Monday, April 5, 2010

நேர் எதிரில் ஒரு குறுக்கு சந்து




நாகராஜிக்கும் தாஸப்பிரகாஷுக்கும்

எனக்கு சற்று
அடையாள குழப்பம்
எப்போதுமே உண்டு

இருவரும் சற்று கறுப்பு
கூடவே பிரஷ் மீசையும்
பரஸ்பரம் மாற்றியே
அழைக்கிறேன்

ஆனால் அவர்களுக்கு
என்னிடம் இந்த குழப்பம் இல்லை
என்னைப் போல் வேறோருவன்
அவர்களுக்கு அறிமுகமாகாமல்
இருக்கலாம்

தூண்டிலுக்கு இருக்கும்
பொறுமை மனசுக்கில்லை
ஒவ்வொரு அவசர சுண்டுதலிலும்
மீன் தப்பித்துக் கொள்கிறது
தற்காலிகமாய்

18 comments:

ராமலக்ஷ்மி said...

//தூண்டிலுக்கு இருக்கும்
பொறுமை மனசுக்கில்லை//

அருமை.

Unknown said...

நல்லா இருக்கு.

Paleo God said...

"நேர் எதிரில் ஒரு குறுக்கு சந்து//

சூப்பர்..!

சைவகொத்துப்பரோட்டா said...

குறுக்கு சந்து நல்லா
இருக்கு அண்ணே.

vasu balaji said...

கடைசி நாலு வரி மத்ததை கபளீகரம் செய்துவிட்டது. அருமை சார்.

சென்ஷி said...

அசத்தல் தண்டோராண்ணே.. ரொம்பப் பிடிச்சிருக்குது :))))

ராஜ நடராஜன் said...

ஏதோ அல்லோவ் சொல்லலாமேன்னு தோணுச்சு.எனக்கு தெரிந்தது துபாய் குறுக்கு சந்துதான்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

அசத்தல்

Prasanna said...

மிக மிக அருமை

எறும்பு said...

//
Blogger 【♫ஷங்கர்..said...

"நேர் எதிரில் ஒரு குறுக்கு சந்து//

சூப்பர்..!//

ஷங்கர்
(தலைப்பு தாண்டி வரலயா?)

;)

தேவன் மாயம் said...

ஆனால் அவர்களுக்கு
என்னிடம் இந்த குழப்பம் இல்லை///

எனக்கும் தெளிவா இருக்கு!

Unknown said...

very nice....

Unknown said...

nice one

Kumky said...

அட்டெண்டென்ஸ்...ஒன்லி..

கலகலப்ரியா said...

superb maniji... but link pudipadalai... avvvvv...

Cable சங்கர் said...

கடைசி வரிகள் :)

மணிஜி said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றிகள்...

பா.ராஜாராம் said...

fantastic maniji!