மூத்தவருக்கு முறைப்பு ஜாஸ்தியாயிடுச்சு
விறைப்புல இளையவரும் சளைச்சவரில்லை
நப்பாசைதான் நடுவில இருக்கிறவங்களுக்கும்
அமைதிக்கு பின்னாடி அணுகுண்டு இருக்குன்னு
அறிஞருக்கு தெரிஞ்சுதாம்ல இருக்கு
இப்பதான் புது வீடு முடிஞ்சுது
அடுத்தாப்ல பெண்சிங்கத்துக்கு
பிரசவம் பார்க்கணும்
ஐம்பாதாண்டு காலமா வாழவச்சவளுக்கு
கோவையில் கொண்டாட்டமாம்
அப்பாக்கள் மேடையில நடிக்க
பிள்ளைகளுக்கும் அரிதாரம் பூசும் ஆசையாம்
மருமகனுங்களுக்கு ஆப்பாம்
பேரம் முடியறவரைக்கும் புது கம்பெனிதான்
மூணு பேருக்கு முத பக்கத்துல
கண்ணீர் அஞ்சலி இந்தியாவின்
நம்பர் ஒன் தமிழ் நாளிதழில்
இன்னும் யாருக்கு விட்டுப்போச்சு பதவி
கொண்டு வா மேல்சபையை
கூட்டுக் களவாணிங்க வாயை அடை
கீழ இருக்கிறவனுக்கு எப்பவும் போல்
டீயும், தினத்தந்தியும்தான்
கதர் சட்டை கிழியுது
சுகர் ஏறுது
வாங்கப்பா உப்பு சத்தியாகிரக
ஊர்வலத்துக்கு
குறையொன்றும் இல்லை
கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
இதான் கருப்பு சட்டைகளின்
காலர்ட்யூன்
மேல் சபையில் மானமிகுக்கள்
உண்டா, இல்லையா?
மரம் வெட்டிக்கும் மனசு அடிச்சுக்குது
மைந்தனுக்கு தச்சு வச்ச சூட்டும், கோட்டும்
சும்மாவே இருந்துடுமோ?
தலைவிக்கும் தலைவலிதான்
கால்ல விழுந்து கிடந்தவனெல்லாம்
கரை வேட்டியை மாத்திடுகிறான்
உடன்பிறாவா உபத்திரத்தை கழட்டி விடலாம்னா
இளநி வெட்ட யாரை தேடறது?
கூத்துல கோமாளியாட்டாம் இன்னொரு
தொலைகாட்சியாம்
கொஞ்சநஞ்ச சிண்டையும் பிய்ச்சுக்கிறாருயா
சின்னக்கவுண்டரு
சுத்தி மொக்கயாயிடுச்சு
அறிவாள் சாணை பிடிக்க துட்டு தேத்தணும்
உண்டியல் ஓட்டையை அடைங்கப்பா
ஒரு பொண்ணு ஆனந்தம்
ரெண்டுன்னா பரமானந்தம்
சுத்தி ரவுண்டு கட்டினா
நித்தியானந்தமாம்
ரஞ்சிதாவா, ராகசுதாவா
சந்தேகம் தீர்ந்தாலும்
வயித்தெரிச்சல்தான் அடங்கலை
அவ்வளவு நேரம் எப்படிரா?
வயக்ராவா? இழவெடுத்தவனே
உலை கொதிக்குது பாரு
கொட்டு ஒரு ரூபா அரிசியை
அண்ணி கொழுந்தனோட ஓடினாளா?
மணி எட்டாச்சு பார்
இலவச டிவியை போடு
மண்டை வெடிச்சுட போகுது
கவலை ஜாஸ்திதான்
கட்டிங்க்கு பார்ட்னர் கிடைக்கலை
பணப்புழக்கம் அதிகமாமே
234 லேயும் திருவிழா வரணும்
108 ஐ அவனுக்கு போடு
காலி பண்ணு வவுத்தை
கறி கொடுப்பான்
கூடவே கால் கிலோ மயிறும் கேளு
என்னாது ? எழுத ஒன்னுமே இல்லையா?
கிளறுடா சாதிக்குப்பையை
அடிப்பட்டுச்சா? வைத்தியரைப் பாரு
அதுக்கும் முன்னாடி அவன் வர்ணாசிரமத்தை
தோண்டு.. சுயமரியாதையை சுவாசிச்சு
வளர்ந்தவன் டா நீ
ஊசிகூட போட விடாதே அவனை
இருப்பது ஒரே உயிர்
போனா போகட்டுமே
கொள்கைக்காக..............
37 comments:
அண்ணே பிரமாதம் ..
மீ செகண்டு...வித் வோட்டு...
இன்னும் கொஞ்சம் கிழிச்சு தொங்க விடனும்...
டக்கரா கீது பா....
ஹுக்கும்.. இது வேற..
எதுவுமில்லன்னா இருக்கவே இருக்கு கவுஜ, இல்லீங்கண்ணா...
அண்ணே.
இன்னும் கொஞ்சம் டார் டாரா கிழிச்சு தொங்க விடுங்கண்ணே....ரொம்ப நல்லா இருக்கும்....
aahaa..saami aada aarambichchuduchchu doy
எல்லா மேட்டரும் இருக்கு.. ஏதோ ஒண்ணு குறையாறா மாதிரியே இருக்கு!!
இது மாநில அரசியல் மட்டும் தானோ!
டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!
அட...அட...சூப்பர்...
பட்டைய கிளப்பறீங்கண்ணே
அரசியல கிழிச்சு தோரணம் கட்டி தொங்க விட்டுடீங்க. ரொம்ப நல்லாருக்கு மணிஜீ.கலக்குங்க.
தல சுத்துது. கிர்ருன்னு வருது. ஆனா ஒரு மாதிரி சந்தோசமா இருக்கு. என்னா காக்டெயில் இது ஜீ:))
அஃகக்ஃகா!
சூப்பர் தலைவரே..
புலம்பல்ன்னு சொல்லலாமா
//வானம்பாடிகள் said...
தல சுத்துது. கிர்ருன்னு வருது. ஆனா ஒரு மாதிரி சந்தோசமா இருக்கு. என்னா காக்டெயில் இது ஜீ:))//
அதே...அதெ....
//இன்னும் யாருக்கு விட்டுப்போச்சு பதவி
கொண்டு வா மேல்சபையை
கூட்டுக் களவாணிங்க வாயை அடை
கீழ இருக்கிறவனுக்கு எப்பவும் போல்
டீயும், தினத்தந்தியும்தான்//
அதெப்படிங்க ஒரே சட்டம் ஒரு காலத்துல ச்சீய் வேண்டாம்,மறுபடியும் அதுவே இனிக்குது?
//கூத்துல கோமாளியாட்டாம் இன்னொரு
தொலைகாட்சியாம்
கொஞ்சநஞ்ச சிண்டையும் பிய்ச்சுக்கிறாருயா
சின்னக்கவுண்டரு
//
சூப்பரப்பு...
பட்டய கிளப்புறீங்க...
சூப்பர்
நல்லாயிருக்கு
அருமை மணிஜி.
அதெல்லாம் சரி... நம்ம சங்கம் என்னாச்சு?
கிண்டல் செஞ்சு முரசொலில கவிதை வந்து தொலைச்சுட போகுது
ஒரு மைனஸ் ஓட்டு கூட இல்லியா..?? போங்கண்ணே.. இது போங்காட்டம்.
மறுபடியும் முதல்லேந்து எழுதுங்க...
மணி,
அருமை
=))... just got it... (udhavikku nanri natpe).. superb maniji..!
டாய்........"லெட்டை" வச்சு எழுதுனீங்களாண்ணா ?? அழுத்தமா விழுந்திருக்கு...
இதுக்குப் பேரு என்ன வேணும்னாலும் வச்சுக்கங்க... ஆனா இதல இருக்குறது எல்லாம் எழவுகளைப் பத்திதான்...
அடிக்கிற அடியில் தாரை தம்பட்டைகள் கிழிந்து தொங்கட்டும்... உம்ம்ம்... அப்புறம் அங்கங்கே யோனி,முலை, குறி மாதிரி மசாலா சேர்த்து கட்டவிழ்ப்பு (மசுராப்போச்சு) பண்ணியிருந்தா நீங்களும் ‘எலக்கியவாதி’ ஆயிருக்கலாம்ல
என்ன நெனச்சு எழுதினீங்கன்னு தெரியல..
ஆனா மனசு வலிக்குது.
வானம்பாடிகள் சொன்னதுக்கு ரிப்பீட்ட்ட்ட்ட்
வருகைக்கும்,கருத்துக்களுக்கும் அன்பும் , நன்றியும்...
நல்லாருக்கு தலைவரே...
தலைவிதியை நொந்தபடி மரத்தமிழன்.
மணிஜீ....
இன்னும் கூட “டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரு”வீங்கன்னு எதிர்பார்த்தேன்...
கிழிச்சு பெரிய தோரணம் தொங்க விடு தல...
அருமை அருமை.வாழ்த்த வயதில்லை,வணங்குகிறேன்!!
நிசமாவே தலை சுத்துதுண்ணே..!
மணிஜி அண்ணே,
கவிதையிலே விடுதலை வேண்டி நிற்கும் சிறுத்தைகளை விட்டு விட்டீர்களே.ஒரு வரிக்குக் கூடவா அவங்க லாயக்கில்லை.மனமிகுக்கள் போல் அவிங்களும் குடும்பம் தானே?
//234 லேயும் திருவிழா வரணும்//
அது மட்டும் நடக்காது. தொகுதி ஒண்ணுக்கு 5 இல்ல 6 கோடி மேனிக்கு 500/600 கோடிய வாரி இறைக்க அவங்க ஒண்ணும் முட்டாளுக இல்ல. அப்போல்லாம் பாத்துப் பாத்துதான் செலவளிப்பாங்க.
சாட்டையடி
இப்பத்தான் விடிஞ்சதா அமீரகத்துல...
மஞ்சூரண்ணே..உங்க கமெண்ஸ்க்கு மேல உள்ளவங்களை பார்த்தா பரிதாபமா இல்லையா..?
Post a Comment