Friday, October 30, 2009

180/120....எகிறிடுச்சு


முன் குறிப்பு:அறிகுறிகளே காட்டாமல் கூட உயர் இரத்த அழுத்தம் நம்மை பாதிப்பதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள்.அவ்வப்போது சோதனை செய்து கொள்ள வேண்டுமாம்.நண்பர்களின் நலம் விரும்பி என் அனுபவத்தை எழுதுகிறேன்(மேட்டர் கிடைக்க கூடாதே?..என்று சிலர் கருதலாம்)

0000000000000

முந்தாள் நாள் காலை முதலே நான் சரியாக வில்லை.லேசான கிடினெஸ் இருந்தது.சரி நேத்து நைட்டு மப்பாயிருக்கும் என்று விட்டு விட்டேன்.அன்று என் அத்தை இறந்து பத்தாம் நாள் காரியம்.அதற்காக எல்லோரும் கிளம்பி குரோம்பேட்டைக்கு போய் விட்டோம்.அங்கு வீட்டிற்கு வெளியில் அமர்ந்திருந்தோம்.மீண்டும் ஒரு சாவு செய்தி.என் கசினின் மகள் 45 வயது ஹார்ட் அட்டாக்.அதுவும் கிரோம்பேட்டையில்தான்.தலை நன்றாக சுற்றுவது தெரிந்தது.காலெல்லாம் தெம்பே இல்லாமல் துவள ஆரம்பித்தது.என்னிடம் ஒரு பழக்கம்.என்னதான் முடியவில்லையென்றாலும் வீட்டில் சொல்லி அவர்களை பயமுறுத்துவதை விரும்பமாட்டேன்.நைசாக வெளியில் வந்து ஒரு ஆட்டோ பிடித்து அருகில் உள்ள டாக்டரிடம் போப்பா என்றேன்.

டாக்டர் இன்னும் வந்திருக்கவில்லை.காலை மணி 9.அவர் வரும் நேரம்தான்.டோக்கன் கொடுத்தார் நர்ஸ்.6 ஆம் நம்பர் என்று முதலில் நினைத்தேன்.பின் தான் அது 9 என்று தெரிந்தது.டாக்டர் வந்தவுடன் வரிசைப்படி எல்லோரும் செல்ல ஆரம்பித்தனர்.ஒருவரிடம் கேட்டு பார்த்தேன் பலனில்லை.அவரவர் வேதனை அவரவருக்கு.கிட்ட தட்ட மயங்கி விழும் நிலையில் உள்ளெ சென்றேன்.டாக்டர் பி.பி செக் பண்ணிவிட்டு 180/120.என்னய்யா நினைச்சுகிட்டிருக்கே?மாத்திரை சாப்பிடறதில்லையா?ஹமாம் விளம்பரத்தில் வருவது போல்(பரு வந்துடும்,தன்னம்பிக்கையே போயிடும் இத்யாதி..)கை,கால் இழுத்துக்கும்,மூளை செயலிழுந்துடும் என்று பட்டியலிட்டு விட்டு உள்ளே படுக்க வைக்குமாறு ஏஞ்சலிடம்(அண்ணன் உ.த பாழையில்) சொன்னார்.முதல் உதவி ஆரம்பிக்கப்பட்டது

நான் அதற்குள் இன்ஷூரன்ஸ் பிரிமியம் எதாவது ட்யூ இருக்கிறதா?வரவேண்டிய பேமெண்ட்ஸ் என்னன்ன?கொடுக்க வேண்டிய கடன் பாக்கிகள் என்று புத்தி சகல திசைகளிலும் தறி கெட்டு ஓட ஆரம்பித்தது.இப்பல்லாம் 28 வயசுலயே ஸ்டிரோக் வருதுன்னு டாக்டர் சொன்னது நினைவுக்கு வர 17 வருஷம் போனஸோ என்றும் தோன்றியது.கை,காலகளை ஆட்டி பார்த்துக்கொண்டே இருந்தேன்.

விஷயம் தெரியப்படுத்தபட மனைவி,தம்பி எல்லோரும் வந்துவிட்டார்கள்.ரிஷப்ஷனில் இருந்த தினத்தந்தியில் எமன்(காலம்)பாசக்கயிற்றை வீசும் விளம்பரத்தை பார்த்தது வேறு நினைவுக்கு வந்து தொலைத்தது.அவ்வளவு சின்ன குறுகிய வாயில் வழியாக ஒரு எருமை வரும் காட்சியையும் கற்பனை செய்தும் பார்த்தேன்.

நோ சிகரெட்..நோ ஆல்கஹால்..நோ சால்ட்..நோ ஆயில்..நோ டென்ஷன்(இதை டாக்டர் சொல்லும்போது எனக்கு சிரிப்பு வந்தது.பின்ன? எத்தனை ரிமோட் உடைத்திருக்கிறேனே)சிரிப்பொலி,ஆதித்யா பாருங்கள்.நோ சீரியல்.நல்ல மீயூசிக்,மெடிடேஷன்..இன்னும்...

இப்படி ஏகப்பட்ட நோக்களையும்,எஸ்களையும் சுமந்து நொந்து வீடு திரும்பினேன்.மாத்திரை சாப்பிட்டு,நேற்று போட்ட என் மகள் பதிவிற்கு பதில் போட்டு விட்டு(இதுக்கு மட்டும் உடம்புல தெம்பு வந்திடுதுப்பா),நன்றாக தூங்கி இரவு 8 மணிக்கு வரட்டு சப்பாத்தி சாப்பிட்டு விட்டு ஒரு வாக்கிங் போனேன்.உடலில் பழைய தெம்பு வந்திருந்தது.கிளைமேட் இதமாக இருக்க ஒரு சிகரெட் பிடிப்பதை விட அப்போதைக்கு வேறு சுகம் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை என்று சொன்னால் அது பொய்..(ஜமுக்காளத்தில் வடிகட்டிய).

முன்பு எழுதியது..

நில் என்றால்

ஓட்டம்

பேசு என்றால்

அதிமெளனம்

பேசாதே என்றால்

பேரிரைச்சல்

எல்லாவற்றிலும்

ஏறுக்கு மாறு

ஏட்டிக்கு போட்டி

உன் மனசில்

என்ன?

மனசு

என்ற நினைப்பா?


டிஸ்கி:பதிவர் ஜீவன் எழுதிய புகையை நிறுத்துவது எப்படி என்ற ஒரு பதிவு.எனக்கு மிகவும் பிடித்தது.அதன் சுட்டி இணைத்துள்ளேன்.மருத்துவர் தேவன்மயம் உயர் ரத்த அழுத்தம் தொடர்பாக எழுதியிருந்தால் சுட்டியை இணைக்கவும்


37 comments:

Cable சங்கர் said...

அதெல்லாம் சரி.. நர்ஸ் எப்படி.. அநேகமாய் டாக்டர் பி.பி பார்க்கும்போது அவ்வள்வு காட்டியதற்கு அவங்க கூட காரணமா இருக்கலாம்..:)

பிரபாகர் said...

Health is Wealth அண்ணா... உடம்பினை நன்றி பார்த்துக்கொள்ளுங்கள். மாலையில் அழைக்கிறேன்.

பிரபாகர்.

Mahesh said...

நேத்து உங்க கூட பேசும்போதே நினைச்சேன்.... நாளைக்கு இதை படிக்க(வும்) வேண்டி வரலாம்னு.... ஆனா இப்பல்லாம் தொட்டதுக்கெல்லாம் ஸ்ட்ரெஸ் ஸ்ட்ரெஸ்ன்னு கூவறதால அடிக்கடி செக் பண்றது நல்லதுதான்.

டாக்டர் சொன்னதை பாலோ பண்ணுங்க.... நோ ஸ்மோக் ப்ளீஸ்..

Beski said...

சந்தோசமா இருங்க... சைடுல உடம்பையும் பாத்துக்குங்க.

பித்தன் said...

take care yourself....

நர்சிம் said...

விவரித்த விதம் அருமை.

உடம்பைப் பாருங்க ஜி.

*****
உங்கள் மகளுக்கு வாழ்த்துக்கள்.மிகச்சிறந்த எதிர்காலம் இருக்கிறது மீடியா உலகில்.(தாமதமாகப் பார்த்தேன்)

அமுதா கிருஷ்ணா said...

சிகரெட்டை உடனே விடவும்..இந்த பி.பி ஒரு எச்சரிக்கை...விளம்பரத்தில் உங்கள் குரல் அருமை...

iniyavan said...

சார்,

180/120 ரொம்ப பயந்து போகணும்னு அவசியம் இல்லை. தினமும் வாக்கிங், யோகா, தியானம், அளவான சாப்பாடு, நல்ல தூக்கம் இருந்தால் போயே போய்விடும்.

கவலைப் படாதீங்க. ஆனா அந்த மப்பு விவகாரம்..............????

தீப்பெட்டி said...

உடம்பை கவனிச்சுக்கோங்க பாஸ்..

ராமலக்ஷ்மி said...

சுட்டி தருவதில் தப்பில்லை என நினைக்கிறேன். நேரமிருந்தால் பாருங்க. உடல்நலம் பார்த்துக் கொள்ளவும்.

கே.என்.சிவராமன் said...

உடம்பை பார்த்துக்குங்க...

கேபிள் ஜி, உங்களுக்கு குசும்பு ஜாஸ்தி :-)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

ஈரோடு கதிர் said...

உடம்பைப் பாருங்க..
உடம்பைப் பாருங்க....
உடம்பைப் பாருங்க......

Kumky said...

தினசரி பயிற்ச்சி ஒன்றே உடம்பை காக்கும்.
உங்களுக்கு சொல்லி தெரியவேண்டியதில்லை...
யோகா, அல்லது மிதமான வேக நடை, அல்லது ஹடயோகா..

ஒரு வார காலம் தொடர்ந்து செய்து விட்டீர்களானால் அது உங்களை செய்ய வைக்கும் தொடர்ந்து.

சுவர் இருந்தால்தான்....

இரும்புத்திரை said...

சிகரெட்டை சீக்ரெட்டாக கூட அடிக்க வேண்டாம்

மணிஜி said...

/சுட்டி தருவதில் தப்பில்லை என நினைக்கிறேன். நேரமிருந்தால் பாருங்க. உடல்நலம் பார்த்துக் கொள்ளவும்.//

மேடம் படித்தேன்..மிக்க நன்றி கனிவுக்கும்,அன்புக்கும்

vasu balaji said...

Take care pls.

பின்னோக்கி said...

படிச்சதும் தலை சுத்துறது மாதிரி இருந்துச்சு. செக் பண்ணனும். இங்கிலீஷ் மருந்தைவிட ஆயுர்வேதத்தில் இதை குறைக்க நல்ல மருந்து இருக்கு. டிரை பண்ணுங்க.

இராகவன் நைஜிரியா said...

உடம்பை பார்த்துக் கொள்ளவும் என்று அட்வைஸ் பண்ற அளவுக்கு எனக்குத் தகுதி இருக்கான்னு தெரியலை. இருந்தாலும் சொல்றேன், உடம்பை பார்த்துக் கொள்ளவும்.

அகநாழிகை said...

உடல், மனம் குணம் பெற வாழ்த்துக்கள்.

-பொன்.வாசுதேவன்

அகநாழிகை said...

எவனோ ஒருவன் (எ) அதி பிரதாபன்
said
//சந்தோசமா இருங்க... சைடுல உடம்பையும் பாத்துக்குங்க.//

இப்படி அசிங்கமா பின்னூட்டம் போடறவங்களை என்ன பண்ணலாம்..?

Thamira said...

ஐயய்யோ.. பாத்து தல..

(நானும் சேரை விட்டெழுந்து கைகாலை ஆட்டிப் பார்த்துக்கொள்கிறேன், உங்களைவிட 15 வருஷம் சின்னவன்தான் எனினும்.! அவ்வ்வ்.. 6 மாசம் எல்ஐசி டியூ வேறு இருக்கிறது.)

க.பாலாசி said...

எல்லாரும அட்வைஸ் பண்ணிட்டாங்க...அதனால நீங்க உடம்ப பாத்துக்கறது இருக்கட்டும். முதல்ல உடம்மை குறைங்க. (சாரி ஃபார் த டிஸ்டர்பன்ஸ்)

கடைசியா நீங்க எழுதுனது நல்லாருக்கு...

வால்பையன் said...

முப்பதை தாண்டியவர்களுக்கு ஒரு எச்சரிக்கை மணி!

ஹேமா said...

இவ்வளவு யோசிக்கிறீங்க.உங்களைப் பற்றியும் யோசியுங்க கொஞ்சம்.

anujanya said...

நடுவயதிலேயே இப்போதெல்லாம் இந்த பிரச்சனைகள் என்று கேள்விப்படும்போது என்னுடைய யூத் இப்படியே இருக்க சாமி அல்லது இயற்கையை வேண்டிக்கொள்கிறேன்.

Jokes apart, please take care Maniji.

அனுஜன்யா

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

எதுக்கெடுத்தாலும் இந்தக் குடி / சிகரெட்டையே சொல்றாங்க :(

சரி, சரி, உடம்பைப் பார்த்துக்குங்க.

மணிஜி said...

/எதுக்கெடுத்தாலும் இந்தக் குடி / சிகரெட்டையே சொல்றாங்க :(

சரி, சரி, உடம்பைப் பார்த்துக்குங்க//

ஜ்யோவ்..நீங்க ஒருத்தர்தான் சரியா சரியா சொல்லலை

மணிஜி said...

என் பால் அக்கறை கொண்ட அன்பு நெஞ்சங்களுக்கு என் நன்றியும்,வந்தனங்களூம்

தமிழ் அமுதன் said...

வணக்கம் தலைவரே ..! நாம நமக்காக மட்டும் வாழுரோம் அப்படின்னா எத வேணும்னாலும் பண்ணலாம் ..! ஒரு குடும்பத்த உக்கார வைச்சு வண்டிய நம்ப கைல கொடுத்து டிரைவர் போல ஆக்கிடாங்க..! அதுக்காகவே கவனமா இருக்க வேண்டி இருக்கு ..!

லிங்க் குடுத்ததுக்கு நன்றி தலைவரே ...!

T.V.ராதாகிருஷ்ணன் said...

உடம்பை பார்த்துக்குங்க...

முரளிகண்ணன் said...

அண்ணே உடம்பப் பார்த்துக்குங்க

SUREஷ்(பழனியிலிருந்து) said...

இந்த இடத்தில் தண்ணியடிக்க ஒருவர் படும் பாடு பற்றி எழுதப்பட்டுள்ளது

எம்.எம்.அப்துல்லா said...

உங்களுக்கெல்லாம் ஓன்னும் ஆகாது தல. எப்பவும் போல இருங்க.

Romeoboy said...

உடம்ப பார்த்துகோங்க தல ..

sanban said...

மணி,

வண்ணத்துப் பூச்சி சூர்யாவிடம் பேசியதைத்தான் இங்கும் எழுதுகிறேன். 30+ ஆனாலே இரண்டு விஷயங்கள் முக்கியம்.
1. மெடிக்ளைம்
2. ஹெல்த் செக்கப்

இதில் அலட்சியமாக் இருப்பது அதிக விரயத்தை உண்டுபண்ணுகிறது.

மணிஜி said...

அன்பு உள்ளங்களுக்கு நன்றிகள்.

பா.ராஜாராம் said...

பத்ரம் மணிஜி..உடம்ப பாருங்கையா...

..