Thursday, March 4, 2010

முடிச்சவிழும் தருணங்கள்......3


நகர்தலுக்கும்
மையங்கொள்ளுதலுக்கும்
உள்ள வித்தியாசம் புரிகிறது

இரண்டுக்கும் ஆசைதான்
எனினும் சாத்தியம்
அறிவதால் நிராசையாகிறது

கடவுள் என்று
தன்னை சொல்லிக்கொண்ட
ஒருவனுடன் உரையாட
நேரிட்டது.

நல்லவனாய் இருப்பதைப்பற்றி
பேச்சு வந்தது.
அப்படி இருக்கப்போய்
என் தொடைக்கறியை
வேடனும் புறாவும்
பகிர்ந்து கொண்டார்கள்
என்று சொன்னேன்.

இல்லையென்றால்
புறா உணவாகியிருக்கும்
வேடன் சபித்திருப்பான்
என்பதையும் சேர்த்து


19 comments:

Dr.Rudhran said...

நகர்தலுக்கும்
மையங்கொள்ளுதலுக்கும்
உள்ள வித்தியாசம் புரிகிறது

இரண்டுக்கும் ஆசைதான்
எனினும் சாத்தியம்
அறிவதால் நிராசையாகிறது
---------
காலம் நடத்தும்.

vasu balaji said...

அது சரி!

சைவகொத்துப்பரோட்டா said...

நல்லா இருக்கு.

க.பாலாசி said...

சரியாகத்தான் சொன்னீர்கள்... கவிதை நன்று...

Ashok D said...

ஜி இன்னும் கொஞ்சம் எதிர்பார்க்கறன்

நேசமித்ரன் said...

thalaippu poruththam

:)

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்லா இருக்கு

ரவி said...

குட்.

Unknown said...

நல்லாக்கீதுபா..

அகநாழிகை said...

கவிதை அருமை மணிஜி.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

தலைப்பு டைமிங்கா இருக்கே.

திவ்யாஹரி said...

சரியாக சொன்னீர்கள்.. நல்ல தலைப்பு.. நல்ல கவிதை..

Jerry Eshananda said...

முடிச்சு போட்டாலும் நம்ம தான் போடணும்,அவுத்தாலும் நம்ம தான் அவுக்கணும்,ஒம்பாட்டுக்கு இருப்பு,நாங்கெல்லாம் இருக்கோம்ல..

மரா said...

இது கவிதை...

க ரா said...

ரொம்ப நல்ல கவிதை.

NO said...

அன்பான நண்பர் திரு தண்டோரா,

என்னவென்று தெரியவில்லை, வினவைப்பற்றி நீங்கள் எழுதிய பதிவை உங்கள் தளத்தில் பார்க்க முடியவில்லை! அழித்து விட்டீர்களா அல்லது தளத்தில் ஏதாவது கோளாறா?? நானும் பல முறை முயன்று பார்த்தேன், அதை access செய்ய முடியவில்லை! என்னவென்று சொல்லவும்! இடுவதற்கு இன்னும் சில பின்னூட்டங்கள் பாக்கி!

நீங்கள் கவிதை எழுதியிருக்கிறீர்கள்! எனக்கும் ஒன்று தோன்றியது, எழுதினேன், வினவு நண்பர்களுக்கு காணிக்கையாக! நண்பர் திரு வினவு போலல்லாமல்
தணிக்கை செய்யாமல், அழிக்காமல் வெளியிடவும்!

வினவும் நண்பர்களுக்கு சமர்ப்பணம்
----------------------------------------------------------------

கூவினர் அன்று வந்தது ரஷ்ய புரட்சி என்று
பாடினர் நன்று துன்பங்கள் யாவும் கலைந்தது என்று

சாடினர் நின்று தன்னைத்தவிர மற்றவரை நன்று
மூடினர் கொன்று பல சாமானியரை சிவப்பில்லை என்று

செருக்கெடுத்து கொழுப்பெடுத்து சத்தமுடன் வலம்வந்தார்
சிறிதளவும் மானுடமிலாமல் சிரிப்புடன் சிரம் அறுத்தார்

ஒன்றென்றால் ஒப்புக்கொள்ளலாம் ஒழுங்கீனங்கள் ஒட்டினவென்று
சிலது என்றாலும் சகித்துக்கொள்ளலாம் சீர்கேடுகள் சிந்துபாடினவென்று

ஐயஹோ, குருதி மணிஅளவா மண்ணை முத்தமிட்டது?
குருதியே பயந்தன்றோ ஓலமிட்டது!

நாசிச சண்டாளன் ஹிட்லரும், பாசிச சிகாமணி முசலோனியும்
நாசவேலையில் நற்சான்றிதழ் வாங்கும்முன்
நம் சிவப்பு சர்வாதிகாரிகள் முனயவர்களாகிவிட்டாறன்ரோ

கொன்று குவித்தது போதாதென்று கட்டவிழுத்து விட்டனர்
கட்டுக்கடங்காத காழ்ப்புணர்ச்சிகளை, பல குட்டி விடம் கக்கிகளை

இப்படி சீனாவில் வந்திறங்கிய ஒரு சிவப்பு மகராசன்
ஒரிஜினல் புரட்சிகளையே தூக்கி முழுங்கிய உக்கிர வன்மதாசன்

திபெதென்ன உர்முக்கி என்ன திகட்டாமல் படியளந்த வன்முறைகள் என்ன
யமனுக்கே ஓவர் டைம் கொடுத்த அவரின் முயர்ச்சிதான் என்னென்ன

சுடுகாடான பல சோவியத்களின் சாம்பல்கள்
செத்துபோனவற்றை சத்தமுடன் சொல்லியும்

சொர்கமது நாங்கள் செய்தோம் சத்தியமாக நம்புகள்
சாம்பல்கள் பல்துலக்க, செத்தவர்கள் சுமைகுரைக்க

என நரம்பிலாமல் நாவை ஆட்டும் நல்ல நடிகர் கூட்டமடா
இந்த மண்ணில் அந்த மாயவலையை விரித்திட துடிக்கும் ஒரு வன்முறை கோட்டமடா

வேண்டுமோ இந்த வெறியர்களின் வாடிப்போன வாய்ஜாலங்கள்
வேண்டுமோ இந்த வன்முறையாளர்களின் மாய்மாலங்கள்

நாடுகளை அழித்து சுடுகாடுகளை விதைத்த இந்த சிவப்பு சுடரொளிகள்
நல்லவர் வேடம் போட்டு நம் நாட்டை அழிக்க துடிக்கும் திருட்டு எலிகள்

நன்றி

Paleo God said...

ரைட்டு..!

vidivelli said...

very very nice......

vidivelli said...

அருமையான கவிதை.

புதிய அபிமானி.........
நம்ம பக்கமும் வந்திட்டு போங்களன்!!!!