நப்பாசைக்கும் அப்பாவுக்கும்
இடையில் அல்லாடுகிறது
குழந்தை
இல்லாமையோ
இயலாமையோ
சாமர்த்தியமாக
சளியின் மீது
பழியை போட்ட
அப்பா..
மணியை அடித்தபடி
அங்கேயே சுற்றுகிறான்
பாவம்
ஐஸ்வண்டிக்காரன்..
...
000000000000000000000
உனக்கென்னடி தங்கம்
ஆயிரம் பேர்
குதிரையில் வருவார்
உன் அழகுக்கு
சொன்ன பாட்டி
சுவற்றில் மாட்டப்பட்டிருக்கிறாள்
சுமங்கலியாய்
ராஜகுமாரன் வேண்டாம்
ஒரு ராட்சஸன்கூட
வரவில்லை
0000000000000000000000000000000
புதியதாய்
எதையோ எழுதத்தான்
நினைக்கிறேன்
அடுத்த நொடியில்
அதுவும் பழையதாக
போவதை அறிந்தும்
31 comments:
முதல்:
////அவனுக்கு பசிபாவம்...//
இது தேவையில்லை.
கொஞ்சம் மாற்றினால் மெருகு ஏறும்.
//நப்பாசைக்கும் அப்பாவுக்கும்இடையில் அல்லாடுகிறதுகுழந்தை
இல்லாமையோஇயலாமையோ
சாமர்த்தியமாக
சளியின் மீது
பழியை போட்டுவிட்டாலும்..
மணியை அடித்தபடி
அங்கேயே சுற்றுகிறான்
ஐஸ்வண்டிக்காரன்//
மூன்றாவது இரண்டாவது ஓகே.
தலைவரே இப்பெல்லாம் எனக்கு கூட புரியுது உங்க கவிதையெல்லாம்..
இரண்டாவது கவிதை அருமை..
நல்லாருக்குங்கண்ணே, வழக்கம்போல...
பிரபாகர்.
//புதியதாய்
எதையோ எழுதத்தான்
நினைக்கிறேன்
அடுத்த நொடியில்
அதுவும் பழையதாக
போவதை அறிந்தும்//
கலக்கல்...
//பாவம்
ஐஸ்வண்டிக்காரன்..//
குழந்தையும்
காத்திருந்ததுக்கு 3 முத்துகள். நல்லாருக்கு.
கவிதைகள் (வழக்கம்போல) அருமை.
என்ன ஆச்சர்யம்... இரண்டாவது கவிதை மாதிரியே நானும் ஒன்று... இன்று... ஆணின் பார்வையிலிருந்து.
/*மணியை அடித்தபடி
அங்கேயே சுற்றுகிறான்
பாவம்
ஐஸ்வண்டிக்காரன்..*/
என்ன தல உங்களை அடிச்சிட்டாங்களா???
(எனக்கு முந்தியே யாருய்யா அடிச்சது... அவ்வ்வ்வ்வ்வ்வ்)
1,2,3 இவையணைத்துமே அருமையான கவிதைகள்....ரசித்தேன்
புரிந்ததால்
ரசித்தேன்!
2,3,1 என்ற வரிசையில் நல்லாயிருக்கு!
முதல் கவிதை.. மனசை நெருடுகின்றது..
அண்ணே நீங்க ரொம்ப பேமசாயிட்டீங்க... இந்த இடுகைக்கும் உங்களுக்கு இரண்டு நெகடிவ் ஓட்டு விழுந்து இருக்கு.
நெகட்டிவ் குத்தணும் அப்படின்னு குத்துவாங்க போலிருக்கு
நல்ல இருக்கிறது
//பாவம்
ஐஸ்வண்டிக்காரன்..//
நானும்.
மணிச்சத்தம் பலமாக்கேக்குது.
என் வோட்டு ஐஸ் வண்டிக்காரனுக்கு.
:-((
குறைந்தபட்சம் 10ஆண்டுகளுக்கு முன்பாவது வந்திருக்க வேண்டியது.
காலத்திற்கேற்ப கவிதைப்பொருளும் மாறி வரவேண்டுமல்லவா..?
என்ன நீங்கள்....வாரமலர் ரேஞ்சிற்கு....
//ராஜகுமாரன் வேண்டாம்ஒரு ராட்சஸன்கூட வரவில்லை//
மனசு ரொம்ப வலிக்கிது
சூப்பர்.
முதல் கவிதை எனக்கு பிடித்தது
எனக்கு பாலகுமாரன் கவிதை வரிகள் ஒன்று நினைவுக்கு வருகின்றது.
கொத்திக் கொண்டு போவான்டி
ஆப்பிள் சிவப்பு என் பேத்தி
பாட்டி சொல்வாள் திடத்தோடு
அம்மா விடுவாள் பெருமூச்சு
வெட்டிப்பொழுதை போக்காமல்
வேலை தேடேன் எங்கேனும்
அப்பா சொல்வார் தரை நோக்கி
அண்ணன் முறைப்பான் எனைப்பார்த்து
கொத்திக் கொண்டு போவதற்கு
சாதகப் பட்சி வரவில்லை
வெட்டிப் பொழுதின் விழவுக்கும்
வேலை வரலை
இது நாளாய் வேலைத் தேடி
எங்கேனும் வெளியே நடக்க தலைப்பட்டால்
ஈயாய்க் கண்கள் பலமொய்க்க
என்னை உணர்ந்தேன் தெருமலமாய்
கலக்கல்...
மூணாவது... அருமை !!
அருமை..நல்லாருக்குங்க
மூன்றுமே நல்லாருக்குங்க..
தல..மூணுமே கலக்கல்..
முதல் கவிதை தான் என் சிற்றறிவிற்கு சற்று எட்டவில்லை..
தலீவா...
மூணுமே நல்லா கீது...
அதுவும் ரெண்டாவது "கலக்கல்" வகை...
வாழ்த்துக்கள்.....
வாசித்து கருத்துரைத்த நண்பர்களுக்கு என் வந்தனமும்,நன்றிகளும்.
செந்தழல் ரவிக்கு என் சிறப்பு நன்றி(உங்களிடம் ஆப்ஷன் உண்டு..ஐஸ்வண்டிகாரனுக்கு அது இல்லை)
கும்க்கி.நீங்கள் சொல்வது சரிதான்.நானே அப்படி நினைத்தேன்..ஆர்வக்கோளாறு?
நன்றி
//மணியை அடித்தபடி
அங்கேயே சுற்றுகிறான்
பாவம்
ஐஸ்வண்டிக்காரன்..
//
அவனுக்குப் பாவம் அருமை...நல்லா இருக்கு
ஐஸ்வண்டிக்காரன் சிறப்பு...
அன்பு நித்யன்
கும்க்கி சொல்வதைப்போல பழைய விஷயங்கள்தான் எனினும் சிறப்பாகவே இருந்தன. அதுவும் மூன்றாவது கவிதை மிகவும் அருமை.!
தல!
ஒவ்வொரு அப்பனும் படுகிற
அவஸ்தையை
புட்டுப் புட்டு வெச்சிட்டீயளே!
உங்களுக்கு கண்ணாலம்
ஆயிருச்சா?!
ஆவுலன்னா
கவிதை ரெண்டுல
வர்ற பொண்ணை
கண்ணாலம் கட்டுங்களேன்!
-கேயார்
Post a Comment