எத்தனை முறை
முனை உடைந்தாலும்
மீண்டும் சீவுகிறேன்
உன்னை வேதனை
படுத்துவதில்
எனக்கும் சம்மதமில்லைதான்
இந்த ஓவியத்துக்கு
உயிர் கொடுத்தாக
வேண்டியிருக்கிறதே
மானசீகமாய்
கேட்டுக்கொள்கிறேன்
பென்சிலிடம் மன்னிப்பு
ஒரு பின் குறிப்பு:
எத்தனை காத தூரம்
இடுப்பொடிய
சுமந்து வருகிறேன்
ஒரு குடம் நீரை
என் கால்
கொப்புளங்களின்
வேதனை அறியாமல்
எத்தனை தற்பெருமை
இந்த ஓவியனுக்கு....
28 comments:
படத்துக்காக எழுதின கவிதையா நண்பா.? கடைசி டச் அருமை.. .
அருமை தண்டோரா
ஏதோ சொல்ல வர்றீங்க..ன்னு புரியுது.. ஆனா என்னன்னுதான் புரியல..:(
படம் அருமை! உங்க கவிதையை விட...
ennaa solrathu? nallaa irukkungrathai thavira.
நல்லா இருக்கு!! எதையோ சொல்லி கடைசியில் ஒன்று சேர்த்துவிட்டீர்கள்!!
மொய் வச்சாச்சு நண்பரே!!
எத்தனை முறை படிக்கிறாய்
உன் அண்ணனின்
இனிய கவிதைகளை.
சலிப்பே இல்லையா? மனம் என்னிடம்.
சலிக்கவே சலிக்காது,
மனதிற்கு நான்.
பின்குறிப்பு.
நிறையத்தான் படிக்கிறாய்,
அண்ணனென்றால் மட்டும்
ஏன் அத்தனை ஆர்வம்?
நான் மனத்திடம்.
அத்தனையும் அருமை,
மனம் என்னிடம்.
பிரபாகர்.
அருமை அண்ணா... ஓவியமும் சூப்பர்.. :))
ரொம்ப வித்தியாசமான கவிதை. அருமை. பிரபாகரின் பின்னூட்ட கவிதையும்.
//என் கால்
கொப்புளங்களின்
வேதனை அறியாமல்
எத்தனை தற்பெருமை
இந்த ஓவியனுக்கு.//
anna vanthuten..
padaththula oru kaalai kaanom
நல்லா இருக்கு மணி.
//எத்தனை முறை படிக்கிறாய்
உன் அண்ணனின்
இனிய கவிதைகளை.
சலிப்பே இல்லையா? மனம் என்னிடம்.
சலிக்கவே சலிக்காது,
மனதிற்கு நான்.
பின்குறிப்பு.
நிறையத்தான் படிக்கிறாய்,
அண்ணனென்றால் மட்டும்
ஏன் அத்தனை ஆர்வம்?
நான் மனத்திடம்.
அத்தனையும் அருமை,
மனம் என்னிடம்.
பிரபாகர்.//
பிரபா...
பின்னூட்ட கவிதை அருமை
அன்புக்கு நன்றி
//ஏதோ சொல்ல வர்றீங்க..ன்னு புரியுது.. ஆனா என்னன்னுதான் புரியல..:(//
சயந்திரம் பார்ல வச்சு சொல்றேன்
ஆஹா..
அற்புதம்
படம் அழகோ அழகு..
அதற்குச் சமமாய் கவிதையும்
பிரபாகர் கவிதை அருமை.
ஆனால் உங்களுக்கு ஒட்டு போட்டாச்சு.
விருதிற்கு வாழ்த்துக்கள் "தல"...
தாங்கள் மென்மேலும் இதுபோல் கலக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
எப்போவும் போல, இந்த பதிவும் பட்டைய கெளப்புதுபா...
கவிதை தொடங்கி முடித்த விதம் மனசைத் தொட்டது.
அருமை நண்பா.
அருமையாய் வந்திருக்கு மணிஜி.படத்துடன் ஒன்றும் அழகு!
nach.....
நல்லா இருக்கு
கருத்துரைத்த நண்பர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்
தண்டோரோ,
நன்றாக இருக்கிறது.
‘ஒரு பின் குறிப்பு‘ என்பதை நீக்கிவிட்டால் நன்றாக இருக்கும்.
ரொம்ப நல்ல கவிதை, ரொம்ப நல்லா இருக்குங்க.
எத்தனை காத தூரம்
இடுப்பொடிய
சுமந்து வருகிறேன்
ஒரு குடம் நீரை
என் கால்
கொப்புளங்களின்
வேதனை அறியாமல்
எத்தனை தற்பெருமை
இந்த ஓவியனுக்கு....//
நல்லாயிருக்குங்க.
பி.கு. டாப்பு.
ஒரே படத்திற்கு ரெண்டு கவிதை ஐடியாவா?
ஒண்ணும் சொல்றதுக்கில்ல...
பெரும்பாலான நேரங்கள் நாம்
கனவோவியங்களில் மயங்கி,
நிஜங்களை மறந்து விடுகிறோம்!
-கேயார்
Post a Comment