தலைப்பு செய்திகள், காது ஜன்னல் விளம்பரங்கள் இரண்டு, வரி விளம்பரங்கள், சிந்துபாத் (ஆச்சர்யம் ! முன்னரே படிச்சா மாதிரியே இருக்கு.) ஆண்டி பண்டாரம் பாடுகிறார், சாணக்கியன் சொல், விளையாட்டு, மிகச்சுவையான சினிமா செய்திகள், இன்று ஒரு தகவல், வணீகம், ஆன்மீகம் இத்யாதிகள். இறுதியாக அச்சிட்டு வெளியிடுபவர்கள் வரை. இரண்டு முறை படித்தாகி விட்டது. ஆனாலும் தந்தியை கையில்தான் வைத்திருக்கிறேன். தாமுவிற்காக காத்திருக்கிறேன். இடம். அவன் வேலை செய்யும் தோல் ஃபேக்டரி.
தாமு அரைமணிக்கொரு முறை வந்து தலையை காட்டி விட்டு, ஒரு சின்ன மன்னிப்பை யாசித்து விட்டு போகிறான். வாசலில் இருக்கும் டீக்கடையில் நான்கு டீ குடித்து விட்டேன். அவன் கணக்கில். ஏழெட்டு சிகரெட்டுகளும் தீர்ந்தது.மணி எட்டு. வீட்டில் குட்டி என்ன பண்ணிக் கொண்டிருப்பாள்? அழுது கொண்டிருப்பாளா? மனைவி நிச்சயம் அழுது கொண்டிருப்பாள். அவளுக்கு இப்போதைக்கு ஒரே ஆறுதல் அழுகைதான். அப்புறம்தான் குட்டி. சாப்பிட்டிருப்பாளா?
தாமு வந்தான். சாரிடா . இன்னிக்கு ஷிப்மெண்ட் போகணும். நான் வேற ஒரு வாரம் ஊரில் இல்லையா? கொஞ்சம் வெயிட் பண்ணு ப்ளீஸ் என்றான். அவன் அன்றுதான் கல்கட்டாவிலிருந்து திரும்பியிருந்தான்.
இல்லை தாமு. நீ ஹெல்ப் பண்ணாத்தான் நான் வீட்டுக்கே போக முடியும்.
தெரியும்டா. நானும் பணத்துக்காகத்தான் வெயிட் பண்ணிகிட்டிருக்கேன். சார் வரணும். வாணியம்பாடியிலேர்ந்து கிளம்பிட்டார். நானே உன்னை வீட்ல டிராப் பண்றேன்.
இங்க பாருங்க தம்பி. நாங்களும் கடன் வாங்கித்தான் வீட்டை கட்டியிருக்கோம். நாலு மாசமா வாடகையும் கொடுக்கலை. கரண்ட் பில்லும் இல்லை. இதுக்கு மேல என்னால முடியாதுப்பா. நீங்களும் எங்கேயும் வேலைக்கு போறாப்ல தெரியலையே.
இல்லீங்க . நான் வேலைக்கு போயிட்டுத்தான். ஆனால் சம்பளம் வரலை. ஷூட்டிங் ஆரம்பிக்கணும். எல்லாம் சரியாயிடும்.
நீங்க எதோ லெதர் கம்பெனியில் வேலை செய்றதா இல்லை சொன்னீங்க? சினிமாவா?
தாமு வந்தான். இன்னும் ஒன் அவர்ல வந்துடுவார்டா. சாப்பிட்டியா?
ம்ம் என்றேன்.
மத்தியானம் சாப்பிட்டதை சொல்றியா?
இல்லைடா. நேத்திக்கு நைட்டு சாப்பிட்டேன். பணம் கிடைச்சிடுமா தாமு?
நிச்சயமா. வா போய் சாப்பிட்டு வந்துடலாம்.
எனக்கு இறங்கவில்லை. குட்டிம்மா என்ன சாப்பிட்டாளோ? மனைவி என்ன சாப்பிட்டிருப்பாள்? எனக்கு தெரிந்து கொஞ்சம் அரிசி மாத்திரமே இருந்தது. சிகப்பு கலரில் ,லேசான வாடையுடன்.
ஏண்டா போதுமா? இங்க அக்கவுண்ட்தான். வீட்டுக்கு வேணூம்னா பார்சல் வாங்கிக்கறையா?
இல்லை தாமு வேணாம். நான் போகும் போது சாமான் வாங்கிட்டு போயிடறேன். பால் டின் வாங்கணும். அதான் முக்கியம்.
அது 24 ஹவர்ஸ் பார்மசி இங்க இருக்கு. வாங்கிக்கலாம். சிகரெட் வேணுமா?
நிறைய வேணும் என்றேன்.
வீடு வந்திருந்தது. தாமு என்னை சற்றுத் தள்ளியே இறக்கிவிட்டான். சாரிடா என்றான்.
மெல்ல படியேறி கதவை தட்டினால் திறந்தே இருந்தது.
கரண்ட் இல்லையாம்மா. குட்டி தூங்கிட்டாளா?
இருக்கு. தூங்கிட்டா. மனைவி சொல்லிக் கொண்டே மெழுகுவர்த்தியை கொளுத்தினாள். குட்டிம்மாவுக்கு வியர்க்க சிணுங்கினாள். விசிறிக் கொண்டேசொன்னாள்.
கரண்டை கட் பண்ணிட்டாங்க. தண்ணியும் போடலை. ஒரு குடம் தண்ணி மீதியிருக்கு. போன காரியம் என்னவாச்சு.? அதென்ன பை?
பாவம் தாமு. அவன் முதாலாளிக்கு ஆக்ஸிடெண்ட் ஆயிருச்சு. காலையில கிடைச்சுடும் என்றேன் நானே வெட்கப்படும் தொனியில். நான் வேணா வீசிறட்டுமா? குட்டி என்ன சாப்பிட்டா?
பால் குடுத்தேன். உங்க ஃப்ரெண்டுக்கு வேற சோர்ஸே இல்லியா? அவர் நினைச்சா முடியாதா?ஏன் இப்படி இருக்கீங்க? எல்லாம் என் தலையெழுத்து. அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.
தாமு எனக்கு கொஞ்சம் பணம் தர வேண்டும். ரொம்ப நாளைக்கு முன் வாங்கினான். நானும் கேட்கவில்லை. அவனும் தரவில்லை. இப்ப போய் உடனே எடுத்து வைன்னா, அவனும்தான் என்னப் பண்ணமுடியும். நான் ஒரு முட்டாள். தாமு கிட்ட கடன் கேட்டுப் பார்க்கப் போறேன்னு இவ கிட்ட சொல்லியிருக்கணும்.
சரி அழாதே. நாளைக்கு நான் வீட்டுக்காரங்க கால்ல விழறேன். கொஞ்சம் ஸ்வீட் சாப்பிடறீயா?
கோபத்தில் அழுகையினூடே ,பல்லைக் கடித்துக் கொண்டே, உங்களுக்கு பிரியமானவர்கள் சிரித்து நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?
ஸ்வீட்டா .. ஏது?
தாமு கல்கட்டா போயிட்டு வந்தானாம். கொடுத்தான்.
ரசகுல்லா டப்பாவை எடுத்து வெளியில் வைத்தேன். ”ஆ” வென்றாள்.
குட்டிம்மா தூங்கி கொண்டிருந்தாள்.
தாமு கல்கட்டா போயிட்டு வந்தானாம். கொடுத்தான்.
ரசகுல்லா டப்பாவை எடுத்து வெளியில் வைத்தேன். ”ஆ” வென்றாள்.
குட்டிம்மா தூங்கி கொண்டிருந்தாள்.
21 comments:
Me the frist
Me the frist
அருமையா வந்துருக்கு தலைவரே!
கோபத்தில் அழுகையினூடே ,பல்லைக் கடித்துக் கொண்டே, உங்களுக்கு பிரியமானவர்கள் சிரித்து நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? சுகம் சார். சுகம் சார்.//
காட்சிகள் விரியும் வார்த்தைகள்!!!
நல்லாயிருக்கு.
நல்லாயிருக்கு
ஆஹா!
நேத்து பாக்யராஜ் படம் எதுவும் பாத்தீங்களா?
கலக்கல் சார்..
//
கரண்ட் இல்லையாம்மா. குட்டி தூங்கிட்டாளா?
இருக்கு. தூங்கிட்டா. மனைவி சொல்லிக் கொண்டே மெழுகுவர்த்தியை கொளுத்தினாள்
//
சூப்பர் வரிகள்..
அருமை.
எனக்கு தெரியும்ண்ணே..!
அசத்தல் மணிஜி!!
//கோபத்தில் அழுகையினூடே ,பல்லைக் கடித்துக் கொண்டே, உங்களுக்கு பிரியமானவர்கள் சிரித்து நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? //
அழகு.
கதையின் ஒவ்வொரு வரியும் உணர்ந்து எழுதியது போல இருக்கு
நல்லா இருக்கு .படிக்கும் போதே இயலாமை கோபம் எல்லாம் சேர்ந்து ....
இதெல்லாம் மீறி ரசகுல்லாவின் மேல் ஆசையும் .
nice reading .
thanks for submitting my post too i was surprised to see 2 votes even before i could submit. i call it real fast .thanks
அனுபவக் கதைகள்...
இப்ப கார் இருக்கு.
காலத்தை திரும்பி பார்க்கிற மனசு இருக்கு.
பத்திரப் படுத்துங்கள் மணி.எல்லாத்தையும்.
அப்புறம்,
புத்தகங்களுக்கு நன்றி!
அருமை.. மிக ரசித்தேன்
அருமை மணிஜீ.. உங்க டச் எப்பவும் சூப்பர்தான்.
இன்னும் உயிர்ப்போடு வைத்திருப்பவை அந்தப் புன்னகைகளும் யாருக்கும் தெரியாமல் துளிர்க்கும் ஒரு துளி கண்ணீரும்தானே
எனக்குள் பேச வைத்து விட்டது
அருமை.
அனுபவத்தை பதியும்போது ரொம்ப அருமையா வரும்.வந்திருக்கு...
வருகைக்கும்,கருத்துக்களுக்கும் நன்றி நண்பர்களே!
Post a Comment