ஜனவரி முப்பதாம் தேதி தீண்டாமை ஒழிப்பு உறுதி எடுக்க நிறைய அமைச்சர்கள் ஆப்செண்ட். எல்லோரும் மதுரைக்கு அண்ணன் பிறந்த நாளுக்கு காவடி எடுக்க போய் விட்டார்கள். அவர்களை முதல்வர் கடுமையாக கண்டித்தாராம். மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் இடி என்பது போல் போகலேன்னா அண்ணன் சாத்துவாரு!
சென்ற வாரம் டில்லியில் முதலமைச்சர்கள் மாநாடு நடைப்பெற்றது. விலைவாசி உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகளை ஆலோசிப்பதற்காக பிரதமர் தலைமையில் நடந்த முக்கியமான கூட்டம். தமிழக துனை முதலமைச்சர் திரு. ஸ்டாலின் கலந்து கொண்டார். நல்ல விஷயம்தான். அவர்தான் எதிர்காலம் என்றான பின் அவருக்கு நல்ல பயிற்சியாக இருக்கும்.(என் ஓட்டு ஸ்டாலினுக்குத்தான்). ஆனால் ஏன் தலைவர் போகவில்லை.?மருத்துவ காரணங்களும் சொல்லப்பட்டாலும், முக்கிய காரணம் திரையுலகினர் நடத்திய பாராட்டு விழாதான்.எத்தனை ஆட்டம், பாட்டம் ,கொண்டாட்டம். புகழ்மாலைகள். நடன நிகழச்சிகள்.(மானாட...மார்பாட..) இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை புரசைவாக்கத்தில் ஒரு வீட்டில் அழகிகளின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. பணம் வாங்கி கொண்டு அவுத்து போட்டு விட்டு ஆடினார்கள். போலிஸ் ரெய்டு. அதில் ஒரு பெண் குமுறலுடன் சொன்னது. “இதையேத்தான் நேரு ஸ்டேடியத்தில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் முன் பெரிய நடிகைகள் செய்கிறார்கள். அங்கு இல்லாத ஆபாசம் இங்க மட்டும் எப்படி வந்தது?( குமுதம் ரிப்போர்ட்டர்). நியாயமான கேள்விதான். ஆனால் யார் கேட்பது ? இன்னும் ரம்பாவின் திருமணம் இருக்கிறது. ஷகிலாவின் திருமணம் தே.மு.தி.க. பிரமுகருடன் என்பதால் அங்கு போக வாய்ப்பில்லை. அநேகமாக ஒரு ஆயிரம் பாராட்டு விழாக்களில் தலைவர் கலந்து கொண்டிருப்பார் என்று நினைக்கிறேன். இதற்கே ஒரு பாராட்டு விழா எடுக்கலாம். ஜெகத்ரட்சகன் ஏன் இருக்கிறார்?
சன் பிக்சர்ஸ், கிளவுட் நைன், ரெட் ஜெயண்ட் இவர்களை தொடர்ந்து இன்னுமொரு கழக கம்பெனியும் கலை சேவைக்கு தயாராகி விட்டது. முதல்வரின் மற்றொரு மகன் மு.க. தமிழரசும் களத்தில் குதித்து விட்டார். அவர் எடுக்கும் சொந்த படத்தில் அவர் மகன் நாயகனால அறிமுகம் ஆகிறார். பெயர் ஏதோ ஒரு நிதி!! ஆமாம் ! நிதி என்று பெயர் இல்லையென்றால் திருவாரூர் புவனேஸ்வரி (இது சாமிங்க..) அம்மன் கண்ணை குத்திடுமோ ?
அண்மையில் காஞ்சிபுரம் போயிருந்தேன். பச்சையப்பா சில்க்ஸ்க்கு புது விளம்பரம் படம் எடுக்கிறேன். அது பற்றி விவாதிக்க. அக்கவுண்ட் செக்ஷனலில்தான் முதலாளிகள் இருப்பார்கள். மிக பரபரப்பாக இருக்கும். புது நபர் உள்ளே வந்தால் யார் முதலாளி, தொழிலாளி என்று சட்டென்று வித்தியாசம் தெரியாது. தரையில் உட்கார்ந்து வேலைப் பார்ப்பார்கள். நான் அங்கு ஒரு மூன்று மணி நேரம் இருந்தேன். பார்கோடு பிரிண்ட் செய்தபடி ஒரு பெண் அழுது கொண்டே இருந்தாள். கண்களில் தாரையாய் கண்ணீர். அவளை யாரும் சட்டை செய்யவில்லை. அவ்வப்போது ஒரு முதலாளி மட்டும் “சும்மா இருக்க மாட்டியா நீ! இப்ப அழுகையை நிப்பாட்டறியா ,இல்லையா ? என்று அதட்டி கொண்டேயிருந்தார். எனக்கு வித்தியாசமாக தெரியவே “என்ன சார் விஷயம் “ என்று கேட்டேன். ஒன்னுமில்லை. இதுக்கு கல்யாணம். இன்னியோட வேலையை விட்டு போகுது. அதான்! அழுகாச்சி என்றார். பின் அவளிடம் திரும்பி “எங்க போற நீ! தோ இருக்கு வந்தவாசி. எப்ப வேணா இங்க வரலாம். இல்லை நானும் அண்ணியும் அங்க வரோம். கண்ணை துடை முதல்ல! அவர் மனைவியும் சேர்ந்து தேற்றி பட்டுப்புடவை, நகை, பணம் என்று கொடுத்து அனுப்பும்போது அந்த பெண் தாய் வீட்டிலிருந்து பிரிந்து போவது போல் கதறினாள். எவ்வளவு பெரிய கோடிஸ்வரர்கள் ! ஆனால் அவர்களின் தன்மைக்கு மதிப்பேயில்லை !
”35 ஆண்டுகளாக குடித்துக் கொண்டிருப்பவன் என்ற தகுதி எனக்கு உண்டு. ஜப்பானில் தயாரிக்கப்பட்ட அரிசி மதுவான சாக்கே குடித்ததுண்டு. சீனாவின் மவுத்தாய் பருகியதுண்டு. தர்மபுரி மாவட்டம் மூக்கனூர்பட்டியில் பனையில் இறக்கிய ஒரு மரத்து கள்ளை குடித்திருக்கிறேன். உடுமலையிலிருந்து மூணாறு போகும் வழியில் பதமான தென்னங்கள் அருந்தியிருக்கிறேன். மத்திய பிரதேச மாநில கிராமமொன்றில் ஒரு வகை ஈச்சங்கள் கிடைத்திருக்கிறது. மராட்டியத்தில் சந்த்ரி, மொசாம்பி ஆகிய வகைகளையும் சுவைத்திருக்கிறேன். கோவாவில் முந்திரியில் தயாரிக்கும் பென்னி என்கிற ஒருவகை சாராயம் குடித்திருக்கிறேன். ஸ்மர்னாஃப் வோட்காவும் ,பகார்டி ஒயிட் ரம்மும் தெரியும். உலகில் தயராகும் 60 க்கும் மேற்பட்ட பீர் வகைகளீல் பெரும்பாலானவற்றை அருந்தியிருக்கிறேன்.
இவற்றை எல்லாம் சட்டையில் கோர்த்துக் கொள்ளும் பதக்கங்களாக கருதி சொல்லவில்லை.எதிர் வரும் காலத்தில் குடியை விட்டொழிக்கும் எண்ணமும் எனக்கு இல்லை. ஒரு படைப்பாளி நேர்மையுடன் தன்னை பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக சொல்கிறேன்”
இது நான் சொன்னது இல்லிங்கோ! எழுத்தாளர் திரு. நாஞ்சில் நாடன் சொன்னது. தமிழினி வெளியிட்டிருக்கும் “குடிபோதை : புனைவுகள் தெளிவுகள்” என்கிற புத்தகத்தை முழுமையாக குடித்து.. சாரி படித்து முடித்தேன். மிக அருமையான தொகுப்பு.சங்ககாலம் முதல் எப்படி குடி பேச,போற்ற, தூற்றப்பட்டு வருகிறது என்பதை அருமையாக தொகுத்திருக்கிறார்கள். அதை நியாயபடுத்தவும் இல்லை. தூக்கி வீசவும் இல்லை.
டிஸ்கி கவுஜை :
திடீர் பெருமழையில்
நனையத்தான் ஆசை!
தும்மலும், காய்ச்சலும்
பொருட்டேயில்லை.
அந்த சுதந்திரத்தையும்
பறித்துக் கொண்டது
பாக்கெட்டில் இருந்த
புது அலைபேசி!

40 comments:
//அந்த சுதந்திரத்தையும்
பறித்துக் கொண்டது
பாக்கெட்டில் இருந்த
புது அலைபேசி!//
நச்...
அண்ணே, அது அருள்நிதியாம்ல..?
கலக்குங்க தல
டிஸ்கி :- கவித சூப்பர் அண்ணே
டிஸ்கி கவுஜ சரக்க விட சூப்பரு:)
//எவ்வளவு பெரிய கோடிஸ்வரர்கள் ! ஆனால் அவர்களின் தன்மைக்கு மதிப்பேயில்லை !//
இப்படி ஒரு சில நல்லவங்க இருக்கத்தான் செய்கிறார்கள்...
தலை உங்களுக்கு ஒரு பாராட்டு விழா நடத்திறலாமா?
மருத்துவ காரணங்களும் சொல்லப்பட்டாலும், முக்கிய காரணம் திரையுலகினர் நடத்திய பாராட்டு விழாதான்//
அதானே பார்த்தேன்..
எங்க மா(ர்)றிட்டாங்களோன்னு..:))
--------
ஒரு படைப்பாளி நேர்மையுடன் தன்னை பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக சொல்கிறேன்”//
ஆமா.. ஆமா.. அதிலயும் அந்த பேப்பர் ரோஸ்ட் சாப்பிட்டா கிட்னிக்கு நல்லதுன்னு கவுண்டர் அடிக்கடி சொல்லுவாரு..::))
----------
கவுஜ கலக்கல் .. :))
அந்த மாதிரி ஜவ்லிகடை மேட்டர் எல்லாம் நம் மனிதர்களுக்கு நினைவில் இருக்காது, அதே முதலாளி அந்த பொண்ணுகிட்டே தப்பா நடக்க முயற்சி செய்தால் , உடனே எல்லா பத்திரிக்கையும் , வரிந்து கட்டி நிற்கும், இந்த நிகழ்ச்சி எந்த பத்திரிக்கையிலும் வராது, எதோ நம்ம தண்டோரா குறைந்த பட்சம் வலை உலகிலாவது சொல்லிட்டு போறாரே.....
அருமையான பகிர்வுகள்.
சரியான காக்டெயில்.
கவிதை ‘நச்”
அன்பின் தண்டோரா, கவிதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நன்றி.
// பச்சையப்பா சில்க்ஸ்க்கு புது விளம்பரம் படம் எடுக்கிறேன். அது பற்றி விவாதிக்க. //
மனசை தொட்டது.
அந்த அலைபேசிய ஓரு பிளாஸ்டிக் பையில போட்டு ஓரு டான்ஸ் போட்ற வேண்டியது தானே.
Interesting...
//திடீர் பெருமழையில்
நணையத்தான் ஆசை!
தும்மலும், காய்ச்சலும்
பொருட்டேயில்லை.
அந்த சுதந்திரத்தையும்
பறித்துக் கொண்டது
பாக்கெட்டில் இருந்த
புது அலைபேசி!//
அருமை.
நணைய இல்லை நனைய:)))
//நிதி என்று பெயர் இல்லையென்றால் திருவாரூர் புவனேஸ்வரி (இது சாமிங்க..) அம்மன் கண்ணை குத்திடுமோ ?//
ஹஹஹஹ... நிதி போட்டனாலதான் அங்க மட்டும் நிதி குவியுதோ என்னவோ???
இந்த வார ஜூனியர் விகடன்ல கூட அண்ணன் பிறந்தநாளை முன்னிட்டு நடந்த கூத்த எல்லாம் போட்டு இருக்கான்.
புது அலைபேசி இதில் இருக்கும் புதுதான் ....
மானிட்டர்...
மப்பு !
ரொம்ப நல்ல கவிதை ஜி!
இதை நான் ஒரு பதிவாக போட்டு இருப்பேன்.டிஸ்க்கியில் போட்டு வயித்தெரிச்சலை வாங்கிக்க மாட்டேன்...
:-)
சரி இருக்கவே இருக்கு.க.நிழலின் அடுத்த என்னைக் கவர்ந்த வரிகள்.
மானிட்டர் பக்கங்கள் வழக்கம்போல கலக்கல் சார்.
கவிதை 'சூப்பர்'!
நல்லா கிக்கா இருக்கு இந்த வாரம். பிரபஞ்சனும் ‘குடி நமக்கு:குடி நமக்கு;குடி நமக்கு எல்லாம்’னு உயிர்மையிலே ஒரு கட்டுரை எழுதியிருப்பாரு.பாண்டிச்சேரியை அழகாப் பதிவு பன்ணியிருப்பார்.
அடுத்து எப்போ மானிட்டர்? மன்னிக்க...சந்திப்பு?
பதிவு அருமை...அரசியலால் உண்டாகும் எரிச்சல்களையும் அமைதியா சொல்லியிருக்கீங்க...
கவிதையையும் ரசித்தேன்...
நன்றி @ மாரி-முத்து
நன்றி @ ராஜீ
நன்றி @ மோகன்குமார்
நன்றி @ பேநாமூடி
நன்றி @ வானம்பாடிகள் ஐயா
நன்றி @ சங்கவி
நன்றி @ ஷங்கர்
நன்றி @ வெள்ளிநிலா
நன்றி @ சூர்யா..
நன்றி @ செல்வா..
நன்றி @ ஜெர்ரீ
நன்றி @ காவேரி (பிளாஸ்டி ஊஸ் பண்ணலாமா?)
நன்றி @அஷோக்
நன்றி @கண்மணி.. திருத்திட்டேன்!!
நன்றி @நாஞ்சில் பிரதாப்
நன்றி @ரோமியோ
நன்றி @ நேசன்..15 தானே வர்றீஙக?
நன்றி @ ராசாராம்
நன்றி @சரவணகுமார்
நன்றி @ மோகன்
நன்றி @ மயில்
நன்றி @ க.பாலாசி
//(மானாட...மார்பாட..) //
என்னா நக்கலு. ம் ம். :->
//எவ்வளவு பெரிய கோடிஸ்வரர்கள் ! ஆனால் அவர்களின் தன்மைக்கு மதிப்பேயில்லை !//
நல்லார் ஒருவர் உள்ளாரெனில் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை. இவர்களை போன்றவர்கள் இருப்பதால்தான் மழை பெய்கிறது.
கவுஜ - என்னோட ஏரியா இல்ல. சோ, நோ கமெண்ட்ஸ்
நன்றி @வரதராஜிலு சார்
அண்ணே ரெம்ப அபூர்வமான ஆனால் போற்றப்படவேண்டியவர்கள்
கவிதை அருமை(சரக்கும்)..
நன்றி மீன் துள்ளியான் & பட்டிகாட்டான்..
மொத்தமாக மானிடரின் பெயரில் வந்த இந்த காக்டெயிலும் நல்லா கிக்காகத் தான் இருக்கிறது...
கவிதை ரொம்ப நல்லா இருக்கு... அதை மட்டுமே பல ரவுண்டு போகலாம்... :-)
செம கிக்கு
இலகு வழியில் இணையத்தினூடு பணம் தேட அந்த இணப்பை அழுத்துங்கள்=http://www.trekpay.com/?ref=169994
வழக்கம்போல அனைத்துமே அருமை..!
நன்றி @ ரோஸ்விக்
நன்றி @ கேபிள்
நன்றி @ செம்பியம் புதல்வன்
நன்றி @ உண்மைத்தமிழன் அண்ணே
கலைஞர் உங்களுக்கு பங்காளிங்களா...???
உங்க நேர்மையைப்பாராடலாம் என்று நினைத்தேன்..அதுக்குள்ள அது நாஞசில்ல் நாடன் சொன்னதுன்னு சொல்லிட்டீங்கலே....
:)
என்னடா பதிவு பக்கம் காணோமேன்னு பார்த்தேன்!! வந்து விட்டீர்கள்!! விளாசுங்க!
தீண்டாமை ஒழிப்புன்னா?? அமைச்சர்களுக்கு அதுக்கு அர்த்தமாவது தெரியுமா?
இப்படி நல்ல உள்ளம் கொண்ட பணக்காரர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
கவுஜ கலக்கல்...
//திருவாரூர் புவனேஸ்வரி (இது சாமிங்க..) அம்மன் கண்ணை குத்திடுமோ ?
//
குத்தினாலும் குத்தும்....
குடிபோதை : புனைவுகள் தெளிவுகள்... நல்ல அறிமுகம்.
வெள்ளிநிலா said...
அந்த மாதிரி ஜவ்லிகடை மேட்டர் எல்லாம் நம் மனிதர்களுக்கு நினைவில் இருக்காது, அதே முதலாளி அந்த பொண்ணுகிட்டே தப்பா நடக்க முயற்சி செய்தால் , உடனே எல்லா பத்திரிக்கையும் , வரிந்து கட்டி நிற்கும், இந்த நிகழ்ச்சி எந்த பத்திரிக்கையிலும் வராது, எதோ நம்ம தண்டோரா குறைந்த பட்சம் வலை உலகிலாவது சொல்லிட்டு போறாரே.....
சூப்பர்...
Post a Comment