Monday, April 26, 2010

சாரி.....கொஞ்சம் ஓவராயிடுச்சு


எனக்கே சற்று சோம்பல்தான்

அந்த வாசம் நாசியை தாக்கும்வரை

பார்வையை கூராக்கி உற்று நோக்கினேன்

தூரத்தில் பளபளத்தது அது

ஆஹா..அருமையான வேட்டைதான்

தனியொருவனாய் தள்ளிக் கொண்டு வர முடியாது

பரிவாரங்களுக்கு தகவல் அனுப்பினேன்

தளபதிகள் அணிவகுக்க பயணம் தொடங்கியது.

நாங்கள் மேலிருந்தோம்

அது கீழே சமவெளியில்

இத்தனை பேரும் பங்கு போட்டாலும்

மிச்சம் நிறையவே இருக்கும்

இதோ இலக்கு நெருங்கி விட்டது

சின்ன அடையாள ஒலி

அதற்கே வந்துவிட்டாள் தோழி

சீ..சீ நான் அதற்கு அழைக்கவில்லை

பின்..

மேலே பார் அணிவகுப்பை

இடமும்,வலமுமாய்

இரு பக்கமும் காத்திருப்போம்

சரியான தீனிதான்..

என்னை பார்க்கும் போதெல்லாம்

மனதிற்குள் மழையடிக்கும்

என்பீர்களே

இப்போதும் அப்படித்தானா?

எட்டாவது திருமண நாள்

முடிந்ததும் மனைவி கேட்டாள்

இல்லையென்று உண்மையை சொன்னால்

புண்படுவாள்-என்று

“ஆமாம்என்று பொய் சொன்னேன்

இதில் எதாவது முரண் இருந்தால்

அதுமுன் நவினத்துவம்

இல்லையென்றால் ‘பின் நவினத்துவம்

புரியவில்லையென்றால்

எளக்கியம்


அய்யா இருக்காரா?

அட நீங்களா? உங்களுக்கு கடுதாசி எழுதிகிட்டிருக்காரு. இருங்க போனை கொடுக்கறேன்

அய்யா புள்ளையை எங்க காணலையே. பள்ளிக் கூடம் ஆரம்பிச்சப்ப வந்தது. அப்புறம் கண்லயே பார்க்கலை.

அப்படியா? வெயில் அதிகம்னு பீச்சுக்கு போறேன்னாரு. வந்தாக்க சொல்றேன்.

இந்தி வாத்தியார் கிட்ட சண்டையாம். அதுக்காக பள்ளிக்கூடத்துக்கே வராம இருந்தா எப்படி?

அதில்லை. அவருக்கு அந்த ஸ்கூலு புடிக்கலையாம். இங்க வீட்டிலயே படிக்கிறேன்னு சொல்றாப்ல..

எதையாவது சட்டுபுட்டுன்னு செய்ங்க அய்யா. இல்லைன்னா அவருக்கு பதிலா பொண்ணையாச்சும் சேர்த்து விடுங்க

---------------------------------------------------------------------------

ஐந்து பேர்..சமாளிக்க முடியுமா?

ஐயோ..நிச்சயம் முடியாது..

அட்ஜஸ்ட் பண்ணி பாரேன்..

வேற வழியில்லை..வர சொல்லிட்டேன்

என்னை கேட்க வேண்டாமா?

நீ பெரிய கைகாரியாச்சே..உன்னால முடியும்

ம்ம்.. மானத்தை வாங்கறதுன்னு முடிவு பண்ணிட்டீங்க..வரட்டும் ..பார்க்கலாம்

உள்ளே சென்று டப்பாவை திறந்து இருந்த கொஞ்சம் துவரம் பருப்பை எடுத்து ஊற வைத்தாள்..

ஆறு பேருக்கு சாம்பார் வைக்க இந்த பருப்பு எப்படி போதும்..சாம்பார் தண்ணியாத்தான் இருக்கும்.புலம்ப ஆரம்பித்தாள்

(துவரம்பருப்பு கிலோ 96 ரூபாயாம்)

எனக்கொரு வேலை கொடுங்க..

சம்பளம் எவ்வளவு வேணும்?

முத நாள் ஒரு பைசா..

ஒரு பைசாவா?

ஆமாம்..ஆனா அடுத்த நாள் ரெண்டு பைசா..அதுக்கு அடுத்த நாள் நாலு பைசா..அப்புறம் எட்டு..பதினாறு..முப்பத்திரண்டு..

சரியென்று ஒத்துக் கொண்ட முதலாளி ஒரு மாசத்தில் போண்டியானார்..

(கணக்கு போட்டு பாருங்களேன்)

23 comments:

ரமேஷ் வைத்யா said...

ngoyyyyyyy

Paleo God said...

present sir!

GNU அன்வர் said...

சூப்பரு

Unknown said...

//(கணக்கு போட்டு பாருங்களேன்)//

ரூ 1,07,37,418.23 கொடுத்திருப்பார். கண்டிப்பா போண்டி தான்

க‌ரிச‌ல்கார‌ன் said...

//இந்தி வாத்தியார் கிட்ட சண்டையாம். அதுக்காக பள்ளிக்கூடத்துக்கே வராம இருந்தா எப்படி?

அதில்லை. அவருக்கு அந்த ஸ்கூலு புடிக்கலையாம். இங்க வீட்டிலயே படிக்கிறேன்னு சொல்றாப்ல..

எதையாவது சட்டுபுட்டுன்னு செய்ங்க அய்யா. இல்லைன்னா அவருக்கு பதிலா பொண்ணையாச்சும் சேர்த்து விடுங்க//

த‌ன்வினை த‌ன்னைச் சுடும்

இல்ல‌னா அப்ப‌ன் வினை பிள்ளைய‌ சுடும்

எங்க‌ள‌ மாதிரி கல்ஃப் ல‌ வேலை செய்ற‌ எத்த‌னை பேரு க‌ஷ்ட‌ப் ப‌ட்டிருக்கோம்

அனுப‌வி ராஜா அனுபவி

செ.சரவணக்குமார் said...

வணக்கம் மணிஜீ..

பனித்துளி சங்கர் said...

////////என்னை பார்க்கும் போதெல்லாம்
மனதிற்குள் மழையடிக்கும்
என்பீர்களே
இப்போதும் அப்படித்தானா?
எட்டாவது திருமண நாள்
முடிந்ததும் மனைவி கேட்டாள்
இல்லையென்று உண்மையை சொன்னால்
புண்படுவாள்-என்று
“ஆமாம்’ என்று பொய் சொன்னேன்
இதில் எதாவது முரண் இருந்தால்
அது’முன் நவினத்துவம்’
இல்லையென்றால் ‘பின் நவினத்துவம்’
புரியவில்லையென்றால்
”எளக்கியம்”
////////////


ஏலே மக்கா யார்ல சொன்னது புரியலைனு நல்லாவே புரியுதுல .

மீண்டும் வருவேன் .

பா.ராஜாராம் said...

ரமேஷ் வைத்யா said...

//ngoyyyyyyy//


:-))


முட்டித் தூக்கணும் போல- மணிஜி..

நிலா அம்மா,

ப்ளாக் வாசிக்கிரீங்கள்ள? :-)

கண்ணகி said...

ரைட்டுங்கண்ணா......

Ahamed irshad said...

சொல்றதுக்கு 1ன்னுமே இல்ல...

vasu balaji said...

கொஞ்சம் இல்ல. ரொம்பவே ஓவராயிடுச்சி:))

Chitra said...

எனக்கொரு வேலை கொடுங்க..

சம்பளம் எவ்வளவு வேணும்?

முத நாள் ஒரு பைசா..

ஒரு பைசாவா?

ஆமாம்..ஆனா அடுத்த நாள் ரெண்டு பைசா..அதுக்கு அடுத்த நாள் நாலு பைசா..அப்புறம் எட்டு..பதினாறு..முப்பத்திரண்டு..

சரியென்று ஒத்துக் கொண்ட முதலாளி ஒரு மாசத்தில் போண்டியானார்..


.......ha,ha,ha,ha......

iniyavan said...

தலைவரே,

ம்ம்ம்ம்ம்ம்ம்.

நீங்களே கொஞ்சம் ஓவராயிடுச்சுனு சொன்னதுக்கு அப்புறம் நான் என்ன சொல்றது?

அண்ணாமலை..!! said...

இதில் எதாவது முரண் இருந்தால்
அது’முன் நவினத்துவம்’
இல்லையென்றால் ‘பின் நவினத்துவம்’
புரியவில்லையென்றால்
”எளக்கியம்”

நல்லாயிருக்கு!ஆனா,
இந்த அளவுக்கா ஒரு மனிதன் சிந்திப்பது.??

ஜெட்லி... said...

//(துவரம்பருப்பு கிலோ 96 ரூபாயாம்)

//

குறைஞ்சு ரொம்ப நாள் ஆச்சு தலைவரே....

Unknown said...

எனக்கும் மலேசியாவில் போட்ட கள்ளு ஓவராயிடுச்சு,
அதனால ஒன்னியும் பிரியல..

Sanjai Gandhi said...

டொண்டொடொய்ன்ன்ன்ன்ன்ன்ன்...

butterfly Surya said...

"சாரி.....கொஞ்சம் ஓவராயிடுச்சு"

இப்போ தெளிஞ்சுடுச்சு..

மரா said...

தெலிவுத்தண்ணி கொஞ்சம் சாப்டுங்க.சரியாயிரும்!!

மணிஜி said...

வருகைக்கும்,கருத்துக்களுக்கும் நன்றிகள்...

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

சாயந்தரம் ஒரு கட்டிங் அடிச்சுட்டு
வந்து படிக்கிறேன். ஒண்ணுமே பிரியல........

Unknown said...

ரொம்பவே ஓவர் ஆயிடுச்சு...

நான் என்னை சொன்னேன் ..

மதுரை சரவணன் said...

துவரம் பருப்புக் கதை அருமை.