
ஆதவன் படத்தில் நடித்த சூர்யா, வடிவேல் மற்றும் இயக்குநர் ரவிக்குமார் வீடுகளில் வருமானவரித்துறையினர் ரெய்டு. நயன் தாரா தப்பி விட்டார். காரணம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். சந்துல சிந்துதான். ஆனால் ஆதவன் படத்தின் தயாரிப்பாளர் வீட்டில் சோதனை இல்லை. அவர் ஒரு ரூபாய் அரிசி வாங்க ரேஷன் கியூவில் நின்றதை ஒரு அதிகாரி பார்த்ததே காரணமாம்.
சக்கரத்தாழ்வாருக்கு நிறைய சக்தி உண்டு. அதுவும் மதுரை மோகூர் கோவிலுக்கு எக்ஸ்ட்ரா சக்தி என்று நம்பதகுந்த வட்டாரங்கள் கூறுகிறது.நானும் ஒரு முறை போயிருக்கிறேன். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். அவரவர் வினைக்கேற்ப பலாபலன்கள் கிட்ட பெறுகின்றனர். ஆதிசங்கர்? இவர் ஒரு திமுக எம்.பி. இவர் நெற்றியில் இருந்த குங்குமத்தை பார்த்து ஒருவர் கிண்டலடித்தார். என்ன அது இரத்தமா என்று? ஆனால் இந்த பகுத்தறிவு சூரியனின் மூத்த வாரிசு(இரண்டாவதின்) அதிரடி மன்னனாய் இருந்தவர் இன்று ஆன்மீக செம்மலாய் மாறி வருகிறாராம். நல்லதுதான். இவரே இப்படித்தான். வீரமணியே வீட்டுக்கே கால் கோள் பூஜை நடத்தினாராம். திருட்டு சைவைப்பூனைகள். அண்ணா பெயரை சொல்லி விநாயகசதுர்த்தி அன்று சேனல் ஆரம்பித்தவர்கள் அல்லவா! பையனை கண்டிக்க சொல்லுங்கள் பார்ப்போம்! மதுரை பற்றி எரியும் என்பது தெரியும் அவருக்கு. அப்புறம் இந்த தை முதல் நாளை எத்தனை பேர் தமிழ் புத்தாண்டாய் கொண்டாடினார்கள்?
கொஞ்சம் கல்கட்டா! நான் போனபோது அதுதான் பெயர். ஆனால் அப்போதே ஒரு டாக்ஸி டிரைவர் கொல்கத்தா என்றுதான் உச்சரித்தார். ஹவுராவில் இறங்கி லாட்ஜில் ரூம் போடும்போது மாடியிலிருந்து சில ரசகுல்லாக்கள் ஸ்வெட்டர் போட்டு இறங்கி கொண்டிருந்தனர்.தோல் பிசினஸ். சோத்துக்குத்தான் அலையவேண்டியிருந்தது. ஒரு ஓட்டலில் பூரி என்றவுடன் எகிறிகுதித்தேன். ஆனால் தொட்டுக் கொள்ள அவன் தந்தது அல்வா!!
அங்கு சைனா டவுன் என்று ஒரு ஏரியா. முற்றிலும் சீனர்கள். அவர்கள் வழிபாட்டு தலங்கள். சிக்கலான அந்த உணவு. சிலருக்கு தமிழும் தெரிந்திருக்கிறது. காரணம். அவர்களின் தோல் தொழில். இங்கு வாணியம்பாடி, நாகல்கேணி, ஆம்பூர் தொடர்புகள். என்னை அழைத்து போன நண்பரும் ஒரு டேனரியின் முதலாளி. ஒரு மொழிபெயர்ப்பாளானாக போனேன்.நீங்கள் மஜ்னு திரைப்படம் பார்த்தால் உங்களுக்கு தெரிந்திருக்கலாம். அந்த சின்ன மண் கப்பில் டீ கொடுப்பார்கள். கூடவே கொஞ்சம் இனிப்பும். சலங்கை ஒலியில் கமல் ரீயாக்ஷன் ஞாபகம் வருகிறதா? அந்த பானா…பானா..
சோனாகஞ்ச். மகாநதி மூலம் நிறைய பேருக்கு தெரியும். ஆனால் இன்னொரு இடம் போபசார். இரண்டு இடங்களிலும் தோல் பிசினஸ்தான். கையில் வில்லை கட்டியிருக்கிறார்கள். டாக்டர் சர்ட்டிபிகேட்டும் இருக்கிறது. துணி போட்டு குளிக்கலாம். இல்லை அவுத்து போட்டும். ரிஸ்க் இல்லை.நான் சும்மா அந்த இடத்தை சுற்றி பார்த்து விட்டு வந்தேன்.(நிசமா)
முக்கியமான மேட்டர். அங்கு டிராபிக் அதிகம். நம்மூர் மாமாக்கள் போல் வண்டியை நிறுத்தி அது ,இது என்று கேட்கவே முடியாது. காரணம். ஒரு வண்டி நின்றால் அவ்வளவுதான். சிட்டி ஜாம்.
நாங்கள் போனபோது ஒரு டிராம் லைனுக்கு நடுவே ஒரு போலிஸ் ஜீப், இரண்டு அம்பாசிடர் கார்கள் புகுந்து போயின. எங்கள் டாக்ஸி டிரைவர் சொன்னார். பாசுஜி போகிறார் என்று!அவ்வளவு எளிமையான மனிதர். ”ரெட் ராயல் சல்யூட் காம்ரேட்”
காஞ்சிபுரம் தேவநாதன் சிடி ஐந்து லட்சம் விற்பனையாகி சாதனை படைத்திருக்கிறது. அடுத்து என்.டி.திவாரியின் சிடியும் தயாராகி விட்டதாம்.அந்த சனியனை கிளிப்பிங்ஸ் மட்டும்தான் பார்க்க முடிந்தது. சிடியை கொண்டு வாங்கப்பா சீக்கிரம். நம்மூர் அமைச்சர்கள் சிடியும் இருந்தால் பார்க்கலாம். வரும்.
மீண்டும் ஆயிரத்தில் ஒருவன் பார்த்தேன். ராம்ஜியின் ஷோ. பி.சி. ஸ்ரீராமுக்காக திரையிடப்பட்டது. அன் கட் வர்ஷன்.அதில் பிசிக்கு பிடித்ததும் ரீமாதானாம். நான் விட்டு கொடுத்து விட்டேன்.போர்க்களம் நாயகிதான் இப்போதைக்கு. படம் சும்மா அதகளம்தான். கொஞ்சம் ராமயணம், மகாபாரதம். ப்ரூ காபி மாதிரி பர்பெக்ட் கலவை. அந்த கலர் டோன். நான் தாடிக்கு அடிக்கும் கார்னியரில் கொஞ்சூண்டு மருதாணி பவுடர் கலந்த மாதிரி. கிஷோரின் உடல் மொழியும், குரலும் படத்திற்கு மிகப்பெரிய பலம். நாயகியின் முகத்தையே சரியாக காட்டவில்லை. பொழைக்க தெரியாத இயக்குநர். கலை இயக்குநரை பாராட்டியே தீர வேண்டும். மீண்டும் பார்க்க தூண்டிய படம். வாழ்த்துக்கள் சரோஜ்!!
டிஸ்கி கவுஜை:
கூட்டத்தை வகுந்து
உள்ளே போனேன்!
நல்லவேளை! யார் செய்த புண்ணியமோ!
பெரிசா ஒன்னும் அடியில்லை
ஆங்காங்கே திருப்திகள்!
எனக்குத்தான் ஏதோ
ஏமாற்றம்??






















