இவ்வளவு தூரம் வந்தாச்சு. பழைய நண்பர்கள் யாராவது இருக்கிறார்களா என்று பார்க்க நினைத்தேன். கிட்ட தட்ட 20 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. யார் யார் எங்கெங்கோ? பைக்கை திருப்பினேன்.
ஆதம்பாக்கத்தில் என் பாட்டி வீடு இருந்தது. அரை மற்றும் முழு வருட விடுமுறைக்கு நான் தவறாமல் ஆஜர். காலையில் டிபனை சாப்பிட்டு விட்டு கிளம்பினால் வெயில் முழுவதும் என் தலையில்தான். தாத்தாதான் பாவம். குடையை பிடித்துக் கொண்டு தேடி வந்து விடுவார். போய் மீண்டும் சாப்பிட்டு விட்டு வந்தால் இருட்டும் வரை கும்மாளம்தான்.
அநேகமாக எல்லா இடங்களிலும் இப்போது காங்கிரீட் முளைத்திருந்தது. காலி இடமே இல்லை. பசங்கதான் பாவம். காம்பவுண்டுக்குள்ளேயே விளையாடிக் கொண்டிருந்தனர். காவ்ரி ( சிவா), பேடி (சங்கர்) இவர்களை மட்டும் டி.நகரில் ஒரு முறை பார்த்தேன். அவர்கள் வீடு இருக்கும் இடத்தை இப்போது கண்டு பிடிக்க முடியவில்லை. எனக்கு சட்டென்று மனோஜ் நியாபகம் வந்தது. அவன் வீட்டை நிச்சயம் கண்டு பிடித்து விடலாம். அப்பவே பங்களா டைப்பில் கட்டப்பட்டது. நினைவில் வீட்டு அடையாளத்தை கொண்டுவர முயற்சித்தேன்.
காலையில் முதல் செஷன் அநேகமாக கில்லி தாண்டில் ஆரம்பிக்கும். மனோஜ் அதில் கில்லாடி. டபுள்ஸ் மன்னன் என்று பேர் வாங்கியவன். நான் இதற்காகவே வெறித்தனமாக பிராக்டிஸ் செய்தேன். தேர்ந்த வித்தைக்காரனைப் போல் கில்லியின் முனையை தட்டி, அந்தரத்தில் துள்ள விட்டு தாண்டால் மூன்று முறை தட்டி பின் அதை தூக்கி அடிப்பதில் நிபுணனாகி விட்டேன். டிரிபிள்ஸ். சில சமயம் போர்பிள்ஸ் கூட. மனோஜும் சில சமயம் டிரிபிள்ஸ் அடிப்பான். ஆனால் அன்று நான் விளையாட போயிருக்க மாட்டேன். எனக்கு எதிராக போர்பிள்ஸ் அல்லது அதற்கும் மேல் அடிக்க வேண்டும் என்பதே அவன் லட்சியமாக இருந்தது.
இன்று மனோஜ் வீட்டை கண்டுபிடிக்க எனக்கு நினைவில் இருந்த ஒரே அடையாளம் புற்றுக்கோயில். நிச்சயம் அதை இடித்திருக்க மாட்டார்கள். சொல்லப் போனால் இன்னும் கொஞ்சம் பெரிசாக்கி இருக்கலாம். ஒரு கடையில் வண்டியை நிறுத்தி சிகரெட் வாங்கினேன். அவரிடம் புற்றுக் கோயிலை விசாரித்தேன். இன்னும் அது இருக்கிறது.
மாலைநேர செஷன் கிரிக்கெட். பைத்தியம் பிடித்தாற் போல் விளையாடி தீர்ப்போம். அதில் மனோஜ் ரொம்ப ஸ்டிராங். அணி பிரித்த பின் அவன் தான் டாஸ் போடுவான். கொடுமை என்னவென்றால், என்ன விழுந்தது என்பதையும் அவன் தான் சொல்வான். நாங்க பேட்டிங் என்பான். யாரும் எதிர்த்து கேள்வி கேட்க முடியாது. அதற்கு ஒரு காரணம் இருந்தது.அவனிடம் மட்டுமே வில்ஸ் ஆயில் பேட்டும், பேடும் இருந்தது. ஒரு ஜோடி கார்க் பாலும் வைத்திருந்தான். அவன் தான் முதலில் ஆடுவான். மிடில் ஸ்டம்ப்புக்கு நேராகவே அவன் காலில் வாங்கினாலும் எல்.பி.டபிள்யூ கிடையாது. தப்பி தவறி கேட்ச் பிடித்து விட்டால் அம்பயர் (பேட்டிங் சைடு ஆசாமிதான்) நோ பால் சிக்னல் காட்டி விடுவார். இத்தனையையும் சகித்துக் கொண்டுதான் ஆடியாக வேண்டும் . இல்லையென்றால் மனோஜ் பேட்டை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு போய் விடுவான். எங்களிடம் ஆசாரி எதோ ஒரு பலகையில் செய்த பேட்தான் இருந்தது. அது ரன்னருக்கு மட்டும்தான் உபயோகப்படும். ஓங்கி அடித்தால் கையில் ஷாக் அடிக்கும். இன்னொரு விஷயம். மனோஜ் ஆடும் போது பிளேன் போனால் ஆட்டத்தை நிறுத்தி விடுவான். அதையே மறையும்வரை பார்த்துக் கொண்டிருப்பான். கில்லியில் என் எதிரில் போர்பிள்ஸ் அடிக்கும் லட்சியத்துக்கு அடுத்தது பைலட் ஆவதுதான் அவன் லட்சியம்.
மனோஜ் வீட்டை கண்டு பிடித்து விட்டேன். சற்று நவீனமாக புதுப்பிக்கப் பட்டிருந்தது. மற்றபடி பெரிய மாற்றங்களில்லை. கேட்டில் காலிங்பெல் இருந்தது. அடித்தேன். ஒரு பெண் வந்தாள்.
மனோஜ் ?
இந்த வீடுதான். நீங்க?
நான் மணி. அவரோட பழைய பிரெண்டு.
நான் பார்த்ததில்லை. சாரி. இப்பதான் வெளியில் போனார். ஒன் அவர்ல வந்துவார். எதாவது சொல்லனுமா?
இல்லை. சும்மா இந்த பக்கம் வந்தேன். என் கார்டை கொடுங்க. போன் பண்ண சொல்லுங்க!
எனக்கு எனோ ஏமாற்றமாயிருந்தது. ஒயின் ஷாப்பை கண்டுபிடித்து சில்லென்று ஒரு பியர் ஆர்டர் செய்து விட்டு சிகரெட் பற்ற வைத்துக் கொண்டேன். போன் அடித்தது.
திஸ் ஈஸ் மனோஜ்? விச் மணி?
மனோஜ் ! நியாபகம் இல்லையா? டிரிபிள்ஸ் மன்னன். கில்லியில். மறந்துட்டியா?
சாரி. ஐ டோண்ட் ரிமெம்பர். வேர் ஆர் யூ நவ்?
பைக்கை எடுத்து கொண்டு மனோஜ் வீட்டை அடைந்தேன். மீண்டும் காலிங்பெல். மனோஜ் வந்தான். லேசாக முன் வழுக்கை! கொஞ்சம் தொப்பை.
யேய்! ஐ ஹேவ் சீன் யூ மேன்! என்றபடி அருகில் வந்து “ மணிகண்டன் தானே”
அப்பா ! நல்லவேளை. விரட்டி விட்டுடுவியோன்னு நினைச்சேன்.
கம் இன் மணி என்று உள்ளே அழைத்து சென்று மனைவியிடம் அறிமுகம் எல்லாம் முடிந்து மாடிக்கு போனோம். பைலட் ஆபிசராக இருக்கிறானாம். குழந்தை இல்லை. மனைவி எல்லா கோயில்களுக்கும் போயிட்டு வரலாம்னு சொன்னதால் லீவில் இருக்கிறானாம். குழந்தை இல்லை என்ற ஏக்கத்தை என்னிடம் சாமர்த்தியமாக மறைக்க முயற்சித்தான்.
மனோஜ் ! தஞ்சாவூர் பக்கத்தில் திருகருக்காவூர்ல ஒரு கோயில் இருக்கு. ரொம்ப சக்தின்னு சொல்றாங்க. ஒரு டிரிப் அடியேன்.
பார்க்கலாம். ஹவ் அபவுட் எ டிரிங்க்? பதிலுக்கு காத்திராமல் இரண்டு கிளாசில் ஊற்றிக் கொண்டு வந்தான்.(நம்மளும் வேணாம்னு சொல்லப்போறதிலையே)
சிப்பிக் கொண்டு எல்லோரையும் பற்றி விசாரித்தேன்.
மணியாகுது. நான் கிளம்பறேன் மனோஜ் என்றேன்.
கீழிறங்கி வந்தோம். வெயிட் மணி! என்று உள்ளே போனவன் ஒரு பேட்டையும்,பாலையும் கொண்டு வந்தான்.
கில்லி தாண்டெல்லாம் எங்க இருக்குன்னு தெரியலை. வா! கொஞ்சம் நேரம் ஆடலாம் என்றான்.
பளிரென்று நிலா வெளிச்சம் இருந்தது. போர்ட்டிகோ விளைக்கையெல்லாம் போட்டு விட்டான்.
சரி! டாஸ் என்றேன்.
அந்த கதையெல்லாம் கிடையாது. வழக்கம் போல்தான். நான் தான் பேட்டிங். ஒரு ரெண்டு ஓவர் போடு. ஓசி காஜ் அடிச்சு ரொம்ப நாளாச்சு!
எனக்கு சந்தோஷமாக இருந்தது. மனோஜ் மாறவேயில்லை !
30 comments:
இறுதி இரண்டு பத்தியை தவிர்த்துவிட்டால் நன்றாக இருக்கும்...
அழுத்தமான பல உணர்வுகளை தருகிறது.
தோழமையுடன்
பைத்தியக்காரன்
//
பைத்தியக்காரன் said...
இறுதி இரண்டு பத்தியை தவிர்த்துவிட்டால் நன்றாக இருக்கும்...
//
எனக்கு அப்பயும் நல்லாத்தான் இருக்கு.
:) பழைய நட்பென்றாலே சந்தோஷம்தானே.
Good...Nalla iruku...
இந்த technic ரொம்ப பிடிச்சிருக்கு
நல்லாருக்கு அண்ணே
:)
//இறுதி இரண்டு பத்தியை தவிர்த்துவிட்டால் நன்றாக இருக்கும்//
பைத்தியக்காரன் அவர்களே,
வழக்கமா நாந்தான் மேலுள்ள டயலக்கப் பேசனும்.நீங்க சொல்லக்கூடாது.சரி! வேற குறை கண்டுபிடிக்கிறேன்.
அண்ணா! கதை நல்லாருக்கு.போன தலைமுறைக்கு கிரிக்கெட் இல்லாமல் இளம் பிராயம் கழிவதில்லை.
யோசனை:முடிந்தவரை கதையில் உங்களை காட்டிக்கொள்ளாதீர்கள்.
ஏன்? நீங்கள் முன் வந்து கதையின் உணர்ச்சிகள் நீர்த்துப்போக சான்ஸ் இருக்கு.நாந்தான் அது ஆனா இல்லை என்ற ரீதியில் எழுதவும்.
அவனைப்ப்ற்றிய நினைவை டாஸ்மாக்கில் அசைப் போடுவ்தாக கூட காட்டி இருக்கலாம்.
கோனார் நோட்ஸ்(இறுதி இரண்டு பத்தி) தேவை இல்லை.
நண்பன் என்றாலே சந்தோசம் தானே தல.... அதுவும் பழைய நண்பனைப் பார்த்து அவன் செய்த தவறை நாமும் நாம் செய்த தவறை அவனும் சொல்லிக் கிண்டல் அடிப்பது அனுபவிக்கனும்.... தல ரொம்ப அனுபவிச்சு இருப்பீங்க போல....
/கே.ரவிஷங்கர் said...
//இறுதி இரண்டு பத்தியை தவிர்த்துவிட்டால் நன்றாக இருக்கும்//
பைத்தியக்காரன் அவர்களே,
வழக்கமா நாந்தான் மேலுள்ள டயலக்கப் பேசனும்.நீங்க சொல்லக்கூடாது.சரி! வேற குறை கண்டுபிடிக்கிறேன்.
அண்ணா! கதை நல்லாருக்கு.போன தலைமுறைக்கு கிரிக்கெட் இல்லாமல் இளம் பிராயம் கழிவதில்லை.
யோசனை:முடிந்தவரை கதையில் உங்களை காட்டிக்கொள்ளாதீர்கள்.
ஏன்? நீங்கள் முன் வந்து கதையின் உணர்ச்சிகள் நீர்த்துப்போக சான்ஸ் இருக்கு.நாந்தான் அது ஆனா இல்லை என்ற ரீதியில் எழுதவும்.
அவனைப்ப்ற்றிய நினைவை டாஸ்மாக்கில் அசைப் போடுவ்தாக கூட காட்டி இருக்கலாம்.
கோனார் நோட்ஸ்(இறுதி இரண்டு பத்தி) தேவை இல்லை//
என்ன சொன்னாலும் 1st person னில் எழுதுவது எனக்கு பிடித்திருக்கிறது. உங்கள் ஆலோசனையையும் ஏற்றுக்கொள்கிறேன். அப்புறம் அது என்ன அண்ணா? ரவிஷங்கர் சார் எனக்கு 46 தான் . நியாயமா இது?
ஒரே வார்த்தையல சொன்னா ‘ஸுப்பர்’.
கதை ரயிலின் வேகம். படிக்கறவன் சோரக்கூடாது சும்மா சீஸ்ல கத்திய சொருகறாமாதிரி வேகமா போயிட்டே...யிருக்கனும்.
//குழந்தை இல்லை என்ற ஏக்கத்தை என்னிடம் சாமர்த்தியமாக மறைக்க முயற்சித்தான்.//
ஏன் அப்படி நினைக்கிறீங்க.அவருக்கு அது ஒரு குறையாக தெரியாமல் இருக்கலாம்
ஜி, கலக்கல். அப்படியே ஒவ்வொரு நிகழ்வையும் கதையாக்கவும்.
உங்களால மினிமம் ஒரு ஐநூறு கதையாவது எழுத முடியும்.
Simple & Superb.
//butterfly Surya said...
ஜி, கலக்கல். அப்படியே ஒவ்வொரு நிகழ்வையும் கதையாக்கவும்.
உங்களால மினிமம் ஒரு ஐநூறு கதையாவது எழுத முடியும்.
Simple & Superb.//
சூர்யா..ஏன் இந்த கொலைவெறி! என் பெயர் கருணாநிதி இல்லை!!
நீங்கள் எழுதியிருக்கும் விதம் உங்கள் சந்தோஷத்தை நாங்களும் உணரும்படி செய்கிறது. ஒரு தேர்ந்த சிறுகதை ஆசிரியராக நிச்சயம் வருவீர்கள். வாழ்த்துக்கள் சார்.
அண்ணே.., நீங்க தஞ்சாவூர்ல வளரலையா....
//பேநா மூடி said...
அண்ணே.., நீங்க தஞ்சாவூர்ல வளரலையா//
தம்பி எல்லா லீவுக்கும் சென்னைக்குத்தான் போவேன்(10 வரைக்கும்)
அசத்துங்க,...பதிவு சும்மா கில்லி மாதி இருக்கு..
klass...
குட்.. வெரிவெரி குட்..!
பைத்தியக்காரன்னா ஏதாவது சொல்லிக்கிட்டே இருக்கணும் போலிருக்கு..!
பா.ரா. ஒவ்வொரு கவிதையிலும், நீங்கள் இப்படி அடிக்கடி துவள வைக்கிறீர்கள் மணிஜி. ஹேட்ஸ் ஆஃப் டு யூ.
அருமையானப் பதிவு.பழைய ஒயினும், பழைய நட்பும் ரொம்ப இனிமையானதுதானே!!
சூப்பர் கதை.. எனக்குக் கூட நீங்க டாஸ்மாக்ல இருந்து ஃப்ளாஷ் பேக்கா மனோஜைப் பத்தி சொல்லியிருக்கலாமோன்னு தோணிச்சி.. :)
முழுவதும் அருமை!!!
எப்ப திரும்பி பார்த்தாலும்,எப்படி திரும்பி பார்த்தாலும்,மணி மணியாய் இருக்கிறீர்கள் மணி!
செம ஃபார்ம்ல இருக்கீஙக சாமி
சிவராமன் அவர்களின் பின்னூட்டம் மிகச்சரியாக அணுகி இருக்கிறது
அண்ணே,
நீங்க சிறுகதை தொகுப்பு போடுற மாதிரி கனவு வருதுண்ணே
அண்ணே ரொம்ப நல்லா இருக்கு . அது ஏன் அண்ணே எப்ப பார்த்தாலும் டாஸ்மாக்குள்ள அடிகடி நுளஞ்சிடுரிங்க??
பின்னூட்டத்தில் ஊக்கம் அளித்த நண்பர்களுக்கு என் அன்பு கலந்த நன்றிகள்!!
நான் தற்போது சென்னையில்....
நான் எனது சொந்த ஊருக்கு போய்
எனது இளமைக்கால நண்பர்களை
சந்தித்தது போன்ற ஓர் உணர்வு.......
உணர்வுகள் அனைத்தையும்
வார்த்தைகளால் வடிக்க முடியாது தோழா.....
அதனை நீங்கள் கொண்டு வர முயற்சி செய்திருக்கிறீர்கள் ......
அதற்கே உங்களுக்கு ஓர் சபாஷ்.........
வாழ்த்துக்கள்.........
நட்புடன்.........
காஞ்சி முரளி.................
Post a Comment