவன் குடும்பமே சாராயம் காய்ச்சும்.

மாப்ளை ! ராஜதுரை வீட்டுக்கா?)

அந்த பையன் உங்களுடன் படித்த நண்பனின் மகன் தானே ?

எல்லோரும் புரிந்து கொண்டு சென்று விட்டார்கள் என்னால் அப்படி போக முடியவில்லை.

Unknown said...

ரொம்ப நல்லா இருக்கு..

மணிஜி said...

நன்றி பாலா !(ஏன் உணர்ச்சி படறீங்க?)

நன்றி ராஜப்ரியன்!(அப்படி இல்லை.ஆனா அப்படியும் இருக்கலாமோ?)

நன்றி முகிலன்!

iniyavan said...

//நன்றி @ உலக்ஸ். செளக்கியமா?//

தலைவரே,

மெயில் பார்க்கலியா?

கலகலப்ரியா said...

wow.. superb experience..!!! அதை வார்த்தையில் வடித்த விதம் அழகு..!!

மணிஜி said...

நன்றி ப்ரியா!!

தாராபுரத்தான் said...

மீன் சுவையை சொல்லவில்லையே தலைவா.

பாலா said...

அதென்னமோ தெரியலீங்க தண்டோரா. நீங்க எழுதினா.. அப்படியே ரத்தம் கொதிச்சி, புல்லரிக்குது! :)

(அப்படியே... அடுத்த பிரச்சனைக்கு தூபம் போடலாமேன்னுதான்! :) )

Kumky said...

:-))

நல்லாருக்கு தலிவரே..

நேசமித்ரன் said...

பேனா வரும்போது சுடப்படும் என்பதை தண்டோரா தட்டி அறிவிக்கப் படுகிறது சாமியோ...!

தொண்ணந்தட்டி.... தொன்ணந்த்தட்டி ....

மரா said...

தல பின்னிட்டீங்க.சீக்கிரம் ’உலக்ஸ்ச’ ஒரு சுபயோக சுபதினத்தில் மானிட்டரோட அறிமுகப்படுத்தினீங்கன்னா சந்தோசமாப்பூடும்.

Sanjai Gandhi said...

அது சரி :))

butterfly Surya said...

நீங்க அனுபவ கதைகள் ஐநூறு எழுதலாம்ன்னு ஏற்கென்வே சொன்னேன்.

கொலைவெறியான்னு கேட்டீங்க..??

ஸாரி, தப்பா சொல்லிட்டேன்.

ஸ்டார்ட் மியூசிக்.

அருமை மணீஜீ..

மணிஜி said...

நன்றி தாராபுரத்தான்

நன்றி பாலா மீண்டும்

நன்றி மாப்ளை சஞ்சய்

நன்றி சூர்யா

நன்றி மயில்

மணிஜி said...

நன்றி கும்க்கி

நன்றி நேசமித்ரா

Unknown said...

சார், ரொம்ப அழகாச் சொல்லிருக்கிங்க

மணிஜி said...

// KVR said...
சார், ரொம்ப அழகாச் சொல்லிருக்கிங்க//


நன்றி கே.வி.ஆர்!

விக்னேஷ்வரி said...

:)