Tuesday, October 13, 2009

மானிட்டர் பக்கங்கள்........13/10/09வேலை அதிகம் இல்லை.ஒரு நாளைக்கு 3 மணி நேரம் வேலையிருந்தால் பெரிய விஷயம்.எனவே இணையத்தில் அதிக நேரம் கிடைக்கிறது.பல புதிய பதிவர்கள் பின்னுகிறார்கள்..ஈரோடு கதிர்,நாடோடி இலக்கியன்,நேசமித்ரன் ஆகியோர் கவிதையில் கவர்கிறார்கள்.அரவிந்தும்,நைனாவும்,எடக்கு மடக்கு/ஜோக்கிரி கோபியும் நையாண்டியில் ஜொலிக்கிறார்கள்..இன்னும் கலை,டக்ளஸ்,கார்த்திகை பாண்டியன்,பிராபகர்,வானம்பாடிகள்,ஜெர்ரீ ஈசானந்தா,ஸ்ரீ,எவனோ ஒருவன் பெஸ்கி,முத்துவேல்.இன்னும் நிறைய நண்பர்கள்..அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்..ஜமாய்ங்க தோழர்களே..(நானும் புதிய பதிவர்தான்)

அகநாழிகை இதழ் வெளியாகியிருக்கிறது.மணிஜி என்ற பெயரில் இரண்டு கவிதைகள் எழுதியிருக்கிறேன்..பொன்.வாசுதேவனுக்கு என் வாழ்த்துக்கள்

அகில உலக படைப்பாளி விருது தலைவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது..ஏற்கனவே உளியின் ஓசைக்கு விருதை கொடுக்கும் இடத்தில் இருந்து அவரே எடுத்துக் கொண்டார்...விருது வழங்கும் விழாவில் நடிகைளின் குத்தாட்டம் நடைபெற்றது.புவனேஸ்வரி அந்தரங்கத்தில் செய்ததாக சொன்னதை இவர்கள் அம்பலத்தில் அரங்கேற்றினார்கள்.முதுகு வலியை பொருட்படுத்தாமல் முதல்வர் புன்சிரிப்புடன் அமர்ந்து ரசித்தார்.தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியாக அது கலைஞர் டிவியில் ஒளிபரப்ப தயார்(அவர் தீபாவளி வாழ்த்து சொல்ல மாட்டார் என்பது வேறு விஷயம்)

தமிழ் ஸ்டுடியோ.காம் அமைப்பின் முதல் ஆண்டு நிறைவு விழா சிறப்பாக நடைபெற்றது.அதில் எனது சியர்ஸ் என்ற குறும்படத்துக்கும் விருது கிடைத்தது.கேபிள் சங்கரின் விபத்து படத்திற்கு சிறந்த படத்தொகுப்பு விருதும் கிடைத்தது மகிழ்வை தந்த்து..தமிழ் ஸ்டூடியோ அருண் மற்றும் குணாவிற்கு என் வாழ்த்துக்களூம் நன்றியும்

ஒரு சிகரெட்டுக்கு ரூ 100/- ஒரு பாக்கெட் சிகரெட்டுக்கு 24,000/-ரூ செல்போனையே ஒருத்தர் கொடுத்து விட்டார்.நண்பரை சந்திக்க மது அடிமைகள் மறுவாழ்வு மையத்திற்கு சென்றிருந்தேன்..அங்கு கேள்விப்பட்ட தகவல் இது.சோதனை செய்துதான் அனுமதிக்கிறார்கள்.அப்படியும் நான் பீடி கட்டை நண்பரிடம் சேர்த்தது வேறு கதை..பீடி வந்து விட்டது என்ற உடன் ஒருவர் முகத்தில் அவ்வளவு பூரிப்பு.பிற்பாடு நண்பர் சொன்னார்”அவர் ஆந்திராவில் பெரிய மணல் காண்ட்ராக்டர்.கோடிஸ்வரர்.குடி படுத்தும் பாடு...

அங்கு ஒரு பெண்மணியும் இருக்கிறார்.கணவர் வீட்டில் வைத்து குடிப்பாராம்.குழந்தை இல்லை.மனைவிக்கும் பழக்கி விட்டார்.கணவர் திடீர் என்று இறந்து விட மனைவி முழு நேர குடிவாசி..அவர்து தம்பி கொண்டு வந்து அங்கு சேர்த்திருக்கிறார்..ஆனால் அவர் சொல்வதுவெளியில் போனாலும் என்னால் குடிக்காமல் இருக்க முடியாது.ஏன் இருக்க வேண்டும்?எனக்கு என்ன வாழ்க்கை வேண்டியிருக்கிறது?நியாயமான கேள்வி..

நண்பரை மாற்றம் தெரிகிறதா? என்று கேட்டேன்..எப்ப வேணா சுவர் ஏறி குதிச்சு ஓடி வர கண்டிஷன்லதான் இருக்கேன்னார்..கடவுள்தான் காப்பாத்தணும்(முடிஞ்சா)

பட்டினப்பாக்கம் சங்கீதா ஓட்டல் பக்கத்தில் ஒரு டாஸ்மாக் கடை.மேலே ஏசி பார் வசதி.மிகவும் அருமையான சர்வீஸ்..விலையும் சகாயம்தான்..ஸ்டார் ஓட்டலில் குடிக்க விரும்புவர்கள் அங்கு போனால் நிறைய பணம் மிச்சமாகும்..
(குடியை ஊக்குவிக்கவில்லை.தகவல்தான்..கேபிள் சாப்பாட்டு கடையை பற்றி சொல்வது போல்)

ஒரு எஸ்.எம்.எஸ் ஜோக்.:

டிரைவர் :சார் சுத்தமா பெட்ரோல் இல்லை..வண்டி ஒரு அடி கூட முன்னாடி போகாது

விஜய் : சரி அப்படின்னா ரிவர்ஸ் எடு.வீட்டுக்கு போயிடலாம்..(அத்திரி அனுப்பியது)

34 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

விருது பெற்றமைக்கு வாழ்த்துகள் புதிய பதிவரே..:-)))

ᾋƈђἷłłἔṩ/அக்கில்லீஸ் said...

சூப்பர் பாதிவு.. அருமை...

விருது வாங்கியதற்கு வாழ்த்துக்கள். :)

முரளிகண்ணன் said...

கிக்கு ஏறுதே

வரதராஜலு .பூ said...

//பட்டினப்பாக்கம் சங்கீதா ஓட்டல் பக்கத்தில் ஒரு டாஸ்மாக் கடை.மேலே ஏசி பார் வசதி.மிகவும் அருமையான சர்வீஸ்..விலையும் சகாயம்தான்..ஸ்டார் ஓட்டலில் குடிக்க விரும்புவர்கள் அங்கு போனால் நிறைய பணம் மிச்சமாகும்..(குடியை ஊக்குவிக்கவில்லை.தகவல்தான்..கேபிள் சாப்பாட்டு கடையை பற்றி சொல்வது போல்)//

ரொம்ப முக்கியம்

Cable சங்கர் said...

அலோவ் நீங்கெல்லாம் புதிய பதிவரா..?

சரி..சரி..விடுங்க.. சாயங்காலம்ம் பாத்துக்கலாம்...:)

ரோஸ்விக் said...

//புவனேஸ்வரி அந்தரங்கத்தில் செய்ததாக சொன்னதை இவர்கள் அம்பலத்தில் அரங்கேற்றினார்கள்.முதுகு வலியை பொருட்படுத்தாமல் முதல்வர் புன்சிரிப்புடன் அமர்ந்து ரசித்தார்.தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியாக அது கலைஞர் டிவியில் ஒளிபரப்ப தயார்(அவர் தீபாவளி வாழ்த்து சொல்ல மாட்டார் என்பது வேறு விஷயம்)//

குத்துங்க தலைவா, குத்துங்க....நானும் உங்களோட சேர்ந்துக்கிறேன்...மானிட்டருக்கு அடிமையில்லை....ஆனால், இந்த மானிட்டர் பக்கங்களுக்கு நான் ரசிகன். வாழ்த்துக்கள்!

http://thisaikaati.blogspot.com

நையாண்டி நைனா said...

present

ஈரோடு கதிர் said...

அடையாளப்படுத்தியமைக்கு நன்றி

//எப்ப வேணா சுவர் ஏறி குதிச்சு ஓடி வர கண்டிஷன்லதான் இருக்கேன்னார்//

வேறு என்ன சொல்ல...

ஈரோடு கதிர் said...

அண்ணா.....
விருது பெற்றமைக்கு வாழ்த்துகள்

VISA said...

மானிட்டர் செம தூள்

Ashok D said...

ண்ணா.. நல்லாயிருந்துச்சுங்கண்ணா...

வால்பையன் said...

//நண்பரை மாற்றம் தெரிகிறதா? என்று கேட்டேன்..எப்ப வேணா சுவர் ஏறி குதிச்சு ஓடி வர கண்டிஷன்லதான் இருக்கேன்னார்..கடவுள்தான் காப்பாத்தணும்(முடிஞ்சா)//

நண்பர்களை அடிக்கடி போன் பண்ண சொல்லனும்! போன் பண்ணும் போது நண்பர்கள் குடிக்காமல் இருத்தல் நலம்! முடிந்தால் நேரில் சென்று பார்ப்பது இன்னும் நலம்!

R.Gopi said...

//.பல புதிய பதிவர்கள் பின்னுகிறார்கள்.//

நான் கூட இந்த லிஸ்ட்ல இருக்கேன் "தல"...

//மணிஜி என்ற பெயரில் இரண்டு கவிதைகள் எழுதியிருக்கிறேன்..//

வாழ்த்துக்கள்... காற்று போல எங்கும் நிறைந்திருக்கும் உங்களுக்கும் உங்கள் எழுத்துக்கும்.... ரசித்து படிப்பதால் சொல்கிறேன்...

//அகில உலக படைப்பாளி விருது தலைவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது..ஏற்கனவே உளியின் ஓசைக்கு விருதை கொடுக்கும் இடத்தில் இருந்து அவரே எடுத்துக் கொண்டார்...//

ஹா...ஹா...ஹா... இதுதான் தண்டோரா டச்.... நான் கூட‌ இதை " ந‌ம‌க்கு நாமே திட்ட‌த்தின்" கீழ் "த‌லை" எடுத்துக்கொண்ட‌தாக‌ எழுதினேன்...

//புவனேஸ்வரி அந்தரங்கத்தில் செய்ததாக சொன்னதை இவர்கள் அம்பலத்தில் அரங்கேற்றினார்கள்.முதுகு வலியை பொருட்படுத்தாமல் முதல்வர் புன்சிரிப்புடன் அமர்ந்து ரசித்தார்.//

இந்த‌ நையாண்டிக்காக‌ ஒரு ஸ்பெஷ‌ல் ஷொட்டு... ச‌க‌ ப‌திவ‌ர்னு கொடுத்தா ர‌த்த‌ம் வ‌ரும்... ஆனால், உங்க‌ள் ந‌ண்ப‌ராக‌ கொடுக்கிறேன்...

//தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியாக அது கலைஞர் டிவியில் ஒளிபரப்ப தயார்(அவர் தீபாவளி வாழ்த்து சொல்ல மாட்டார் என்பது வேறு விஷயம்)//

ச‌ரியே... தீபாவ‌ளிக்கு ப‌குத்த‌றிவு பெய‌ர் "விடுமுறை நாள் கொண்டாட்ட‌ம்" எப்பூடி...??

//தமிழ் ஸ்டுடியோ.காம் அமைப்பின் முதல் ஆண்டு நிறைவு விழா சிறப்பாக நடைபெற்றது.அதில் எனது சியர்ஸ் என்ற குறும்படத்துக்கும் விருது கிடைத்தது.கேபிள் சங்கரின் விபத்து படத்திற்கு சிறந்த படத்தொகுப்பு விருதும் கிடைத்தது மகிழ்வை தந்த்து..தமிழ் ஸ்டூடியோ அருண் மற்றும் குணாவிற்கு என் வாழ்த்துக்களூம் நன்றியும்//

வெற்றி பெற்ற உங்க‌ள் அனைவ‌ருக்கும் என் ம‌ன‌மார்ந்த‌‌ வாழ்த்துக்க‌ள்... இதோடு நில்லாம‌ல், நீங்க‌ள் அனைவ‌ரும் மேலும் ப‌ல‌ப‌ல‌ சாத‌னைக‌ளை புரிய‌வேண்டும் என்ப‌தே என் அவா...(இந்த‌ அவா க்கு ஆசைன்னு அர்த்த‌ம்...)

//ஒரு சிகரெட்டுக்கு ரூ 100/- ஒரு பாக்கெட் சிகரெட்டுக்கு 24,000/-ரூ செல்போனையே ஒருத்தர் கொடுத்து விட்டார்.நண்பரை சந்திக்க மது அடிமைகள் மறுவாழ்வு மையத்திற்கு சென்றிருந்தேன்..அங்கு கேள்விப்பட்ட தகவல் இது.சோதனை செய்துதான் அனுமதிக்கிறார்கள்.அப்படியும் நான் பீடி கட்டை நண்பரிடம் சேர்த்தது வேறு கதை//

யப்பா... படா கில்லாடிபா நீயி...

//நண்பரை மாற்றம் தெரிகிறதா? என்று கேட்டேன்..எப்ப வேணா சுவர் ஏறி குதிச்சு ஓடி வர கண்டிஷன்லதான் இருக்கேன்னார்..கடவுள்தான் காப்பாத்தணும்(முடிஞ்சா)//

ம்ம்ம்... நக்கலு.... நடத்துங்க... நடத்துங்க...

வாழ்த்துக்கள் தலீவாவாவாவா.........

மணிஜி said...

/நான் கூட இந்த லிஸ்ட்ல இருக்கேன் "தல"...//

தம்பி..கோபி..மன்னிக்கவும்.விடுபட்டு விட்டது..(இதயத்தில் இடம் உண்டு..ஆனாலும் இதிலும் சேர்த்து விட்டேன்)

R.Gopi said...

//தண்டோரா ...... said...
/நான் கூட இந்த லிஸ்ட்ல இருக்கேன் "தல"...//

தம்பி..கோபி..மன்னிக்கவும்.விடுபட்டு விட்டது..(இதயத்தில் இடம் உண்டு..ஆனாலும் இதிலும் சேர்த்து விட்டேன்)//

அன்பு உடன்பிறப்பே... இதயத்தில் இடம் தந்த உன் அன்பில் மகிழ்ந்தேன் , உன் செய்கையால் நெகிழ்ந்தேன் .... "என் க‌ண்க‌ள் ப‌னித்த‌து...இத‌ய‌ம் இனித்த‌து"..

நாளை "குரசொலி"யில் உனக்காக நான் எழுதும் வாழ்த்துப்பா தயாராகி வருகிறது...

மணிஜி said...

இதுக்கு கூட ஒரு மைனஸ் குத்து குத்திட்டாங்கப்பா...(ஒரு வேளை எதாவது உள்குத்து மேட்டர்
எழுதிட்டனா?)

யாசவி said...

wishes

:))

vasu balaji said...

விருதுக்கு வாழ்த்துகள். பாராட்டுக்கு நன்றி. நீங்க புதிய பதிவர்னா நாங்க இன்னும் பிறக்கவே இல்லை:)). கலக்கல் இடுகை.

ஜெட்லி... said...

//இதுக்கு கூட ஒரு மைனஸ் குத்து குத்திட்டாங்கப்பா...(ஒரு வேளை எதாவது உள்குத்து மேட்டர்
எழுதிட்டனா?)

//
விஜய் ரசிகர்கள் யாரவது குத்திருப்பாங்க ஜி...

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

விருது பெற்றதற்கு வாழ்த்துகள்.

நர்சிம் said...

வாழ்த்துக்கள்

அத்திரி ஜோக் அசத்தல்.

அக்னி பார்வை said...

///வேலை அதிகம் இல்லை.ஒரு நாளைக்கு 3 மணி நேரம் வேலையிருந்தால் பெரிய விஷயம்.எனவே இணையத்தில் அதிக நேரம் கிடைக்கிறது///
\
koduththu vachvanga

குசும்பன் said...

//தமிழ் ஸ்டுடியோ.காம் அமைப்பின் முதல் ஆண்டு நிறைவு விழா சிறப்பாக நடைபெற்றது.அதில் எனது சியர்ஸ் என்ற குறும்படத்துக்கும் விருது கிடைத்தது.//

வாழ்த்துக்கள்!

//கேபிள் சங்கரின் விபத்து படத்திற்கு சிறந்த படத்தொகுப்பு விருதும் கிடைத்தது மகிழ்வை தந்த்து.// விபத்து இடம் மாறி வந்து கேபிளுக்கு விருது விபத்தாக கிடைத்தது என்று சொல்லி இருந்தால், அடுத்த சியர்ஸின் பொழுது உங்களுக்கு நோ நோஸ்:)

butterfly Surya said...

நண்பரை சந்திக்க மது அடிமைகள் மறுவாழ்வு மையத்திற்கு சென்றிருந்தேன்///

மணிஜீ.. நானும் வரேன்னு சொன்னேன். நீங்க மட்டும் போயிட்டு வந்தீங்களா..??

Romeoboy said...

\\ஒரு சிகரெட்டுக்கு ரூ 100/- ஒரு பாக்கெட் சிகரெட்டுக்கு 24,000/-ரூ செல்போனையே ஒருத்தர் கொடுத்து விட்டார்.//

நான் எப்ப இந்த மாதுரி ஆகா போறேனோ தெரியல. எப்படியாவது தம் அடிக்காத நிப்பாட்டணும் தல ..

T.V.ராதாகிருஷ்ணன் said...

விருது பெற்றமைக்கு வாழ்த்துகள்

கலையரசன் said...

மானிட்டர் சீப்(சிம்பிள்)& பெஸ்ட்!!

என்னண்ணே... குறுக்க கோடு போடலையா?
இல்ல நான் மப்புல இருக்கேனா?

Beski said...

என்ன கொடுமை சார் இது....?

Beski said...

//பட்டினப்பாக்கம் சங்கீதா ஓட்டல் பக்கத்தில் ஒரு டாஸ்மாக் கடை.மேலே ஏசி பார் வசதி.மிகவும் அருமையான சர்வீஸ்..விலையும் சகாயம்தான்..ஸ்டார் ஓட்டலில் குடிக்க விரும்புவர்கள் அங்கு போனால் நிறைய பணம் மிச்சமாகும்..//

அங்கே சைட் டிஸ் செம சூப்பரா இருக்கும். ஆடு, கோழி, எறா, மீனு எல்லாம் செம டேஸ்டு. இடமும் அவ்ளோ சுத்தமா இருந்திருக்குமே? நல்ல இடம்தான். கேபிள்ஜியும் இதப் பத்தி எழுதப் போறதா கேள்விப்பட்டேன்...
சேர்ந்து போனீங்களோ?

விநாயக முருகன் said...

மணி.ஜி தங்கள் எழுத விரும்பாத கவிதை அய்யனார் இரண்டு கவிதைகள் படித்தேன். அருமை. சிறப்பு பொருளாதார மண்டலம் வருகிறதாம் என்ற கவிதையின் இறுதி வரிகள் உச்சம்

Kumky said...

பட்டினப்பாக்கமா.....ஓகே...அடுத்த...சே என்ன இதேதான் கன்னுல படுது..
நண்பரை உங்களாலகூட அடக்க முடியலயா? ஏன் இப்படி எக்ஸ்ட்ட்ரீம் லெவல் என்றுதான் புரியவில்லை.

Jackiesekar said...

பட்டினப்பாக்கம் சங்கீதா ஓட்டல் பக்கத்தில் ஒரு டாஸ்மாக் கடை.மேலே ஏசி பார் வசதி.மிகவும் அருமையான சர்வீஸ்..விலையும் சகாயம்தான்..ஸ்டார் ஓட்டலில் குடிக்க விரும்புவர்கள் அங்கு போனால் நிறைய பணம் மிச்சமாகும்..
(குடியை ஊக்குவிக்கவில்லை.தகவல்தான்..கேபிள் சாப்பாட்டு கடையை பற்றி சொல்வது போல்)//


நல்ல தகவல் நண்பா... நன்றி

R.Gopi said...

தங்கள் அன்புக்கு என் நன்றி...

Thamira said...

சிறப்பாக இயங்குவதாக நீங்கள் கூறியவர்களின் இணைப்பைத் தந்திருந்தால் ஃபாலோ செய்ய வசதியாக இருந்திருக்கும்.

அப்புறம் அத்திரிக்கு விஜயை நொங்கெடுக்கும் ஸ்ம்ஸ் அனுப்புவதே வேலையாக இருக்கிறது. கார்க்கியிடம் சொல்லவேண்டும்.