Thursday, February 11, 2010

நானும் கொஞ்சம் பேசுகிறேன்.....3



சினிமா ! ஒரு வசீகரமான அரக்கன். சினிமா மோகம் ! வாலில் நெருப்பை கட்டிக் கொண்டு வெறியாட்டம் போடும் மாயக்குரங்கு. ஜெயித்தவர்களைப் பார்த்து வெறியை ஏற்றிக் கொள்ளுமே தவிர வீழ்ந்தவர்களை எண்ணி அது சுதாரித்துக் கொள்வதேயில்லை. என் கல்லூரி படிப்புக்கு இரண்டாம் ஆண்டுடன் ஜனகனமன பாட வைத்ததும் சினிமாதான். கொஞ்சம் அந்த அனுபவங்களை பேசலாம். கால் நடையாய் கடும் அலைச்சல்கள், ஏமாற்றங்கள், புறக்கணிப்புகள், அவமானங்கள் எல்லாம் கடந்து ஒரு சந்தர்ப்பம் கிட்டியது !

டைட்டில் என்ன வச்சிருக்கீங்க?

சார் வீர வணக்கம். அப்புறம் போர்க்குதிரைகள்!

போர்க்குதிரைகளா? ஹிஸ்டாரிக்கல் சப்ஜெக்டா?

இல்லை சார் . சோஷியல்தான். அதாவது இன்றைய இளைஞர்கள் பந்தைய குதிரைகளாக இருக்கிறார்கள். அவங்களை அரசியல்வாதிகள் அவங்க சுயநலத்துக்கு யூஸ் பண்ணிகிட்டு சுட்டு தள்ளிடறாஙக. என் ஹீரோ இளைஞர்களை போர்க்குதிரைகளா மாத்தாறான். சமூகத்துக்கு எதாவது செய்யனும்ன்னு....

இருய்யா ! மெசேஜ் கதையா?

இல்லை சார். ஆக்‌ஷன், லவ் எல்லாமே இருக்கு. ஹீரோயின் ஒரு டாக்டர். அவளை ஒரு கிராமத்துக்கு சேவை செய்யறதுக்கு கடத்தறாங்க.

இது எதோ தெலுங்கு படம் மாதிரி இருக்கே?

இல்லை சார். இது டோட்டலா நக்சலைட் மேட்டர்!

நக்சலைட்ன்னா யாரு ? தீவிரவாதிங்கதானே!

வெஸ்ட்பெங்கால்ல நக்சல்னு ஒரு ஊர் இருக்கு சார். அங்கதான் சச்சா .. அதாவது சாருமஜீம்தார் முதல்ல இந்த இயக்கத்தை ஆரம்பிச்சார்.

நான் முதலில் கதை சொல்லப்போனபோது எனக்கு ஏற்பட்ட அனுபவம் இது. இயக்குநர் ஆர்.வி.உதயகுமார். நான் ஆரம்பித்த கதையில் அவருக்கு சுவாரசியம் வந்திருந்தது.

அப்புறம் அங்கயேயிருந்து பிரிஞ்சு வந்துதான் கொண்டபள்ளி சீதாராமையா “மக்கள் யுத்த குழு” வை ஆந்திராவில் ஆரம்பிச்சார்.

நீ கதையில் என்ன சொல்ல வர்றே?

ஹீரோ தீவிரவாத பாதையில் போய் கொண்டிருந்த சிலரை திருத்தறார். வன்முறை அப்பாவி மக்களை எந்த விதத்திலும் பாதிக்க கூடாது. அதானாலே ஒரு நம்ம ஒரு பேரலல் கவர்மெண்ட்டை நடத்தலாம்னு சொல்றாரு.

இது நடந்தது 1987. அப்போது நான் ஒரு நண்பருடன் ஆந்திராவில் குண்டப்பள்ளம் ங்கிற ஊருக்கு போயிருந்தேன். அங்கு பார்த்ததுதான் இந்த பேரலல் கவர்மெண்ட் மேட்டர். உதய்க்கு நான் சொன்ன விதம் பிடிச்சு போனது.

நான் இந்த மாதிரி சப்ஜெக்ட் பண்ணறதில்லை. லவ், செண்டிமெண்ட் இதான்னு ஒரு ஃபார்முலா வச்சிருக்கேன். நீங்க கதை விவாதத்தில் கலந்துக்கங்க !

எனக்கு தலை கால் புரியவில்லை. நிறைய பேரை சந்திக்கவே வாய்ப்பு கிட்டவில்லை. செய்யாறு ரவி மூலம்தான் இந்த வாய்ப்பு கிட்டியது. அவருக்கு நன்றி சொன்னேன். இதென்ன பெரிய விஷயம்? நான் படம் பண்ணும்போது நீதான் கதை என்றான்(ர்).

அவர் முதல் படம் பூஜை போட்டபின் அவரை பார்க்கவே முடியவில்லை என்பதுதான் சினிமா!

உதவி இயக்குனராக எனக்கு இடப்பட்ட முதல் பணி என்ன தெரியுமா? அப்போதுதான் உதய்க்கு திருமணம் நிச்சயமாகி இருந்தது. அவர் அக்கா வீட்டில்தான் தங்கி இருந்தார். அவருக்கு வாடகைக்கு வீடும் வேலைதான் முதலில் என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. இன்னொரு பரிதாப உதவியாளனும் நானும் என் ஓட்டை லேப்பரெட்டா ஸ்கூட்டரில் சொந்த காசில் பெட்ரோல் போட்டுக் கொண்டு சுற்றினோம். சினிமா !!

மெளனராகம் பார்த்து பித்து பிடித்தாற்போல் திரிந்தேன். மணிசாரின் விலாசத்தை கண்டுபிடித்து காலிங்பெல்லை அழுத்தினேன். ஒரு நான்கு முழம் வேட்டி, பனியன் அணிந்தவர் கதைவை திறந்தார். சாட்சாத் மணிரத்னமேதான். (பின்னாளில் ஒரு கவிதை எழுதி அவருக்கு அனுப்பி வைத்தேன். முழுவதும் நினைவில் இல்லை.ஆனால் இப்படி முடியும் “பெயரில் மட்டுமல்ல! படைப்பிலும் கண்டேன் மணியையும், ரத்தினத்தையும்”)

சார் ! உங்க கிட்ட அசிஸ்டெண்டா சேரனும்!

ஆறு பேர் இருக்காங்களே! நீங்க கோவிந்த் கிட்ட காண்டெக்ட்ல இருங்க! கேஃப் வரும்போது பார்க்கலாம். கோவிந்த் தேனிக்காரர் . சினிமாவில் தண்ணி குடித்து மணியிடம் அசோசியேட்டாக இருந்தார். எல்டாம்ஸ் ரோடில் அவரது அறை இருந்தது. நான் படம் பண்ணும் போது நீங்க கண்டிப்பா கூட இருக்கிங்க என்றார். அதன் பின் அவர் ரூமே தஞ்சம். கடன் வாங்கியாவது அவருக்கு ஜானெக்‌ஷா பிராண்டி. கவுண்டமணி மார்க்கெட் டல்லாயிருந்த சமயம் அது. கோவிந்த் ரூமிற்குத்தான் தண்ணியடிக்க வருவார். கவுண்டர் கிளாஸ் என்று தனியே ஒரு கிளாஸ் அங்கு உண்டு. ஃபுல்லா ஏத்துவார். கீழே போய் அவர் வீட்டுக்கு போன் பண்ணால் டிரைவர் காரை எடுத்து வருவான். போய் விடுவார். சமயங்களில் எனக்கும் வாங்கி கொடுத்திருக்கிறார். “மரியாதையா ஊருக்கு ஓடிடு. சினிமாவெல்லாம் வேஸ்டு மகனே” என்பார். உண்மைதான் ! மணிரத்னம் சார் சொன்ன அந்த கேஃப் வந்தபோதுநான் இங்கு இல்லை. ஊருக்கு போய் விட்டேன். லோக்சந்தர் என்பவருக்கு அடித்தது அதிர்ஷ்டம். அவர் சில தெலுங்கு படங்கள் பண்ணினார். நம்ம சுழி அது !(அப்போது!)

ஆனால் ஒன்று சொல்லவேண்டும். நாயகன் படபிடிப்பு சென்னையில் நடக்கும் போதெல்லாம் நான் தான் செட்டுக்கு முதலில் போவேன். கோவிந்த் உபயத்தில். மணிசார் பார்ப்பார். ஒரு சல்யூட்டை போடுவேன். சிரித்துக் கொண்டே தலையாட்டி விட்டு போய் விடுவார். ஒரு ஏகலைவன் போல் கொஞ்சம் அங்கு கற்றுக் கொண்டேன் என்றும் சொல்வேன்!

கோவிந்த் கஷ்டப்பட்டு ஒரு படம் பண்ணார். வினோத் என்ற பெயரில். “ராதிகா, நிரோஷா நடித்த “கை வீசம்மா ! கை வீசு” நல்ல படம். ஆடியன்ஸ் ஏற்றுக் கொள்ளவில்லை. மாய அரக்கன் வினோத்தை கடைவாய் பல்லில் அரைத்து வீசி விட்டான். இப்போது எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை.


ஒரு தனியார் சினிமா கல்லூரியில் நான் திரைக்கதை வகுப்பெடுத்தேன். முதலில் அங்கு நான் மாணவனாக சேர்ந்தேன். டிஜிட்டல் தொழில் நுட்பத்தை கற்றுக் கொள்ள. ஆனால் பகுதி நேர ஆசிரியராகி விட்டேன். அங்கு ஷைலஜா என்று ஒரு பெண் படித்தாள். மகளிர் கிறித்துவ கல்லூரியில் விஸ்காம் மூன்றாம் ஆண்டு மாணவி. ஒரு வாரம் கிளாஸ் முடிந்தவுடன் ஒரு சின்ன டெஸ்ட் வைத்தேன். 15 நிமிடத்திற்குள் ஒரு மூன்று சீன்கள் எழுத சொன்னேன். முன்னறிவிப்பில்லாமல் திடீரென்று சொன்னேன். ஷைலஜா எழுதிய சீன்கள். ஒரு சின்ன கதை வடிவத்தில் கொடுக்கிறேன்.

வேற வழியில்லையா?

நோ சான்ஸ் ! இவங்க நம்பளை நிச்சயமா நிம்மதியா வாழ விடமாட்டாங்க ! இதான் ஒரே வழி.

எனக்கு பயமா இருக்குடா!

நம்ம சாவில மட்டும்தான் ஒன்னு சேர முடியும்மா . ப்ளீஸ். புரிஞ்சுக்கோ !

இரவு மணி 8.30. ஷைலு ரெடியா?

ம்ம்ம்ம்!

சொன்னது நியாபகம் இருக்கா? 10 மாத்திரை. பால்ல நல்லா கலக்கிடு.

பயமா இருக்குடா !

வேற வழியில்லைம்மா ! உனக்கு நான் வேணுமா?

நீயில்லாம எப்படிரா?

அப்ப இதான் வழி !

இருவரும் போனை கட் பண்ணி விட்டு தூக்க மாத்திரைகளை கண்ணீரோடு கலக்குகிறார்கள். அப்படியே டம்பளரை...

“தத்தம் அப்பாக்களிடம் கொடுக்கிறார்கள்”


நான் விளம்பரத்துறைக்கு வந்த பின் அமீர் போன்ற இயக்குனர்களிடம் உதவியாளனாக சேர்ந்திருக்க்க முடியும். ஆனால் எனக்கு இருந்த கமிட்மெண்ட் தடுத்து விட்டது. தனியாக ஒரு படம் செய்யும் வாய்ப்பும் இருந்தது. ஆனால் இன்னும் என்னை நான் அப்டேட் பண்ணிக் கொள்ள விரும்பினேன். இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங், நடிப்பு இவை எல்லாம் தனித்தனி “ art" .இவற்றை முழுமையாக ஒருங்கிணைப்பதுதான் சினிமா . நல்ல சினிமா! அதனால்தான் சினிமாவை “craft" என்று சொல்கிறார்கள். இப்போது ஒரு முன்னணி ஒளிப்பதிவாளர் முதன் முறையாக இயக்கும் படத்திற்கு வசனம் எழுத சொல்லியிருக்கிறார். எப்போது என்று தெரியவில்லை. நடக்காமலும் போகலாம். அதுதான் சினிமா !

டிஸ்கி : சில நாட்களுக்கு முன் கண்ணம்மா பேட்டை அருகில் நண்பர்களுடன் டீ சாப்பிட்டு கொண்டிருந்தேன். எங்கோ பார்த்தது போல் இருந்தார் அவர். உற்று பார்த்தேன். என்னை அடையாளம் கண்டு கொண்டார். சிகரெட் கேட்டார். வாங்கி கொடுத்தேன். எப்படி சார் இருக்கீங்க என்று கேட்க தோன்றவில்லை. பார்த்தாலே தெரிந்தது. சினிமா ! அவர் ? ஏ.வி.எம். தயாரிப்பில் கேப்டன் நடித்த ஒரு வெற்றிப்படத்தை இயக்கியவர். பெயர் வேண்டாமே. அதுதான் சினிமா !!

46 comments:

Paleo God said...

சரக்க விட போதை.. சினிமா..:)

அசால்ட்டா சொல்லிட்டாலும் நிரம்ப வலி மரத்துப்போய் கிடக்குது உங்களிடம்.

கே.என்.சிவராமன் said...

'புதினங்களை விட, வாழ்க்கை சுவாரசியமானது. திடீர் திருப்பங்கள் கொண்டது' என்பார்கள். இந்த இடுகை அதை மெய்ப்பித்திருக்கிறது.

விரைவில் ஒரு பத்திரிகையாளனாக இயக்குநர் 'மணி'ஜியை நேர்காணல் செய்வேன் என்ற நம்பிக்கை உங்களைப் போலவே எனக்கும் இருக்கிறது :)

'அட்வான்ஸ்' வாழ்த்துகள்.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

மீன்துள்ளியான் said...

சினிமா ஒரு போதை தான் .. அது தன் தீ நாக்கை கொண்டு பொசுக்கியது எத்தனை பேரை :( இன்றும் கூட உதவி இயக்குனராக சேர கால் கடுக்க கண்ணில் இலட்சியத்தை தேக்கி கொண்டு அலையும் மனிதர்களை பாக்கும்போது நெஞ்சில் ஒரு ஓரம் ஈரம் கசியத்தான் செய்கிறது

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

very good post & beautiful write-up!

அகநாழிகை said...

தண்டோரா, அருமையான பதிவு. நீங்கள் பல திறமைகளை வைத்துக் கொண்டு முயற்சி செய்யாமல் சும்மாயிருக்கிறீர்கள் என்பது என் கருத்து. தொடர்ந்து முயற்சித்தால் உங்களால் முடியாததில்லை. குழுவினர் புடைசூழ நீங்கள் மையமாய் உட்கார்ந்திருப்பதை பார்க்கும்போதே மகிழ்ச்சியாய் இருக்கிறது. இன்னும் காலம் நம்மிடம் இருக்கிறது. முயற்சியுங்கள்.
000
இன்னொரு விஷயம் நீங்கள் குறிப்பிட்டவர்களில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமாரை ஒரு முறை காதலர் தினத்தின் போது நான் பேட்டி எடுத்திருக்கிறேன். கிழக்குவாசல் படத்தின் வழியே பரபரப்பாய் இருந்தார். அவர் இயக்கிய கடைசி படமான ‘சின்ன ராமசாமி பெரிய ராமசாமி‘ போதெல்லாம் அவருடன் தொடர்பிலிருக்கிறேன். அவருடைய பேட்டிக்கு புத்தகத்தின் அட்டையில் நான் கொடுத்த Caption வாசகம் ‘மனதைச் சுமப்பதுதான் காதல் ; உடலை அல்ல‘
000
அதேபோல செய்யாறு ரவியும் எனக்கு அறிமுகமானவர்தான். சென்னை தொலைக்காட்சிக்காக அசோகமித்திரன் எழுதிய ‘தண்ணீர்‘ என்ற குறுநாவலை திரைக்கதையாக நான் செய்திருந்தேன். செய்யாறு ரவிதான் அதை இயக்குவதாக இருந்தது. அப்போது சென்னையில் கடும் தண்ணீர் பிரச்சனை இருந்ததால், அந்த திரைக்கதை வாசிக்காமலே நிராகரிக்கப்பட்டு விட்டது.
000
எல்லாம் பழைய நினைவுகள்.

நீங்கள் விரைவில் பல வெற்றிகளை பெறவேண்டுமென்று வாழ்த்துகிறேன்.

மணிஜி said...

வாசு முயற்சி இல்லாமல் இல்லை. முதலில் கொஞ்சம் செட்டிலாக வேண்டும். அதற்காகத்தான்.இனி கடும் முயற்சிதான். வாழ்த்துக்களுக்கு நன்றி.

மண்குதிரை said...

நல்ல ரைட்டிங் சார். ரொம்பவும் ரசித்தேன்

இராஜ ப்ரியன் said...

கொஞ்சநாளா அத மறந்த மாதிரி நடிச்சிக்கிட்டு இருக்கேன் என்னோட ஃபிரண்ட்சுங்ககிட்ட. உப்புமா கம்பனியில சினிமா கத்துக்க போய், அப்பா எப்பவும் மறக்கமுடியாது அதையெல்லாம் நெனச்சாக்கா ......... வீட்ல project -ன்னு பொய் சொல்லி காச ஏமாத்தி வாங்கிகின்னு, bag -ல எல்லா dress -சயும் வாரி வச்சிக்கிட்டு போனதெல்லாம் மறுபடியும் ஞாபகத்துக்கு வருது.

வாழ்த்துகள் தல கலக்குங்க(உங்களுக்கு அனுபவம் அதிகம்) ......... விரைவில் சினிமா உங்கள் வசப்படும்...

அடியேனின் அட்வான்ஸ் வாழ்த்துகள்...... :)

Santhappanசாந்தப்பன் said...

உங்கள் முயற்சிகளின் அனுபவங்களை மெல்லிய சோகத்துடன் பகிர்ந்து கொண்டது அற்புதம்.... இந்த பதிவு கூட, இயக்குனர்களிடம் கதை சொல்லும் உங்கள் திறமையை எடுத்துக் காட்டுகிறது.

இலட்சியம் நிறைவேற வாழ்த்துக்கள்!

எறும்பு said...

அண்ணே உங்களுக்கு உள்ளே நிறைய திறமைகள் ஒளிஞ்சிருக்கு போல.
சீக்கிரம் வாங்க.. வரவேற்க தயாராக இருக்கிறோம்.

Jackiesekar said...

அடிச்சி ஆடு மணி... வாழ்த்துக்கள்...
அந்த கதை ரொம்ப நல்ல இருந்துச்சு...ஒன்னுமே தெரியாம கொடம்பாக்கத்துல நான் அடுத்த படம் பண்ணிடனும்னு குதிக்கறானுங்க... குடிச்சிட்டு ஒலரானுங்க.. கத்துக்கனும்னு சொன்ன பார்... அதுதான் என் டேஸ்ட்...

வாழ்த்துக்கள்.. கமிட்மென்ட் ஒத்துழைச்சி... படம் எடுக்க...

ஜெட்லி... said...

கண்டிப்பா நீங்க இன்னும் பெரிய லெவல்க்கு போவிங்க அண்ணே...

ஈரோடு கதிர் said...

நிறைவாக நிறையவே பேசியிருக்கீங்க..

வாழ்த்துகள் அண்ணா

vasu balaji said...

மீண்டும் ஒரு முறை ஆச்சரியமாக உங்களைப் பார்க்கிறேன் மணீஜி.
/ஒரு முன்னணி ஒளிப்பதிவாளர் முதன் முறையாக இயக்கும் படத்திற்கு வசனம் எழுத சொல்லியிருக்கிறார்./

அட்வான்ஸ் வாழ்த்துகள்!

Ashok D said...

:)

VISA said...

மணி சார் சினிமா நிச்சயமாகவே ஒரு வகையான போதை தான்.
நான் பள்ளி படித்துக்கொண்டிருந்த போதே சினிமா மோகம் இருந்தது.
படிச்சா சினிமா கல்லூரியில் தான் படிக்க வேண்டும் என்று வைராக்கியமாக இருந்தவன்.


(அப்போது சினிமா பற்றி எந்த ஒரு அடிப்படை அறிவும் எனக்கு இருந்திருக்கவில்லை.)

பிறகு அதை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு ஒழுங்காக சம்பாத்தியத்துக்கு
உதவுவதை படித்தேன். ஏதோ இப்போ கஷ்டமில்லாமல் சோறு திங்க முடிகிறது.

சினிமா என்ற போதையை ஒத்திப்போட கற்றுக்கொண்டேன். இப்போது அது என் கனவிலேயே இல்லை.
என்னுடைய அந்த போதையை பிளாக் எழுதி கொஞ்சம் தீர்த்துக்கொள்கிறேன்.

உங்களுடைய இந்த பதிவை படித்த போது எனக்கு மட்டும் அல்ல பெரும்பாலானவர்களுக்கு
சினிமா மீது எப்போதும் ஒரு போதை இருப்பதுண்டு...அந்Tஹ போதை தழும்பும் நினைவுகள்
vanthu போனது.


இப்போது வெளிவரும் மட்டமான சினிமாவை பார்த்து கை தட்டி சிரிக்கிறேன்.
என்றும் சிரித்துக்கொண்Tஏ இருப்பேன்......

தற்போது எடுக்கப்படும் மட்டமான சினிமா என்பது உங்களை போல் ரணப்பட்டவர்களின் மீது
வீசப்படும் ஈட்டிகள். அதையும் தாண்டி கற்றுக்கொள்ள வேண்Dஉம் என்கிறீர்களே
நிச்சயமாக கற்றுக்கொள்ளுங்கள்.
கூடிய விரைவில் திரைப்படம் நீங்கள் படம் இயக்க
என் வாழ்த்துக்களும் பிராத்தனைகளும்.

நிறைய எழுதிட்டே....என்னமோ உங்க இந்த பதிவ படிச்ச உடனே சில கொசு வர்த்தி நினைவுகள்....

butterfly Surya said...

Excellent write up.

பல விஷயங்கள் என்னிடமும் கேபிளிடமும் சொல்லியிருக்கிறீர்கள். சில புதிய தகவல்கள்.

என்னை பொறுத்தவரை உங்களது பார்வையும் கருத்தும் முற்றிலும் வித்தியாசமானதுதான்.திகைத்து போயிருக்கிறேன்.

சும்மா.,புரட்டி போடணும் மணிஜீ. கதையை சொன்னேன்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

Excellent Write up

ரிஷி said...

அருமையான நடை

வெற்றி பெற வாழ்த்துக்கள்

உண்மைத்தமிழன் said...

அண்ணே உங்களுடைய சினிமா அனுபவங்களைத் தொடர்கதையா எழுதுங்கள்..

உள்ளே வர விரும்புபவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டும்..

உள்ளேயே இருப்பவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கட்டும்..!

தயவு செய்து எழுதுங்கள்..!

CS. Mohan Kumar said...

அருமையான பதிவு. மிக ரசித்தேன்

Cable சங்கர் said...

தலைவரே யார் எதை எப்ப சொன்னாங்களோ.. எல்லாத்தையும் விடுங்க அநேகமா திங்கட்கிழமையிலிருந்து டிஸ்கஷன் ஸ்டார்ட் பண்றோம்
:)

Unknown said...

சீக்கிரமா ஒரு வெற்றி படம் எடுப்பிங்க அண்ணே !!

லதானந்த் said...

அன்புள்ள தண்டோரா!
சொந்த வாழ்வில் செட்டில் ஆகி, ஓரளவுக்கு (உயர்) அரசுப் பணியில் இருந்து விருப்ப ஓய்வில் வந்து யாராவது ஜெயித்திருந்தால் சொல்லவும். நானும் விருப்ப ஓய்வு பெற்றுத் திரைக்கு வர விரும்புகிறேன். மேலும் பல் சினிமாக்காரர்களுக்கு எனது தொழில் முறையில் உதவி புரிந்து அவர்களில் பலருடன் இன்றளவில் தொடர் நட்பில் இருக்கிறேன். மற்றபடி எனது (சொற்ப) திறமைகள் உங்களுக்கே என் பிளாக்கைப் படித்தால் தெரியும். ஏறக்குறைய அனைத்துப் பத்திரிக்கைகளிலும் தொடர்கள் உட்பட பல ஆர்டிகிள்கள் எழுதியிருக்கிறேன்.Flight பிடித்து வந்துவிடட்டுமா?

Ashok D said...

//தலைவரே யார் எதை எப்ப சொன்னாங்களோ.. எல்லாத்தையும் விடுங்க அநேகமா திங்கட்கிழமையிலிருந்து டிஸ்கஷன் ஸ்டார்ட் பண்றோம்//
with ஜானக்‌ஷாவோடத்தானே.. அங்கிள்ஸ் என்னை மறந்துடாதீங்க

Unknown said...

பதிவு நல்லா இருக்கு.யதார்த்தமா இருக்கு.

// அவருக்கு வாடகைக்கு வீடும் வேலைதான் முதலில் என்னிடம் ஒப்படைக்கப்பட்டது//

விஜய் டீவியில் “நம்ம வீட்டு கல்யாணம்” என்ற நிகழ்ச்சியில் நண்பர்கள் வீடு தேடியதை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார்.
நண்பர்களை உயர்வாகப் பேசினார்.அவருக்கு ஏற்பட்ட விபத்தையும் சொன்னார்.

மரா said...

//சினிமா ! ஒரு வசீகரமான அரக்கன்//
எங்க ஊர் இயக்குனர் அகத்தியனும் இதையேத்தானே சொல்லுவார்.
எனக்கென்னவோ நீங்க இரண்டாவது ஆட்டம் நின்னு ஆடுவீங்கன்னு தோணுதுண்ணே! அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

iniyavan said...

தலைவரே,

நீங்கள் நண்பர் பைத்தியக்காரனுக்கு சொன்ன அதே பின்னூட்டம்தான் உங்களுக்கும்.

கதவுகள் இன்னும் மூடப்படாமல் நிறைய இருக்கின்றன். என்ன ஒன்று உங்களுக்கான கதவினை நீங்கள் தேடி கண்டு பிடிக்க வேண்டும். அவ்வளவுதான்.

விரைவில் நீங்கள் ஜெயிப்பீர்கள் என்பது என் எண்ணம்.

அத்திரி said...

அண்ணே சீக்கிரமா இயக்குனராக வாழ்த்துக்கள்

Sanjai Gandhi said...

யய்யாடீஈஈஈஈஈஈஈ.. உங்க இன்னொரு முகமா மாமா? ஆச்சர்யமா இருக்கு.. போட்டோ பார்க்கவே சந்தோஷமா இருக்கு.. ஒரு பெரிய பேனர்லையும் சீக்கிறம் படம் பண்ணுங்க..

வால்பையன் said...

மாயகுரங்கு அல்ல! மாயபிசாசு!

Ashok D said...

உலக மகா பின்னூட்டம்

me the 32

Unknown said...

இதுக்குக் கூடவாய்யா நெகட்டிவ் ஓட்டு? நாசமாப் போனவிங்களா

Unknown said...

அருமையான பகிர்வு. வலிகள், வேதனைகள், அவமானங்கள் எல்லாம் தாண்டி வந்தால் சினிமா உங்களை உச்சியில் அல்லவா கொண்டு சேர்க்கும். அந்த புகழ் போதைக்குத் தான் அத்தனை அடிகள்.

விரைவில் வெற்றி பெற வாழ்த்துகள்.

gulf-tamilan said...

அட்வான்ஸ் வாழ்த்துகள்!!

நேசமித்ரன் said...

வந்து பேசிக்கறேன் உங்க கிட்ட ...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அட்றா சக்க..அட்றா சக்க..அட்றா சக்க..
நல்ல பதிவு சார்..

Ravichandran Somu said...

விரைவில் திரைப்பட இயக்குநராகி வெற்றிகள் பல பெற வாழ்த்துக்கள்.

அன்புடன்,
-ரவிச்சந்திரன்

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

மிக அருமையான பதிவு.

சினிமா உலகை அருகில் இருந்தவர் பார்த்தவர் என்ற முறையில் உங்கள் அனுபவம்.. வலிக்கிறது. வெற்றியடைய வாழ்த்துகள்.

குப்பன்.யாஹூ said...

nice post.
But cinema industry is it in dying/saturated stage.

after 10 years I doubt cinema will be there or no.

avm vijaykanth film, is it sethupathi ips or mannavan (vijaykanth double role etc)

மணிஜி said...

பின்னூட்டங்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பர்களே!

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

மிக நல்ல பதிவு.

selventhiran said...

எத்தனை சுவாரஸ்யமான எழுத்து!

R.Gopi said...

மணி ஜி...

பல சோதனைகளை அனாயசமாக தாண்டிய நீங்கள், “சாதனை” படைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை...

வாழ்த்துக்கள்... தலைவா....

நீங்கள் சொன்ன அந்த டைரக்டர் யார்னு எனக்கு தெரியும் தலைவா... படத்தின் பெயர் “மா... ..ல்”, அவர் பெயர் ”எம்.தி....ன்”??

ரோஸ்விக் said...

வலியான தருணங்களையும், நிதர்சனங்களையும் மிக இயல்பாக பதிவு செய்து இருக்குறீர்கள் அண்ணா.

நீங்கள் நினைத்த இடத்தை விரைவில் அடைவீர்கள். எனக்கு அந்த நம்பிக்கையும் இருக்கிறது... நல்லெண்ணமும் இருக்கிறது. வாழ்த்துகள்.

மதுரை சரவணன் said...

சரக்கை விட போதை... உங்கள்மொழி ...நடை.. மணி வெற்றி வெகு அருகில்... எல்லாம் கடந்து போகும் .. உன்னை கொண்டாடும் நாட்கள் வெகு அருகில்... ! அட்வான்ஸ் வாழ்த்துக்கள்