இந்த இரும்பு பாதை
முடியும் இடத்தில்
ஒரு நகரம்
இருந்தது..
இன்று
அது இல்லை
காற்றில் கலந்திருக்கும்
ரத்த வாசம்
மட்டுமே
மிச்சமாயிருக்கிறது
தினம் விடியலில்
தன்னை
புதுப்பித்துக் கொள்ளும்
அழகான
இயற்கை
மட்டுமே
அந்தரங்க
சாட்சியாயிருக்கிறது..
மெலிதாய்
கேட்டுக்கொண்டிருந்த
முனகல்களும்
அடங்கி விட்டன..
இடமும் வலமுமாய்
நெளியும் இந்த
வழியேதான்
கடைசியாக கடந்து
போனது..ஆர்மி ரயில்
இவைகளுக்குள்
பறிமாறிக்
கொள்ளப்படும்
தடக்..தடக்
மொழியும்
அதிர்வும்
இனி இல்லை..
அந்த நகரம்
முற்றிலுமாய்
அழிக்கப்பட்டு
விட்டது...
நீங்கள்
இந்த பாதையின்
வழியே சென்று
இடதுபுறம்
திரும்பி
பாருங்கள்
அங்கே
இரண்டும்
ஒன்றோடு
ஒன்று
பிண்ணி
பிணைந்திருக்கலாம்
சாரைகளாய்...
40 comments:
நிஜமாகவே அருமை..
மனதை நெருடும் கவிதை... அருமை அண்ணா...
பிரபாகர்.
கவிதையில் எங்கோ கூட்டிக்கொண்டு போய்விடுகிறீர்கள். அருமை
மனதை உலுக்கும் வரிகள். அருமைங்க.
நல்ல வெளிப்பாடு!
இரண்டாம் உலகபோர் சமயங்களில் பல நகரங்கள் இப்படி தான் காட்சியளித்ததாக சில திரைப்படங்கள் சொல்கின்றன!
கவிதை நல்லா இருக்குங்க.
கவிதையை எளிமையாஅ எழுதுவது எப்படின்னு ஒரு பதிவே போடலாம் நீங்க!!
//இடமும் வலமுமாய்
நெளியும் இந்த
வழியேதான்
கடைசியாக கடந்து
போனது..ஆர்மி ரயில்//
நான்கு பாராக்கள் படித்தும் தெரியாத / தெளியாத இந்த பதிவின் சாரம் இந்த பாரா படிக்கும் போது, தெரிந்தது.... பலே... கூடவே கண்ணீரும்... (வேதனையில்...)
//அந்த நகரம்
முற்றிலுமாய்
அழிக்கப்பட்டு
விட்டது...//
மிக மிக கனமான, கல்லையும் கரைய வைக்கும் அற்புத வரிகள்... வலியினை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது...
ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க "தல".........
ஏய் இந்த ஆளை வெச்சு யாரும் காமெடி கீமெடி பண்ணலியே ?
உண்மையிலேயே இது கவிஜையா ? அய்யகோ ?
இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்ப ரணகளமாக்கிருவானுங்க மணிஜி...
தமிழ்கூறும் நல்லுலகத்தை ஆசிப் மீரான் தான் காப்பாத்தனும்..
//ஏய் இந்த ஆளை வெச்சு யாரும் காமெடி கீமெடி பண்ணலியே ?
உண்மையிலேயே இது கவிஜையா ? அய்யகோ ?
இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்ப ரணகளமாக்கிருவானுங்க மணிஜி...
தமிழ்கூறும் நல்லுலகத்தை ஆசிப் மீரான் தான் காப்பாத்தனும்..//
ரவுடியாக்கறாங்கய்யா....
//:தினம் விடியலில்
தன்னை
புதுப்பித்துக் கொள்ளும்
அழகான
இயற்கை
மட்டுமே
அந்தரங்க
சாட்சியாயிருக்கிறது..//
மனதுக்கு இதுவே சாட்சியாய் மனசாட்சி.
பிடித்த வரிகள்,அருமை
மணிஜி,
கவிதை நன்றாக வந்திருக்கிறது. நீங்கள் சொல்லும்போது இவ்வளவு அழகாக வந்திருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.
வரிகளை அதிகம் ஒடிக்காமல் இருந்திருக்கலாம்.
- பொன்.வாசுதேவன்
எல்லாரும் சொல்லிட்டாங்க... நான் சொல்றதுக்கு ஒன்னும் வைக்கலே... ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
romba nalla irukku
கவிதை மிகவும் அருமை தண்டோரா!
தாங்கள் கையாண்ட வரிகளின் கோர்வை நேர்த்தியாக உள்ளது.
கவிதை நன்று....
அருமை..
vote for Maniji...
நேர்ல பார்த்து பாராட்டனும்!
நாளைக்கு இரவு வர்றேன் அங்க...
தீபாவளி கழிச்சி மீட் பண்ணுவோம்!!
/நேர்ல பார்த்து பாராட்டனும்!
நாளைக்கு இரவு வர்றேன் அங்க...
தீபாவளி கழிச்சி மீட் பண்ணுவோம்//
கலை நாளை காலை நான் காரில் கிளம்புகிறேன்.வடலூர் வழியாக தஞ்சை..பின் ஞாயிறு அல்லது திங்கள் ரிட்டர்ன் அதே வழியாக
மனதைப் பிசைந்து பெருமூச்சு விட வைத்த கவிதை
மனதைப் பிசைந்து பெருமூச்சு விட வைத்த கவிதை
கான்சப்ட் அருமையா இருக்குங்க தண்டோரா.
ஆனா எண்டர் பட்டன் சரியா வேலை செய்யுதான்னு ஒரு தடவை செக் பண்ணிக்கங்க. :) :) :)
/கான்சப்ட் அருமையா இருக்குங்க தண்டோரா.
ஆனா எண்டர் பட்டன் சரியா வேலை செய்யுதான்னு ஒரு தடவை செக் பண்ணிக்கங்க. :) :) :)//
புரியுது..ஒரு புது உத்தியாக இருக்கடுமேன்னுதான்(சாரி.கொஞ்சம் ஓவர்தான்)
அருமை தண்டோரா
அற்புதம் மணிஜி..
எளிய வார்த்தைகளுனூடேதான் எல்லோர்க்குமான ஆற்றுப்படுத்தல்கள் இருக்கக்கூடும்...
//இந்த இரும்பு பாதை
முடியும் இடத்தில்
ஒரு நகரம்
இருந்தது..
இன்று
அது இல்லை
காற்றில் கலந்திருக்கும்
ரத்த வாசம்
மட்டுமே
மிச்சமாயிருக்கிறது//
இந்த வரிகளை இன்னும் செதுக்கியே இன்னும் உக்கிரமாக கவிதையைக் கொண்டு வந்திருக்க முடியுமே. பிறகு சொல்லப்பட்டவை கவிதையின் அடர்த்தியை வெகுவாக குறைக்கிறது, எனக்கு!
கவிதை ரொம்பப் பிடித்திருக்கிறது.
நல்ல 'கவிதை'தான் மணிஜி.
//தினம் விடியலில்
தன்னை
புதுப்பித்துக் கொள்ளும்
அழகான
இயற்கை
மட்டுமே
அந்தரங்க
சாட்சியாயிருக்கிறது..//
எப்டித்தான் வார்த்தை விழுதோ?
கலக்குங்க!
-கேயார்
எனக்குப் ஃப்ளோ ரொம்பப் பிடித்திருந்தது.
எளிமையான ஆனால் அதே நேரம் வலிமையான கவிதையும் கூட...
நல்லா இருக்கு தண்டோரா.
வாசித்து கருத்துரைத்த நண்பர்களுக்கு என் நன்றியும்,வந்தனங்களும்
கவிதை ரொம்ப அருமையா இருக்குங்கண்ணா.. :))
நன்றாக இருக்கிறது. கவிதையின் கரு - மனோஜ் நைட் சியாமளனின் திரைக்கதை போல இருக்கிறது..!!
நல்லா இருக்கு கவிதை. ஆனால், ஏற்கனவே படித்த ஞாபகம். மீள் பதிவா?
என்னாச்சு, புதுசா எழுதுங்க தலைவா..
நல்ல வரிகள்
Post a Comment