
Friday, February 12, 2010
முடிச்சவிழும் தருணங்கள்... 2

Thursday, February 11, 2010
நானும் கொஞ்சம் பேசுகிறேன்.....3

Wednesday, February 10, 2010
மொழியின் விளையாட்டு

நித்திரையை கெடுத்தவளுக்கு
எங்கோ முன்னரே பார்த்த
பிம்பம் போலவும் பிரமை
அலுத்து போய் எழுந்தேன்.
வெளியில் சென்று வாங்கி
வந்த எல்கான்ஸா ரம்மை
குடித்த களைப்பு மீண்டும்
மட்டையாகிவிட்டேன்
காலையில் பார்த்தால்
எமிலி டிக்கின்ஸின்
நான்கு பக்கங்களில்
பச்சை நிறத்தில் பற்குறிகள்
மீண்டும் அரை போத்தல்
எல்கான்ஸாவுடன்
வீடு திரும்பினேன்
என் புத்தக அலமாரியை
பீராஞ்சு கொண்டிருந்தது
அதே திருட்டுப் பூனை
பச்சை நிற பற்களுடன்!
Tuesday, February 9, 2010
உலக்ஸ்சும் , நானும், ஒரு திங்கட்கிழமையும்

Monday, February 8, 2010
மானிட்டர் பக்கங்கள்.........08/02/10

சென்ற வாரம் டில்லியில் முதலமைச்சர்கள் மாநாடு நடைப்பெற்றது. விலைவாசி உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகளை ஆலோசிப்பதற்காக பிரதமர் தலைமையில் நடந்த முக்கியமான கூட்டம். தமிழக துனை முதலமைச்சர் திரு. ஸ்டாலின் கலந்து கொண்டார். நல்ல விஷயம்தான். அவர்தான் எதிர்காலம் என்றான பின் அவருக்கு நல்ல பயிற்சியாக இருக்கும்.(என் ஓட்டு ஸ்டாலினுக்குத்தான்). ஆனால் ஏன் தலைவர் போகவில்லை.?மருத்துவ காரணங்களும் சொல்லப்பட்டாலும், முக்கிய காரணம் திரையுலகினர் நடத்திய பாராட்டு விழாதான்.எத்தனை ஆட்டம், பாட்டம் ,கொண்டாட்டம். புகழ்மாலைகள். நடன நிகழச்சிகள்.(மானாட...மார்பாட..) இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை புரசைவாக்கத்தில் ஒரு வீட்டில் அழகிகளின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. பணம் வாங்கி கொண்டு அவுத்து போட்டு விட்டு ஆடினார்கள். போலிஸ் ரெய்டு. அதில் ஒரு பெண் குமுறலுடன் சொன்னது. “இதையேத்தான் நேரு ஸ்டேடியத்தில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் முன் பெரிய நடிகைகள் செய்கிறார்கள். அங்கு இல்லாத ஆபாசம் இங்க மட்டும் எப்படி வந்தது?( குமுதம் ரிப்போர்ட்டர்). நியாயமான கேள்விதான். ஆனால் யார் கேட்பது ? இன்னும் ரம்பாவின் திருமணம் இருக்கிறது. ஷகிலாவின் திருமணம் தே.மு.தி.க. பிரமுகருடன் என்பதால் அங்கு போக வாய்ப்பில்லை. அநேகமாக ஒரு ஆயிரம் பாராட்டு விழாக்களில் தலைவர் கலந்து கொண்டிருப்பார் என்று நினைக்கிறேன். இதற்கே ஒரு பாராட்டு விழா எடுக்கலாம். ஜெகத்ரட்சகன் ஏன் இருக்கிறார்?
சன் பிக்சர்ஸ், கிளவுட் நைன், ரெட் ஜெயண்ட் இவர்களை தொடர்ந்து இன்னுமொரு கழக கம்பெனியும் கலை சேவைக்கு தயாராகி விட்டது. முதல்வரின் மற்றொரு மகன் மு.க. தமிழரசும் களத்தில் குதித்து விட்டார். அவர் எடுக்கும் சொந்த படத்தில் அவர் மகன் நாயகனால அறிமுகம் ஆகிறார். பெயர் ஏதோ ஒரு நிதி!! ஆமாம் ! நிதி என்று பெயர் இல்லையென்றால் திருவாரூர் புவனேஸ்வரி (இது சாமிங்க..) அம்மன் கண்ணை குத்திடுமோ ?
அண்மையில் காஞ்சிபுரம் போயிருந்தேன். பச்சையப்பா சில்க்ஸ்க்கு புது விளம்பரம் படம் எடுக்கிறேன். அது பற்றி விவாதிக்க. அக்கவுண்ட் செக்ஷனலில்தான் முதலாளிகள் இருப்பார்கள். மிக பரபரப்பாக இருக்கும். புது நபர் உள்ளே வந்தால் யார் முதலாளி, தொழிலாளி என்று சட்டென்று வித்தியாசம் தெரியாது. தரையில் உட்கார்ந்து வேலைப் பார்ப்பார்கள். நான் அங்கு ஒரு மூன்று மணி நேரம் இருந்தேன். பார்கோடு பிரிண்ட் செய்தபடி ஒரு பெண் அழுது கொண்டே இருந்தாள். கண்களில் தாரையாய் கண்ணீர். அவளை யாரும் சட்டை செய்யவில்லை. அவ்வப்போது ஒரு முதலாளி மட்டும் “சும்மா இருக்க மாட்டியா நீ! இப்ப அழுகையை நிப்பாட்டறியா ,இல்லையா ? என்று அதட்டி கொண்டேயிருந்தார். எனக்கு வித்தியாசமாக தெரியவே “என்ன சார் விஷயம் “ என்று கேட்டேன். ஒன்னுமில்லை. இதுக்கு கல்யாணம். இன்னியோட வேலையை விட்டு போகுது. அதான்! அழுகாச்சி என்றார். பின் அவளிடம் திரும்பி “எங்க போற நீ! தோ இருக்கு வந்தவாசி. எப்ப வேணா இங்க வரலாம். இல்லை நானும் அண்ணியும் அங்க வரோம். கண்ணை துடை முதல்ல! அவர் மனைவியும் சேர்ந்து தேற்றி பட்டுப்புடவை, நகை, பணம் என்று கொடுத்து அனுப்பும்போது அந்த பெண் தாய் வீட்டிலிருந்து பிரிந்து போவது போல் கதறினாள். எவ்வளவு பெரிய கோடிஸ்வரர்கள் ! ஆனால் அவர்களின் தன்மைக்கு மதிப்பேயில்லை !
”35 ஆண்டுகளாக குடித்துக் கொண்டிருப்பவன் என்ற தகுதி எனக்கு உண்டு. ஜப்பானில் தயாரிக்கப்பட்ட அரிசி மதுவான சாக்கே குடித்ததுண்டு. சீனாவின் மவுத்தாய் பருகியதுண்டு. தர்மபுரி மாவட்டம் மூக்கனூர்பட்டியில் பனையில் இறக்கிய ஒரு மரத்து கள்ளை குடித்திருக்கிறேன். உடுமலையிலிருந்து மூணாறு போகும் வழியில் பதமான தென்னங்கள் அருந்தியிருக்கிறேன். மத்திய பிரதேச மாநில கிராமமொன்றில் ஒரு வகை ஈச்சங்கள் கிடைத்திருக்கிறது. மராட்டியத்தில் சந்த்ரி, மொசாம்பி ஆகிய வகைகளையும் சுவைத்திருக்கிறேன். கோவாவில் முந்திரியில் தயாரிக்கும் பென்னி என்கிற ஒருவகை சாராயம் குடித்திருக்கிறேன். ஸ்மர்னாஃப் வோட்காவும் ,பகார்டி ஒயிட் ரம்மும் தெரியும். உலகில் தயராகும் 60 க்கும் மேற்பட்ட பீர் வகைகளீல் பெரும்பாலானவற்றை அருந்தியிருக்கிறேன்.
இவற்றை எல்லாம் சட்டையில் கோர்த்துக் கொள்ளும் பதக்கங்களாக கருதி சொல்லவில்லை.எதிர் வரும் காலத்தில் குடியை விட்டொழிக்கும் எண்ணமும் எனக்கு இல்லை. ஒரு படைப்பாளி நேர்மையுடன் தன்னை பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக சொல்கிறேன்”
இது நான் சொன்னது இல்லிங்கோ! எழுத்தாளர் திரு. நாஞ்சில் நாடன் சொன்னது. தமிழினி வெளியிட்டிருக்கும் “குடிபோதை : புனைவுகள் தெளிவுகள்” என்கிற புத்தகத்தை முழுமையாக குடித்து.. சாரி படித்து முடித்தேன். மிக அருமையான தொகுப்பு.சங்ககாலம் முதல் எப்படி குடி பேச,போற்ற, தூற்றப்பட்டு வருகிறது என்பதை அருமையாக தொகுத்திருக்கிறார்கள். அதை நியாயபடுத்தவும் இல்லை. தூக்கி வீசவும் இல்லை.
டிஸ்கி கவுஜை :
திடீர் பெருமழையில்
நனையத்தான் ஆசை!
தும்மலும், காய்ச்சலும்
பொருட்டேயில்லை.
அந்த சுதந்திரத்தையும்
பறித்துக் கொண்டது
பாக்கெட்டில் இருந்த
புது அலைபேசி!
Friday, February 5, 2010
அர்த்தமில்லாத கதைகள்....4

இந்த வருசம் அய்யாவுக்கு 87 முடியுது. சிறப்பா கொண்டாடிடணும்.
செஞ்சிடலாம். ஆனா அதுக்கப்புறம் அவரை வீட்டோட இருக்க சொல்லுங்க. இந்த நிலம், நீச்சு, தோட்டம் , தொறவு எல்லாத்தையும் என் கிட்ட ஒப்படைக்க சொல்லிடுங்க.
அதைத்தானே அவரும் சொல்லி கிட்டிருக்காரு. பாவம். போதும் இத்தனை காலம் ஓடா ஒழைச்சு குடும்பங்களை ஏதோ கரையேத்திட்டாரு. இனிமேலாவது அக்கடான்னு கோயில் குளம்னு இருக்கட்டும்.
சரி. பெரியவர் என்ன சொல்றாரு?
அவர் என்ன சொல்றது! சரின்னுதான் சொல்வாரு.
இல்லம்மா . எனக்கென்னவோ அண்ணன் இதுக்கு ஒத்துக்குவாருன்னு தோணலை. நீங்க வேணா பாருங்க!
அண்ணே ! எங்களுக்கு எல்லாமே நீங்கதான். உங்களை நம்பித்தான் இருக்கோம்.
என்ன தம்பி? ஊர் பூரா ஒரே பேச்சா இருக்கு.
என்ன பேசிக்கிறாங்க?
என்ன அண்ணே! தெரியாத மாதிரி கேக்கறீங்க? பெரியவர் காசி, ராமேஸ்வரம்னு கிளம்பறாராம். தம்பி கிட்ட எல்லாத்தையும் ஒப்படைச்சுட்டு.
எல்லோருக்கும் சொல்றேன் கேட்டுக்கங்க. டேய்! நம்ம தலையாரியை கூப்பிட்டு ஊருக்கு தண்டோரா போட சொல்லு. பெரியவர் எங்கயும் போகலை. அடுத்த வருஷமும் அவர்தான் ஊர் நாட்டாமை.
என்னங்க இது? அண்ணன் இப்படி சொல்லிட்டாரு?
பாவம்! ஐயா பாடுதான் திண்டாட்டம். என்ன செய்யப்போறாரு?
அவருக்கு இதெல்லாம் தெரியாதா என்ன? எத்தனை சமாளிச்சிருக்காரு! பாரேன். ஊதி தள்ளிடுவாரு!
Thursday, February 4, 2010
மனோஜ்......

Wednesday, February 3, 2010
நானும் கொஞ்சம் பேசுகிறேன்.....2
Tuesday, February 2, 2010
சைகாலஜி

சூர்யா அம்மா இப்பல்லாம் என் கிட்ட முகம் கொடுத்து பேசறதேயில்லை.
ஏன் ? நீ எதாவது சண்டை போட்டியா?
இல்லைங்க. திடீர்னு மூஞ்சி காட்டறாங்க. போடி சரிதான்னு விட்டுட்டேன். நன்றி கெட்டவங்க. எவ்வளவு செஞ்சிருக்கேன்!!
எதாவது காரணம் இருக்கும். நாமெல்லாம் சூழ்நிலைக்கு ஏத்தா மாதிரிதான் ரியாக்ட் பண்றோம். எத்தனை நாளா இந்த பிரச்சனை?
கரெக்டா சொல்லனும்னா, நம்ம வீட்டுக்கு வாஷிங்மெஷின் என்னிக்கு வந்துச்சு? அன்னிலேர்ந்துதான்.
அப்படியே இன்னொரு மேட்டர்.
என்ன?
உங்க அண்ணன் பொண்டாட்டி வந்தாங்க. ரொம்பத்தான் திமிரு ஏறிப் போச்சு. எல்லாம் உங்களாலத்தான். நீங்க என்னை விட்டு கொடுக்காம பேசினா இப்படியெல்லாம் நடக்குமா?
என்ன சொன்னாங்க அண்ணி? அதை மட்டும் சொல்லு!
புதுசா வைரத்தோடு வாங்கினாங்களாம். அதை காட்டி என்னை வெறுப்பேத்திட்டு போகத்தான் வந்தாங்க. ஆனால் கேட்டா உன் கிட்ட காட்டி எப்படியிருக்குன்னு கேக்கத்தான் வந்தேன்னு புளுகு!
சாலையில் பெருங்கூட்டம்!
வகுந்து முன்னேறினேன்.
பைக்கிலிருந்து கீழே
விழுந்து கிடந்தான் அவன்.
யாரோ தண்ணீர்
கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
“நல்லவேளை”
பெரிசா ஒன்னும் இல்லை!
வெளியில் வந்த எனக்குத்தான்
ஏனோ ஏமாற்றமாயிருந்தது!!
Monday, February 1, 2010
மானிட்டர் பக்கங்கள் ------ 01/02/2010

80 களில் மருத்துவர் ராமதாஸ் தங்கள் ஜாதிக்கு இடஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்தினார். பின்னாளில் பசுமைத்தாயகம் அமைப்பை ஏற்படுத்தியவர்கள்தான் அன்று சாலையில் மரங்களை வெட்டி காட்டுமிராண்டித்தனம் செய்தார்கள். அதிலும் எத்தனை அப்பாவி உயிர்கள் பலியாக்கப்பட்டன. அவர்களுக்கு மிஞ்சியதெல்லாம் ஒரு நிணைவுத்தூண் மட்டுமே. அவர்கள் குடும்பம் வாழ்வாதாரத்தை இழந்து இன்று நடுத்தெருவில். ஆனால் தமிழ்குடிதாங்கியின் குடும்பம் மாடமாளிகையில். நானோ, என் குடும்பத்தினரோ எந்த பதவிக்கும் ஆசைப்படவில்லை. எல்லாம் பாட்டாளி சொந்தங்களுக்காகவே செய்கிறோம் என்று வீரவசனம் பேசியவரை சவுக்கால் யார் அடிப்பது? சைக்கிள் ரிக்ஷாவில் கிளினிக் போனவரிடம் இன்று எத்தனை வாகனங்கள்? ஏமாந்தது? ஜாதி உணர்வால் தூண்டப்பட்ட அப்பாவி மக்கள்தான். அநேகமாக பெண்ணாகரத்தில் கடைசி ஆப்பு இருக்கலாம்.
இந்த நிலைமைதான் இன்று தெலுங்கானாவிற்கு ஆதரவாக போராடும் மாணவர்களுக்கும். விஜயசாந்தியும், சந்திரசேகர்ராவும் அரசியல் உச்சத்தை அடைவதற்கு மாணவர்களையும், அப்பாவி பொதுமக்களையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். தெலுங்கானா வருகிறதோ, இல்லையோ? இன்று இழந்த உயிர்களுக்கு என்ன விலை கிடைக்கும்? ராமதாஸ் அமைத்தது போல் ஒரு நிணைவுசின்னம் அல்லது ஒரு ஸ்தூபி. வருடந்தோறும் அஞ்சலிக் கூட்டங்கள். செப்பு பட்டயம்.
அய்யாவும், அம்மாவும் இரண்டு துருவங்கள் என்பது ஊரறிந்த சங்கதிதான். அம்மா ஆட்சியில் அவர் சபைக்கு வரமாட்டார். அம்மாவும் அதே கதைதான். இவர்கள் ஆற்றும் ஜனநாயக கடமைக்கு ஊதியத்தை மட்டும் தவறாமல் வாங்கி கொள்கிறார்கள். ஒரு பத்திரிக்கையில் வந்த புள்ளி விவரம்.
முதலில் இந்நாள் முதல்வர் அன்று வாங்கியது :ஐந்தாண்டு காலத்தில் ஒட்டு மொத்த சம்பளம். 9 லட்சத்து 42 ஆயிரத்து 778 ரூபாய். ரயில் பயணப்படி 69 ஆயிரத்து 180 ரூபாயாம். இத்தனைக்கும் சென்னைக்குள்தான் இவர் தொகுதி. ரயிலில் எங்கு போனாரோ?
முன்னாள் முதல்வர் இன்று வாங்குவது. மாதம் 8000 ரூ சம்பளம். எதிர்பாரா செலவுகள் 3500 ரூ. ஈட்டுப்படி 10 ஆயிரமாம். டெலிபோனுக்கு 10 ஆயிரம். ஆக மொத்தம் கூட்டி ,கழித்து சொன்னால் கிட்ட தட்ட 11 லட்சம். இதில் ஆயிரதெட்டு லொட்டு. லொசுக்கு. அவர் எனக்கு வணக்கம் சொல்லவில்லை. பின்னால் யாரோ கிள்ளி விட்டார்கள். மேலே இங்க் தெளித்தார்கள். வடிவேலு சொல்றாப்ல சின்ன புள்ளத்தனமா இருக்குல்ல!!
டிஸ்கி :1 ஒரு சின்ன சந்தேகம் ? 30 ரூ அரிசியை 1 ரூபாய்க்கு கொடுக்க முடியுது. ஆனால் 30 பைசா தண்ணி பாக்கெட் ஏன்யா 3 ரூபா?
டிஸ்கி கவுஜை:
சிவப்பு விளக்கு
நீலப்படம்
பச்சை வார்த்தை
மஞ்சள் எழுத்து
கறுப்பு பணம்
வாழ்க்கை வண்ணமயத்தாம்ல
இருக்கு!!
Saturday, January 30, 2010
சாரு நிவேதிதாவும்... வறட்டு மொளகாய் சட்னியும்

தேவையானப்பொருட்கள்:
யாராவது எழுதிய பழைய பதிவுகள்- 2 (திருடியதாய் இருந்தால் உகந்தது)
கூகிள் ஸ்டோரில் வாங்கிய பாடாவதி இணைப்பு அல்லது தொடுப்பு
கடுப்புபருப்பு - 1 டேபிள்ஸ்பூன்(யாராவது “நீ” பெரிய பருப்பான்னு கேட்டால்?
உளுத்துப்போன பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
கூரான பற்கள் - 32 (நற நறன்னு கடிக்க)
புளி - ஒரு நெல்லிக்காயளவு(வயித்துல கரைக்கரதுக்கு)
விளக்கெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்( மாந்தத்துக்கு நல்லது)
கடுகு - அது பின்னூட்டத்தில் தாளிக்கறதுக்கு)
வேப்பிலை - சிறிது (அடிக்கறதுக்கு)
உப்பு - கொஞ்சம் உறைக்கறதுக்கு
கொழுப்பு - நிறைய தேவைப்படலாம் (நல்ல கொழுப்புதான். திருப்பி தாக்கறதுக்கு)
செய்முறை:
பழைய பதிவுகளை கண்ணில் விட்டுக் கொண்டு பார்க்க வேண்டும். அதில் தாளிக்க எதாவது கிடைக்கிறதா என்று ஆராய வேண்டும். நிச்சயம் கிடைக்கும். முயற்சிதான் முக்கியம்.
அப்புறம் சமீபத்திய இடுகைகளையும் நோக்க வேண்டும். நிச்சயம் அதில் உங்களுக்கு ஒரு க்ளூ கிடைக்கும். அப்புறம் என்ன? வறட்டு மொளகாய் சட்னி ரெடி. முக்கியமான விஷயம். படிக்கிறவனுக்கு பேதி புடுங்க வேண்டும். அது சீதா பேதியாகவோ அல்லது சாதா பேதியாகவோ இருக்கலாம்.
என்ன கொடுமைன்னா? உடனே உங்களுக்கு பதில் உபசாரத்திற்காக அந்த பழைய சோறு பார்ட்டிகள் வேறு எதையாவது கலந்தும் சட்னி அரைப்பார்கள்.
இப்ப வறட்டு மொளகாய் சட்னி ரெடி. தமிழ் மணத்தோடு பறிமாறுங்கள். நிறைய பேர் வந்து மொய் வைப்பார்கள். சிலர் இலைக்கு அடியிலும் வைக்கலாம்.
டிஸ்கி: இது முற்றிலும் சமையல் குறிப்பு மட்டுமே. கொஞ்சம் பின் நவீனத்துவம் கலந்து என்.ஆர். ஐ களுக்காக எழுதப் பட்டது. தயை கூர்ந்து தனிப்பட்ட பெயர்களையும், அரசியலையும் தவிர்க்குமாறு சாப்பிட வருபவர்களை கேட்டுக் கொள்கிறேன்.
Friday, January 29, 2010
முடிச்சவிழும் தருணங்கள்....

Monday, January 25, 2010
மானிட்டர் பக்கங்கள்------25/01/2010

ஆதவன் படத்தில் நடித்த சூர்யா, வடிவேல் மற்றும் இயக்குநர் ரவிக்குமார் வீடுகளில் வருமானவரித்துறையினர் ரெய்டு. நயன் தாரா தப்பி விட்டார். காரணம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். சந்துல சிந்துதான். ஆனால் ஆதவன் படத்தின் தயாரிப்பாளர் வீட்டில் சோதனை இல்லை. அவர் ஒரு ரூபாய் அரிசி வாங்க ரேஷன் கியூவில் நின்றதை ஒரு அதிகாரி பார்த்ததே காரணமாம்.
சக்கரத்தாழ்வாருக்கு நிறைய சக்தி உண்டு. அதுவும் மதுரை மோகூர் கோவிலுக்கு எக்ஸ்ட்ரா சக்தி என்று நம்பதகுந்த வட்டாரங்கள் கூறுகிறது.நானும் ஒரு முறை போயிருக்கிறேன். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். அவரவர் வினைக்கேற்ப பலாபலன்கள் கிட்ட பெறுகின்றனர். ஆதிசங்கர்? இவர் ஒரு திமுக எம்.பி. இவர் நெற்றியில் இருந்த குங்குமத்தை பார்த்து ஒருவர் கிண்டலடித்தார். என்ன அது இரத்தமா என்று? ஆனால் இந்த பகுத்தறிவு சூரியனின் மூத்த வாரிசு(இரண்டாவதின்) அதிரடி மன்னனாய் இருந்தவர் இன்று ஆன்மீக செம்மலாய் மாறி வருகிறாராம். நல்லதுதான். இவரே இப்படித்தான். வீரமணியே வீட்டுக்கே கால் கோள் பூஜை நடத்தினாராம். திருட்டு சைவைப்பூனைகள். அண்ணா பெயரை சொல்லி விநாயகசதுர்த்தி அன்று சேனல் ஆரம்பித்தவர்கள் அல்லவா! பையனை கண்டிக்க சொல்லுங்கள் பார்ப்போம்! மதுரை பற்றி எரியும் என்பது தெரியும் அவருக்கு. அப்புறம் இந்த தை முதல் நாளை எத்தனை பேர் தமிழ் புத்தாண்டாய் கொண்டாடினார்கள்?
கொஞ்சம் கல்கட்டா! நான் போனபோது அதுதான் பெயர். ஆனால் அப்போதே ஒரு டாக்ஸி டிரைவர் கொல்கத்தா என்றுதான் உச்சரித்தார். ஹவுராவில் இறங்கி லாட்ஜில் ரூம் போடும்போது மாடியிலிருந்து சில ரசகுல்லாக்கள் ஸ்வெட்டர் போட்டு இறங்கி கொண்டிருந்தனர்.தோல் பிசினஸ். சோத்துக்குத்தான் அலையவேண்டியிருந்தது. ஒரு ஓட்டலில் பூரி என்றவுடன் எகிறிகுதித்தேன். ஆனால் தொட்டுக் கொள்ள அவன் தந்தது அல்வா!!
அங்கு சைனா டவுன் என்று ஒரு ஏரியா. முற்றிலும் சீனர்கள். அவர்கள் வழிபாட்டு தலங்கள். சிக்கலான அந்த உணவு. சிலருக்கு தமிழும் தெரிந்திருக்கிறது. காரணம். அவர்களின் தோல் தொழில். இங்கு வாணியம்பாடி, நாகல்கேணி, ஆம்பூர் தொடர்புகள். என்னை அழைத்து போன நண்பரும் ஒரு டேனரியின் முதலாளி. ஒரு மொழிபெயர்ப்பாளானாக போனேன்.நீங்கள் மஜ்னு திரைப்படம் பார்த்தால் உங்களுக்கு தெரிந்திருக்கலாம். அந்த சின்ன மண் கப்பில் டீ கொடுப்பார்கள். கூடவே கொஞ்சம் இனிப்பும். சலங்கை ஒலியில் கமல் ரீயாக்ஷன் ஞாபகம் வருகிறதா? அந்த பானா…பானா..
சோனாகஞ்ச். மகாநதி மூலம் நிறைய பேருக்கு தெரியும். ஆனால் இன்னொரு இடம் போபசார். இரண்டு இடங்களிலும் தோல் பிசினஸ்தான். கையில் வில்லை கட்டியிருக்கிறார்கள். டாக்டர் சர்ட்டிபிகேட்டும் இருக்கிறது. துணி போட்டு குளிக்கலாம். இல்லை அவுத்து போட்டும். ரிஸ்க் இல்லை.நான் சும்மா அந்த இடத்தை சுற்றி பார்த்து விட்டு வந்தேன்.(நிசமா)
முக்கியமான மேட்டர். அங்கு டிராபிக் அதிகம். நம்மூர் மாமாக்கள் போல் வண்டியை நிறுத்தி அது ,இது என்று கேட்கவே முடியாது. காரணம். ஒரு வண்டி நின்றால் அவ்வளவுதான். சிட்டி ஜாம்.
நாங்கள் போனபோது ஒரு டிராம் லைனுக்கு நடுவே ஒரு போலிஸ் ஜீப், இரண்டு அம்பாசிடர் கார்கள் புகுந்து போயின. எங்கள் டாக்ஸி டிரைவர் சொன்னார். பாசுஜி போகிறார் என்று!அவ்வளவு எளிமையான மனிதர். ”ரெட் ராயல் சல்யூட் காம்ரேட்”
காஞ்சிபுரம் தேவநாதன் சிடி ஐந்து லட்சம் விற்பனையாகி சாதனை படைத்திருக்கிறது. அடுத்து என்.டி.திவாரியின் சிடியும் தயாராகி விட்டதாம்.அந்த சனியனை கிளிப்பிங்ஸ் மட்டும்தான் பார்க்க முடிந்தது. சிடியை கொண்டு வாங்கப்பா சீக்கிரம். நம்மூர் அமைச்சர்கள் சிடியும் இருந்தால் பார்க்கலாம். வரும்.
மீண்டும் ஆயிரத்தில் ஒருவன் பார்த்தேன். ராம்ஜியின் ஷோ. பி.சி. ஸ்ரீராமுக்காக திரையிடப்பட்டது. அன் கட் வர்ஷன்.அதில் பிசிக்கு பிடித்ததும் ரீமாதானாம். நான் விட்டு கொடுத்து விட்டேன்.போர்க்களம் நாயகிதான் இப்போதைக்கு. படம் சும்மா அதகளம்தான். கொஞ்சம் ராமயணம், மகாபாரதம். ப்ரூ காபி மாதிரி பர்பெக்ட் கலவை. அந்த கலர் டோன். நான் தாடிக்கு அடிக்கும் கார்னியரில் கொஞ்சூண்டு மருதாணி பவுடர் கலந்த மாதிரி. கிஷோரின் உடல் மொழியும், குரலும் படத்திற்கு மிகப்பெரிய பலம். நாயகியின் முகத்தையே சரியாக காட்டவில்லை. பொழைக்க தெரியாத இயக்குநர். கலை இயக்குநரை பாராட்டியே தீர வேண்டும். மீண்டும் பார்க்க தூண்டிய படம். வாழ்த்துக்கள் சரோஜ்!!
டிஸ்கி கவுஜை:
கூட்டத்தை வகுந்து
உள்ளே போனேன்!
நல்லவேளை! யார் செய்த புண்ணியமோ!
பெரிசா ஒன்னும் அடியில்லை
ஆங்காங்கே திருப்திகள்!
எனக்குத்தான் ஏதோ
ஏமாற்றம்??
Saturday, January 23, 2010
ஆ...ஊன்னா கூட்டமா கிளம்பி வந்துடறாங்க

இன்னைக்கு முடிவு பண்ணிடலாம்.
Friday, January 22, 2010
10 தூக்க மாத்திரைகள்

துரத்துவது யார் என்று
Thursday, January 21, 2010
மு.கவின் பழைய படங்கள். புதிய கமெண்ட்கள்








