கேபிள் சங்கருக்கும், பரிசல்காரனுக்கும், டாஸ்மாக்குக்கும் ஒரு ஒற்றுமை இருகிறது. என்ன அது?
என்.எச்.எம். ரைட்டர்களாக இருந்தவர்கள் எழுத்தாளர்களாகி விட்டனர். இருவரின் புத்தகங்களும் வெளியீட்டு விழா இஷ்டமித்திர பந்துக்கள் புடை சூழ வெகு விமர்சையாக நடை பெற்ற திருமணம் போல் இருந்தது. நர்சிம் இரு வீட்டார் அழைப்பு அனுப்பியது பொருத்தமானதுதான். கேபிள், பரிசல் உங்களிடம் நாங்கள் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம். வாழ்த்துக்கள் !
அப்புறம் அந்த முதல் பத்தியில் சொன்ன ஒற்றுமை! இரண்டு இடங்களிலும் ஆன்லைனில் ஒரு 20 பேராவது இருந்து கொண்டேயிருக்கிறார்கள் !
பாசத்தலைவனை பாராட்டி தள்ளிவிட்டார்கள். 86 வயதில் களிப்பூட்டும் நடனங்களை பார்த்து தலைவரும் சார்ஜ் ஏற்றிக் கொண்டார். சரி. பாராட்டு விழாவில் அவுத்து போட்டு நடனங்கள் எதற்கு? பணம் ! மற்றும் சேனலின் அந்தஸ்தை கூட்டிக்கொள்ளும் முயற்சிதான். இல்லையென்றால் ஒரு காண்ட்ரவர்சியல் ஜோடியான பிரபுதேவாவையும், நயனையும் ஆட வைப்பார்களா? கேரளாவில் படபிடிப்பிலிருந்த நயனை அதிகாரம் அழைத்து வந்தது. பிரபுதேவா சொன்னாராம். “ நிலம் வாங்கும்போது ஒரு விழா ! கட்டிடம் கட்டியபின் இன்னொரு விழா! சாவி கொடுக்கும்போது மறுபடியும் விழா ! ஏற்பாடு பண்ணுங்க. வந்து ஆடி கொடுத்துட்டு போகிறேன்”
ஜெயலலிதாவின் விழுப்புரம் ஆர்ப்பாட்டம் மகா காமெடி. ஷோப்பிகண்ணு மாதிரி (பால்வாடி டீச்சர்) அவர் முழக்கங்கள் எழுப்ப , ரத்தத்தின் ரத்தங்கள் பின் பாட்டு பாடினார்கள் !
அஜித்தின் அதிரடி பேச்சுக்கு திரையுலகில் நல்ல ரெஸ்பான்ஸ். ஆனால் ஆளும் வர்க்கம் அதை ரசிக்கவில்லை என்பது கலைஞர் டி.வி பிரமோவில் தெரிந்தது. ரஜினி, கமல், இளையராஜா, விஜய் பங்கு பெற்ற நிகழ்ச்சி என்றுதான் சொல்கிறார்கள்.
ஸ்டாலின் அரசின் தொகுப்பு வீடு கட்டும் திட்ட விழாவிற்கு ஜெயலலிதாவிற்கு அழைப்பு அனுப்பி ஒரு நல்ல முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளார். ஸ்டாலின் பொதுவாக அதிகம் பேசுவதில்லை. செயலில் காட்டும் முனைப்பு அவரிடம் இருக்கிறது. வாழ்த்துக்கள் துணை முதல்வருக்கு! அதிகார போட்டிக்கு யாரும் வராமல் இருந்தால் இன்னும் சிறப்பாக நிச்சயம் செயல்படுவார் என்றே தோன்றுகிறது.
ராபர்ட் ஒரு பைலட். லுப்தான்சாவில் இருந்தவர். ஹாபிக்காக குடிக்க ஆரம்பித்தார். மூழ்கி போனார். வேலை போனது. மனையுடன் விவாகரத்து. குடிநோய் ! அந்த மையத்தில் அப்படித்தான் சொல்கிறார்கள். சிகிச்சை முடிந்து ஒரு வருடமாக விஸ்கியை தொடவில்லை. அந்த மையத்திலேயே சேவை செய்கிறாராம். நண்பர் அங்குதான் சிகிச்சையில் இருக்கிறார். அவரை பார்க்க போயிருந்தேன். முன்பிற்கு ஆள் கொஞ்சம் தெளிவாகவே இருக்கிறார். கண்களில் ப்ழைய ஒளி திரும்பியிருக்கிறது. வெளியில் வந்து தொடாமல் இருக்க வேண்டும். இதுதான் அவருக்கு கடைசி சந்தர்ப்பம். கடவுளை பிரார்த்திப்போம்!
எனக்கும் கொஞ்சம் கவுன்சிலிங் கேட்டேன். ஒரு மணிநேரம் என்னுடன் பேசினார்கள். முடிவில் உங்களுக்கு குடிநோய் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். அவர்கள் சொல்வது. “நாளையிலிருந்து குடிக்க மாட்டேன். இன்று கடைசி” என்பதை போல் “ இன்னிக்கு வேண்டாம். நாளைக்கு குடிக்கலாம் “ என்று ஒரு பாலிசியை அடாப்ட் செய்யுங்கள் என்பதுதான்.
முன்னாள் மிஸ்.மெட்ராஸ். BBC master minds நிகழ்ச்சியில் இறுதி சுற்றுவரை வந்தவர். உலக விஷயங்கள் விரல்முனையில். அவர் நடிகை கஸ்தூரி. கல்யாணம் ஆகி வெளிநாட்டில் கொஞ்சம் காலம் இருந்தார். வழக்கம் போல் பிரச்சனை. இங்கு வந்து ஜி.வி. பிலிம்சில் கிரியேட்டிவ் ஹெட் ஆக இருந்தார். ஆடின கால்! தமிழ்ப்படத்தில் “குடும்ப குத்து விளக்கு” பாட்டிற்கு உரித்து போட்டு விட்டார்கள். உள்ளத்தை அள்ளித்தா படத்தில் ரம்பாவிற்கு முன் கஸ்தூரியைத்தான் கேட்டார்கள். கவர்ச்சி காட்டமுடியாது என்று மறுத்து விட்டார். ஆனால் இன்று ? சினிமா !
பெரிய பதவிகளில் இருப்பவர்களுக்கு நகைச்சுவை உணர்வு தேவை என்பதை நம் தலைவர்கள் நிருபீக்கிறார்கள்!
பிரதமர் : விலைவாசி விரைவில் குறையும் ! பதுக்கல்காரர்களுக்கு இறுதி எச்சரிக்கை !
நம் பாசத்தலைவர் : ராஜபக்ஷேவை இனியும் பொறுக்க மாட்டோம்!(இராசா அண்ணே ! கார்டு, கவர் எல்லாம் வாங்கி அனுப்புங்க. தலைவர் கடிதம் எழுத ஆரம்பிக்க போகிறார்!)
டிஸ்கி கவுஜை:
பிரதமர் சொன்னதை கேட்டாயா கண்ணே?
இனியும் வார்த்தைகளை பதுக்காதே!
சொல்லி விடு!
கைகுட்டை பரிசளித்தால்
பிரிந்து விடுவார்களாமே!
தெரியாமல் நான் தந்தேன்.
தெரிந்தே நீயும்
வாங்கி கொண்டாய்!
மற்றுமொரு காதலர் தினம்
புத்தம் புது காதலியுடன்!
33 comments:
ஒரே ஒரு சின்ன மாற்றம் வேண்டுகிறேன்.
//மற்றுமொரு காதலர் தினம்
புத்தம் புது காதலியுடன்//
காதலியுடன் என்பதை விட , காதலனுடன்.. என்பது மிக பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.
( பாவம் , நாங்க தான் டாஸ்மாக் contractor ஆயி , தாடி வச்சிட்டு அழிவோமே ) ஹலோ அங்க யாருங்க கை தட்றது.
ம்ம். மணிஜி நல்லாயிருக்கு.
:-))
நல்லா இருக்கு தலைவரே.. :))
அருமை மணிஜி..
நானும் உங்களுக்கு ஒரு விழா எடுக்கலாம் என்று இருக்கிறேன்.
/இரண்டு இடங்களிலும் ஆன்லைனில் ஒரு 20 பேராவது இருந்து கொண்டேயிருக்கிறார்கள் !/
என்னா வில்லத்தனம்:))
டிஸ்கி கவுஜ சூப்பர் எப்பவும் போல்.
//கைகுட்டை பரிசளித்தால்
பிரிந்து விடுவார்களாமே!
தெரியாமல் நான் தந்தேன்.
தெரிந்தே நீயும்
வாங்கி கொண்டாய்!
//
மாமா, இது நேத்து வந்திருக்கனும்.. சூப்பரோ சூப்பரு.. :))
மணி ஜி...
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
விழா நன்றாக நடந்ததாக அறிந்தேன்... மிக்க மகிழ்ச்சி...
ஷோபி கண்ணு.....ஹீ ஹீ...
மானிட்டர் மப்பு...
ஷோப்பி கண்ணு மேட்டரு தூள் தலைவா....
பாசத்தலைவன் புரோமோவில் நானும் அஜீத் கழட்டிவிடப்பட்டதை கவனித்தேன்...
டெலிகாஸ்ட் செய்யும்போது நிச்சயம் அது இருக்காது என்றே தோன்றுகிறது...
கடைசி கவிதை....
யப்பே.... டாப்பு.....
//பிரதமர் சொன்னதை கேட்டாயா கண்ணே?
இனியும் வார்த்தைகளை பதுக்காதே!
சொல்லி விடு!//
வாயில வருது..... ஆனா????
கலக்கல் மணிஜி... :)
கோர்வையான படிக்கச் சுவையான நடை, தகவல்களும். நல்லாயிருக்குது அண்ணே.!
interesting... டீவி மேட்டரு பத்தி தெரியாது... ஏன்னா பாக்கறது இல்லீங்கன்னா...
மானிட்டர் ஜிவ்வ்வ்... :)
//பிரதமர் : விலைவாசி விரைவில் குறையும் ! பதுக்கல்காரர்களுக்கு இறுதி எச்சரிக்கை !
//
அப்படியே எல்லாரும் பயந்துடுவாங்க பாருங்க
//நம் பாசத்தலைவர் : ராஜபக்ஷேவை இனியும் பொறுக்க மாட்டோம்!(இராசா அண்ணே ! கார்டு, கவர் எல்லாம் வாங்கி அனுப்புங்க. தலைவர் கடிதம் எழுத ஆரம்பிக்க போகிறார்!)
//
எவ்வளவு வேதனை தரும் விஷயம். இதில் காமெடியா? ஆனாலும் இதுதானே நிதர்சனம்
நல்ல ஒற்றுமை.. எப்பவும் இப்படியே இருக்க கடவது
மானிட்டர் கலக்கல்.
ஸ்டாலினுக்கு ஓவராதான் சப்போர்ட் பண்றீங்க! பார்க்கலாம். என்ன கிழிக்கிறாருன்னு! கழக கண்மணிகள் விட்டு வைப்பாங்கன்னு நினைக்கிறீங்க!
vichenou சொன்னதுக்கு ரீப்பீட்டேய்! "காதலனுடன்னு தான் இருக்கனும்"
ம்ம்ம்ம்.........கலக்குங்க......
வாழ்த்துக்கள்
கலக்குறீங்க.
இறுதியாக இருக்கும் கவிதைகள் சூப்பர்!
கதம்பம் இரசிக்கவைத்தது! துணை முதல்வர் விஷயம் உண்மை தான், கடந்த இரண்டு வருடமாக நல்ல மாற்றம்! பாராட்டுவோம்!!
தலைப்பைப் பாத்தோன்ன பயந்துட்டேன், நேத்து மருந்து சாப்டதப் பத்தி எழுதிப்பிட்டீகளோன்னு! மானிட்டர் நறுக்குனு இருக்கு.
அமைப்பையும் அதிகாரவர்கங்களையும் மீறி துணையால் கூட பெரிய மாற்றங்கள் ஏதும் செய்ய முடியாது தலைவரே...
இருப்பதை வைத்து நல்ல பேர் எடுக்க முயற்சிக்கிறார்..
பார்ப்போம்..அண்ணன் அஞ்சாநெஞ்சன் விட்டு வைக்கனுமே...
இந்த எச்சரிக்கைகள் கூட அவ்வப்போது விடலைன்னா ஒட்டு மொத்தமா மறந்துடுவீங்களோன்னு ஒரு பயம் கிளம்பியிருக்கும் பொருளாதாரா மாமேதைக்கு..
நம்மாளுங்க விடற எச்சரிக்கைகளை டெல்லில ப்யூன்கள் கூட மதிக்கிறதில்ல...அப்புறம் நவீன ஹிட்லரா கண்டுக்கபோறார்...
கடசிக் கவி சூப்பர்ணே..அப்பறம் இந்த ஆட்சி இறுதின்றதால அடுத்து இருப்பமோ இல்லையோங்கறதாலதான் இத்தனைப் பாராட்டு விழாக்களோ???
கஸ்தூரிக்கு சினிமா கொடுத்த அல்வா சூப்பபர்...
பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே!
நன்று தல!
ஒவ்வொரு மேட்டருக்கும் இடையே போதிய இடைவெளி அல்லது அடுத்த பாரா என்பதற்கான அடையாளம் இருந்தால் நலம்!
(எப்பூடி? எழுத்தாளரானதும் அட்வைஸ் வருதுல்ல....)
அந்த டாஸ்மாக் உதாரணம்.. ம்ம்.. அனுபவஸ்தர் சொல்றீங்க.. நம்பறோம்!
வாரம் இருநாள் குடித்தால் குடிநோயா தல!
//அஜித்தின் அதிரடி பேச்சுக்கு திரையுலகில் நல்ல ரெஸ்பான்ஸ். ஆனால் ஆளும் வர்க்கம் அதை ரசிக்கவில்லை என்பது கலைஞர் டி.வி பிரமோவில் தெரிந்தது.//
தல, இப்போ ஒரு வாரமா அஜித் பாட்டு, படமெல்லாம் போட ஆரம்பிசிருக்காங்களே, ஒண்ணும் புரியலையே
மையம் பற்றிய கொஞ்சம் விரிவா எழுதுங்க தலைவரே.
நல்லா மப்பாத்தான் அண்ணே இருக்கு... :-)
Post a Comment