Monday, April 19, 2010

மானிட்டர் பக்கங்கள்.............19/04/10
கொலையில் நேரடியாக ஈடுபட்ட நளினியையே மன்னிக்கும் மனம் கொண்ட சோனியாவால் பிரபாகரனின் தாயார் மருத்துவ சிகிச்சைக்கு மறுக்கும் மனம் வந்திருக்கும்? இதென்னவோ அதிகாரிகள் மட்டத்தில் செய்திருப்பார்கள் என்று தோன்றுகிறது. கார்கில் யுத்தம் நடந்து கொண்டிருக்கும்போது கூட அப்பல்லோ மருத்துவமனையில் நிறைய பாகிஸ்தானியர்கள் சிகிச்சை பெற்றார்கள். சில பாகிஸ்தான் தலைவர்கள் உள்பட. வரதராஜ பெருமாளுக்கு பாதுகாப்பு. அவர் மகள் நடிக்கும் திரைப்படத்தின் படபிடிப்புக்கும் பாதுகாப்பு. சரி . தலைவரின் மூன்று மணிநேர உண்ணாவிரதம் முடிந்து ஒரு வருடம் ஆகப் போகிறது. எதாவது பாராட்டு விழா உண்டா?


தமிழக மக்களின் நாடிதுடிப்பு என்று விளம்பரப்படுத்துகிறார்கள். ஆக்‌ஷன் செல்லுக்கு சொல்லுங்கள் என்கிறார்கள். அது கூட நிறைய பேர் சொல்ல வேண்டும். எது எப்படியோ வாரம் இரண்டு முறை கல்லா கட்டுகிறார்கள். கொஞ்சம் கணக்கு போட்டுப் பார்த்தால் அவர்கள் சம்பாதிக்கும் பணம் நிச்சயம் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை சுரண்டும் அரசியல்வாதிகளுக்கு குறைந்ததில்லை. செய்திகள் எந்த அடிப்படையில் வருகிறது? சாமியார், சரசம், சல்லாபம் இதெல்லாம்தான் இப்ப செம்ம ஹாட் மச்சி. அப்புறம் பழைய கிளு கிளு சினிமா கிசுகிசுக்கள். மதில் ஏறி குதித்த பூனையின் நேரடி ஒளிபரப்பு. தலைவரின் குடும்பத்தில் நடக்கும் லேட்டஸ்ட் முறைப்பும், விறைப்பும்.

சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்தது. வேலூரில் அரசு அதிகாரியாக பணிபுரியும் ரங்கராஜன். இந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி அவருக்கு பதவி உயர்வு. ஆனால் மார்ச் 26ஆம் தேதி ஒரு விபத்தில் சிக்கினார். அது துரதிர்ஷ்டமென்றால், அதில் அவர் உடனே இறக்காதது இன்னும் துரதிர்ஷ்டவசமே. வேலூரில் பிரபலமான பேருந்து நிறுவனம் பாரதி மோட்டார் சர்விஸ். வழக்கம் போல் அதில் அலுவலகம் போகிறார். இடையில் இரண்டு நபர்கள் ஒரு கேனுடன் ஏறுகிறார்கள். இவர் அமர்ந்திருக்கும் இருக்கையின் கீழ் அதை வைக்கிறார்கள். அதற்கு 100ரூ லஞ்சம் கொடுக்கிறார்கள். (அது தினம் நடக்கும் நிகழ்ச்சியாம். எவ்வளவு ஆபத்து !)அது ஒரு கெமிக்கல் கேன். பேருந்தின் குலுங்கலில் அது வெடிக்கிறது. ரெங்கராஜன் மற்றும் சிலர் தீப்பிடித்து எரிகிறார்கள். விபத்து பதிவு செய்யபடுகிறது. ஆனால் சம்பந்தப்பட்ட பேருந்து காவல் நிலையத்துக்கே கொண்டுவரப்படவில்லை.. பணம்..

ரங்கராஜன் இறக்கவில்லை. பிழைக்க வாய்ப்பே இல்லை . ஆனால் எப்போது உயிர் போகும் என்று சொல்ல மருத்துவர்களால் முடியவில்லை. உடம்பெல்லாம் எரிகிறது . தன்னை கொன்றுவிடுமாறு மருத்துவர்களிடம் கெஞ்சுகிறார். அதற்கு சட்டம் அனுமதிக்காது என்கிறார்கள். தினப்பத்திரிக்கையில் ஒரு மூலையில் இந்த செய்திவந்தது. ஜீனியர் விகடனை தொடர்பு கொண்டு இந்த செய்தியை பதிவு செய்ய முடியுமா? என்று கேட்டதற்கு அவர்கள் சொன்னது.

“இது டெய்லி பேப்பருக்கான நியூஸ் ஆச்சே ! என்றார்கள். பிறகு இதில் மேட்டர் இருக்கிறாப்ல தோணுது. வேலூர் நிருபரை தொடர்பு கொள்ளுங்கள் என்றார்கள். அவர் துணை முதல்வர் விசிட்டில் பிஸியாக இருந்தார். ரங்கராஜனும், இன்னும் ஆறு பேர்களும் இறந்து போகும் வரை யாரும் வரவில்லை. பாரதி பேருந்து உரிமையாளரின் பவர் அப்படி என்று சொன்னார்கள். ” சபாஷ். எவனாவது சாமியார் சரசமாடற போட்டோவோ, செய்தியோ கிடைச்சா, அவங்களுக்கு ஸ்கூப்.. இது தினம் அங்கங்ககே நடக்கறதுதானே என்கிறார்கள். ஆனால் ஒரு கிராமத்தில் எதாவது கற்பழிப்பு நடந்தால் உடனே நியூஸ். பெயரை மாற்றி, முகத்தை மறைத்து. அப்புறம் அதற்கு ஃபாலோஅப் வேறு. அதில் ஒரு கிக் இருக்கும் போல்.


சென்னை காவல்துறை சமீபத்தில் ஒருவனை கைது செய்தார்கள். விசாரித்த போதுதான் தெரிந்ததாம். அவன் மீது 1000 வழக்குகள் இருக்கிறதாம். போலிஸ் தரப்பில் அவனை புகழ்ந்து தள்ளி விட்டார்கள். கன்னம் வைப்பதில், சத்தம் வராமல் ஷட்டரை திறப்பதில், சங்கிலி அறுப்பு, பிக்பாக்கெட் இதிலெல்லாம் பார்ட்டி கில்லாடியாம். விட்டால் கமிஷனர் ஆஃபிசில் சிலையே வைப்பார்கள் போல.

சுறா படத்தின் ஆடியோ ரிலீஸ். தொடர்ந்து ட்ரெயிலர் தாக்குதல். விழாவில் பேசிய அத்தனை பேர்களும் சொல்லி வைத்தாற்போல் விஜய் நடிச்சா வெற்றிதான் என்றார்கள். கூடவே ஒருவர் விஷாலையும் சேர்த்துக் கொண்டார். மீண்டும் சன் டிவிக்கு ஒரு வெற்றிப்படம். இந்த முறை வடிவேல் காப்பாற்றி விடுவாரோ என்று பயமாக இருக்கிறது. வழக்கம் போல் பார்த்திபன் தமண்ணாவை ஜொள்ளினார். பவர் கட்டின் போது தமனா வீட்டில் மெழுகுவர்த்தி கூட ஏற்ற வேண்டியிருக்காது என்றார். நடக்கட்டும்..

கலைஞர் டிவியில் தசாவாதாரம். ஜெயலலிதா ஹெலிகாப்டரில் சுனாமி பாதித்த பகுதிகளை பார்வையிடும் காட்சியை கவனமாக தூக்கியிருந்தார்கள். நான் முதல் முறை ஒளிபரப்பியபோது பார்க்கவில்லை. இந்த முறைதான் கவனித்தேன். சீப்பை ஒளித்து வைப்பதில் கில்லாடிகள்.
மொண்ணை கத்தியுடன்
சுயம்வரம் நோக்கி..
காலை பதம்
பார்த்த கூர் கற்களில்
தீட்டி,தீட்டி
கத்தி நீண்டு வாளானது.
"கதை" போல் இருந்த
திண்ணை தடியன்
வில் போலானான்.
அவையோருக்கு ஆச்சர்யம்
அவனா “இவன்” என்று.
அமைதியாய் புன்னகைத்தேன்..
நான் தானே“அவனாயிருந்தேன்”


27 comments:

vasu balaji said...

கோவம் சரி. கொதிச்சாச்சில்ல. அந்த வார்த்தைய மாத்துங்க பாஸ்.

/அமைதியாய் புன்னகைத்தேன்..
நான் தானே“அவனாயிருந்தேன்”/

போறது சுயம்வரம். அங்க போய் இப்படி சொன்னா ‘ஓஓஓஒ. அவனா இவன்’னு சொல்லீட்டா வட போச்சே..அவ்வ்வ்வ்

shortfilmindia.com said...

ரைட்டு காலையிலேயே ஏன் இவ்வளவு டென்ஷன்.. ஜூனியர் விகடன் படித்தார் போலிருக்கு..:)

கேபிள் சங்கர்

Unknown said...

ரொம்ப ஹாட்டா இருக்கு, கொஞ்சம் சோடா ஊத்திக்கிறேன்

Unknown said...

ரைட்டு..

கண்ணா.. said...

//தலைவரின் மூன்று மணிநேர உண்ணாவிரதம் முடிந்து ஒரு வருடம் ஆகப் போகிறது. எதாவது பாராட்டு விழா உண்டா?//

அவங்களே என்ன காரணம் கிடைக்கும்னு ரூம் போட்டு யோசிக்குறாங்க...நீங்க வேற எடுத்து கொடுக்குறீங்களே...

நடத்தினாலும் நடத்துவானுங்க...நாதாரி பயலுக..

சங்கர் said...

அண்ணன் தண்டோரா வாராவாரம் திட்டுவதற்கு ஏற்ப ஏதாவது செய்து கொண்டேயிருக்கும் தங்க தலைவ(ய)னுக்கு ஒரு பாராட்டு விழா எடுப்போம்

யாசவி said...

கண்டத படிக்காதீங்க இப்படித்தான் சூடாகிடும்.

படிச்சுட்டு நான் சூடாகிவிட்டேன்.

:)

கவிதை சூப்பர்

Santhappanசாந்தப்பன் said...

பாரட்டிற்க்காக பிறந்த தலைவனையே, விடாமல் பாராட்டி(??)க் கொண்டிருக்கும் உங்களுக்கும் ஒரு பாராட்டு விழா நடத்தலாம்!

ஊடகங்கள் செய்வது வியாபாரம். சமூக அக்கறை எல்லாம் போய் ரொம்ப நாளாச்சு!

க.பாலாசி said...

அடி...இடி..குத்து எல்லாமே..

உண்மைத்தமிழன் said...

பார்த்தாச்சு.. படிச்சாச்சு.. ஓட்டுப் போட்டாச்சு..!

ச்சும்மா வாரா வாரம் அய்யாவைத் தி்ட்டுறதுக்காக உங்களுக்கும் ஒரு பாராட்டு விழா நடத்திருவோம்..!

ரவி said...

அதிகாரிகள் மட்டத்தில் செய்திருப்பார்கள் என்று நீங்கள் கணித்தது சரி.அதிகபட்சம் ஒரு மேனனுக்கோ நாயருக்கோ போன் போட்டிருப்பார்கள்...அய்யாவுக்கு காலையில் கமிஷனர் சல்யூட் அடித்து சொல்லும்போது தான் தெரிந்திருக்கும்...

But He Had done a Good Cover-up Now.

அம்மா ஆட்சியில் எழுதப்பட்ட கடிதம் அது இது என்று பிரச்சினையின் மையக்கருவை தூக்கி எதிர்க்கட்சி தலையில் போட்டுட்டார்.

திருமா, வை.கோ, நெடுமா போன்ற குலைக்கிற டாமிகளை ஏன் இன்னும் நம்புகிறார்கள் என்று தெரியவில்லை ?

இத்தனைக்கும் நெடுமாவும் வைகோவும் இந்த விஷயத்தை ரகசியமாக வைத்திருந்தார்களாம். பேசாமல் அ அண்ணனுக்கு சொல்லியிருந்தாலே காரியம் நடந்திருக்கும். ஹும்..!!

நேசமித்ரன் said...

//இந்த முறை வடிவேல் காப்பாற்றி விடுவாரோ என்று பயமாக இருக்கிறது//

இதாண்ணே கோவத்துலையும் உங்க டச் :)

அப்புறம் மொண்ணைக் கத்தி கவிதை சூப்பர்

Ganesh Babu said...

மணிஜீ உங்கள் பதிவுகள் அருமை

தமிழர், மற்றும் தமிழ் வலை பதிவர்களுக்காக tamilar.co.cc என்று புதிய தளத்தை ஆரம்பித்து உள்ளேன், அதில் சேர்ந்து தமிழர்களுடன் உரையாடுங்கள், அது twitter+tamilish போன்றதொரு சேவை.

இப்படிக்கு
டென்த் ரிசெல்டுக்கு வெயிட் பண்ணும் மாணவன்

கணேஷ் பாபு

pichaikaaran said...

" நான் தானே“அவனாயிருந்தேன் "

அவனாடா நீயி...??

வரதராஜலு .பூ said...

//தலைவரின் மூன்று மணிநேர உண்ணாவிரதம் முடிந்து ஒரு வருடம் ஆகப் போகிறது. எதாவது பாராட்டு விழா உண்டா?//

நல்லா சொல்றிங்க அய்யா யோசனை.

pichaikaaran said...

" நான் தானே“அவனாயிருந்தேன்”

அவனாடா நீயி? சொல்லவே இல்ல !!!!!

Thamira said...

வழக்கம் போல..

க‌ரிச‌ல்கார‌ன் said...

என்னா வில்ல‌த்த‌ன‌ம்

PPattian said...

//வேலூரில் அரசு அதிகாரியாக பணிபுரியும் ரங்கராஜன். இந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி அவருக்கு பதவி உயர்வு.//

//உடம்பெல்லாம் எரிகிறது . தன்னை கொன்றுவிடுமாறு மருத்துவர்களிடம் கெஞ்சுகிறார்//

நெஞ்சு கொதிக்குது.. கனக்குது :(

பனித்துளி சங்கர் said...

தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்குகின்றன .

Sanjai Gandhi said...

காரணமே இல்லாமல் எதற்கெடுத்தாலும் சோனியாகாந்தியை குறை சொல்லும் அறிவாளிகளைப் போல் இல்லாமல் நேர்மையாய் எழுதி இருப்பது ஆறுதல்.. பிரபாகரன் மீது தான் குற்ற வழக்கு இருக்கிறது. அவர் தாய் மேல் இல்லை. அவரை இந்தியாவில் அனுமதிப்பதால் எந்த பிரச்சனையும் இல்லை. அவர் வருகை பற்றி எல்லாம் சோனியாகாந்திக்கோ பிரதமருக்கோ தகவல் கூட சென்றிருக்காது. இதெல்லாம் அதிகாரிகளின் வேலையாகத் தான் இருக்கும். மேலும் வைகோ, இவரின் வருகையை அரசியலாக்கும் நோக்கோடு விமான நிலையம் வரை படை பரிவாரங்களோடு சென்று சீன் போட்டது இங்கு இருப்பவர்களுக்கு உறுத்தலாய் இருந்திருக்கலாம். திருமாவளவன் ரோல் இதில் இல்லையா? அல்லது தேர்தல் முடிந்துவிட்டதால் தேவை இல்லை என்று விட்டுவிட்டாரா?

Vidhoosh said...

எல்லாம் சரிதான், ஏற்கனவே எல்லாரும் சொல்லியாச்சு.

நான் என்ன கேக்கறேன்னா, இந்த கமென்ட் பாக்ஸ் பக்கத்துல cloud மாதிரி ரெண்டு ரெண்டா தெரிவது ஏதும் மானிட்டர் சதியா மணிஜீ???

அப்புறம் நேத்திக்கு பத்திரிக்க ஆபீசுலேந்து ஏதும் ஆட்டோ கீட்டோ வரலே?

பத்மா said...

பார்த்திபன் ஜொள்ளு விட்டா என்ன அப்படி கோபம் ?கோபத்தோட origin அதான் போல இருக்கு .சாந்தம் !

ராஜ நடராஜன் said...

மணிஜீ!என்னமோ சொல்ல வந்தேன் மதியம்.அதற்குள்ள சர்வர் கரகரகர...
யோசித்து சொல்கிறேன்.

கலகலப்ரியா said...

ஹூம்...

Pichu said...

I spoke to JV reporter ThanigaiVel @ Vellore but he refused to visit. Reason? These are very normal daily happenings and does not attract serious interest. Not sure what will attract serious attention? Nithyananda Types, Rape events. Wondering whether the bus owner has "understanding" with JV also

மணிஜி said...

கருத்துக்களுக்கு நன்றி நண்பர்களே..