Monday, February 1, 2010

மானிட்டர் பக்கங்கள் ------ 01/02/2010


ஆந்திராவில் தெலுங்கானா பிரச்சனை உக்கிரம் அடைந்திருக்கிறது. பிரி என்றும், பிரிக்காதே என்றும் குழப்பமான போராட்டங்கள் மத்திய அரசை உலுக்கி கொண்டிருக்கிறது. கொஞ்சம் தமிழ்நாட்டு வரலாற்றை நினைவு கூர்வோம். 60 களில் மொழிப் போராட்டம் ஆரம்பித்தது. இந்திக்கு எதிராக மாணவர்களை இன்றும் உள்ள அரசியல் தலைவர்கள் தூண்டியதன் பலன். இரண்டு தலைமுறைக்கே கேடாக அமைந்தது. எத்தனை தீக்குளிப்புகள், அனாவசிய உயிரிழப்புகள். அன்று இந்தியை தடுத்ததன் பலனை இன்று தலைவர் பிள்ளை வாயிலாக அனுபவிக்கிறார். ஆனால் மருமகன் புத்திசாலி. அவர் பிள்ளைகளும் புத்திசாலிகள். அப்படியே அண்ணன் இந்தி கற்றுக் கொள்ள நினைத்தாலும், அந்த இந்தி வாத்தியாரின் நிலைமையை யோசித்துப் பாருங்கள். எனக்கு “ஏக் காவ்மே! ஏக் கிசான்! ரஹதாதா” நினைவுக்கு வந்து தொலைக்கிறது.

80 களில் மருத்துவர் ராமதாஸ் தங்கள் ஜாதிக்கு இடஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்தினார். பின்னாளில் பசுமைத்தாயகம் அமைப்பை ஏற்படுத்தியவர்கள்தான் அன்று சாலையில் மரங்களை வெட்டி காட்டுமிராண்டித்தனம் செய்தார்கள். அதிலும் எத்தனை அப்பாவி உயிர்கள் பலியாக்கப்பட்டன. அவர்களுக்கு மிஞ்சியதெல்லாம் ஒரு நிணைவுத்தூண் மட்டுமே. அவர்கள் குடும்பம் வாழ்வாதாரத்தை இழந்து இன்று நடுத்தெருவில். ஆனால் தமிழ்குடிதாங்கியின் குடும்பம் மாடமாளிகையில். நானோ, என் குடும்பத்தினரோ எந்த பதவிக்கும் ஆசைப்படவில்லை. எல்லாம் பாட்டாளி சொந்தங்களுக்காகவே செய்கிறோம் என்று வீரவசனம் பேசியவரை சவுக்கால் யார் அடிப்பது? சைக்கிள் ரிக்‌ஷாவில் கிளினிக் போனவரிடம் இன்று எத்தனை வாகனங்கள்? ஏமாந்தது? ஜாதி உணர்வால் தூண்டப்பட்ட அப்பாவி மக்கள்தான். அநேகமாக பெண்ணாகரத்தில் கடைசி ஆப்பு இருக்கலாம்.


இந்த நிலைமைதான் இன்று தெலுங்கானாவிற்கு ஆதரவாக போராடும் மாணவர்களுக்கும். விஜயசாந்தியும், சந்திரசேகர்ராவும் அரசியல் உச்சத்தை அடைவதற்கு மாணவர்களையும், அப்பாவி பொதுமக்களையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். தெலுங்கானா வருகிறதோ, இல்லையோ? இன்று இழந்த உயிர்களுக்கு என்ன விலை கிடைக்கும்? ராமதாஸ் அமைத்தது போல் ஒரு நிணைவுசின்னம் அல்லது ஒரு ஸ்தூபி. வருடந்தோறும் அஞ்சலிக் கூட்டங்கள். செப்பு பட்டயம்.

அய்யாவும், அம்மாவும் இரண்டு துருவங்கள் என்பது ஊரறிந்த சங்கதிதான். அம்மா ஆட்சியில் அவர் சபைக்கு வரமாட்டார். அம்மாவும் அதே கதைதான். இவர்கள் ஆற்றும் ஜனநாயக கடமைக்கு ஊதியத்தை மட்டும் தவறாமல் வாங்கி கொள்கிறார்கள். ஒரு பத்திரிக்கையில் வந்த புள்ளி விவரம்.

முதலில் இந்நாள் முதல்வர் அன்று வாங்கியது :ஐந்தாண்டு காலத்தில் ஒட்டு மொத்த சம்பளம். 9 லட்சத்து 42 ஆயிரத்து 778 ரூபாய். ரயில் பயணப்படி 69 ஆயிரத்து 180 ரூபாயாம். இத்தனைக்கும் சென்னைக்குள்தான் இவர் தொகுதி. ரயிலில் எங்கு போனாரோ?

முன்னாள் முதல்வர் இன்று வாங்குவது. மாதம் 8000 ரூ சம்பளம். எதிர்பாரா செலவுகள் 3500 ரூ. ஈட்டுப்படி 10 ஆயிரமாம். டெலிபோனுக்கு 10 ஆயிரம். ஆக மொத்தம் கூட்டி ,கழித்து சொன்னால் கிட்ட தட்ட 11 லட்சம். இதில் ஆயிரதெட்டு லொட்டு. லொசுக்கு. அவர் எனக்கு வணக்கம் சொல்லவில்லை. பின்னால் யாரோ கிள்ளி விட்டார்கள். மேலே இங்க் தெளித்தார்கள். வடிவேலு சொல்றாப்ல சின்ன புள்ளத்தனமா இருக்குல்ல!!


ஒரு வழியாக ரம்பாவின் திருமணம் நிச்சயமாகிவிட்டது. ஒன்றரை கோடி கார், 3 கோடிக்கு வைரமோதிரம் என்றெல்லாம் பரிசுகள் அளித்தாராம் மாப்பு. பெயர் பொருத்தம் பாருங்கள். மாப்பின் பெயர் இந்திரனாம். மேனகையை தேடி போகாமல் இருந்தால் சரிதான். அவர் கம்பெனி பெயர் மேஜிக்வுட்ஸ். ரம்பா கூட மந்திரக்கட்டைதான்.

டிஸ்கி :1 ஒரு சின்ன சந்தேகம் ? 30 ரூ அரிசியை 1 ரூபாய்க்கு கொடுக்க முடியுது. ஆனால் 30 பைசா தண்ணி பாக்கெட் ஏன்யா 3 ரூபா?

டிஸ்கி கவுஜை:

சிவப்பு விளக்கு
நீலப்படம்
பச்சை வார்த்தை
மஞ்சள் எழுத்து
கறுப்பு பணம்
வாழ்க்கை வண்ணமயத்தாம்ல
இருக்கு!!

50 comments:

Rajan said...

//சிவப்பு விளக்கு
நீலப்படம்
பச்சை வார்த்தை
மஞ்சள் எழுத்து
கறுப்பு பணம்//

வெள்ள கோவணத்த உட்டுட்டீங்களே தல

எறும்பு said...

Arumai
:)

Paleo God said...

நன்றி...

கடைசி வரை வெ(வ)ந்ததுக்கு.::))

எறும்பு said...

//எனக்கு “ஏக் காவ்மே! ஏக் கிசான்! ரஹதாதா” நினைவுக்கு வந்து தொலைக்கிறது.//

Enaku vantha SMS.

Learning Hindi through tamil..
" Dhuniya me koyi nahi hai" - உலகத்தில் கோழி இல்லை
"Koyi bath nahi hai" - கோழி குளிப்பது இல்லை
"Woh bar bar aatha hai" - அது பார்பரடோ ஆத்தா..

சங்கர் said...

பூஜா கரானா ஹே

தராசு said...

அந்த டிஸ்கி கேள்வி,

நெம்ப நெம்ப நாயமானதுங்கோவ்.

Rajaraman said...

\\60 களில் மொழிப் போராட்டம் ஆரம்பித்தது. இந்திக்கு எதிராக மாணவர்களை இன்றும் உள்ள அரசியல் தலைவர்கள் தூண்டியதன் பலன். இரண்டு தலைமுறைக்கே கேடாக அமைந்தது. எத்தனை தீக்குளிப்புகள், அனாவசிய உயிரிழப்புகள். அன்று இந்தியை தடுத்ததன் பலனை இன்று தலைவர் பிள்ளை வாயிலாக அனுபவிக்கிறார். ஆனால் மருமகன் புத்திசாலி. அவர் பிள்ளைகளும் புத்திசாலிகள். அப்படியே அண்ணன் இந்தி கற்றுக் கொள்ள நினைத்தாலும், அந்த இந்தி வாத்தியாரின் நிலைமையை யோசித்துப் பாருங்கள். எனக்கு “ஏக் காவ்மே! ஏக் கிசான்! ரஹதாதா” நினைவுக்கு வந்து தொலைக்கிறது.//
இவிங்க ஜல்லியை நம்புவதற்கு இன்னும் பல கேனவாயர்கள் தமிழகத்தில் இருக்கிறார்களே. அய்யகோ. தமிழ் நாடு திருந்துமா..

CS. Mohan Kumar said...

விஜய காந்த் மாதிரி ரெண்டு முன்னாள் முதல்வர்களும் வேலை பார்க்காமல் வாங்கிய சம்பள கணக்கு (Statistics) தந்திருக்கீங்க ம்ம்

vasu balaji said...

மானிட்டர் ஜிவ்வு. ஆமா. இந்த அத்தியாவசிய பொருள் பேக்கேஜ்ல தண்ணிபாக்கட் போடலயே ஜி.

Ashok D said...

மானிட்டர்.. பேருக்கேத்தா மாதிரி செம்ம ஸ்ராங்குதான்... ஜி

sathishsangkavi.blogspot.com said...

ஊர்ல எல்லாருக்கும் பல பிரச்சனை தல உங்களுக்கு தண்ணீர் பாக்கெட் பிரச்சனை....

பாலாஜி சங்கர் said...

மிக நல்ல பதிவு

Raju said...

ஓ கோன் ஹே..!

கோன் ஐஸாமா..? அது திருவிழாக்காலங்கள்ல கோவிலுக்கு வெளிய விப்பாங்க..!

பெசொவி said...

மானிட்டர் சும்மா செம ஹாட் மச்சி.......
(பாட்டில் விலையை ஏத்தி குடுக்கும்போது மறுப்பு சொல்லாம வாங்கறீங்க, தண்ணீர் பாக்கெட் விலைக்கு சிணுங்குறீங்களே ...நியாயமா?)

கண்ணகி said...

:)

நந்தா said...

தண்டோரா தெலுங்கானா பிரச்சினையின் முழு வடிவமும் தெரிந்த பின்புதான் இந்த பதிவு எழுதினீர்களா?

சந்திரசேகர் ராவும், விஜயசாந்தியையும் வைத்து மட்டுமே தெலுங்கானா பிரச்சினையை நீங்கள் அளவிட்டதாய் இருந்தால் தயவு செய்து அதன் முழு வரலாற்றை தெரிந்து கொள்ளுங்கள். முழு வரலாறும் தெரிந்துதான் எழுதினீர்கள் என்றால், உங்கள் கட்டுரையின் உள்ளடக்கத்தை முற்றிலுமாய் மறுக்கின்றேன் கூடவே இந்தி எதிர்ப்புப் போராட்டம் குறித்தான உங்களது கருத்திலிருந்தும்.

http://blog.nandhaonline.com

வழிப்போக்கன் said...

மிகவும் சீர்யசாக எழுதுகிறேன்.
முதல்வரின் இலவசத் திட்டத்தில் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் (ஆமாம் அனைவருக்கும்தான்) ஆளுக்கு ஆறு கென்லே தண்ணீர் பாட்டில்கள் கொடுக்கலாமே!
பணமா இல்லை? அந்தத்திட்டத்திற்கு மத்திய அரசு அளித்துள்ள பணதை இந்தத் திட்டத்துக்கு எடுத்துக்கொள்ளலாமே!
ஆடிட்டர் ஜெனரல் மட்டும் தண்ணீர் குடிப்பதில்லையா?

மணிஜி said...

/நந்தா said...
தண்டோரா தெலுங்கானா பிரச்சினையின் முழு வடிவமும் தெரிந்த பின்புதான் இந்த பதிவு எழுதினீர்களா?

சந்திரசேகர் ராவும், விஜயசாந்தியையும் வைத்து மட்டுமே தெலுங்கானா பிரச்சினையை நீங்கள் அளவிட்டதாய் இருந்தால் தயவு செய்து அதன் முழு வரலாற்றை தெரிந்து கொள்ளுங்கள். முழு வரலாறும் தெரிந்துதான் எழுதினீர்கள் என்றால், உங்கள் கட்டுரையின் உள்ளடக்கத்தை முற்றிலுமாய் மறுக்கின்றேன் கூடவே இந்தி எதிர்ப்புப் போராட்டம் குறித்தான உங்களது கருத்திலிருந்தும்.
//

நான் சொல்ல வந்தது போரட்டங்களில் பலியாகும் அப்பாவி உயிர்களைப் பற்றி மட்டுமே.பிரச்சனையை பற்றி அல்ல!!

R.Gopi said...

யப்பா....... இந்த தபா மானிட்டரு நெம்ப சூடு தல....

தொட்டாலே சுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ருங்குது... உச்சந்தல கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ருங்குது...
பார்த்தாலே பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ருங்க்து....
விட்டாலே விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ருங்குது...

Rajan said...

//அநேகமாக பெண்ணாகரத்தில் கடைசி ஆப்பு இருக்கலாம்.//

பத்தாது ...... நெறைய ஆப்பு வெக்கணும்

நேசமித்ரன் said...

அண்ணே

தண்டோரா சரக்கு..நல்ல சரக்கு
சும்மா கும்முன்னு ஏறுது ...

:)

வரதராஜலு .பூ said...

மானிட்டர் சும்மா ஜிவ்வுன்னு இருக்கு

மரா said...

நல்லவேளை அய்யாவ மட்டும் சொல்லிட்டு, அம்மாவ மறந்துறுவிகளோன்னு நெனைச்சேன்...மறக்கல. டிஸ்கி 1,2 அருமை.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

சூப்பரு அப்பு...

பெண்ணகரத்தில யாரு வேட்டிய, யாரு உருவப் போறாங்களோ..

Unknown said...

தெலுங்கானா, இந்தி எதிர்ப்பு, சுதந்திரப் போராட்டம் - இதிலெல்லாம் உயிர் இழந்த அப்பாவித் தொண்டர்கள் கண்டு கொள்ளப் படாமல் போனது/போவது - இந்தியாவின் சாபக்கேடு.

க ரா said...

கலக்கல்.

செ.சரவணக்குமார் said...

அருமையான பதிவு (டெம்ப்ளேட் பின்னூட்டமல்ல அண்ணா)

butterfly Surya said...

30 பைசா தண்ணி பாக்கெட் ஏன்யா 3 ரூபா?/////

நியாயமான கேள்வி..??

Romeoboy said...

இந்த தண்ணி பக்கெட் சமாசாரம் கரெக்ட் தலைவரே.

Jackiesekar said...

பெண்ணாகரத்தில் கடைசி ஆப்பு இருக்கலாம்.==-\\

எனக்கும் அப்படித்தான் தோனுது....

எம்.எம்.அப்துல்லா said...

எனக்கு ஹிந்தி அறவே தெரியாது.என் அலுவலகத்தில் நான் இருக்கும் நிலை மற்ற அனைவரையும்விட நீங்கள் நன்கு அறிவீர்கள். எங்க ஆபிஸ் பியூன் ஹிந்தி தாய்மொழியான பீகாரி ரமேஷையும் நீங்கள் நன்கு அறிவீர்கள்

:)

மணிஜி said...

/எம்.எம்.அப்துல்லா said...
எனக்கு ஹிந்தி அறவே தெரியாது.என் அலுவலகத்தில் நான் இருக்கும் நிலை மற்ற அனைவரையும்விட நீங்கள் நன்கு அறிவீர்கள். எங்க ஆபிஸ் பியூன் ஹிந்தி தாய்மொழியான பீகாரி ரமேஷையும் நீங்கள் நன்கு அறிவீர்கள்

:)//

அண்ணெ! நீங்கள் சென்னையில் இருக்கிறீர்கள்.டெல்லியில் அல்ல! அப்புறம் உங்களுக்கு ஆங்கிலமும் வரும்.பியூனிடம் வா..போதான்..அவன் சமாளிச்சுக்குவான். ஆனால் அவனோ அல்லது நீங்களோ அமைச்சரவை கூட்டத்திலா பங்கேற்க போகிறீர்கள்?

எம்.எம்.அப்துல்லா said...

அண்ணா நான் சொல்வது ஹிந்தி படிச்சா முன்னேறலாம் என்று சொல்வது தவறு என்பதைச் சுட்டிக்காட்டத்தான்.

அப்புறம் இந்தியாவில் இரண்டு பிரதமர்களைத் தேர்ந்தெடுத்த கர்மவீரர் காமராசருக்கு ஹிந்தியும் தெரியாது, ஆங்கிலமும் வராது. தேவை மொழியல்ல...தன்னம்பிக்கை.

எம்.எம்.அப்துல்லா said...

அன்று இந்தியை தடுத்ததன் பலனை இன்று தலைவர் பிள்ளை வாயிலாக அனுபவிக்கிறார்.

//

டி.ஆர்.பாலு, ஆ.இராசா, சுப்புலெட்சுமி,வேங்கடபதி,ராதிகா செல்வி, இரகுபதி என மத்திய அமைச்சரவையில் இடம் பெற்ற எவருக்கும் ஹிந்தி தெரியாது. ப.சிதம்பரத்துக்குத் தெரியாது.வாசனுக்குத் தெரியாது. என்ன குறைந்து போனார்கள் இவர்கள்??

மணிஜி said...

/எம்.எம்.அப்துல்லா said...
அண்ணா நான் சொல்வது ஹிந்தி படிச்சா முன்னேறலாம் என்று சொல்வது தவறு என்பதைச் சுட்டிக்காட்டத்தான்.

அப்புறம் இந்தியாவில் இரண்டு பிரதமர்களைத் தேர்ந்தெடுத்த கர்மவீரர் காமராசருக்கு ஹிந்தியும் தெரியாது, ஆங்கிலமும் வராது. தேவை மொழியல்ல...தன்னம்பிக்கை//

இல்லை. அப்துல்லா! அவங்க கதை வேற. இன்னிக்கும் சில பேங்க் வேலைகளுக்கு இந்தி அவசியம் வேண்டுமென்று கேட்கிறார்கள். இந்தியாவின் எந்த கிளைக்கும் அவர்கள் பணியமர்த்தப் படலாம்.உதாரணம். சிண்டிகேட் வங்கி. அதை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் கூட நடைபெற்றது. ஆனால் அவர்கள் அசையவில்லை. இன்னும் அதே நிலைதான் நீடிக்கிறது. தன்னன்ம்பிக்கையோடு அதுவும் இருந்தால் இன்னும் நல்லதுதானே!!

மணிஜி said...

/ எம்.எம்.அப்துல்லா said...
அன்று இந்தியை தடுத்ததன் பலனை இன்று தலைவர் பிள்ளை வாயிலாக அனுபவிக்கிறார்.

//

டி.ஆர்.பாலு, ஆ.இராசா, சுப்புலெட்சுமி,வேங்கடபதி,ராதிகா செல்வி, இரகுபதி என மத்திய அமைச்சரவையில் இடம் பெற்ற எவருக்கும் ஹிந்தி தெரியாது. ப.சிதம்பரத்துக்குத் தெரியாது.வாசனுக்குத் தெரியாது. என்ன குறைந்து போனார்கள் இவர்கள்??//

ப.சிதமபரத்திற்கு இந்தி தெரியாது எனபது எனக்கு புது செய்தி. மற்றவர்கள் எல்லாம் விடுங்க. பத்திரிக்கைகளீல் அண்ணனைப்பற்றித்தான் செய்தி வருகிறது.

எம்.எம்.அப்துல்லா said...

//தன்னன்ம்பிக்கையோடு அதுவும் இருந்தால் இன்னும் நல்லதுதானே!!

//

நான்,டாக்டர்.புருனோ போன்றோர் எதிர்ப்பது ஹிந்தியை அல்ல. கட்டாய ஹிந்தித் திணிப்பை. பாங்க் வேலையை இலட்சியமாகக் கொண்டவர்கள் பிரச்சார் சபாக்கள் நடத்தும் பிராத்மிக் வகுப்புகளுக்குத் தாராளமாகப் போகட்டும்.அவர்களை யாரும் தடுக்கவில்லை. ஆனால் பள்ளியில் ஹிந்தியைக் கட்டாயப்பாடமாக கொண்டுவர வேண்டும் என்ற வாதத்தை ஏற்கமுடியாது. (நீங்கள் ஏற்பவரா?எதிர்ப்பவரா?... ”தெரியலையேப்பா”ன்னு பதில் சொன்னீர்னா ஒதைப்பேன்) :))

எம்.எம்.அப்துல்லா said...

//பத்திரிக்கைகளீல் அண்ணனைப்பற்றித்தான் செய்தி வருகிறது.


//

அண்ணா அதன்பின்னால் நடக்கம் அரசியல் பெரும் கூத்து. இதுவரை டெல்லியில் லாபிவைத்து கோலோச்சியவர்கள் இவர் வரவால் எங்கே தங்கள் இடம் காலியோ என்ற நினைப்பில் தங்களின் தொடர்புள்ள மீடியா லாபிகளின் மூலம் இவர் ஒன்றும் தெரியாதவர், சரக்கில்லாதவர் என்ற கருத்தாக்கத்தை மீண்டும்,மீண்டும் பரப்பி வருகின்றனர். இதை மற்றவர்கள் நம்புவதற்கு முன் சம்மந்தப்பட்டவரே நம்பத் துவங்கிவிட்டது பெரும் கொடுமை. :(

மணிஜி said...

/எம்.எம்.அப்துல்லா said...
//தன்னன்ம்பிக்கையோடு அதுவும் இருந்தால் இன்னும் நல்லதுதானே!!

//

நான்,டாக்டர்.புருனோ போன்றோர் எதிர்ப்பது ஹிந்தியை அல்ல. கட்டாய ஹிந்தித் திணிப்பை. பாங்க் வேலையை இலட்சியமாகக் கொண்டவர்கள் பிரச்சார் சபாக்கள் நடத்தும் பிராத்மிக் வகுப்புகளுக்குத் தாராளமாகப் போகட்டும்.அவர்களை யாரும் தடுக்கவில்லை. ஆனால் பள்ளியில் ஹிந்தியைக் கட்டாயப்பாடமாக கொண்டுவர வேண்டும் என்ற வாதத்தை ஏற்கமுடியாது. (நீங்கள் ஏற்பவரா?எதிர்ப்பவரா?... ”தெரியலையேப்பா”ன்னு பதில் சொன்னீர்னா ஒதைப்பேன்) :))//

திணிப்பை நிச்சயமாக எதிக்கிறேன்.(யார் உதை வாங்கறது?) ஆனால் அதை வைத்து அரசியல் செய்வதையும் எதிர்க்கிறேன். இதுக்கும் ஒதைப்பீங்களா?

மணிஜி said...

/எம்.எம்.அப்துல்லா said...
//பத்திரிக்கைகளீல் அண்ணனைப்பற்றித்தான் செய்தி வருகிறது.


//

அண்ணா அதன்பின்னால் நடக்கம் அரசியல் பெரும் கூத்து. இதுவரை டெல்லியில் லாபிவைத்து கோலோச்சியவர்கள் இவர் வரவால் எங்கே தங்கள் இடம் காலியோ என்ற நினைப்பில் தங்களின் தொடர்புள்ள மீடியா லாபிகளின் மூலம் இவர் ஒன்றும் தெரியாதவர், சரக்கில்லாதவர் என்ற கருத்தாக்கத்தை மீண்டும்,மீண்டும் பரப்பி வருகின்றனர். இதை மற்றவர்கள் நம்புவதற்கு முன் சம்மந்தப்பட்டவரே நம்பத் துவங்கிவிட்டது பெரும் கொடுமை. :(//

அந்த உள்குத்தில் சம்பந்தபட்டவரின் பெயரை சொல்லுங்கள்.

எம்.எம்.அப்துல்லா said...

//ஆனால் அதை வைத்து அரசியல் செய்வதையும் எதிர்க்கிறேன். //

அப்புறம் நாங்க என்னதாய்யா பண்ணித்தொலைக்கிறது???!!???!?

மணிஜி said...

நேத்திக்கு எங்க அப்துல்லா போனிங்க? ஆறிப்போன டீயை ஆத்திகிட்டிருக்கோம்!!

எம்.எம்.அப்துல்லா said...

//அந்த உள்குத்தில் சம்பந்தபட்டவரின் பெயரை சொல்லுங்கள்.

//

நானும் உதை வாங்கத் தயாராக இல்லை :))

எம்.எம்.அப்துல்லா said...

//நேத்திக்கு எங்க அப்துல்லா போனிங்க? ஆறிப்போன //

ஒன்றிரண்டு மாதங்களுக்குப் பின்னால் இன்னைக்குத்தான்ணே கொஞ்சம் ஃபிரீயா இருக்கேன்.

மணிஜி said...

/ எம்.எம்.அப்துல்லா said...
//ஆனால் அதை வைத்து அரசியல் செய்வதையும் எதிர்க்கிறேன். //

அப்புறம் நாங்க என்னதாய்யா பண்ணித்தொலைக்கிறது???!!???!?//

பதிவு எழுதுங்க!! இல்லைன்னா பின்னூட்டத்தில் கும்மியடிங்க!!

மணிஜி said...

/ எம்.எம்.அப்துல்லா said...
//நேத்திக்கு எங்க அப்துல்லா போனிங்க? ஆறிப்போன //

ஒன்றிரண்டு மாதங்களுக்குப் பின்னால் இன்னைக்குத்தான்ணே கொஞ்சம் ஃபிரீயா இருக்கேன்//

அப்ப வாங்க!! சாருவையும்,ஜெமோவையும் பற்றி பேசலாம்!!

butterfly Surya said...

அப்துல்லா... Back to Form...

எம்.எம்.அப்துல்லா said...

//அப்ப வாங்க!! சாருவையும்,ஜெமோவையும் பற்றி பேசலாம்!!

//

இன்றைய பொழுதை இனிமையாய் கழிப்பதாய் உத்தேசம்.

எம்.எம்.அப்துல்லா said...

//அப்துல்லா... Back to Form...

//

:)

Kumky said...

:-))