அண்ணா நான் ஒரு பொண்ணை லவ் பண்றேன்
யாருடா அந்த துரதிர்ஷடசாலி என்றேன்.
உங்களுக்கு காமிக்கிறேன் என்றான் ராஜாராமன். என் நண்பனின் தம்பி. என் அறையில் தங்கி படித்துக் கொண்டிருக்கிறான். கல்லூரி மூன்றாம் ஆண்டு.
ராஜா உங்க சொந்தக்காரங்க வகையறாவில் நிறைய முறைப்பெண்கள் இருப்பது எனக்கு தெரியும். உங்கப்பாவுக்கு தெரிஞ்சா உன்னை வெட்டி போட்ருவாரே.. உங்கண்ணன் கூட காதலிக்காததற்கு அதானே காரணம்.
அண்ணா அவளுங்க எல்லாம் அட்டை கருப்பு. தொட்டு நெத்தியில் இட்டுக்கலாம். என் உமாவை நீங்க பார்க்கணுமே. பவுன் கலர். நான் முடிவு பண்ணிடேன். நீங்கதான் ஹெல்ப் பண்ணனும்.
அந்த பொண்ணு கிட்ட சொல்லிட்டியா? சம்மதிச்சுட்டாளா?
இல்லை . இனிமேல்தான் சொல்லணும். நேத்திக்குத்தான் அவளை முதல்முறையா பார்த்தேன்.
பாவி கண்டதும் காதலா? அதுக்குள்ள கல்யாணம் வரைக்கும் போயிட்டியா? அவ உன்னை லவ் பண்ணலைன்னா?
நிச்சயம் பண்ணுவா. எத்தனை பொண்ணை பார்க்கிறோம். ஆனா உமாவை பார்த்தவுடனே மணியடிக்குதே.
உங்கப்பா அடிக்க போறாரு. அது மட்டும் இப்ப தெரியுது. முதல்ல படிப்பை முடி. வேலைக்கு போ. மயிர் வெட்ட கூட அப்பாதான் காசு கொடுக்கணும்.அதுக்குள்ள ஏண்டா?
அண்ணா நீங்க யாரையாவது காதலிச்சிருக்கீங்களா? என்றான் ராஜா.
அன்றிரவு ஒரு பெண்ணுடன் நான் கோயிலுக்கு போவது போல் கனவு வந்தது. அவளை முத்தமிடுகிறேன். சிரிக்கிறாள். அழகாக.. விடிந்தவுடன் அவள் முகம் நினைவுக்கு வரவில்லை.
ராஜாவின் முயற்சி பலித்து விட்டது. உமா அவனை பார்க்க ஆரம்பித்து விட்டாளாம். இரண்டொரு வார்த்தைகளும் பேசி விட்டாளாம். பக்கத்து கிராமத்திலிருந்து கல்லூரிக்கு வருகிறாளாம். ராஜாராமன் ஆளே மாறிவிட்டான். என் பாடிஸ்ஃப்ரேவை தீர்க்க தொடங்கியிருந்தான்.
அண்ணா . சாரி. உங்க அனுமதியில்லாமல், உங்க பிரோவை திறந்து பார்த்தேன். நிறைய கவிதைகள் எழுதியிருக்கீங்களே. நிச்சயமா நீங்க காதலிச்சிருக்கணும் .
அதெல்லாம் காலேஜ் படிக்கும்போது எழுதினதுடா. காதல்ன்னு முடிவு பண்ணிடாதே.
சும்மா சொல்லி விட்டேனே தவிர, வாழ்க்கையில் அந்த அனுபவத்தை மிஸ் பண்ணி விட்டேனோ என்று தோன்றியது. அன்றும் ஒரு கனவு. அதே முகம் தெரியாத பெண். என் அடுத்த நாள் காலை ஒரு சுகத்துடன் விடிந்தது. முட்டாள் ! இரண்டு தங்கைகள் கல்யாணத்துக்கு ரெடியாக இருக்கிறார்கள். நினைவிருக்கட்டும்.
ஒரு நாள் மாலை. சீக்கிரம் வேலை முடிந்தது. சினிமாவிற்கு போய் எவ்வளவு நாள் இருக்கும் என்று எண்ணிக் கொண்டே தியேட்டரை நோக்கி வண்டியை செலுத்தினேன். ராஜாராமன் நின்றுக் கொண்டிருந்தான். அருகில் ஒரு பெண். பேரழகியாய் இருந்தாள். பாவி...கொஞ்சம் பொறாமையாய் இருந்தது. ராஜாராமன் மாநிறம்தான். அவள் ..அவன் சொன்னது போல் பவுன் கலர்தான்..
அண்ணா.. உமா என்றான்.
உமா நான் சொல்லியிருக்கேன் இல்ல..எங்க அண்ணனோட ஃப்ரெண்டு..
அவள் கண்களை பார்த்து என்னால் பேசவே முடியவில்லை.அப்படியொரு தீட்சண்யம் அவள் முகத்தில். கழுத்துக்கு கீழ் பார்வை அலைபாய்வதை தவிர்க்க முடியவில்லை.
ராஜா நான் சினிமாவிற்கு வரவில்லை. இந்த வழியா போகும்போது ,உன்னை பார்த்தேன். அதான் நிறுத்தினேன். சீக்கிரம் அவங்களை அனுப்பிட்டு வந்திடு..
இரண்டாவது பீர். வழக்கத்துக்கு மாறாக நிறைய சிகரெட்கள். மனசு அலைபாய்ந்து கொண்டே இருந்தது. இரவு ராஜாராமன் ஒரு கேக் கொண்டு வந்தான்.
இன்னிக்கு உமாவுக்கு பர்த்டே அண்ணா..உங்களுக்கு கொடுத்தா என்றான்.
அந்த கேக்கில் இருந்த செர்ரியை பார்க்கும் போது அவள் நினைவுதான் வந்தது.ஏனோ ராஜாராமனை அடிக்க தோன்றியது. பளாரென்று ஒரு அறை விட்டேன்.
ராஸ்கல்.. என்னை நம்பித்தான் உங்கப்பா அனுப்பியிருக்காரு. நீ கண்டவங்க கூட ஊரை சுத்தறே. உங்கப்பாவுக்கு போன் போடறேன்.. நீ வேற இடம் பார்த்துக்க.
காலில் விழுந்தான் ராஜாராமன். அண்ணா இன்னும் நாலு அடி கூட அடிங்க.. வெளியே போன்னு சொல்லாதீங்க.. எங்க கல்யாணத்தை நீங்கதான் நடத்தி வைக்கணும்.. அழ ஆரம்பித்தான்.
எனக்கு வெட்கமாக இருந்தது. என்னவாயிற்று எனக்கு..குற்றவுணர்வில் கிளம்பி வெளியில் வந்தேன்... திரும்ப வரும்போது ராஜாராமன் தூங்கி விட்டிருந்தான்...
உமாவின் தந்தைக்கு விஷயம் தெரிந்து விட்டது. படிப்பை நிறுத்தி விட்டார். சொந்தத்தில் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் கூட ஆகிவிட்டது. ராஜாராமன் பித்து பிடித்தாற் போல் திரிந்தான். அவ இல்லைன்னா நிச்சயம் செத்துடுவேன் அண்ணா..அவ கல்யாணத்தன்னிக்கு... அவளே சம்மதிச்சுட்டாளே.. அவ கூட சாகிறதுக்கும் நான் ரெடியா இருக்கேனே.. அவ ஃப்ரெண்டு கிட்ட சொல்லி விட்டிருக்கா அண்ணா.. அவளை மறந்துடணுமாம்..
எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவ்வளவுதானா காதல்.. என்னமோ தோன்றியது... ராஜா நான் இருக்கேன்.. எதாவது செய்யறேன் ..பைத்தியக்காரத்தனமா எதுவும் பண்ணிடாதே..
அதற்க்கப்புறம் கொஞ்சம் ஜேம்ஸ்பாண்ட் வேலைகள் செய்தேன்.. அவளை சந்திதேன்.. அழுதாள். அவள் அப்பா ராஜாராமனை கொலைசெய்து விடுவதாக மிரட்டியதால்தான் அப்படி சொன்னேன் என்றாள். இப்போதே வந்து விடுகிறேன் என்றாள்..
இப்ப வேண்டாம். கல்யாணத்துக்கு முதல் நாள்... நிசார் ஆட்டோவில் காத்திருப்பான். நேராக என் அறைக்கு வந்துவிடுங்கள்.. ஒரு காரில் திருச்சி.. சமயபுரத்தில் கல்யாணம்..
நடந்தது எதையும் நான் ராஜாவிடம் சொல்லவில்லை. சர்ப்ரைசாக இருக்கட்டும். நான் கொஞ்சம் புத்தி பேதலித்ததற்கு பரிகாரமாக.. ராஜாராமனும் கொஞ்சம் உற்சாகமாக தெரிந்தான். உமா எதையாவது சொல்லி விட்டிருப்பாளோ.. நாளை மறு நாள் கல்யாணம். நாளை அவள் வந்துவிடுவாள்.. காதலிப்பதை விட ,காதலுக்கு உதவுவதில் ஒரு அலாதி சுகம் இருப்பதாய் தோன்றியது.
மறுநாள் ராஜாராமை காணவில்லை. கொஞ்சம் பயமாக இருந்தது. ஊருக்கு போன் பண்ணினேன். அங்குதான் போயிருக்கிறான்.. ராஜா நைட்டுக்குள்ள வந்துடு.. உனக்கு ஒரு பரிசு என்றேன்.. குழப்பமாய் போனை வைத்தான்..
நிசார் ஒன்னும் பிரச்சனையில்லையே..
இல்லை.. அவங்க வந்துட்டாங்க.. எல்லாரும் கோயிலுக்கு போயிருக்காங்க.. இன்னும் ஒன் அவர்ல வந்துவேன்.
நிசார் உமா நகை எதுவும் போட்டு கிட்டு வரலையே.
இல்லை அண்ணா.. கட்டின புடவைதான்.
உமா வந்துவிட்டாள்.. நுழையும்போதே ”ராஜா என்றபடிதான்..”என்ன சொக்குபொடி போட்டான் இந்த சின்னப்பையன். இப்படி உருகிறாளே என்று எனக்கு வியப்பு.
எங்கப்பா நிச்சயம் போலிசுக்கு போவார் . உடனெ இந்த ஊரை விட்டு கிளம்பிடலாம். ராஜா எங்கே?
நீ வரப் போறதை அவன் கிட்ட சொல்லலை.. சஸ்பென்ஸா வச்சிருக்கேன். உன்னை இங்க பார்த்தவுடனே ,அவன் சந்தோஷத்தை நான் அனுபவிக்கணும்..
காலிங் பெல் அடித்தது.
உமா நீ உள்ளே இரு. நான் கூப்பிடும்போது வா..
கதவை திறந்தேன்.. ராஜாராமன். ஆனால் தனியாக இல்லை..
அவளுக்கு மட்டும்தான் முடியுமா? அண்ணா.. நான் செத்துடுவேன்னு நினைச்சீங்களா? இவளும் என்னை உயிரா காதலிச்சா.. அவளுக்காகத்தான் இவளை அலட்சியப்படுத்தினேன்.. இப்ப போய்.. என்கூட வர்றியான்னு கேட்டேன்.. வந்துட்டா ..கட்டின புடவையோட..நாளைக்குத்தான் எங்க கல்யாணமும்..
நான் என்ன செய்யட்டும் ? ஒரு வழி சொல்லுங்களேன் ப்ளீஸ்..
50 comments:
நீங்க எதிர்பார்க்கிற பதில் சொல்ல முடியாது.இப்படியெல்லாம் லவட்ட பாக்கறது போங்காட்டம்:))
சே... உமா வேற உங்களுக்கு தங்கை முறையாக போய் விட்டாள்.. இல்லனா நீங்களாவது கல்யாணம் செய்துக்கொள்ளலாம்!!!!!!!
//.. நீங்க எதிர்பார்க்கிற பதில் சொல்ல முடியாது. ..//
:-)))
பாலா சார்..நிலைமை தெரியாம பேசாதீங்க...நான் என்ன பண்றதுன்னு சொல்லுங்க சார் !
/ சரவண வடிவேல் said...
சே... உமா வேற உங்களுக்கு தங்கை முறையாக போய் விட்டாள்.. இல்லனா நீங்களாவது கல்யாணம் செய்துக்கொள்ளலாம்!!!!!!!//
அப்படி எங்கயாச்சும் சொல்லியிருக்கேனா?
//நீங்க எதிர்பார்க்கிற பதில் சொல்ல முடியாது.இப்படியெல்லாம் லவட்ட பாக்கறது போங்காட்டம்:))//
ஆவ்வ்வ்வ்.
சூப்பர் மணிஜீ.
உமாவுக்கு என்ன வயசு?
ராஜாராமனுக்கும், உமாவுக்கும் இரண்டு வயசு வித்தியாசம். எனக்கும் ராஜாவிற்கும் ஐந்து வயசு தான் வித்தியாசம். ஆக ஏழு நல்ல நம்பர்தான்.. சங்கர்
//.. நான் என்ன செய்யட்டும் ? ஒரு வழி சொல்லுங்களேன் ப்ளீஸ்..//
இதென்ன கேள்வி?நண்பனா நீர்?
பாஸ்போர்ட் இருக்கான்னு கேளும்..சவுதிக்கு அடுத்த ப்ளைட் எப்பன்னு விசாரியும்..மசமசன்னு நிற்காமல் ஆக வேண்டியதை பாரும்..
:-)
May I come in
ராஜாராமனுடயதை அவனுக்கு தர்றதுதான் நியாயம் பாஸ்.
ஹி..ஹி..
சவுதியில சாமியார் வாழ்க்கையாமே..(நிஜ சாமியார்யா!!) சரவணன் சொன்னாரு.. வந்தாச்சா?
ரமேஷ் ..இதென்ன கேள்வி? வாங்கய்யா..(போட்டிக்கு இல்ல..)
ராஜா..பெயர் பொருத்தம் வேற இல்ல...நான் என்ன பண்றது?
.(நிஜ சாமியார்யா!!)
அப்படின்னா? :-)
வெயிட்டிங் சரவணனுக்கு.வந்த பிறகு கூப்பிடுகிறேன்.
//ராஜாராமனுடயதை அவனுக்கு தர்றதுதான் நியாயம் பாஸ்///
:)) எப்டியெல்லாம் கிளம்பரீங்கப்பா :))
போலீசு வந்து லாடம் கட்டறத்துக்கு முன்னாடியே பேசாம அவங்க அப்பா வீட்டுக்கே அனுப்பிடுங்க... யாருக்கும் லாபமில்லை.. :))
விதூஷ்.. அது முடியாதே.. உமா போக மறுக்கிறாள்!!(என் பொண்டாட்டி கண்டிப்பா இதை படிப்பார்.. நாளைக்கு புத்தாண்டு வேற!!(உம்மாச்சி காப்பாத்து..)
அருமை
//என் பொண்டாட்டி கண்டிப்பா இதை படிப்பார்.. //
இது வேறயா? சரி.. அப்போ அவங்களே பாத்துப்பாங்க...
பா.ரா.ண்ணே! உங்களுக்கே லக்கி ப்ரைஸ்
ராஜாராம்..நான் எதுக்கும் மஹாக்கு போன் பண்ணி ஒரு வார்த்தை கேட்றவா? விதூஷ் முடிவே பண்ணிட்டாங்க போல!
மகான்னா யாரு?
நான் யாரு?
வித்யானா யாரு?
தலையில் அடிக்கப்படாதுயா..அபிஷ்ட்டு.
சஸ்பென்ஸ் வைக்கிறது தப்புன்னு மட்டும் தெரியுது!
பா.ரா. ஊருக்கு வரும் குஷில இருக்கார். உங்களுக்கு என்ன வந்தது மணிஜீ?? அபிஷ்டு அபிஷ்டு... :))
கலக்குங்க மக்கள்ஸ்...
தலைவரே இந்த மாதிரி ஏதாவது நடக்குன்ம்னுதான் நான் ரெடியா காத்திட்டிருக்கேன் அந்த பொண்ணுக்கு வாழ்ககை கொடுக்கறதுக்கு..:)
வந்தீங்களா? அட்சதை போட்டீங்களா? பாத்தி கட்னீங்களான்னு இல்லாம, எத்தனை பேர்யா பங்குக்கு வர்றீங்க?
அண்ணே ஜெட்செட் டிராவல்ஸ்ல இருந்து உங்க மெயிலுக்கு ஒரு டிக்கெட் வந்திருக்குமே
அந்த டிக்கெட்டை கைல குடுத்து மகராசியா போயிட்டு வாம்மான்னு
பிளைட்டு ஏத்தி விட்ருவீங்களாம்
ரசித்தேன் பின்னூட்ட கலாட்டாவும்
சென்னை-பெங்களூர்-பிடாதி ஆசிரமம்-ஒரு வாரம் தங்கல்-தெளிவு அடைதல்-பெங்களூர்-சென்னை-புது வாழ்க்கை
நேசா...அனுப்பிடுவேன்..உன் கவிதைகளை படித்தவுடன், ரிட்டர்ண் டிக்கெட் கேட்பாளே!!
தோடா... :)
ஜெமினி மேம்பாலத்துல இருந்து இடது பக்கமா திரும்பினீங்கன்னா நேரா போனீங்கன்னா ஒரு பெரிய பாலம் வரும்.அந்தப் பாலத்தை கடந்து இடது,வலது பக்கமா பார்த்துகிட்டு விசாரிச்சுகிட்டே போனீங்கன்னா நீங்க தேடுற இடம் வந்திடும்:)
என்ன,வாட்ஸ்மேன் கொஞ்சம் விரைப்பா முறைப்பார் துவக்கத்துல.அப்புறம் உங்களுக்கு பழகிடும்.முன் வாழ்த்துக்கள்.
நேசமித்ரன் said...
//அண்ணே ஜெட்செட் டிராவல்ஸ்ல இருந்து உங்க மெயிலுக்கு ஒரு டிக்கெட் வந்திருக்குமே//
அண்ணன் என்னடா..தம்பி என்னடா அவசரமான உலகத்துல...
//உன் கவிதைகளை படித்தவுடன், ரிட்டர்ண் டிக்கெட் கேட்பாளே!!//
போடுங்க மணி.என்னா பேச்சு! :-)
கலக்கல் அண்ணே!
ஆனா, அது சர்ப்ரைஸ் இல்லன்னா, கேப்மாரித்தனம்!!
பிள்ளையாண்டான்
என்னவோ உங்க மனசுப்படி எல்லாம் நடக்குது .....
உமா நிஜம்மா பவுன் கலரா ?
லக்கி தான்
அண்ணே..
ஏண்ணே கதைய பாதில நிப்பாட்டிட்டீங்க..!
மீதிக் கதை எப்போ வரும்..?
அண்ணே நீங்க முத முத அந்தப் பொண்ண தியேட்டர்ல வச்சித்தான் பாத்தீங்க. அதுனால அந்தப் பொண்ணுக்கு சினிமான்னா ரொம்ப பிடிக்கும் போல. பேசாம நம்ம ஜெட்லீக்குக் கட்டி வச்சிரலாம். ரெண்டு பேரும் சேந்து சினிமா பாக்க ஏதுவா இருக்கும்..
(ஜெட்லி: செக் கரெக்டா அனுப்பிருங்க)
முடிவு சூப்பர்!
மணியண்ணே
லேப்டாப்பில் இருக்கும் போது லேப்டாப்பை ஏன் அண்ணே திறக்கப் போறேன்
பா.ரா
கவிஞரையா நீங்க
அண்ணன் எண்ணடா
தம்பி எண்ணடா
அவள் சரமான உலகத்திலே
ரெண்டு பேரும் எண்ணி எண்ணி
........
சீர் செய்யப் போறீங்களா
நன்றி நன்றிங்கோ அண்ணன் மாரே
:)
அண்ணே.. ரெண்டு நாளா கை அரிக்குது ஒரு கதை எழுதணும்னு சொல்லிட்டிருந்தீங்களே, இது தான் மேட்டரா??
சவுதி வந்து சேர்ந்தாச்சு ஜி.
ம்.. நல்லாதான் இருக்கும் மணிஜீ கத... வந்து படிச்சுக்கறேன்..=))
நீங்க கட்டிக்குங்கண்ணே......தாய்க்குலத்துக்குஒரு பிரச்சனை என்றால் உங்க மனசு தாங்காது!!
நான் என்ன செய்யட்டும் ? ஒரு வழி சொல்லுங்களேன் ப்ளீஸ்.
என்று யாரிடமாவது நான் கேட்க நினைத்த போது ,"ராஜா ராமன் என்னை மணீஜியிடம் கொண்டு வந்து சேர்த்ததற்கு நன்றி.உமா கிடைத்த பின்பு,உயிருக்குயிராய் காதலித்த என்னை அலட்சியபடுத்திய உனக்கு பெண்கள் என்றால் கிள்ளுகீரையல்ல என்று நிரூபிக்கத்தான் நீ கூப்பிட்ட உடன் கட்டிய சேலையோடு வந்தேன்.நான் கல்யாணம் கட்டிக்க போறது உன்னையல்ல ராஜாராமன்,இந்த மணீஜியை என்று சொல்லி விட்டு உங்களுக்கு வசதி படும் போது என்னை கல்யாணம் கட்டிக்கறிங்களா? "என்று என்னை பார்த்தவளை உற்றுப்பார்த்தேன்.அவள் வேறு யாருமல்ல முகம் தெரிவதற்கு முன் இரண்டு நாளாய் என் கனவில் வந்தவள் தான். இப்போது நான் என்ன செய்யட்டும் ? ஒரு வழி சொல்லுங்களேன் ப்ளீஸ்
இதுக்கு தான் ரொம்ப ஸ்மார்டா யோசனை பன்ன கூடாது , இப்ப யாருக்கு ஆப்பு வந்துச்சு , பேசாம நம்ம குலசாமிய வேண்டிகிட்டு ரெண்டு "புல்லெட்" அடிங்க யோசனை தானா வரும்
அன்பு தண்டோரா,
எப்படி இருக்கீங்க? நீண்ட நாட்களாகி விட்டது அளவளாவி!
இப்படியும் ஒரு காதல் கதை, தலைப்பு தான் பிடிக்க வில்லை... இது தான்டா காதல் கதை என்று இருக்க வேண்டும் என்பது என் அபிப்ராயம்... இது போன்ற சபலங்கள் யாருக்கு தான் இல்லை... நண்பனின் காதலியை பார்த்து நாம் வழிவது இல்லையா... பூசாரியும் போஸ்ட் மேனும் சபலப்படுவதில்லையா என்ன... எத்தனை கட்டம் கட்டி யோசித்தாலும், கை விட்டு போவதில்லையா வாய்ப்புகள்... பிளான் எ மிராக்கில் என்பது எல்லாம் சுத்த அரைவேக்காட்டுத்தனம்... நீங்க என்ன செய்யனும்னு ஆசைபடுரீங்களோ அதை செய்யுங்க மணிஜி. யார் கேட்க போறா... தீர்மானம் பண்ணி எல்லாம் செய்து விட்ட பிறகும்... இது தப்புன்னு யோசிக்கறது இல்லையா நாம்... ஆனா ஒன்னு சொல்வேன் ராஜாராமை நீங்க தான் சரியாக வழி நடத்தவில்லை... அல்லது வேண்டும் என்றே இப்படி வழி நடத்தி இருக்குறீர்கள் என்று நினைக்கிறேன்... எது எப்படியோ எப்போ வரணும்னு சொல்லுங்க... வந்திருந்து சாப்பிட்டுட்டு போறேன்...
நல்ல கதை... ஆனா எதிர்பார்த்த (நீங்க எதிர்பார்த்த...) ட்விஸ்ட் தான்...
அன்புடன்
ராகவன்
அடப்பாவமே...செய்றது எல்லாம் செஞ்சுட்டு என்ன பண்றதுனு அப்பாவி மாதிரியே கேக்கறீங்களா... நீங்க அந்த உமாவ கல்யாணம் செய்துக்க பிளான் பண்ணிட்டு எங்க முடிவ கேட்டா எப்படி? Anyway , வாழ்த்துக்கள்
சித்திரை முதல் நாள் உமா யாருக்குன்னு சீட்டு போட்டு பார்க்கலாம். (கேபிள் பெயர் நீங்கலாக)
நண்பர்களின் ஆசிர்வாதங்களுக்கு நன்றிகள்.
“ஏற்கனவே ஒரு பெண்ணை நட்டாற்றில் விட்டு விட்ட உன்னை நம்பமாட்டேன்” என்று ராஜாராமனிடம் புதிதாய் வந்தவளும் சொல்லிவிட்டாள்..
“கண்ணா ! இன்னொரு லட்டு”
“கண்ணா ! இன்னொரு லட்டு”
ம்ஹூம்.இந்த தப்பாட்டம்மெல்லாம் ஆடக்கூடாது.ரெண்டு விரல்ல ஒரு விரல மட்டும் தொடுங்க.
சார்...
நல்ல ஒரு சஸ்பென்ஸ் கதை, திரைக்கதை, வசனம்...
அதோடு...
சூப்பர் க்ளைமாக்ஸ்....!
நட்புடன்...
காஞ்சி முரளி...
அடப்பாவிகளா... நடக்கட்டு நடக்கட்டு..
சூப்பர் மணிஜீ. நீங்க சஸ்பென்ஸ் வெக்காம சொல்லி இருக்கலாம் ஆனால் அந்த பேரழகி உங்களுக்குன்னு ஆண்டவன் முடிவு பண்ணிடான். அது மட்டும் அல்லாமல் அவள் இல்லைன்னா நான் செத்து விடுவேன்ணு சொல்லிட்டு அதுக்கு அப்புறம் வேறு ஒரு பெண்ணை வாண்னு சொல்லி கூப்பிடர ஆம்பிளைங்கள நீக்க வெச்சு சுடனும். காதலிக்கும் போதே அந்த ராஜாரமண் ஆல சொன்ன வார்த்தைய காப்பாத்த முடியல... இவரெல்லாம் கல்யாணம்னு ஒன்ன பண்ணிக்கிட்டு என்ன செய்ய போறாங்களோ தெரியல.
ஆனா ஒண்ணு கடவுள் உங்க கானவ நெஜம் ஆக்கிடாரு...
Post a Comment